Thursday, 20 December 2018

சூfபிஸத்தின் நான்கு படித்தரங்கள்.

தஸவ்fப்/இஹ்சான்/சூfபிஸத்தின் நான்கு படித்தரங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒருநாள் பொழுதில் ஸையுதுனா ஜலாலுத்தீன் ரூமி அலைஹி ரஹ்மா அவர்களின் மாணவர்களில் ஒருவர் அவர்களிடம் வந்து, தஸவ்ப்பின் நான்கு படித்தரங்களைப்பற்றி கேட்டார்.

மௌலானா அவர்கள் அவரை அடுத்த அறைக்குள் சென்று, அங்கு நித்திரையில் இருக்கும் நான்கு மாணவர்களையும் அறைந்துவிட்டு வருமாறு பணித்தார்கள்.

மாணவர் அடுத்த அறைக்கு சென்று அதே போல் அறைந்தார்.

முதலாவது மாணவர் எழுந்து, அதே போல் இவரையும் திருப்பி அறைந்தார்.

இரண்டாமவர், அறையும்போது இடையில் பிடித்துக்கொண்டார்.

மூன்றாமவர், எதுவும் செய்யாது அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

நான்காமவர், ஏதும் நடக்காதது போல் தான் செய்த வேலையை செய்துக்கொண்டிருந்தார்.

மாணவர் திரும்பி வந்து நடந்ததை மௌலானா அவர்களிடம் விபரித்தார்.

மௌலானா விளக்கம் கூறினார்கள்:
முதலாமவர் ஷரீஆவின் படித்தரத்தில் இருப்பவர்.  அதனால் நீங்கள் எப்படி நடந்துக்கொண்டீர்களோ அதே அளவில் அவரும் நடந்துக்கொண்டார்.

இரண்டாமவர், தரீக்காவின் படித்தரத்தில் உள்ளவர். அதை ஞாபகப்படுத்தி அதே போல் அவர் உங்களோடு நடந்துக்கொண்டார். அவரது ஷைக் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை, அவருக்கு ஞாபகப்படுத்தினார்கள்.

மூன்றாமவர், ஞான அறிவு மிக்கவர். அத்தனையும் தெய்வீகத் (மஃரிfபா) தின் புறத்தால் நடக்கிறது என்பதை அறிந்து வைத்திருந்தார். எனினும் அல்லாஹ் யாரை இந்த தாக்குதலை நாடாத்த அனுப்பி வைத்துள்ளான் என்பதை அறிய ஆவல் கொண்டவராக இருந்தார்.

நான்காமவர், தன்னை தெய்வீகத்தால் இல்லாமலாக்கி தன்மயமானவர். ஏற்கனவே ஹகீக்காவில் தன்னை ஆக்கிக்கொண்டவர். ஆகவே எது நடந்தாலும் அதில் அவர் கவனம் திரும்பப் போவதில்லை.... ஸுப்ஹானல்லாஹ்...!

நன்றி: MUBASHIR NAQSHABANDI
தமிழில்: அப்துர் ரஹீம் முஹம்மத் ஜஃfபர்

Bismillahi r-Rahmani r-Rahim

● The Four (04) Stations of Tasawwuf/Ihsan/Sufism

Once a student of Mevlana Rumi (may Allah sanctify his secret! ) asked him about the four (04) stations of Tasawwuf.

Mevlana told him to go the room next door and asked him to slap each of the four students that were there. So the student slaped each of the four students in the room. The first one got up and slapped him back. The second one got up and just as he was about to slap him, he stopped half way. The third one just glanced at his face. The fourth one just continued to do his work.
The student came back to Mevlana who explained to him.

The first one was at the level of Sharia, so he dealt with you at the level you dealt with him. The second one was at the level of Tariqa, so he (remembered) and dealt with you, how his Shaykh reminded him to deal with you. The third one had the knowledge that it was all the doings of the Divine (Ma’rifa), but he was curious to know whom Allah had sent to carry out the attack. The fourth one was in Divine Annhilation and had already reached to Haqiqa, so he had no concern whatsoever.

MUBASHIR NAQSHABANDI

No comments:

Post a Comment