#அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
இன்று நான் ஒரு பயான் கேட்டேன் அதை கேட்டு என் மனம் திகைத்து நின்றது..
உமர் (ரலி) அவர்கள் கலிஃபா வாக பதவியேற்ற பின்பு முதல் கட்டளை என்ன தெரியுமா?
ஹஜ்ரத் ஹாலித்பின் வாலித் (ரலி) அவர்களை தளபதி பதவியிலிருந்து எடுக்கிறார்கள்.
ஹஜ்ரத் ஹாலித்பின் வாலித் (ரலி) அவர்கள் மிகப் பெரிய விரமுள்ள ஞானமுள்ள படைத்தளபதியாய் இருந்தார்கள்...
ஆனால் பின் காலத்தில் அவர்களுக்கு சிறு பொறுப்பு கூட கொடுக்கப்படவில்லை.
அடுத்த 8 ஆண்டுகளிற்கு பிறகு ஹஜ்ரத் ஹாலித்பின் வாலித் (ரலி) அவர்கள் மரணம் அடைகிறார்கள்.
அவர் அந்த 8 ஆண்டுகளிலும் ஒரு சாதாரண இராணுவ வீரராக இருந்து தான் போராடினார்.
அன்று அவர் நினைத்திருந்தால் உமர்(ரலி) அவர்களிடம் சென்று முறையிட்டிருக்கலாம்....
என்னை தளபதியாக நியமித்தவர் முஹம்மது ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள்
என்னை தளபதியாய் உருவாக்கியவர் அவ்வலு ஹலிஃபா அபூபக்கர்சித்திக்(ரலி) அவர்கள் நான் என்ன தவறு செய்தேன் என்னுடைய இராணுவ திட்டத்தில் என்ன தவறு இருக்கின்றது என்று ஒருவார்த்தை கேட்டிடுந்தால் அத்தனை இராணுவ வீரர்களும் சுமார் 46000 இராணுவ வீரர்களும் ஹஜ்ரத் ஹாலித்பின் வாலித் (ரலி) அவர்களின் பின்னால் நின்றிருப்பார்கள்.
ஹஜ்ரத் ஹாலித்பின் வாலித் (ரலி) அவர்களால் ஒரு தனி நாட்டையே உருவாக்கியிருக்க முடியும்..
ஆனால் அவர் சொன்ன ஒரே விஷயம் நான்அல்லாஹ்க்காக போராடுகிறேன்..இந்தஉமருக்காக இல்லை என்றார்கள்...
ஹஜ்ரத் ஹாலித்பின் வாலித் (ரலி) மரணித்த பின்னர் உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்
நான் ஏன் ஹஜ்ரத் ஹாலித்பின் வாலித் (ரலி) அவர்களை தளபதி பதவியிலிருந்து நீக்கினேன் தெரியுமா??
உமர்(ரலி) சொன்னார்கள்:
"மக்கள் பேச ஆரம்பித்தார்கள்
ஈராக்கில் யாருடைய படைஇருக்கிறது ஒஹ்..ஹஜ்ரத் ஹாலித்பின் வாலித் (ரலி) அவர்களில் படையா அப்போது வெற்றி பெற்று விடும். ..
ஷாமில் யாருடைய படைஇருக்கிறது ஒஹ்..ஹஜ்ரத் ஹாலித்பின் வாலித் (ரலி) அவர்களில் படையா அப்போது வெற்றி
யர்மூர்க்கில் யாருடைய படைஇருக்கிறது ஒஹ்..ஹஜ்ரத் ஹாலித்பின் வாலித் (ரலி) அவர்களில் படையா அப்போது வெற்றி...
முஅத்தாவில் யாருடைய படைஇருக்கிறது ஒஹ்..ஹஜ்ரத் ஹாலித்பின் வாலித் (ரலி) அவர்களில் படையா அப்போது வெற்றி...-
முசைலமாவில் யாருடைய படைஇருக்கிறது ஒஹ்..ஹஜ்ரத் ஹாலித்பின் வாலித் (ரலி) அவர்களில் படையா அப்போது வெற்றி....
ஹாலித் ஹாலித் ஹாலித்
எந்த போரில் ஹாலித் இருந்தாலும் நமக்கு வெற்றிதான் என்று அல்லாஹுவை மறந்து ஹாலித் தை முன்னிலைப்படுத்துதை நான் உணர்ந்தேன்...
நான் மக்களுக்கும்உணர்த்த நாடினேன் ஹாலித் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,உமர் இருந்தாலும் இல்லா விட்டாலும்
எங்களை உருவாக்கிய நபி (ஸல்)இருந்தாலும் இல்லாவிட்டாலும்
அல்லாஹ் தான் நாடினால்தான் வெற்றி வெற்றி என்று மக்களுக்கு உணர்த்த நாடினேன்..
அதனால் தான் வாலித்தை பதவியிலிருந்து நீக்கினேன் என்றார்கள்...
தன் மீது எந்த தவறும் இல்லாத நிலையில் ஹாலித் (ரலி) அவர்கள் அல்லாஹ்க்காக மனம் பொருத்ததும்...
தன் பதவி வகித்த முதல் நாளே மிகப்பெரிய தளபதியின் மீதுஅல்லாஹ்வின் பெயரை மட்டுமே மேலோங்கச்செய்ய உமர்(ரலி) எடுத்த முடிவும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது....
புரிகின்றதா இஸ்லாம் ஏன் செழித்தது என்று தெரிகின்றதா?
நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் சென்றதென்று புரிகின்றது...
நம் இயக்கவாதிகள் போன்று அவர்கள் இருந்திருந்தால் இஸ்லாம் பக்கத்து விட்டுக்கு கூட சென்றிருக்காது....என்பதும் அனைவரும் அறிய வேண்டிய விஷயம்
இன்றைய தலைமுறைக்கு ஒரு ஞாபகமூட்டல்:
இஸ்லாத்துக்கு ரசிகனாய் இரு !!
இஸ்லாத்தை சொல்கின்றவனுக்கு ரசிகனாய் மாறாதே!!
No comments:
Post a Comment