Wednesday, 25 July 2018

கண்திருஷ்டி

﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
🌼 *ஜுமுஆ குறிப்பு 27-07-18*🌼

🌹الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ🌹
            
     *O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்          
         உலமா பெருமக்களுக்கான
               பயான் குறிப்புத் தளம்
 

🌹🌹 *தலைப்பு-:-*   
  *"(கண்திருஷ்டி) பார்வைகள் படுத்தும் பாடு"*

🌸🌸 *தொகுப்பு:-*
*மௌலவி அல்ஹாபிழ் அ.முகம்மது வலியுல்லா அல்தாபி B.com..,MBA*
*தலைமை இமாம் இலுப்பூர் மதீனா பள்ளிவாசல், புதுகோட்டை மாவட்டம்*

*(தந்தை)*
*மௌலவி அல்ஹாஜ் M.அப்துல் மாலிக் ரஷாதி*
*பேராசிரியர்:-நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி, ஜங்ஷன் சேலம்*

https://jumuaamedai.wordpress.com/2018/07/25/கண்திருஷ்டி-பார்வைகள்-ப/

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

     *O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்          
         உலமா பெருமக்களுக்கான
               பயான் குறிப்புத் தளம்

*For Youtube channel subscribe:-*
*நமது Youtube channel*

https://www.youtube.com/channel/UCdBAIdZfGHKWQUGxMMOFZ4w

ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

*"(கண்திருஷ்டி) பார்வைகள் படுத்தும் பாடு"*

ஜூம்ஆ மேடை
JULY 25, 2018MOHAMMED VALIYULLA ALTHAFI B.COM.,M.B.A.

முன்னுரை

وَنُنَزِّلُ مِنَ الْـقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَ‌ۙ وَلَا يَزِيْدُ الظّٰلِمِيْنَ اِلَّا خَسَارًا‏

இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
(அல்குர்ஆன் : 17:82)

مِنْ شَرِّ الْوَسْوَاسِ  ۙ الْخَـنَّاسِ ۙ‏


(அல்குர்ஆன் : 114:4)

الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ‏

மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.)

(அல்குர்ஆன் : 114:4-5)

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ‏

(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 114:6)

பார்வை படுத்தும் பாடு
கல்லடி பட்டாலும் படலாம்! கண்ணடி படக்கூடாது! என்பர். அந்த கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மை பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுடிச்சி என்பர். கண்ணேறு என்பது திருஷ்டியின் தூய தமிழ் பெயர். பிறரோட பார்வை மட்டும் அல்ல நம்மோட பார்வையே கூட சில சமயம் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

கண்திருஷ்டி என்றால் என்ன?
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கண்திருஷ்டிக்கான விளக்கத்தைக் கூறும் போது தீய உணர்வுகள் கொண்ட ஒருவர் ஒரு நல்லவிடயத்தைப் பொறாமை உணர்வோடு அது நீங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு உற்று நோக்குவதே கண்திருஷ்டியாகும்.
அரபுப் பாஷையில் கண்திருஷ்டி ‘அய்ன்’ , ‘நழ்ரத்’ போன்ற பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றன. ‘நழ்ரத்’ என்பதன் அர்த்தம் பார்வை என்பதாகும். ‘அய்ன்’ என்பது கண்திருஷ்டியாகும்.

தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி அல்லது கண்ணேறு என்று கூறுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: புஹாரி 5740, 5944, இப்னுமாஜா 3506)

‘ஆந்தையினால் ஏதும் இல்லை, (ஆந்தை அலறுவதால் ஏதும் இல்லை) கண்ணேறு உண்மையாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹாபிஸ் அத்தைமீமி (ரலி), நூல்: திர்மிதி 2140)

கண்திருஷ்டி எவ்வாறு ஏற்படுகிறது?
கண்ணேறு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘அது ஷைத்தானின் வேலையாகும்’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அபூதாவூது 3859)

கண்திருஷ்டி உண்டு என்பதற்கான குர்ஆனின் ஆதாரங்கள் :
(1) ومن شر حاسد إذا حسد

‘பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போது அவனின் தீங்கைவிட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.’

(ஸுரதுல் பலக் 113:5) இவ்வாறு அல்லாஹ் பாதுகாப்புக் கேட்குமாறு பணித்துள்ளான்.

இப்னு கய்யிம் (ரஹ்) அவர்கள்: ‘கண்திருஷ்டி படக்கூடியவர்கள் அனைவரும் பொறாமைக்காரர்களாகும், ஆனால் பொறமைக்காரர்கள் அனைவரும் கண்திருஷ்டி படக்கூடியவர்களல்லர்’ எனக் கூறுகிறார்கள். (தாதுல் மஆத் 4:167)

குழந்தைகள் கண்திருஷ்டியின் பாதிப்புகள்
குழந்தை என்றாலே அழுகு தான். அதனாலேயே குழந்தைகளுக்கு அவ்வப்போது திருஷ்டி ஏற்படும். இதனால் குழந்தைகள் சரியாக சாப்பிட மாட்டார்கள், தூங்க மாட்டார்கள், அவ்வப்போது சோர்ந்து விடுவார்கள். குழைதைகளுக்கு ஏற்பட்டிருக்கும் திஷ்டியை நீக்குவதற்கு பல வழிகள் உள்ளன

கண்ணேறு முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரையை உண்டாக்கும். அதற்கான ஆதாரம்.

நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில் இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5739)

கண்திருஷ்டியினால் வியாதிகள், சுகவீனம் உண்டாகும் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.

கண்திருஷ்டியால் கடுமையாக பாதிப்படைந்த ஸஹாபி
ஒருமுறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளயே செல்லும்போது ஸஹல்பின் ஹனீஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் மக்காவை நோக்கி உடன் நடந்து வந்தார்கள். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குளித்தார்கள். மிக அழகிய உடல்கட்டும், வெண்மை நிறமுடைய ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடல் வனப்பைக் கண்ட பனீ ஆத்தி குழுவைச் சேர்ந்த ஆமிர் பின் ரபிஆ ரளியல்லாஹு அன்ஹு, ‘இன்றுபோல் என்றும் முடிப் பொதிந்த கட்டான தேகத்தைக் கண்டதில்லை’ என்று கூறியதுதான் தாமதம், ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்படியே மயக்கமுற்று விட்டார்கள்.

இவ்விஷயம் உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ‘நபியே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸஹல் (ரளியல்லாஹு அன்ஹு) தலை தூக்க முடியாமல் அவதியுறுகிறார். அவர் விஷயத்தில் ஏதேனும் உபாயம் உண்டா?’ என (அங்குள்ளவர்கள்) கேட்டார்கள்.

