Saturday, 29 December 2018

பாதுகாப்பான வேதம்

⭐🌹⭐🌹⭐🌹⭐🌹⭐
*அஸ்ஸலாமு அலைக்கும்*
  *29/12/2018🔹 சனி*
*فكرة اليوم🔸இன்றையச் சிந்தனை*
......................................................
                   ➡3⃣7⃣7⃣⬅

*(தன் பேறாற்றலால் யூத அறிஞரை இஸ்லாத்திற்கு ஈர்த்த இறைமறை குர்ஆன்)*

كان للمأمون مجلس نظر ، فدخل في جملة الناس رجل يهودي حسن الثوب حسن الوجه طيب الرائحة ، قال : فتكلم فأحسن الكلام والعبارة ، قال : فلما تقوض المجلس دعاه المأمون فقال له : إسرائيلي ؟ قال نعم . قال له : أسلم حتى أفعل بك وأصنع ، ووعده . فقال : ديني دين آبائي ! وانصرف . قال : فلما كان بعد سنة جاءنا مسلما ، قال : فتكلم على الفقه فأحسن الكلام ; فلما تقوض المجلس دعاه المأمون وقال : ألست صاحبنا بالأمس ؟ قال له : بلى . قال : فما كان سبب إسلامك ؟ قال : انصرفت من حضرتك فأحببت أن أمتحن هذه الأديان ، وأنت تراني حسن الخط ، فعمدت إلى التوراة فكتبت ثلاث نسخ فزدت فيها ونقصت ، وأدخلتها الكنيسة فاشتريت مني ، وعمدت إلى الإنجيل فكتبت ثلاث نسخ فزدت فيها ونقصت ، وأدخلتها البيعة فاشتريت مني ، وعمدت إلى القرآن فعملت ثلاث نسخ وزدت فيها ونقصت ، وأدخلتها الوراقين فتصفحوها ، فلما أن وجدوا فيها الزيادة والنقصان رموا بها فلم يشتروها ; فعلمت أن هذا كتاب محفوظ ، فكان هذا سبب إسلامي . قال يحيى بن أكثم : فحججت تلك السنة فلقيت سفيان بن عيينة فذكرت له الخبر فقال لي : مصداق هذا في كتاب الله - عز وجل - . قال قلت : في أي موضع ؟ قال : في قول الله - تبارك وتعالى - في التوراة والإنجيل : بما استحفظوا من كتاب الله ، فجعل حفظه إليهم فضاع ، وقال - عز وجل - : إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون فحفظه الله - عز وجل - علينا فلم يضع

(الكتاب : تفسير قرطبي  سورة الحجر الآية : ١٥)

*கலீஃபா மஃமூன் அவர்களின் அவையில் ஆய்வரங்கம் நடப்பது வழக்கம். அதில் (மதம் கடந்து) பலரும் பங்கெடுப்பர். அதில் அழகிய முகமும், நறுமணம் பூசி, அழகிய ஆடையணிந்த யூத அறிஞர்‌ ஒருவரும் பங்கெடுத்தார். அவர் மிக அழகிய முறையில் உரையாடினார்.*

*சபை நிறைவுற்றப்போது கலீஃபா மஃமூன் அவர்கள் அவரை அழைத்து “நீங்கள் யூதரா? என்று கேட்டார்.*

*அதற்கு அவர் “ஆம்” என்றார்.*

*அப்போது கலீஃபா மஃமூன் அவர்கள் “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்படி ஏற்றால் நான் உங்களுக்கு இன்னன்னதை (உதவிகளை) செய்வேன்” என்று வாக்குறுதியளித்தார்.*

*அதற்கு அந்த யூதர் : “என் முன்னோர்களின் மார்க்கமே என் மார்க்கம்” என்று கூறி சென்று விட்டார்.*

