🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗
_*ஏர்வாடி*_
🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗
நாம் பலமுறை ஏர்வாடி தர்ஹா சென்று ஷஹீத் சுல்தான் இப்ராஹிம் பாதுஷா அவர்களின் தர்பாரில் நின்று துவா கேட்டுவிட்டு.
அந்த வளாகத்தில் அடங்கி இருக்கும் மற்ற கபர்களுக்கும் சென்று சலாம் உரைத்து.
காட்டுப்பள்ளி சென்று அங்கு அடங்கி இருக்கும் மற்றவர்கள் கபர்களுக்கும் சென்று சலாம் உரைத்து வந்து இருப்போம்.
ஆனால் அவர்கள் யார் இவர்களுக்கும் ஷஹீத் சுல்தான் இப்ராஹீம் பாதுஷா அவர்களுக்கும் என்ன தொடர்பு என்ன என்ற விபரம் தெரியாது.
அந்த ஷஹீதுகளின் வீர வரலாற்றை இன்று தெரிந்து கொள்வோம்.
~~~~~~~~~~~~~~~~~~~
ராபியா அம்மா அவர்கள். ~~~~~~~~~~~~~~~~~~~
தியாக மங்கை சையிதா ராபியா அம்மா அவர்கள்,
பாதுஷா ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஒரே சகோதரி,
ஸையத் சுல்தான் அவர்கள் மார்க்க பணிக்காக இந்தியப் பயணம் புறப்பட்ட போது,
தம் சகோதரருக்கு ஆதரவாக புறப்பட ஆயத்தமான முதல் பெண்மணி ராபியா அம்மா அவர்கள்.
ஸையத் இப்ராஹீம் ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள் புறப்படும் சமயம்,
ராபியா அம்மா அவர்களுக்கு குழந்தை,
(ஸைய்யிதா ஜைனப் அம்மா ரலியல்லாஹு அன்ஹா)
பிறந்த சமயம் அது.
அதையும் பொருட்படுத்தாமல் பிறந்த கைக்குழந்தையும் சுமந்து கொண்டு,
கடல், மலை, காடுகள் கடந்து மிகவும் சிரமத்துடன் தமிழகம் வந்து சேர்ந்தார்கள்.
கர்பலா களத்தில், தமது பாட்டியார்
(இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரி)
ஸையிதா ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் முன் மாதிரியைக் கொண்டு,
போர் சமயங்களில் தம் குடும்ப ஆண்களுக்கு,
இறைப் பாதையில் ஜிஹாத் செய்வதன் நன்மைகளை எடுத்துரைத்து தைரியமூட்டினார்கள்.
கடுமையான போர் முடிந்து ஆட்சியில் அமர்ந்த பாதுஷா நாயகம் அவர்கள்,
பெரும்படையை அரபு நாட்டிற்கு திரும்ப அனுப்பி விட்டு,
முழுக்க முழுக்க இறைப் பணியில் கவனம் செலுத்தினார்கள்.
அரசாளும் மன்னராகவும்,
மார்க்கத்தின் இமாமாகவும்,
திகழ்ந்த பாதுஷா நாயகம் அவர்கள்
வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகையை தலைமையேற்று நடத்தி விட்டு,
பள்ளிவாசலின் சுற்றத்தில் உள்ள ஏழைகளுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
அதிக நேரம் அரசவையில் இல்லாமல் இருக்கும் இந்த நேரத்தை எதிரிகள் தொடர்ந்து கவனித்து வந்தனர்.
இதே போன்ற ஒரு வெள்ளிக்கிழமை
மாமன்னர் ஷஹீது நாயகம் அவர்கள் ஜும்ஆ தொழுகை நடத்தவும்,
தொடர்ந்து ஏழைகளுக்கு உணவளிக்கவும் சென்று விட்ட நேரம்,
எதிரிகளின் ஒரு சிறிய படை திடீரென புகுந்து அரசவை கோட்டையையும்,
பெண்கள் குடியிருப்பு பகுதியையும் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த துவங்கினர்.