‘இது சம்மந்தமாக யாரையேனும் நீங்கள் சந்தேகிக்கிறீர்களா?’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவ ‘ஆம்! ஆமிர் பின் ரபிஆ தான் அவரைப் பார்த்தார்’ எனக் கூறப்பட்டதும், ‘உங்களின் சகோதரரை யாரேனும் எதற்காக கொல்ல வேண்டும்? உங்களை ஆச்சரியத்தில் அழ்த்திடவல்ல ஏதாவதொன்றை காண நேர்ந்தால் ‘பாரகல்லாஹ்’ என மொழிந்தால் போதாதா?’ என ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி சற்று கோபமாகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

பின் ஆமிர் பின் ராபிஆ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை, ‘ஸஹ்னுக்காக குளித்திடவும்’ என கட்டளையிட்டு, (அதன்பின்) ஆமிர் பின் ராபிஆ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் முகம், இரு கைகள், இரு முழங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் ஓரங்கள் ஆகிய உறுப்புக்களையும் அவர்களது ஆடையின் உள்ளேயும் கழுவப்பட்ட நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து, அந்த நீரை ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பின்புறத்திலிருந்து ஒருவர் தலையிலும், முதுகிலும் கொட்டி (தண்ணீர் பிடித்த) அப்பாத்திரத்தையம் தலைகீழாகக் கவிழ்த்துப் போடச் செய்தார்கள்.

இப்படிச் செய்ததும் ஸஹல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எவ்வித தீங்குமின்றி, தன் பயணத்தை மற்றவர்களுடன் தொடர்ந்தார்கள்’ என்ற நிகழ்ச்சியை இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் அஹமதிப்னு ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் நஸாயி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் இப்னு ஹிப்பான் ரஹ்மதுல்லாஹி அலைஹிஆகியோர் ரிவாயத்துச் செய்கின்றனர்.

விதியை மாற்றுவதை மாற்றும் வலிமை வாய்ந்தது கண்திருஷ்டி. அதற்கான ஆதாரம்.
‘அல்லாஹ்வின் தூதரே! ஜஃபரின் குழந்தைகளுக்கு அடிக்கடி கண்பட்டு விடுகிறது. அவர்களுக்காக நான் மந்திரிக்கலாமா? என்று அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்! விதியை வென்று விடக்கூடிய ஒன்று இருக்குமானால் கண்ணேறு அதை வென்றுவிடும்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபைத் பின் ரிபாஆ அஸ்ஸுரகீ (ரலி), நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா 3510, திர்மிதி 2136)

விதியை எதுவும் மாற்றாது, மாற்ற முடியாது. அப்படி ஏதாவது ஒன்று இருந்திருந்தால் அதை (அந்த ஒன்றை) இந்தக் கண்ணேறு மாற்றும், விதியை மாற்றாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

கண்திருஷ்டியிலிருந்து மீள்வது எப்படி?
‘ஃபலக், நாஸ் அத்தியாயங்கள் இறங்கும் வரை கண்ணேறு, ஷைத்தான் ஆகியவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவ்விரு வசனங்களும் இறங்கிய பின் அதை எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டு விட்டார்கள்’ என்று அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா 3511, திர்மிதி 2135)

ஓதிப்பார்த்தல்:
கண்திருஷ்டியிலிருந்து மீள்வதற்கு ஓதிப்பார்க்க அனுமதி உண்டு. அதற்குரிய ஆதாரங்கள்.

‘விஷகடி, கண்ணேறு, சிரங்கு ஆகியவற்றுக்காக மந்திரிக்க நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்’ என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 2132)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீய விளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள் அல்லது எனக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5738, இப்னுமாஜா 3512)

ஓதிப்பார்க்கும் முறை:
நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வொரு இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் குல்ஹுவல்லாஹுஅஹத், குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின் னாஸ் ஆகிய (112,113,114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம் பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி), நூல்: புஹாரி 5017)

நோயாளிக்கு பின்வரும் துஆக்களை ஓதுவதன் மூலமாகவும் நிவாரணம் தேடலாம்.
1.ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

أذهب البأس رب الناس ، اشف أنت الشافي لا شفاء إلا شفاؤك ، شفاء لا يغادر سقما ،
بسم الله أرقيك والله يشفيك من كل ما يؤذيك ،
أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك
நோய்க்காக ஓதிப் பார்க்கும் போது நோயாளிக்கு முடியுமாயின் அவரே ஓதிக் கொள்ளலாம். அல்லது வேறொருவர் அவருக்காக ஓதலாம். அதே போன்று ஓதிப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் நோயாளிகளின் உடம்பில் ஊதி விடுவதும் அனுமதிக்கப்பட்டதாகும். ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் யாரும் நோய்வாய்ப்பட்டால் (நோய், கண்திருஷ்டி போன்றவற்றை விட்டும்) பாதுகாக்கும் வசனங்களை ஓதி ஊதிவிடுவார்கள். அவர்களின் மரணத்திற்குக் காரணமாக இருந்த அவர்களின் நோயின் போது நான் அவற்றை ஓதி அவர்களுடைய கையில் ஊதி அவர்களுடைய கையினால் அவர்களுடைய உடம்பைத் தடவி விடுவேன்,(முஸ்லிம்: 2192 )

புகாரியின் ஓர் அறிவிப்பில் அவர்கள் நோயுற்ற போது அவர்களே ஓதி ஊதிக் கொள்வார்கள். அவாகளுக்கு நோய கடுமையான போது நான் அவர்களின் கையில் ஊதி அவர்களுடைய கையால் அவர்களின் மேனியைத் தடவி விடுவேன். ஏனெனில் அவர்களுடைய கை என்னுடைய கையை விட பரக்கத் அதிகமானதாகும். இதே போன்று தண்ணீர் போன்றவற்றில் ஓதி நோயாளிகளுக்கு வழங்குவதும் ஸலபுகளிடத்தில அறியப்பட்ட விடயமாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் தண்ணீரில் மந்திரித்து நோயாளிகளுக்கு வழங்குவதில் எந்த குற்றத்தையும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்ற செய்தி முஸன்னப் இப்னு அபீ ஷைபாவில் 23975 பதிவு செய்யப்பட்டுள்ளது.

أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ، ومن كل عين لامة

அல்லாஹ்வின் பரிபூரண வார்த்தைகளைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தான், விச ஜந்துக்கள், பலிக்கும் ஒவ்வொரு கண்ணின் கெடுதிகளை விட்டும் பாதுகாப்பத் தேடுகிறேன். (புஹாரி 3371)

2. நபிகளார் (ஸல்) ஹஸன், ஹுஸைன் (ரலி) அவர்களுக்காக பாதுகாப்பத் தேடி பின்வரும் துஆவைஓதினார்கள்.

أعيذكما بكلمات الله التامة من كل شيطان وهامة ، ومن كل عين لامة

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள், ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். ‘அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் – என்று கூறுவார்கள்.
ஸஹீஹ் புகாரி 3371

முடிவுரை
இது ஒரு புறமிருக்க முஸ்லிம்களில் சிலர் கண்திருஷ்டி போன்றவைகளுக்காக பாதுகாப்பு தேடும் விதத்தில் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத சிர்க்குகள் நிறைந்த சில வார்த்தைகளைக் கொண்டும் இன்னும் சிலர் அந்நியர்களிடத்தில் சென்று மந்திரங்களைச் செய்யுமாறு வேண்டுவதையும் பார்க்கமுடிகின்றது. இது முற்றிலும் தவறானதும் அல்லாஹ்வின் கோபத்தை ஈட்டித் தரக்; கூடியதுமாகும். எனவே, நமக்கு வரக்கூடிய நோய்களுக்கு சரீஆ அனுமதித்த முறையில் நிவாரணம் தேடி அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ள அல்லாஹ் நமக்குத் துணை புரிவானாக!

ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

Saturday, 21 July 2018

பெற்றோர்களின் கவனத்திற்கு

*பெற்றோர்களின் கவனத்திற்கு*

இன்று நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக   *Smartphones* பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது *cam scanner,  Diksa,  Mx videoplayer,  Es file manager* போன்ற *Android* அப்ளிகேஷன்களையும் *You tube* யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு பயன்படுத்தும் போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த   விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும்  வரலாம். எனவே
*முன்னச்செரிக்கையாக*
*phone* ல் செய்ய வேண்டியது

1) *play store*  சென்று *settings ல் parent control option* ஐ *on* செய்யவும்.

2) அதன் கீழே உள்ள *Apps and Games* ஐ கிளிக் செய்து *12+* ல் டிக் செய்யவும்.

3) அடுத்ததாக  *Films* ஐ கிளிக் செய்து  *U* என்பதை டிக் செய்யவும்.
இப்போது  உங்கள் Smartphone  *தேவையற்ற விளம்பரங்கள், Video* க்கள்  குறுக்கிடாமல்  பயன்படுத்துவதற்கு  *பாதுகாப்பானதாக* இருக்கும். *

4)அதேபோல் *YOU TUBE*  settings ல் *Restriction  mode* ஐ *on* செய்யவும்,

*இவையனைத்தையும் செய்த பின்  உங்கள் Smart Phone ஐ பயன்படுத்துங்கள்*
 
*_இமாம்*
*_மீ. அபுல்ஹஸன் ஜமாலி, ஈரோடு_*

Wednesday, 18 July 2018

உலகத் தேவைகளை கேட்பது யாரிடம்

#RIZQ ( வாழ்வாதாரம் )

#இமாம்_அஹமத்_பின்_ஹம்பல் (ரஹ் )
அன்றைய பாக்தாத் நகரின் ஆளுநர் ஒருவர் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) அவர்களுக்கு எப்படியாவது உதவிகள் செய்து அவரை தன் வழிக்குக்
கொண்டுவர வேண்டும் என்று தீர்மானித்தார்.

இமாமைச் சந்திப்பதற்காகப் பள்ளிவாசலுக்கு வந்தார்
ஆளுநர். நேராக இமாமிடம் வந்து
கூறுகின்றார்:

"தாங்களுக்கு ஏதாவது தேவை இருக்கின்றதா.? கூறுங்கள்....... நான் நிறைவேற்றித் தருகிறேன்."

இமாம்:
"நான் அல்லாஹ்வின் பள்ளிவாசலில் இருந்துகொண்டே அவன் அல்லாத பிறரிடம் என் தேவைகளைக் கேட்பதற்கு
வெட்கப்படுகிறேன்."

ஆளுநர்:
"சரி, தாங்கள் வரும் வரை நான்
பள்ளிவாசலுக்கு வெளியே காத்து நிற்கின்றேன்."

நீண்ட நேரத்திற்குப்பின்
இமாம் வெளியே வருகின்றார்.

ஆளுநர்:
"சரி, இப்போதாவது கூறுங்கள்.
தங்களுக்கு எதாவது தேவை இருக்கின்றதா....?"

இமாம்:
" நீர் உலகத் தேவையைக் குறித்து
கேட்கின்றீரா........
அல்லது மறுமைத் தேவையைக் குறித்து கேட்கின்றீரா....?"

ஆளுநர்:
"மறுமை என்னுடைய கைகளில் இல்லையே..... உலகத் தேவையைக்
குறித்துதான் கேட்கிறேன்."

இமாம்:
"இந்த உலகம் யாருக்குச் சொந்தமோ அவனிடமே எனது உலகத் தேவைகளை நான் ஒரு போதும் கேட்டதில்லை. அப்படியிருக்க உலகம் யாருக்குச் சொந்தம் இல்லையோ அவரிடமா எனது தேவைகளைக் குறித்துக் கேட்பேன். எதுவும் தேவையில்லை என்று கூறியவராக இமாம் அங்கிருந்து சென்றுவிட்டார். ( #அல்லாஹு_அக்பர் )

Thursday, 12 July 2018

ஹலால் ஹராம் பயான்

﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
🌼 *ஜுமுஆ குறிப்பு 13-07-18*🌼

🌹الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ🌹
            
     *O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்          
         உலமா பெருமக்களுக்கான
               பயான் குறிப்புத் தளம்
 

🌹🌹 *தலைப்பு-:-*   
  *""ஹலால் ஹராம்"*

*_[ஈரோட்டு முஸ்லிம் ஏழை சிறுவன் யாஸீன் கனி இராவுத்தார் சாலையில் கிடந்த 50000 காவல்துறையிடம் ஒப்படைத்தது தொடர்பாக பேசலாம்]_*

🌸🌸 *ஆக்கம்:-*
http://warasathulanbiya.blogspot.com/2016/03/blog-post_10.html?m=1


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

     *O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்          
         உலமா பெருமக்களுக்கான
               பயான் குறிப்புத் தளம்

*For Youtube channel subscribe:-*
*நமது Youtube channel*

https://www.youtube.com/channel/UCdBAIdZfGHKWQUGxMMOFZ4w

ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ

*"ஹலால் ஹராம்"*

10.3.16  SULTHAN SALAHI  

அல்லாஹ்வின் அச்சமின்றி,ஹலாலை  ஹராமாக,ஹராமை ஹலாலாக,ஆகுமென கூறுவதற்கும்,திருத்துவதற்கும்,மாற்றுவதற்கும் எந்த மேதைக்கும் அதிகாரம் கிடையாது,தகுதியுமில்லை.

