பிராமணன்_என்ற_சொல்லின்
#பொருள்_என்ன .....???
#சூத்திரனின்_பணி_என்ன?
#யாரெல்லாம்_சூத்திரன்
#ஆதாரம் : மனுசாஸ்திரம் நூல்,
அத் - அத்தியாயம், சு - சுலோகம்]
1. பிராமணன் இந்த உலகத்தில் உள்ள
சகல வருணத்தாருடைய பொருள்களையும்,
தானே தானம் வாங்கப் பிரபு ஆகிறான்.
(அத்.1, சு.100)
2. பிராமணனுக்கு மங்களமான பெயரையும் சூத்திரனுக்குத் தாழ்மையான பெயரையும் சூட்ட வேண்டும்.
(அத்.2, சு.33)
3. சூத்திரன் பிராமணன் உணவைத் தொட்டாலும், பார்த்தாலும் உணவு அசுத்தமாகி விடும்.
(அத்.3, சு.251)
4. உண்மையை அறிந்து கொள்ளச்
சூத்திரன் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தொட்டால் கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தப்பட்டால் சாகாமலும்,
தனது பிள்ளை, மனைவி ஆகியோரின் தலையில் அடித்தால் துன்பம் இல்லாமலுமிருந்தால்தான் அவன் சொல்வது உண்மை என்று உணரலாம்.
(அத்.3, சு.115)
5. சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து அவனுடைய பொருளைக் கொள்ளையிட வேண்டும்.
(அத்.8, சு.374)
ஆனால் பிராமணன் மற்ற வர்ணத்தார் பெண்களைப் புணர்ந்தால்அது தர்மம்.
(அத்.8, சு.13)
6. சூத்திரன் பிரமணர்களைத் திட்டினால் சூத்திரன் நாக்கை அறுக்க வேண்டும்.
(அத்.8, சு.270)
பிராமணனை சாதியைச் சொல்லித் திட்டினால் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய சூத்திரன் வாயில் வைக்க வேண்டும்.
(அத்.3, சு.271)
7. பிராமணனைப் பார்த்து
நீ இதைச் செய்ய வேண்டும் என்று உபதேசம் செய்கிற சூத்திரன் காதிலும், வாயிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்.
(அத்.8, சு.271)
8. சூத்திரன் பிராமணனை அடித்தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்டி விட வேண்டும்.
(அத்.8, சு.279, 280)
9. பிராமணனுக்குச் சரிசமமாக
உட்கார்ந்தால் சூத்திரனுடைய இடுப்பில் சூடு போட வேண்டும். அல்லது குண்டியை அறுத்து ஊரைவிட்டுத் துரத்த வேண்டும்.
(அத்.8, சு.281)
10. பிராமணர்களுடைய வர்ணாசிரம
சாதிமுறை ஏற்றத் தாழ்வைக் காப்பாற்ற யுத்தம் செய்ய வேண்டும்.
(அத்.8, சு.348)
11. பிராமணனைக் காப்பாற்றச் சண்டை போட்டுப் பிராமணரல்லாதவரைக் கொலை செய்தால் பாவமாகாது.
(அத்.8, சு.143)
12. பிராமணன் எத்தகைய கொடிய குற்றங்கள் செய்தாலும் அவனை மொட்டை அடித்தாலே போதும் அதுவே கொலைத் தண்டனைக்கு ஒப்பாகும். அல்லது
அவன் பொருளைக் கொடுத்து
வெளியூருக்கு அனுப்ப வேண்டும்.
(அத்.8, சு.379, 380)
13. அரசாங்கம் பிராமணன் என்ன
கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லக் கூடாது.
(அத்.8, சு.381)
14. பிராமணன் சூத்திரர்களுக்குக்
கூலி கொடுக்காமலே வேலை வாங்கலாம். சூத்திரன் பிராமணனுக்குத் தொண்டு செய்யப் பிரம்மாவால் படைக்கப்பட்டான்.
(அத்.8, சு.413)
15. #சூத்திரன்_என்றால் .......
(1) யுத்தத்தில் தோற்று ஒடியவன் ....
(2) யுத்தத்தில் கைதியாகப் பிடிபட்டவன் ....
(3) பிராமணனுக்குப் பக்தியோடு
ஊழியம் செய்கிறவன் ....
(4) விபச்சாரி - தேவடியாள் மகன் ....
(5) விலைக்கு வாங்கப்பட்டவன் ....
(6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன் ....
(7) தலைமுறை தலைமுறையாகத்
தொண்டு செய்பவன் ....
என்று ஏழு தன்மை உடையவன்.
(அத்.8, சு.415)
16. பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம் காரணம் சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் சொந்தக்காரனில்லை.
(அத்.8, சு.417)
17. பிராமணனிடம் சூத்திரப்
பெண்ணுக்குப்பிள்ளை பிறந்தால்
அப்பிள்ளைக்கு அப்பன் சொத்தில்
பாத்தியமில்லை.
(அத்.9, சு.155)
ஆனால் சூத்திரனிடம்
பிராமணப் பெண்ணுக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு அப்பன்
சொத்தில் பங்குண்டு.
(அத்.9, சு.224)
18. பிராமணன் எதையும் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் சாதித் தொழிலை
விட்டு வேறு தொழில் செய்தால்
அவர்களை ஊரை விட்டுத் துரத்த வேண்டும். (அத்.9, சு.225) (அத்.10, சு.99)
19. பிராமணன் ஞானியாயினும்,
மூடனாயினும் அவனே மேலான தெய்வம். (அத்.9, சு.317)
20 பிராமணர்களை வழிபடாததாலும், உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்து கொள்ளாததனாலும் சத்திரியர் முதலான மற்றச் சாதிகள் சூத்திரத் தன்மையடைந்தார்கள்;
அவர்களும் சூத்திரர்களே.
(அத்.10, சு.43)
திராவிடத்தை (தமிழகத்தை)
ஆண்டவர்களும், சூத்திரர்களே.
(அத்.10, சு.44)
21. பிராமணன் உண்டு மீந்த உணவு,
கிழிந்த ஆடை, சாரம் அற்ற தானியம் - இவைகளைப் பிராமணன் சூத்திரனுக்குப் பிழைப்பிற்குக் கொடுக்க வேண்டும்.
(அத்.10, சு.125)
22. பிராமணன் மற்றவர்கள் பொருளை யாகத்திற்காக வலிமையிலாவது,
களவு செய்தாவது எடுத்துக் கொள்ளலாம். (அத்.11, சு.12,13)
23. பெண்களையும் சூத்திரர்களையும் கொன்றால் குறைந்த பாவந்தான்.
(அத்.11, சு.67)
24. பிராமணன் மற்றவர்களைக் கொன்றுவிட்டால் அதற்குத் தண்டனையாக அவன் விரதமிருந்தால் போதும் அல்லது வேதப் பிராமணனுக்கு எருது, பசு கொடுத்தால் போதும்.
(அத்.11, சு.120)
25. பிராமணனுக்குத் தொண்டு செய்வதே சூத்திரனுக்குத் தவமாகும்.
(அத்.11, சு.235)
No comments:
Post a Comment