பாதுஷா அவர்களும், முக்கிய அமைச்சர்களும்,
தளபதிகளும், படை வீரர்களும் தொழுகையில் இருந்ததால்,
திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த பெண்கள் செய்வதறியாது திகைத்தனர்.
நிலைமையின் ஆபத்தை உணர்ந்த சையிதா ராபியா அம்மா அவர்கள்,
தம் உயிரான சகோதரர் பாதுஷா நாயகம் அவர்களின் போர் அங்கியை அணிந்தார்கள்.
கையில் அவர்களின் வீர வாளையும்
கவசத்தையும் எடுத்து கொண்ட ராபியா அம்மா அவர்கள்,
தங்கள் புனித முகத்தையும் இரு கை, கால்களையும் முழுதாய் மறைத்துக் கொண்டு
வாளை சுழற்றி எதிரிகளை நோக்கி எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.
வெளிப்புற போர் அங்கி உடையை கண்ட எதிரிகள்,
ஐயகோ...
மன்னரல்லவா வந்து விட்டார்..
தொழுகை நேரமாயிற்றே.. அதற்குள் எப்படி தகவல் சென்றது..
மன்னர் எப்படி இங்கு வந்தார்..
என்று எதுவுமே புரியாமல் விழிக்க,
அதற்கு சிறிதும் இடமளிக்காமல்,
பாதுஷா வின் வீர வாள்,
ராபியா அம்மா வின் புனித கரங்களில் சுழன்று எதிரிகளை மிரண்டோட செய்தது.
வாள் வீச்சில் சிக்கிய எதிரிகளில் சிலர் அங்கேயே மாண்டனர்.
மற்றவர்கள் புறமுதுகிட்டு ஒடி உயிர் பிழைத்தனர்.
ராபியா அம்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் இந்த பதில் தாக்குதலை,
ஸையத் சுல்தான் அவர்களின். தாக்குதலே என நினைத்திருந்த எதிரிகள்,
இச்சம்பவத்திற்கு பிறகு,
பாதுஷா நாயகத்தின் ஆட்சியின் இறுதி காலம் வரை இது போன்ற தாக்குதலை தொடுக்கவில்லை.
இஸ்லாமிய வரலாற்றில் வாளேந்தி போரிட்ட ஒரே பெண்மணி,
அன்னை ராபியா அம்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தான்,
என்றால் அது மிகையாகாது.
இவர்களின் புனித ரவ்லா ஷரீஃப்,
ஏர்வாடி தர்ஹா கிழக்கு நுழைவாயில், பெண்கள் தொழுகை பள்ளிவாசல் அருகே அமைந்துள்ளது.
இந்த மக்பரா ஆண்கள்?
தடை செய்யப்பட்ட பகுதியாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~
ஹஜ்ரத் ஜைனுல் ஆபிதீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு
~~~~~~~~~~~~~~~~~~~
பாதுஷா ஹஜரத் குத்புல் அக்தாப் சுல்தான் ஸையத் இப்ராஹீம் ஷஹீத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு,
அவர்களின் மனைவியார்,
ஹஜ்ரத் ஸைய்யிதா
ஃபாத்திமா அம்மா ரலியல்லாஹு அன்ஹா,
அவர்களின் சகோதரர்,
(சையத் அலி ஃபாத்திமா அம்மா) அவர்களின் சகோதரர்,)
பாதுஷா ஷஹீத் நாயகம் அவர்களின் மைத்துனர்,
ஹஜ்ரத் ஸையிதினா ஜைனுல் ஆபிதீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள்.
மதீனத்து அரசாட்சியை சுல்தான் ஸையத் இப்ராஹீம் ஷஹீத் அவர்கள் துறந்து,
இந்திய பயணம் புறப்பட ஆயத்தமான போது,
பாதுஷா நாயகம் அவர்களின் குடும்பத்தினர்,
பெண்கள், குழந்தைகளுக்கு காப்பாளராக இருந்து,
பயணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளுடன்,
போருக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பொறுப்பேற்று நிறைவேற்றியவர்,
ஹஜ்ரத் அபூதாஹிர் ஷஹீத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு,
தாய்மாமாவான அவர்கள்,
அனைத்து நிலைகளிளும்
அவர்களுக்கு துணை நின்றவர்கள்
ஹழ்ரத் ஜைனுல் ஆபிதீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள்.