அல்லாஹ் சிலவற்றை கடைமையாக்கியுள்ளான்.அவற்றை கடந்து விடாதீர்கள்.சில எல்லைகள் வகுத்துள்ளான்.தாண்டிவிடாதீர்கள் சில

வற்றை  ஹராமாக்கியுள்ளான்.மீறி விடாதீர்கள். என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

ஹராமனவற்றால் வளர்ந்த எந்த சதையும் சொர்க்கம் போகாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من 

 أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا  

அல்லாஹ்வும்,ரஸூலும் ஒரு செயலை,கடைமையாக்கிவிட்டால்,

அவ்விஷயத்தில் (மாற்றமாக)  அபிப்ராயம் கொள்ள,எந்த முஃமினான ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமை இல்லை.எவர்அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் மாறு செய்கிறார்களோ,அவர்கள் பகிரங்கமாக வழி கெட்டுவிட்டார்கள். (அல் குர்ஆன் 33:36)

ஆகுமானதும் தடை செய்யப்பட்டதும் 
தெளிவாக்கப்பட்டது.சந்தேகத்தின்பக்கம் நெருங்காதே 
   عن أبي عبدلله  النعمان بن بشير رضي الله عنهما قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : إن الحلال بين وإن الحرام بين ، وبينهما أمور مشتبهات ، لا يعلمهن كثير من الناس ، فمن اتقى الشبهات ،فقد استبرأ لدينه وعرضه ، ومن وقع في الشبهات وقع في الحرام ، كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ، ألا وإن لكل ملك حمى ، ألا وإن حمى الله محارمه ، ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله ، وإذافسدت فسد الجسد كله ، ألا وهي القلب رواه البخاريومسلم  

நபி (ஸல்)அவர்கள் கூறியதாக அபூ அப்துல்லாஹ் அன்நுஃமான் இப்னு பஷீர் (ரலீ)அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

ஹலாலும்(ஆகுமானவை)தெளிவானது.ஹராமமும்(தடை

செய்யப்பட்டவைகள் )

தெளிவானது.இவ்விரண்டிற்கும் இடையே இவை ஹலாலானவையா?,அல்லது ஹராமானவையா? என்ற சந்தேகத்திற்கிடமான காரியங்களும் உண்டு.அவற்றை அனேகர் அறிந்து கொள்ளமாட்டார்கள்.எனவே எவர்சந்தேகத்திற்கிடமான காரியங்களிலிருந்தும் ஒதுங்கி இருக்கின்றாரோ,அவர் தனது தீனையும் கண்ணியத்தையும்,மரியாதையையும் காப்பாற்றிக் கொண்டவராவார்.மேலும் எவர்சந்தேகத்திற்கிடமானவற்றில் வீழ்ந்து விடுகிறாரோ அவர் ஹராமில் வீழ்ந்து விட்டவராவார்.அனுமதிக்கப்படாத ஒரு மேய்ச்சல் நிலத்தின் அருகில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கையில், அவை தடுக்கப்பட்டஅம்மேய்ச்சல் நிலத்தின் சென்று மேய்ந்து விடக்கூடிய   அச்சத்திற்கு எந்நேரமும் ஆளாகிக் கொண்டிருக்கும் ஓர் மேய்ப்பனுக்கு அவர் ஒப்பாவார்.ஒவ்வொரு அரசனுக்கும் சொந்தமான ஒரு மேய்ச்சல் நிலம் உண்டு.அல்லாஹ்வுக்கும் மேய்ச்சல் நிலம்(ஹிமா),அவன் (அனுமதிக்காத ஹரமான) காரியங்களாகும்.

உடலில் ஒரு சதைப்  பகுதி உண்டு.அது சீராய் விடுமானால் உடல் முழுவதும் செம்மையாய் விடுகின்றது.அது கெட்டுவிடுமாயின் உடல் முழுவதும் கெட்டு விடுகின்றது.அந்த சதைப் பகுதி இதயமாகும்.

(நூல் :புகாரி)
 இந்த  நபிமொழியும் மிக முக்கியமான "உஸூல்"எனும் மூலச் சட்டங்களை எடுப்பதற்கான கருவாகும்.இந்தநபிமொழியின்படி உலகப் பொருட்கள் எல்லாம் மூன்றே வகை.
1,ஹலால் 2,ஹராம் 3,சந்தேகதிற்குரியவை.முந்திய இரண்டும் குர்ஆன் ஹதீஸ் வழியே நன்கு தெளிவுபடுத்தப்பட்டுவிட்டதால்,அதில் பிற்சேர்க்கைக்கோ,மறுபரிசீலனைக்கோ வழி எதுவும் இல்லை.
மூன்றாவது குறிப்பிட்டுள்ள சந்தேகத்திற்கு உரியவை.நபி (ஸல்)அவர்கள் இரு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.
1,சந்தேகத்துக்கிடமானவற்றை அல்லாஹ்விற்காக யார் தவிர்த்து வாழ்கிறாரோ அவர் மார்கத்தையும்,மானத்தையும் காப்பாற்றிக் கொள்வார்.
2,எவர் (முதல் விஷயத்திற்கு) மாற்றம் செய்கிறாரோ அவர் அடுத்தடுத்து தெளிவான ஹராம்களிலும் வீழ்ந்து விடுவார்.
மூன்று பொருட்களையும் விளக்கிய நபி (ஸல்)அவர்கள் இவற்றிற்கு காரணமான "கல்பு"எனும் உள்ளம் பற்றியும் அதன் மூலமே சீர்திருத்தமாயினும்,சீர்கேடாயினும் ஏற்படுவதையும் ஹதீஸின் இறுதிப் பகுதியில் தெளிவுப்படுத்துகிறார்கள்.

