﷽﷽﷽﷽﷽﷽﷽﷽
🌼 *தராவீஹ்-12 குறிப்பு 27-05-18*🌼
🌹الصــلوة والسلام عليك يارسول الله ﷺ🌹
*O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
உலமா பெருமக்களுக்கான
பயான் குறிப்புத் தளம்
🌹🌹 *தலைப்பு:-*
*"பெற்றோர்களை பேணுவோம்"*
💐💐 *ஆக்கம்:-*
http://wahidhihalperavai.blogspot.in/2017/05/12.html?m=1
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*O.M.ஹழ்ரத் கிப்லா பாசறை*
*For Youtube channel subscribe:-*
*நமது Youtube channel*
https://www.youtube.com/channel/UCdBAIdZfGHKWQUGxMMOFZ4w
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ
*"பெற்றோர்களை பேணுவோம்"*
தராவீஹ் 12 ம் நாள்
وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
தன்னைத் தவிர வேறு யாரையும் நீங்கள் வணங்கக்கூடாது என்றும் பெற்றோருக்கு நல்லுபகாரம் செய்ய வேண்டும் என்றும் உமது இறைவன் கட்டளையிட்டு விடடான். {17 ;23}
இந்த வசனத்தில் அல்லாஹ் பெற்றோர்களிடம் உபகாரத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறான்.
பத்து மாதம் சுமந்து பல துயரங்களை தாங்கிக் கொண்டு பிள்ளைகளை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விழித்து அவர்களை ஆளாக்குகிறாள். தந்தையோ தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல,தன் பிள்ளைகளின் சுகமே தன் சுகம் என்றெண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து நாட்டை விட்டு நாடு கடந்து உழைத்து தன் பிள்ளைகளை வளர்க்கிறார்
இது ஒரு உதாரணம் தான்.பெற்றோர்கள் படும் கஷ்டங்கள் துயரங்களுக்கு அளவே இல்லை.இப்படி தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பதோடு தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் பெற்றோர்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் வேதனை தான் மிஞ்சும்.
அந்தளவு இன்றைக்கு பெற்றோர்கள் மனம் நோகடிக்கப்படுகிறார்கள். வேதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள்.தான் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.சமூகத்தில் மதிப்பு மிக்கவனாக உருவாக வேண்டும் என்று அள்ளும் பகலும் கஷ்டப்பட்டு தன் வாழ்வை தியாகம் செய்கிறார்கள் பெற்றோர்கள்.ஆனால் அந்த நிலைக்கு வருவதற்கு காரணமாக இருந்த பெற்றோரை பாரமாக பார்க்கிறார்கள் பிள்ளைகள்.
வறுமையில் பலர் தன் பெற்றோர்களை கண்ணுக்குள் போற்றி வைக்க முடிய வில்லையே என்று ஏங்குகிறார்கள்.ஆனால் வசதி படைத்தவர்கள் தன் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். அல்லது மாத சம்பளத்திற்கு ஆளை வைத்து விட்டு அவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.இன்னும் சிலர் மாதத்திற்கு 500 ரோ 1000 மோ கொடுத்து விட்டால் நம் கடமை முடிந்து விட்டு என்று எண்ணுகின்றனர்.
ஆனால் இஸ்லாம் பெற்றோரை மிக உயர்ந்த ஸ்தானத்தில் பார்க்க வேண்டும் என்று போதிக்கிறது.
பெற்றோரின் அனுமதியின்றி எந்த காரியமும் செய்வது ஆகாது
(5) روى أبو داود عن أبي سعيدٍ الخدري: أن رجلًا هاجر إلى رسول الله صلى الله عليه وسلم مِن اليمن، فقال: ((هل لك أحد باليَمن؟))، قال: أبواي،قال: ((أَذِنا لك؟))، قال: لا،قال: ((ارجِعْ إليهما فاستأذنهما، فإن أذنا لك فجاهِدْ، وإلا فبَرَّهما))؛ (حديث صحيح) (صحيح أبي داود للألباني حديث 2207).
ஒரு மனிதர் யமனிலிருந்து ஹிஜ்ரத் செய்து நபியிடம் வந்தார்.அவரிடம் நபி ஸல் அவர்கள் யமனில் உனக்கு யாராவது இருக்கிறார்களா என்றார்கள்.என் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னார். நீ இங்கு வருவதற்கு அவர்கள் அனுமதியளித்தார்களா என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் சொன்ன போது,அப்படியானால் நீ திரும்பி சென்று அவர்களிடம் அனுமதி கேள்.அனுமதி தந்தால் வா.இல்லையெனில் அவர்களுக்கு உபகாரம் செய் என்றார்கள். {அபூதாவூது}
எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் பெற்றோரின் அனுமதி வேண்டும் என்று கூறி இஸ்லாம் அவர்களுக்கு உயர்ந்த ஸ்தானத்தை வழங்கியிருக் கிறது.ஆனால் இந்த பிள்ளைகள் அவர்களுக்கு தங்கள் வீட்டிலேயே அணுமதி கொடுப்பதில்லை என்பது கொடுமையிலும் மிகக் கொடுமை.
