Monday, 29 July 2019

ரத்த நாளங்கள்

தினம் 90 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடினால் தான் உயிர் வாழ முடியும் என்றால், அப்படிப்பட்ட உயிரே வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விடுவோம் அல்லவா?

ஆனால் நீங்கள் ஓட வேண்டாம் நாங்கள் ஓடுகின்றோம் என்று ரத்த நாளங்கள் செயல்படுகிறது.

கிட்ட தட்ட 95 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு ரத்த நாளங்கள் மனித உடலில் இருக்கிறது.

அந்த நீளம்  இந்த உலகத்தை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம்.

இந்த ரத்த நாளங்கள் இவ்வளவு நீளத்திற்கு ஒவ்வொரு நொடியும் ரத்தத்தை பாய்த்து கொண்டு இருக்கிறது.

கோபமோ, விரக்தியோ, மன அழுத்தமோ எது வந்தாலும் உங்களுக்கு உடல் நலம் பாதிக்குது ஏன் தெரியுமா?

அது உணர்வு சம்பந்தப்பட்டது தானே அது உடலை எப்படி பாதிக்கும்னு யோசித்து இருக்கிங்களா?

இதுக்கு காரணம் இரத்த நாளங்கள் தான், இதயம் போலவே அது சுருங்கி விரியக்கூடியது, தேவையான நேரத்தில் தேவையான ரத்தத்தை கூடுதல் குறைவாக கொடுக்க அது தன்னால் இயங்குகிறது.

அது தன்னை சீர்ப்படுத்திக்கொள்ள "நைட்ரிக் ஆக்சைடு" என்னும் கெமிக்கலை சுரக்கிறது.

அந்த கெமிக்கல்,  உங்களுக்கு கோபமோ கவலையோ வரும் போது சுரப்பதை குறைத்துக்கொள்கிறது.

இதனால் வரக்கூடிய பாதிப்பு சாதாரணமானது அல்ல,

நைட்ரிக் ஆக்சைடு சுரப்பது குறையும் போது இரத்த நாளங்கள் விரிவு தன்மை குறைகிறது.  மூளைக்கு கொண்டு செல்லப்படும் சத்துக்கள் அதன் மூலம் தடைப்பட்டு "ப்ரைன் ஸ்டோக்" என்ற பக்கவாதம் ஏற்படுகிறது.

அதே போல் இதயத்துக்கு செல்லும் சத்துக்கள் தடைப்பட்டு திடீர் என்று "ஹார்ட் அட்டாக்" ஏற்படுகிறது.

தண்ணீர் வேகமாக செல்லும் ப்ளாஸ்டிக் பைப்பில் திடீர் என்று உங்கள் கால்களை வைத்து அழுத்தினால் என்னாகும்? அல்லது பைப்பில் ஏதாவது அழுக்கோ குப்பை பசையோ ஒட்டிக்கொண்டால் என்னாகும்?

அதே கான்செப்ட் தான் இங்கேயும், ரத்த நாளங்கள் கவலையாலும் வேதனையாலும் மட்டும் பிரச்சினைகளை சந்திக்காது, கொழுப்பாலும் சக்கரையாலும் கூட சந்திக்கும்.

உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் கூட அதே பிரச்சினைகள் வரும்.

தினம் பல லட்சம் கிலோ மீட்டர் சுத்தி சுத்தி நமக்காக உழைக்கும் சிக்கலான ரத்த நாளங்களின் படைப்பு பிரம்மிப்பானது. 

அழகிய_படைப்பாளன்_இறைவன் ❤

No comments:

Post a Comment