#RIZQ ( வாழ்வாதாரம் )
#இமாம்_அஹமத்_பின்_ஹம்பல் (ரஹ் )
அன்றைய பாக்தாத் நகரின் ஆளுநர் ஒருவர் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்களுக்கு எப்படியாவது உதவிகள் செய்து அவரை தன் வழிக்குக்
கொண்டுவர வேண்டும் என்று தீர்மானித்தார்.
இமாமைச் சந்திப்பதற்காகப் பள்ளிவாசலுக்கு வந்தார்
ஆளுநர். நேராக இமாமிடம் வந்து
கூறுகின்றார்:
"தாங்களுக்கு ஏதாவது தேவை இருக்கின்றதா.? கூறுங்கள்....... நான் நிறைவேற்றித் தருகிறேன்."
இமாம்:
"நான் அல்லாஹ்வின் பள்ளிவாசலில் இருந்துகொண்டே அவன் அல்லாத பிறரிடம் என் தேவைகளைக் கேட்பதற்கு
வெட்கப்படுகிறேன்."
ஆளுநர்:
"சரி, தாங்கள் வரும் வரை நான்
பள்ளிவாசலுக்கு வெளியே காத்து நிற்கின்றேன்."
நீண்ட நேரத்திற்குப்பின்
இமாம் வெளியே வருகின்றார்.
ஆளுநர்:
"சரி, இப்போதாவது கூறுங்கள்.
தங்களுக்கு எதாவது தேவை இருக்கின்றதா....?"
இமாம்:
" நீர் உலகத் தேவையைக் குறித்து
கேட்கின்றீரா........
அல்லது மறுமைத் தேவையைக் குறித்து கேட்கின்றீரா....?"
ஆளுநர்:
"மறுமை என்னுடைய கைகளில் இல்லையே..... உலகத் தேவையைக்
குறித்துதான் கேட்கிறேன்."
இமாம்:
"இந்த உலகம் யாருக்குச் சொந்தமோ அவனிடமே எனது உலகத் தேவைகளை நான் ஒரு போதும் கேட்டதில்லை. அப்படியிருக்க உலகம் யாருக்குச் சொந்தம் இல்லையோ அவரிடமா எனது தேவைகளைக் குறித்துக் கேட்பேன். எதுவும் தேவையில்லை என்று கூறியவராக இமாம் அங்கிருந்து சென்றுவிட்டார். ( #அல்லாஹு_அக்பர் )
No comments:
Post a Comment