மார்க்கத்தில் சில விஷயங்கள் தெளிவாக ஹலால் என்று கூறப்பட்டிருக்கும். உதாரணமாக உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகள், ஹலாலான வியாபாரம் போன்றவை. சில விஷயங்கள் தெளிவாக ஹராம் என்று கூறப்பட்டிருக்கும். உதாரணமாக பன்றியின் இறைச்சி, வட்டியினால் வரும் வருமானம் போன்றவை. ஆனால் சில விஷயங்கள் ஹலால் என்றோ, அல்லது ஹராம் என்றோ தெளிவில்லாமல் இருக்கும். உதாரணமாக ஒருவருக்கு ஹலாலான வருமானமும் உண்டு. ஹராமான வருமானமும் உண்டு. அவர் உங்களுக்கு ஒரு அன்பளிப்பு வழங்கினார். அது அவருடைய ஹலாலான வருமானத்திலிருந்து வந்ததா அல்லது ஹராமான வருமானத்திலிருந்து வந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்தக் குழப்பமான நிலையில் அந்த அன்பளிப்பை தவிர்ப்பதே நல்லது. அது ஹராமான இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கும் நிலையில் அதை பயன்படுத்தத் துணிந்து விட்டால் நாளை ஹராமையே துணிவோடு செய்கின்ற நிலை ஏற்படலாம். ஹராம் என்பது வேலி. அந்த வேலிக்கு அருகில் கால்நடைகளை மேய்த்துப் பழகி விட்டால் ஒருநாள் அந்த வேலிக்கு உள்ளேயே செல்கின்ற துணிச்சல் பிறந்து விடும்.
 கூடுமா கூடாதா என்ற சந்தேகத்திற்குரிய விஷயங்களை தவிர்த்துக் கொண்டால் தான் ஒருவர் இறையச்சமுடையவராக ஆக முடியும்.
சில உணவுப் பொருட்களை அது ஹலாலா?ஹராமா?என கண்டறிவது கடினமாக இருக்கலாம்.அது ஹலாலா அழஅல்லது ஹராமா என முடிவு செய்து கொள்வது கடினமாக இருக்கலாம்.இப்படியாக சந்தர்ப்பத்தில் அந்த சந்தேகமான உணவை சாப்பிடாமல் இருப்பதே -தக்வா- அல்லாஹ்வின் அச்சமும் பேணுதலும் ஆகும்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:                                           
دع ما يريبك إلى ما لا يريبك                            
எதில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதோ அதை விட்டு விடுங்கள்.எதில் சந்தேகம் இல்லையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.(நூல்:திர்மிதீ)    

நமக்கு முன்னால் வாழ்ந்த ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் ஹரமானவற்றிலிருந்து மட்டும் தவிர்ந்து இருக்கவில்லை.மாறாக,சந்தேகமானவற்றிலிருந்தும் கூட மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள்.

ஹலாலைப் பேணுவோம்:

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:                                                                 " كَسْبُ الْحَلالِ فَرِيضَةٌ بَعْدَ الْفَرِيضَةِ "

கடமையான வணக்கங்களுக்கு பிறகு ஆகுமான (ஹலாலான) வருமானத்தை தேடுவது கடமையாகும். (நூல்:பைஹகீ)

ஷத்தாது பின் அவ்ஸின் சகோதரி உம்மு அப்துல்லாஹ்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:ஒரு நாள் நபி(ஸல்)அவர்கள் நோன்பு  திறப்பதற்காக ஒரு கோப்பையில் ஆட்டுப்பாலை அவர்களிடம் கொடுத்து அனுப்பினேன்.ஏனெனில் அன்றைய தினம் பகலும் நீளம்,வெயிலும் அதிகம்.ஆனால் நபி(ஸல்)அவர்கள் அதை பெற்றுக்கொள்ளாமல் அந்த ஆடு எப்படி கிடைத்தது?என்று விளக்கம் கேட்டு என்னிடம் திருப்பி அனுப்பி விட்டார்கள்.பிறகு நான் "என்னுடைய சொந்த பொருளிலிருந்துதான் அதை வாங்கினேன் என்று சொல்லி அனுப்பியவுடன் அதை அருந்தினார்கள்.மறுநாள் அவர்களிடம் வந்து,நான் உங்களுக்கு பால் கொடுத்து அனுப்பியபோது,ஏன் விளக்கம் கேட்டு அனுப்பினீர்கள்?என்று நான் கேட்டபோது நபி(ஸல்)அவர்கள்:

இவ்வாறு தான் இறைத்தூதர்கள் கட்டளையிடப்பட்டுள்ளார்கள் என்று சொல்லி இவ்வசனத்தை ஓதிக் காட்டினார்கள்:
 يايها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم (என்னுடைய) தூதர்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள்;நல்ல காரியத்தையும் செய்யுங்கள்;நிச்சியமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகிறவன்.(அல் குர்ஆன் 23:51)

இந்த வசனத்தில் "நற்செயல் புரியுங்கள்" என்பதற்கு முன்பாக "ஹலாலனவற்றை உண்ணுங்கள்"என்று இறைவன் சொல்வதற்கு காரணம்,ஹலாலவற்றை உண்பதின் மூலம்தான் நல்ல அமல்களுக்குரிய தவ்பீக் கிடைக்கும்.ஹராமான உணவால் நற்செயல் புரிவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதுடன் நற்காரியங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதால்தான் ஸஹாபாக்கள் தெரியாமல் சாப்பிட்ட உணவையும் கூட பேணுதலுக்காக வாந்தி எடுத்தார்கள்.

ஹஸன் (ரலி) அவர்கள் (சிறு குழந்தையாக இருக்கும் பொழுது)

ஸதகாவாக வந்த பேரீத்தம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார்கள்.அதனைக் கண்ட நபியவர்கள்,சீ சீ,எனக்கூறி துப்பச் செய்து விட்டு,ஸதகாவின் பொருட்களை நாங்கள் சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா?என்றார்கள். (நூல்:புகாரி)

ஹராமான பொருளில் நின்றும் ஒரு பேரீத்தம் பழத்தைக்கூட தன் பேரன் உண்பதை நபியவர்கள் விரும்பவில்லை.

அந்நியர்கள் ஹலால் ஹராமை பேணமாட்டார்கள். அவர்களுக்கு இத்தகையோர் சட்டமும் இல்லை.ஆனால் நாம் ஒரு உணவை உண்ண வாங்குமுன் அது பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டும்.இந்த உணவு எங்கிருந்து வருகிறது?எவற்றைக் கலப்படம் செய்து இது சமைக்கப்படுகிறது?இதில் ஹராம் கலந்துள்ளதா?என்பதையெல்லாம் நாம் அதை வாங்கு முன் கண்டறிய வேண்டும்.