இன்றைக்கு தோன்றியிருக்கிற முதியோர் இல்லங்கள் இன்றைய பெற்றோர்களின் அவல நிலையை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.
வயிற்றில் இடம் கொடுத்த அன்னைக்கு வீட்டில் இடம் இல்லை இந்த கால கட்டத்தில்.
ஒரு முதியோர் இல்லத்தில் எழுதிப்போடப்பட்டிருந்த வாசகம் இது ;“உஷ்ஷ்ஷ் சப்தம் போடாதீர்கள் குஞ்சுகளால் மிதிபட்ட கோழிகள் இங்கே இருக்கிறார்கள்”
இன்றைக்கு பெற்றோர்கள் படும் பாட்டை இதை விட எவரும் தெளிவாக விவரிக்க முடியாது.
இஸ்லாம் பெற்றோர்களின் முக்கியத்துவம் குறித்து நிறையவே பேசியிருக்கிறது.
ஜிஹாதை விட பெற்றோருக்கு உபகாரம் புரிவது மிகச்சிறந்த அமல்
عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال: أقبل رجل إلى النبي صلى الله عليه وسلم فقال : أبايعك على الهجرةوالجهاد أبتغي الأجر من الله تعالى، فقالصلى الله عليه وسلم:هل من والديك أحد حي؟قال: نعم بل كلاهما. قال:فتبتغي الأجر من الله تعالى؟ قال: نعم. قال: فارجع فأحسن صحبتهما .متفق عليه وهذا لفظ مسلم وفي رواية لهما:جاء رجل فاستأذنه في الجهاد، فقال:أحي والداك؟ قال: نعم. قال: ففيهما فجاهد.
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்விடம் நற்கூலியை நாடியவனாக ஹிஜ்ரத் செய்யவும் ஜிஹாத் செய்யவும் தங்களிடம் உறுதி பிரமாணம் செய்கிறேன் என்றார்.அப்போது நபி ஸல் அவர்கள் உம் பெற்றோரில் யாரும் உயிருடன் உள்ளனரா என்று கேட்டார்கள்.அவர் ஆம், இருவரும் உள்ளார்கள் என்றார்.நீ அல்லாஹ்விடம் நற்கூலியை தேடுகிறாயா என்றார்கள்.ஆம் என்று அவர் கூறினார்.அப்படியானால் உம் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவ்விருவரிடமும் அழகிய தோழமையைக் கடைபிடிப்பீராக என்றார்கள்.{புகாரி,முஸ்லிம்}
அவர்களின் மூலம் சுவனத்தில் உயர்ந்த நிலையைப் பெற முடியும்
نمتُ فرأيتُني في الجنَّةِ فسَمِعْتُ صوتَ قارئٍ يقرأُ فقُلتُ مَن هذا فقالوا : هذا حارثةُ بنُ النُّعمانِ فقالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وعلَى آلِه وسلَّمَ كذلكَ البِرُّ كذلكَ البِرُّ وَكانَ أبرَّالنَّاسِ بأمِّهِ.
الراوي: عائشة أم المؤمنين المحدث: الوادعي - المصدر:الصحيح المسند - الصفحة أو الرقم: 1555
خلاصة حكم المحدث: صحيح
நான் கனவில் சுவனத்தைப் பார்த்தேன்.அங்கே குர்ஆன் ஓதும் சப்தத்தைக் செவியுற்றேன்.யார் இவர் என்று கேட்டேன்.இவர் ஹாரிஸா இப்னு நுஃமான் என்று சொல்லப்பட்டது என ஆயிஷா ரலி அவர்கள் சொன்னார் கள்.அப்போது நபி ஸல் அவர்கள் பெற்றோருக்கு உபகாரம் செய்வதுஇவ்வாறு தான் என்றார்கள்.ஹாரிஸா ரலி அவர்கள் தன் தாயுக்கு உபகாரம் செய்வர்களாக இருந்தார்கள்.{அஸ்ஸஹீஹுல் முஸ்னது}
இறைவனின் திருப்தியைப் பெற முடியும்
قال رسول الله صلى الله عليه وسلم :«رضا الله في رضا الوالد، وسخط الله في سخط الوالد» [رواه الترمذي، وابن حبان، والحاكم/ صحيح الترغيب للألباني: 2501] .