போர் யுக்திகளை அமைப்பதில் முக்கிய தளபதியாக இருந்தார்கள்.
6 போர்கள் வரை எதிரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி,
அவர்களின் படைகளை மாய்த்து சின்னபின்னப்படுத்தியவர்,
ஹஜ்ரத் ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,
6-வது போரில் தம் இன்னுயிரை இம்மார்க்கத்திற்காய் தியாகம் செய்து ஷஹீதாக்கப்பட்டார்கள்.
ஹழ்ரத் ஜைனுல் ஆபிதீன் ஷஹீத் அவர்களின் (ஷஹாதத்) மறைவு,
பாதுஷா நாயகம் அவர்களின் படைகளுக்கு மட்டுமன்றி,
குடும்பத்தினர், பெண்களுக்கும் பெரும் இழப்பாக அமைந்தது.
அவர்களின் புனித ரவ்லா ஷரீஃப் ஏர்வாடி பெரிய தர்கா வை ஒட்டி வலது புறத்தில் அமைந்துள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு தர்ஹா ஷரீஃப் விரிவாக்கம் செய்த போது
ஹழ்ரத் ஸையிதினா ஜைனுல் ஆபிதீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின்,
கபர் ஷரீஃப் தர்கா வின் தளத்திற்கு உள்ளேயே அமைந்து இருக்கிறது.
~~~~~~~~~~~~~~~~~~~
*அமீர் அப்பாஸ் மந்திரி.*
~~~~~~~~~~~~~~~~~~~
காட்டுப் பள்ளியில்,ஆன்மீக அரசாட்சி புரியும் அமீர் அப்பாஸ் மந்திரி அவர்கள்,
ரோமாபுரி பேரரசில் பிரதான அமைச்சராக இருந்தார்கள்.
மதீனாவின்
அரசாட்சியை விட்டுவிட்டு,
மார்க்க பணிக்காக புறப்பட்ட,
சுல்தான் ஸையத் இப்ராஹீம் ஷஹீத் அவர்கள்.
அது குறித்து சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய அரசர்களுக்கும் கடிதம் அனுப்பி கலந்து கொள்ள வேண்டினார்கள்.
ரோமாபுரி இஸ்லாமிய அரசின் மன்னராக இருந்த சுல்தான் மஹ்மூது பாதுஷா அவர்கள்,
மட்டற்ற மகிழ்ச்சியுடன் புனித தீன் பிரச்சாரப் பணியினை மேற்கொள்ளத் தேவையான பொருளுதவி மற்றும் ஆளுதவி செய்ய முன் வந்தார்.
தமது படைத் தளபதிகளில் மதிநுட்பத்திலும், வீரத்திலும், பொறுமையிலும், கல்வியிலும், சமயப் பற்றிலும், விவேகத்திலும் சிறந்தவரான அப்பாஸ் என்னும் துருக்கிய தளபதியை சுல்தான் சையத் இப்ராஹீம்(வலி)க்கு துணையாகவும்.
தம் சார்பாக பிரதம அமைச்சர் அமீர் அப்பாஸ் ரலி.. அவர்கள் தலைமையில் சுமார் 3000க்கும் அதிகமான படைவீரர்கள் கொண்ட ஒரு பெரும்படையை அனுப்பி வைத்தார்கள்.
இந்தியா வந்த பின் நடைபெற்ற அனைத்து போர்களிலும்,
போர் யுக்திகளை அமைப்பதில் அமீர் அப்பாஸ்அவர்கள் பெரும் பங்காற்றி,
சுல்தான் ஸையத் இப்ராஹீம் ஷஹீத் அவர்களுக்கு வலது கரமாக திகழ்ந்தார்கள்.
10 பகுதிகளாக நடைபெற்ற போரில்,
3ஆவது போரிலயே ஷஹீதாகி தன் உயிரை அல்லாஹ்விற்கு அற்பணித்தார்கள்.