காலை "பஜ்ர்"தொழுகைக்குப்பின் சற்று நேரம் "தஸ்பீஹ்,திக்ர்" செய்தப்பின்  "இஷ்ராக்" தொழுகையை நிறைவேற்றவேண்டும்:அப்பால் இறைவனிடம் தமது தேவைகளை "துஆ"க்களின் வாயிலாக கேட்டு விட்டு உலக அலுவல்களில் ஈடுபட வேண்டும் என்பது நபி(ஸல்)அவர்கள் வகுத்தவைகளில் ஒன்று.

ஹழ்ரத் அபூதுஜானா(ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாக பஜ்ர் தொழுதவுடன் தமது வீட்டிற்கு சென்று விடுவார்கள்.இதைக் கவனித்து வந்தநபி(ஸல்)அவர்கள் அபூதுஜானவை அழைத்து "உமக்கு இறைவனின் எந்தத் தேவையும் இல்லையா?என்று கேட்பார்கள்.

 அஅதற்கவர் "யாரசூலல்லாஹ் இறைவனிடம் எனக்கு நிரம்ப தேவைகள் இருக்கிறது"என்றார்.அப்படியானால் உமது தேவைகளை இறைவனிடமிருந்து கேட்டுவிட்டு போகாமல்,தொழுதவுடன் வீட்டிற்கு சென்று விடுகிறீரே!என்று நபியவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அபூதுஜானா (ரலி)அவர்கள் கூறினார்கள்:

"யாரசூலல்லாஹ் ! என்னுடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பேரீத்த மரம் நிற்கிறது.அந்த மரத்தின் கிளைகள் என் வீட்டு முற்றத்தில் படர்ந்து நிர்ப்பதால்,அதன் பழங்கள் என் வீட்டில் உதிர்ந்து விடுகிறது.அவைகளை என்னுடைய பிள்ளைகள் எடுத்து புசித்து விடுகிறார்கள்.அது அன்னியன் உடமை,அவைகளை என் குழைந்தைகள் தின்று விடுவதால் ஹராமான (விலக்கப்பட்ட)பொருளை உண்டவர்களாகி விடுகிறார்கள்.ஆதலால் நான் தொழுதவுடன் வீட்டிற்க்குச் சென்று என் பிள்ளைகள் கண் விழிப்பதற்கு முன் அப்பழங்களை எடுத்து அவர் வீட்டில் போட வேண்டியதாயிருக்கிறது:அதனால்தான் நான் ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன் வீட்டிற்க்குச் சென்று விடுகிறேன்.என்றார்கள்.

ஹழ்ரத் அபூதுஜானா(ரலி)அவர்களின் நேர்மையையும்,பேணுதலையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் இதற்கொரு சரியான பரிகாரம் காண முயற்சித்தார்கள்.அந்த மரம் இருந்ததோ ஒரு "முனாபிக்"(முஸ்லிமை போல் நடிக்ககூடியவர்)வுடைய வீட்டில்.இறுதியில் அந்த மரத்தை அபூதுஜானாவுக்கே சொந்தப் படுத்திக் கொடுத்துவிட முடிவு செய்யப்பட்டது.

நபி (ஸல்)அவர்கள் ஒரு ஸஹாபியை மரச் சொந்தக்காரரிடம் அனுப்பி,அடுத்த வீட்டுக்காரார் அபுதுஜானாவுக்கு மரத்தை விற்றுவிடும்படி சொல்லுங்கள் என அனுப்பினார்கள்.அதற்கு அந்த முனாபிக் முடியாது என்று சொல்லிவிட்டார்.இரண்டாவது தடவை நபியவர்கள் தங்களுக்கே விலைக்கு தரும்படி கேட்டனுப்பினார்கள்.அதற்கும் அந்த முனாபிக் முடியாது என சொல்லிவிட்டார்.மூன்றாவது தடவையாக சுவர்க்கத்தின் ஒரு மரத்திற்கு பகரமாக தரும்படி கேட்டனுப்பினார்கள்.அதற்கும் முடியாது என்றே பதில் வந்தது.கடைசியாக மதினாவில் பத்துக்கும் மேற்பட்ட மரங்களைக் கொண்ட ஒரு தோட்டத்திற்கு பகரமாக அவர் வீட்டு முற்றத்தில் நிற்கக்கூடிய அந்த ஒரு மரத்தை மட்டும் தரும்படி கேட்டனுப்பினார்கள்.

  பேராசைக்கொண்ட அந்த முனாபிக் "ஒரு மரத்திற்குப் பதில் பத்து மரங்கள் கிடைக்கிறது.இந்த ஒரு மரமும் நமது வீட்டில்தான் நிற்கிறது.எனவே இரவோடு இரவாக வீட்டிலுள்ள மரத்தின் கனிகளையும் நாமே பரித்துகொள்ளலாம்.வெளியுலுள்ள மரங்களின் கனிகளும் நமக்கு கிடைக்கும்".என்று தம் மனதிற்குள் நினைத்தபடி நபியவர்களின் கடைசி கோரிக்கைக்கு இணங்கினார்.ஒப்பந்தப்படி தம் வீட்டு முற்றத்திலுள்ள மரத்தை அபூதுஜனாவுக்கே விற்று விட்டார்.அடுத்த நாள் காலையில் மரம் அபூதுஜானவுடைய வீட்டு முற்றத்தில் நிற்பதைக் கண்டு முனாபிக் திடுக்கிட்டார்.

(நூல்:தப்ஸீருல் பஹவி)

  இச்சம்பவத்தில்,ஒரு தந்தை தன் பிள்ளைகளுடைய வளர்ப்பில் ஹலால் எது?ஹராம் எது?என்று சொல்லிக்கொடுத்து வளர்த்து வந்தார்கள் என்று தெரிய வருகிறது.

அன்றைய ஸஹாபாக்கள் அனைவருமே ஹலால், உடைய விஷயத்தில் பேனுதலாகவும்,ஹராமுடைய விஷயத்தில் எச்சரிகையாகவும் இருந்துள்ளார்கள்  

எனவே, நம்முடைய வாழ்கையிலும் ஹலால், உடைய விஷயத்தில் பேனுதலாகவும், ஹராமுடைய விஷயத்தில் எச்சரிகையாகவும் இருக்க வேண்டும்.

ஏன் ஹலால் அவசியம்? நாம் நினைத்த மாதிரி வாழ்வதற்கு நமக்கு உரிமை இல்லையா?

இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முன்னர் உங்களிடம் ஒரு கேள்வி, நீங்கள் படித்த பாடசாலையில் அல்லது பல்கலைக்கழகத்தில் உங்களது அனுபவம் எப்படி? நீங்கள் நினைத்த மாதிரி அங்கே நடந்து கொள்ளலாமா? நினைத்தால் வகுப்புக்கு போகலாம், நினைத்தால் போகாமல் இருக்கலாம், ஆடை அணிந்தும் போகலாம் ஆடை அணியாமல் அம்மணமாகவும் போகலாம், நினைத்தால் ஒழுக்கமாக இருக்கலாம் நினைத்தால் தறிகெட்டதனமாக நடந்து கொள்ளலாம்… இப்படியெல்லாம் எங்காவது பாடசாலைகளில் ஒழுங்குகள் வரையறைகள் சட்டங்கள் கட்டுப்பாடுகள் செய்ய வேண்டியவைகள் செய்யக் கூடாதவைகள் என எதுவுமே இல்லாத நிலை காணப்படுகின்றதா?

அல்லது ஏதாவது ஒரு நாட்டில் நீ விரும்பிய மாதிரி வாழ்ந்து விட்டுப் போ! உனது விருப்பம் தான் எமது வெற்றி, விரும்பினால் கற்பழி! விரும்பினால் களவெடு! விரும்பினால் கொலை செய்! என்று அனுமதியிருக்கின்றதா?

அல்லது ஏதாவது மதங்களில் ஒருவன் தான் விரும்பியது போல் வாழலாம் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்ற நிலை காணப்படுகின்றதா?

நிச்சயமாக இல்லை, அங்கெல்லாம் சட்டங்கள் ஒழுங்குகள் வரையறைகள் செய்யக் கூடியவைகள் செய்யக் கூடாதவைகள் என விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதே போன்றுதான் மனித வாழ்விலும் ஒழுங்குகள் வரையறைகள் காணப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அனஸ்(ரழி)அவர்கள் அறிவித்தார்கள் : நபி(ஸல்) அவர்கள் கைபருக்குக் காலை நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்போது அங்குள்ள மக்கள், தங்கள் கழுத்துகளில் மண்வெட்டிகளை மாட்டிக் கொண்டு (வயல்வெளிகளுக்குப்) புறப்பட்டு விட்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘முஹம்மதும் (அவரின்) ஐந்து வியூகங்கள் கொண்ட படையினரும் வந்துள்ளனர்” என்று கூறினர். உடனே, கோட்டைக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, ‘அல்லாஹு அக்பர்! கைபர் பாழ்படட்டும்! நாம் ஒரு சமுதாயத்தினரின் (போர்க்) களத்தில் இறங்கி விட்டோமென்றால் எச்சரிக்கப்படுகிற அவர்களின் காலை நேரம் மிகக் கெட்டதாகி விடும்” என்று கூறினார்கள். எங்களுக்குக் கழுதைகள் சில கிடைக்கவே அவற்றை நாங்கள் சமைத்தோம். நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கழுதைகளின் இறைச்சிகளை உண்ணத் தடை விதிக்கிறார்கள்” என்று (உரக்கக்) கூவி அறிவித்தார். உடனே, பாத்திரங்கள் அவற்றிலிருந்த இறைச்சிகளுடனேயே கவிழ்க்கப்பட்டுவிட்டன. (புஹாரி:2991…,முஸ்லிம்)

ஹராமை விட்டொழிப்போம்! 

ஹராம் என்று தீர்மானிப்பதற்கான காரணம்

அடுத்து ஒன்று ஹராமாகின்றது என்றால் அதற்கான காரணத்தைக் கண்டறிய முற்படும் போது அதனை பல வழிகளில் நோக்கமுடியும், மாறாக இஸ்லாம் தடை செய்வதற்கான காரணத்தை தெளிவாக கூறியிருந்தாலே தவிர ஒரு காரணத்தைக் கூற முடியாது. அந்த அடிப்படையில் தடைசெய்யப்படுவதற்கான காரணிகளை பின்வருமாறு நோக்கலாம்.

1- பிறருக்கு தீங்கிளைக்கக்கூடியது. (உ-ம்: கலவு, ஏமாற்று, வட்டி, கற்பழிப்பு….)

2- தனக்குத் தானே தீங்கிளைப்பது. (உ-ம்: போதைப் பாவனை, புகைத்தல் பாவனை, நச்சுப் பதார்த்தங்களைப் பாவிப்பது, விபச்சாரம், தற்கொலை….)

  " مَنِ اشْتَرَى ثَوْبًا بِعَشَرَةِ دَرَاهِمَ ، فِي ثَمَنِهِ دِرْهَمٌ حَرَامٌ ، لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاةً مَا دَامَ عَلَيْهِ " ثُمَّ وَضَعَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ فَقَالَ : صَمْتًا إِنْ لَمْ أَكُنْ سَمِعْتُه 

مشکوة

ஒரு முறை உமர் (ரலி)அவர்கள் (தங்களின் மாணவர்களிடம்)ஒருவர் பத்து திர்ஹத்திற்கு ஒரு ஆடையை வாங்கினார்.ஆனால் அதில் ஒரு திர்ஹம் ஹராமாக இருந்தாலும்,அந்த ஆடையை அணிந்திருக்கும் காலெமல்லாம் அருடைய தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.என்று கூறிவிட்டு தன் காதுகளில் விரல்களை நுழைத்து விட்டுச் சொன்னார்கள்:இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் சொன்னதாக நான் கேட்கவில்லை என்றால் என் காதுகள் செவிடாக்கட்டும்.(நூல்:அஹ்மத்) 

பாழும் மதுவும்:விண்வெளி பயணத்தில் (மிஃராஜ்)

என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன.அவ்விரண்டில் ஒன்றில் பால் இருந்தது.மற்றொன்றில் மது இருந்தது.ஜிப்ரீல் (அலைஹி) அவர்கள் இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்களோ,அதை குடியுங்கள் என்று கூறினார்கள்.நான் பாலை எடுத்துக் குடித்தேன்.நீங்கள் இயல்பான (பானத்)தை எடுத்துக் கொண்டீர்கள்.மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும் என்று சொன்னார்கள்.(நூல்:புகாரி)    