*ஒருவருடம் கழித்து அந்த யூதர் முஸ்லிமாக வந்து ஆய்வரங்கில் இஸ்லாமிய சட்டம் குறித்து அழகிய முறையில் உரையாற்றினார். சபை நிறைவுற்றப்போது கலீஃபா மஃமூன் அவர்கள் அவரை அழைத்து “ நம்மிடம்  கடந்த ஆண்டு வந்தவர் தானே நீங்கள்?” கேட்டார்.*

*அதற்கு அந்த மனிதர் “ஆம்” என்றார்.*

*“நீங்கள் இஸ்லாத்தை தழுவியதற்கு காரணம் என்ன?” கலீஃபா மஃமூன் கேட்டார்.*

*அதற்கு அந்த மனிதர் “உங்கள் சபையிலிருந்து திரும்பியவுடன் மதங்கள் குறித்து பரிசோதனை செய்ய விரும்பினேன்.*

*நான் அழகிய முறையில் எழுதுபவன் என்ற விஷயம் உமக்கு தெரியும்.*

*நான் தவ்ராத் வேதத்தை கூடுதல் , குறைவு செய்து மூன்று பிரதிகள் எழுதி கிரிஸ்துவ ஆலயத்திற்கு எடுத்துச் சென்றேன். என்னிடமிருந்து அவற்றை வாங்கிக் கொண்டனர்.*

*அதே போன்று இன்ஜீல் வேதத்தையும் கூடுதல், குறைவு செய்து மூன்று பிரதிகள் எழுதி யூத ஆலயத்திற்கு எடுத்துச் சென்றேன். என்னிடமிருந்து அவற்றை வாங்கிக் கொண்டனர்.*

*அதே போன்று குர்ஆனையும் கூடுதல், குறைவு செய்து , இரண்டு தாள்களை நுழைத்து எடுத்துச் சென்றேன். அவற்றை முஸ்லிம்கள் ஆய்வு செய்தனர். அவற்றில் கூடுதல் ,குறைவு இருப்பதை கண்டு அவற்றை வாங்காமல்  தூக்கி எறிந்து விட்டனர்.*

*அப்போது தான் “நிச்சயமாக இது பாதுகாக்கப்பட்ட வேதம்” என்று புரிந்து கொண்டேன். இது தான் நான் இஸ்லாத்தை ஏற்றதற்கு காரணம்” என்றார்.*

*யஹ்யா பின் அக்சம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : அதே ஆண்டு நான் ஹஜ்ஜிக்கு சென்றேன். அப்போது சுப்யான் இப்னு உயைனா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களை சந்தித்து இந்த தகவலை கூறினேன்.*

*அதற்கு அன்னார் “இதற்கு சான்று குர்ஆனிலே இருக்கிறது” என்று கூறினார்கள்.*

*அப்போது நான் “குர்ஆனில் எந்த இடத்தில் வருகிறது?” என்றேன்.*

*அதற்கு அன்னார் “தவ்ராத் , இன்ஜீல் வேதங்கள் சம்பந்தமாக அல்லாஹ் கூறும்போது அவர்கள் (கிருஸ்துவ, மற்றும் யூத அறிஞர்கள்)  அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் (5-44) என்று கூறி அந்த இரு வேதங்களை பாதுகாக்கும் அவர்களிடமே ஒப்படைத்தான். ஆனால் அவர்கள் அதனை வீணடித்து விட்டனர்.*

*இன்னும் அல்லாஹ் “நிச்சயமாக நாம் தான்  இவ்வேதத்தை இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்” (15-9)என்று கூறிவிட்டான். அதனால் தான் குர்ஆன் பாதிப்படைய வில்லை.” என்று கூறினார்கள்.*

🖊மௌலவி
*மு.அபூ அமீன் ஃபாஜில் பாகவி.* 
*பேராசிரியர் : மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி. நீடூர்.*
🌹☀🌹☀🌹☀🌹☀🌹

No comments:

Post a Comment