அப்பாஸ் மந்திரி அவர்களின் ஷஹாதத்,
சுல்தான் ஸையத் இப்ராஹீம் ஷஹீத் அவர்களுக்கு பெரும் இழப்பாக அமைந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~
ஹக்கீம் டாக்டர்.
~~~~~~~~~~~~~~~~~~~
மதீனா நகரில் இருந்து பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு,
அனைத்து குழுக்களும் வருகை தந்ததோடு,
பிரயாண வழியில் சுகவீனம் ஏற்படுபவர்களுக்காகவும்,
போரில் காயமடைபவர்களுக்காகவும்,
மருத்துவம் செய்வதற்காக மருத்துவ குழுக்களையும் அழைத்து வந்தார்கள்.
அதில்.
ஹழ்ரத் யூசுப் டாக்டர் ஷஹீத்,
ஹழ்ரத் ஜாஃபர் முஹம்மது
டாக்டர் ஷஹீத்,
ஹழ்ரத் ரூம் ஸையத் அஹ்மத் டாக்டர் ஷஹீத்,
ஹழ்ரத் ஜாஃபர் சாதிக் டாக்டர் ஷஹீத்,
ஹழ்ரத் முஹைதீன் டாக்டர் ஷஹீத்,
ஆகிய முக்கிய ஆண் மருத்துவர்களும்,
பெண்களுக்கு மருத்துவம் செய்வதற்காக ஜெய்லானி டாக்டர்,
ருகைய்யா அம்மா டாக்டர்,
ஆகிய பெண் மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவின் தலைவராக,
ஹழ்ரத் அபூபக்கர் *அப்துல் ஹக்கீம்*டாக்டர் ஷஹீத்,
தலைமை மருத்துவராக இருந்தார்கள்.
மருத்துவராக மட்டும் அல்லாமல்,
போரில் பங்கு கொண்டு ஷஹீதாகி மனித கண்களுக்கு அப்பால் இன்றும் உயிரோடு வாழ்ந்து, வருகிறார்கள்.
கடந்த 2003ம் ஆண்டு ஜூலை மாதம், தமிழகத்தில் முஸ்லீம்களை வழிகெடுக்கும் ஒரு கூட்டத்தின் தலைவன்,
ஏர்வாடி யில் மேடை போட்டு ஹக்கீம் டாக்டர் அவர்களை பற்றி விமர்சித்து,
இறந்தவர் மருத்துவம் செய்கிறாராம்..
இதை நம்பி மக்கள் வருகிறார்களாம்..
நோய்கள் குணமடைகிறதாம்,
என எகத்தாளமாக பேசி சென்றான்.
இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரத்தில்,
கேரளா மாநிலம்,
மலப்புரம் நகரை சேர்ந்த ஆயிஷா என்ற பெண்மணி,
மூளையில் கட்டி ஏற்பட்டு பல்வேறு வகையான மருத்துவங்கள் செய்தும் பயனில்லாமல்,
அறுவை சிகிச்சை செய்தாலும் குணமடைய வாய்ப்பே இல்லை,
மரணமடைய தான் வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் கை விட்ட நிலையில்,
மனமுடைந்து ஏர்வாடி தர்ஹா வந்து ஹக்கீம் டாக்டர் தர்ஹாவிலே தங்கினார்.
ஒரு நாள் அந்த பெண்மணி யாரோ தன் தலையில் அறுவை சிகிச்சை செய்வது போன்று கனவு கண்டார்.
காலையில் விழித்து பார்த்த போது தலையில் ரத்தம் தோய்ந்த கட்டுகளுடன் அந்த பெண் இருப்பதை அனைவரும் பார்த்தனர்.
அந்த பெண் அன்றே முழுமையாக குணமடைந்து சென்றார்.
ஷுஹதாக்களை அளவுக்கு மீறி விமர்சித்ததால் அவர்கள் காட்டிய வெளிப்படையான கராமத் என்றே பேசப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அனைத்து நாளிதழ்களும் செய்தி வெளியிட்டன.