அனஸ்(ரழி)அவர்கள் அறிவித்தார்கள் : நபி(ஸல்) அவர்கள் கைபருக்குக் காலை நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்போது அங்குள்ள மக்கள், தங்கள் கழுத்துகளில் மண்வெட்டிகளை மாட்டிக் கொண்டு (வயல்வெளிகளுக்குப்) புறப்பட்டு விட்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘முஹம்மதும் (அவரின்) ஐந்து வியூகங்கள் கொண்ட படையினரும் வந்துள்ளனர்” என்று கூறினர். உடனே, கோட்டைக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, ‘அல்லாஹு அக்பர்! கைபர் பாழ்படட்டும்! நாம் ஒரு சமுதாயத்தினரின் (போர்க்) களத்தில் இறங்கி விட்டோமென்றால் எச்சரிக்கப்படுகிற அவர்களின் காலை நேரம் மிகக் கெட்டதாகி விடும்” என்று கூறினார்கள். எங்களுக்குக் கழுதைகள் சில கிடைக்கவே அவற்றை நாங்கள் சமைத்தோம். நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கழுதைகளின் இறைச்சிகளை உண்ணத் தடை விதிக்கிறார்கள்” என்று (உரக்கக்) கூவி அறிவித்தார். உடனே, பாத்திரங்கள் அவற்றிலிருந்த இறைச்சிகளுடனேயே கவிழ்க்கப்பட்டுவிட்டன. (புஹாரி:2991…,முஸ்லிம்)

  عن النبي صلى الله عليه وسلم قال يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام

ஒரு காலம் வரும் ஹலாலா?ஹராமா?என்பதை மனிதன் பொருட்படுத்த மாட்டான் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.(நூல்:புகாரி)

இந்த மாதிரி காலங்களில் ஹராமுடைய விஷயத்தில் ரெம்ப கவனம் தேவை.
ஹராம் கலந்து விடக்கூடாது: 
நபிமார்களும்,ஸஹாபாக்களும் ஹராமான  பொருட்களைப் பாம்பின்  விஷத்தைப் போன்று கருதினார்கள்.ஒருவேளை அறியாமல் ஏதேனும் ஹராமான பொருள் உடலில் கலந்து விட்டால் கூட பாம்பின் விஷத்தை வெளியேற்றுவதைப் போன்றே அதை உடனடியாக வெளியேற்ற முயற்சிப்பவர்களாக இருந்தார்கள்.
عن عائشة رضي الله عنها قالت كان لأبي بكر غلام يخرج له الخراج وكان أبو بكر يأكل من خراجه فجاء يوما بشيء فأكل منه أبو بكر فقال له الغلام أتدري ما هذا فقال أبو بكر وما هو قال كنت تكهنت لإنسان في الجاهلية وما أحسن الكهانة إلا أني خدعته فلقيني فأعطاني بذلك فهذا الذي أكلت منه فأدخل أبو بكر يده فقاء كل شيء في بطنه  

ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு (பணிவிடை செய்த)நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தி வந்த அடிமையொருவன் இருந்தான். அபூபக்கர்(ரலி) அவர்கள் அவன் செலுத்தும் தொகையிலிருந்து சாப்பிட்டு வந்தார்கள்.ஒரு நாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான்.அதிலிருந்து அபூபக்கர் சித்தீக் (ரலி)அவர்கள் சிறிது சாப்பிட்டார்கள்.அப்போது அந்த அடிமை அவர்களிடம்,"இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டான்.அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் இது என்ன?என்று கேட்டார்கள்.(அதற்கு)அவன்,"நான் அறியமைக்காலத்தில் ஒரு மனிதருக்கு குறி சொல்லிவந்தேன்.எனக்கு நன்றாக குறி சொல்லத்தெரியாது.ஆயினும் (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து)அவரை நான் ஏமாற்றி விட்டேன்.அவர் அதற்காக எனக்கு கூலி கொடுத்தார்.நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக)எனக்கு கூலியாக கிடைத்த அந்தப் பொருளிலிருந்துதான்"என்று சொன்னான்.உடனே அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் தம் கையை (வாய்க்குள்)நுழைத்து தம் வையிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்து விட்டார்கள்.(நூல்:புகாரி)  

ஹராமானவைகள் தான் அல்லாஹ்வின் வரம்புகளாகும்; அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறாதீர்கள்:

அல்லாஹ் கூறுகிறான்:

“எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்! அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்! மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.” (4:14).

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

‘நான் உங்களுக்கு எதைத் தடுத்துள்ளேனோ அதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை ஏவியுள்ளேனோ அதை முடிந்த அளவு செய்யுங்கள்’. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.

எனவே அன்பு சகோதர, சகோதரிகளே மேற்கண்ட திருமறை வசனங்கள், ஹதீஸ்கள் மற்றும் விளக்கங்களிலிருந்து நாம் பெறும் தெளிவு என்னவெனில்,

இறைவன் விதித்த ஹராம் மற்றும் ஹலாலைப் பேணுவதும் வணக்கமாகும்

இறைவன் ஹராம் என்று விலக்கியிருப்பதை மீறுவது இறைவனின் வரம்பை மீறியதாகும்

இறைவனின் வரம்புகளை மீறியோருக்கு கடுமையான தண்டனைகள் இருக்கின்றது

ஒருவர் இறைவன் ஹலால்-ஹராம் என விதித்திருப்பதை தம் சுய விருப்பத்திற்கு இணங்க, மனோ இச்சைகளுக்கு கட்டுப்பட்டவராக இறைவனின் வரம்புகளான ஹராம் – ஹலால் என்பதை மாற்றியமைப்பது இறை நிரகாரிப்பு ஆகும்

ஒருவர் இவ்வாறு மாற்றியமைத்ததைப் பின்பற்றுவது அவரை வணங்குவது போலாகும். இது மாபெரும் பாவமாகிய இணைவைப்பு ஆகும். இது இறைவன் நம்மைப் படைத்த நோக்கமான அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் பிறரை வணங்கியதாக ஆகிவிடும். (அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக)

தவறான வழிகாட்டுதலின் மூலமாக ஒருவர் வழிதவறிச் சென்றால் மறுமையில் அவருடைய பாவச் சுமையயையும் தம்முடையதுடன் சேர்த்து சுமக்க நேரிடும்.

இறைச்சட்டங்களில் விளையாடுவோர்களை நாம் புறக்கணித்து அல்லாஹ்விடம் பாதுகாவல் கோரியவர்களாக திருமறையையும், அல்-குர்ஆனின் வழிமுறைகளையும் பின்பற்றி வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டும்

அல்ஹம்துலில்லாஹ்!இன்று உணவுப் பொருட்கள் ஹலாலா,ஹராமா என்று பார்த்து வாங்கும் பேணுதல் உடையவராகவும்,உழைப்பிலும்,வியாபாரத்திலும் ஹலால் ஹராம் பேணுதல் உடையவராகவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் வாழ்வில் பரக்கத்தை தந்தருள் புரிவானாக!ஆமீன். 

குறிப்புகளை குவித்தவர்:

மௌலவி நஸீர் மிஸ்பாஹி.

Posted in : SULTHAN SALAHI, خطب الجمعة, ஜும்ஆ உரைகள்

ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