அல்லாஹ்வின் திருப்தி தந்தையின் திருப்தியில் இருக்கிறது.அல்லாஹ் வின் கோபம் தந்தையின் கோபத்தில் இருக்கிறது. {திர்மிதி}
உணவின் விஸ்தீரணம் அவர்களின் மூலம் கிடைக்கிறது
* بر الوالدين زيادة في العمر والرزق: قال رسول الله صلى الله عليه وسلم : «من سره أن يمد له في عمره، ويزاد في رزقه؛ فليبر والديه، وليصل رحمه» [رواه أحمد/ صحيح الترغيب: 2488] .
நீளமான ஆயுள் கிடைப்பதற்கும் உணவில் விஸ்தீரணம் கிடைப்பதற்கும் யார் விரும்புகிறாரோ அவர் தன் பெற்றோருக்கு உபகாரம் செய்யட்டும், தன் உறவுகளை ஆதரித்து வாழட்டும்.{அஹ்மது}
பாவங்கள் அவர்களின் மூலம் மன்னிக்கப்படுகிறது.
* بر الوالدين سبب في غفران الذنوب:ويدلك على ذلك؛ هذه القصة: جاء إلى النبي صلى الله عليه وسلم رجل، فقال: إني أذنبت ذنبًا عظيمًا، فهل لي من توبة ؟ فقال : «هل لك من أم ؟» قال : لا, قال :«فهل لك من خالة ؟» قال : نعم , قال :«فبرها» [رواه الترمذي – واللفظ له – وابن حبان والحاكم/ صحيح الترغيب للألباني: 2504] .
ஒரு ஸஹாபி நபி ஸல் அவர்களிடம் வந்து நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.எனக்கு மன்னிப்பு உண்டா என்று கேட்டார்கள்.உடன் நபியவர் கள் உனக்கு தாய் இருக்கிறார்களா என்று கேட்டார்கள்.இல்லை சிறிய தாயார் தான் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.அப்படியானால் அவர்களுக்கு நீ உபகாரம் செய் என்றார்கள். {திர்மிதி}
சுவனம் அவர்களின் கரங்களில் தான் இருக்கிறது.
عن سلمة بن وردان قال : سمعت أنساً رضي الله عنه يقول : ارتقى رسول الله صلى الله عليه وسلم على المنبر درجة فقال : آمين ، ثم ارتقى درجة فقال : آمين ، ثم ارتقى الدرجة الثالثة فقال : آمين ، ثم استوى وجلس فقال أصحابه : يا رسول الله ، علام أمنت ؟ قال :
((أتاني جبريل عليه السلام فقال : رغم أنف من ذكرت عنده فلم يصلّ عليك ، فقلت : آمين ، ورغم أنف من أدرك أبويه أو أحدهما فلم يدخل الجنة ، فقلت : آمين ، ورغم أنف من أدرك رمضان فلم يغفر له إن لم يغفر له فمتى ؟ فقلت : آمين))
[ أخرجه أبو نعيم ]
வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றிருந்து அவர்களின் மூலம் சுவனம் செல்லாமல் போய் விட்ட அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாகட்டும் என்ற ஜிப்ரயீல் அலை அவர்களின் துஆவிற்கு நபி ஸல் அவர்கள் ஆமீன் சொன்னார்கள். {அபூநஈம்}
நபிமார்களின் சிறந்த பண்புகளை கூறும் இடத்தில் பெற்றோர்களுக்கு உபகாரம் செய்யும் பண்பையும் அல்லாஹ் பதிவு செய்கிறான்.
(1) قال تعالى عن يحيى بن زكريا صلى الله عليهما وسلم: ﴿ يَا يَحْيَى خُذِ الْكِتَابَ بِقُوَّةٍ وَآتَيْنَاهُ الْحُكْمَ صَبِيًّا * وَحَنَانًا مِنْ لَدُنَّا وَزَكَاةً وَكَانَ تَقِيًّا * وَبَرًّا بِوَالِدَيْهِ وَلَمْ يَكُنْ جَبَّارًا عَصِيًّا * وَسَلَامٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا ﴾ [مريم: 12 - 15].
(2) وقال سبحانه عن عيسى ابن مريم صلى الله عليه وسلم: ﴿ قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا * وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا * وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا * وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا * ذَلِكَ عِيسَى ابْنُ مَرْيَمَ قَوْلَ الْحَقِّ الَّذِي فِيهِ يَمْتَرُونَ ﴾ [مريم: 30 - 34]..
அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்னவைகளை வாழ்வில் நடை முறைப்படுத்தி எந்த சாக்குபோக்கும் சொல்லாமல் கனிவு மற்றும் பாசம் என்ற இறக்கையை விரித்து பெற்றோருக்கு பணிவிடை என்ற நல்லமல் செய்து சுவனம் புக அல்லாஹ் அருள் புரிவானாக!
ﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺﷺ
No comments:
Post a Comment