~~~~~~~~~~~~~~~~~~~
சந்தனப்பீர்
~~~~~~~~~~~~~~~~~~~
ஏர்வாடி ஷரீஃப் காட்டுபள்ளியில் உள்ள சந்தனப்பீர் தர்ஹாவில் அடக்கமாகி உள்ள ஷஹீத் அவர்களின் உண்மையான பெயர்,
ஹழ்ரத் ஜுல்ஃபிகார் அலி ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு.என்பதாகும்.
துருக்கி நாட்டைச் சேர்ந்த அவர்கள்,
துருக்கிய படைக்கு தளபதியாக பாதுஷா நாயகம் அவர்களுடன் சேர்ந்து தமிழக போரில் பங்கெடுத்து உயிர் நீத்தார்கள்.
குளிர் பிரதேசமான துருக்கியிலிருந்து வந்த அவர்கள்,
தமிழகத்தின் தகிக்கும் வெயிலினால் உடலில் கொப்புளங்கள் ஏற்படும் நிலையில்,
அதை சமாளிக்க தினமும் தம் புனித உடல் முழுவதும் சந்தனத்தை அரைத்து பூசிக் கொள்வார்கள்.
இதன் காரணமாகவே "சந்தனப்பீர்" என பெயர் ஏற்பட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~
கணக்கெடுக்கும் மந்திரிகள் தர்ஹா.
~~~~~~~~~~~~~~~~~~~
ஏர்வாடி ஷரீஃப் காட்டுப்பள்ளி தெற்கு நுழைவாயில் நேரே உள்ள
தர்காவில் அடக்கமாகி இருக்கும்,
காதர் மந்திரி,
முஹையதீன் மந்திரி,
என அழைக்கப்படும் ஹழ்ரத் ஸையிதினா அப்துல் காதர்
முஜாஹித் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு,
ஹழ்ரத் ஸையிதினா
கஜனாஃபர் முஹ்யித்தீன் ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு
ஆகிய
இருவரும் பாதுஷா_நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,
மதீனா மாநகரின் ஆட்சிப் பொறுப்பில் அரசராக இருந்த போது,
அவர்களின் அமைச்சரவையில் தலைமை மந்திரிகளாக இருந்தவர்கள்.
பாதுஷாவின் இந்தியப் பயணத்திற்கு உடமைகள், படைகள்,
பொருட்கள் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து,
இறுதி வரை ஷஹீது நாயகம் அவர்களுடனேயே பயணித்து,
அனைத்து ஏற்பாடு
பொறுப்புகளையும் நிறைவேற்றியவர்கள்.
தென் தமிழக போரில்,
முதல் போரில்,
முதல் நாளில்,
அமைச்சர்களில் முதலானவராக,
ஷஹாதத் அடைந்து (இன்னுயிர் நீத்து) ஷஹீதானவர்கள்,
ஹஜ்ரத்
அப்துல் காதர் ஷஹீத் ரலி.. ஆவார்கள்.
முஹைத்தீன் ஷஹீத் அவர்களுக்கு,
போரில் வயிற்றுப்
பகுதியில் பெரும் காயம் ஏற்பட்டு குடல் சரிந்த நிலையிலும்,
அதை பொருட்படுத்தாமல் இம்மார்க்கத்திற்காக தொடர்ந்து
போரிட்டு பாதுஷா வின் காலடியில் ஷஹீதானார்கள்.
ஷஹீது பாதுஷாவின்
பிரதான அமைச்சர்களான இவ்விரு ஷஹீதுமார்களுடைய
மக்பராவில்
அதிகமான செய்வினை கோளாறுகள்
நீங்குவதால்,
இவர்களுடைய மக்பரா கணக்கெடுக்கும்
மந்திரிகள் தர்ஹா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
_____________________________
°·.¸.·°¯°·.¸.·°¯°·.¸.-> _*அன்புடன்அன்வர் பாஷா*_ <-.¸.·°¯°·.¸._____________________
@pallapatti makkal social media
Association,
🔰 *PALLAPATTI* 🔰
https://www.pallapattimakkal.com/2018/07/15.html?m=1
No comments:
Post a Comment