Monday, 23 April 2018

ஹதீஸ் என்றால் என்ன?


ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்பொருள்படும்.

இஸ்லாமிய உலகில் ஹதீஸ: என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சொல் செயல் ஆகியவற்றுக்கும் அவர் மௌனமாக இருந்து அங்கீகரித்த விசயங்களுக்கும் சொல்லப்படும்.

அதே போல நபித்தோழர்களது சொல் செயல் அங்கீகாரத்திற்கும் ஹதீஸ் என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு சாரார் இதற்கு அஸர் என்று வேறுபெயரிட்டு அழைப்பர்.

ஹதீஸ் குத்ஸி

ஹதீஸ் குதுஸி என்றால் அல்லாஹ் சொல்கிறான் என்று முன்னுரையிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லும் பொன்மொழியாகும். இந்த தகவல் குர்ஆனில் இருக்காது.

உதாரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் சொல்கிறான் மனிதன் என்னை திட்டுகிறான். மனிதன் காலத்தை திட்டுகிறான் . காலத்தை நானல்லவா படைத்தேன். (முஸ்லிம்)

ஹதீஸ் வகைகள்

ஹீஹ் அறிவிப்பாளர் தெடர் முழுமையாக சொல்லப்பட்டு அவர்கள் அனைவரும் பரிபூர்ண நம்புக்ககைக்குரிய நேர்மையாளராகவும் மிக்க மனன சக்தியுள்ளவராகவராகவும் மனிதத்தன்மை மிக்கவராகவும் இருந்து அவர்களால் சொல்லப்படும் ஹதீஸ் அவர்களைவிடச்சிறந்தவர்களின் அறிவிப்புக்கு முரன்படாமலும் இருந்தால் அது ஸஹீஹ் என்ற முதல் தரமான ஹதீஸ் ஆகும்.

ஹஸன்

அறிவிப்பாளரின் தகுதிகள் முழுமை பெற்றிராத நிலையில் ஒரு ஹதீஸின் கருத்துக்கள் வேறு பல வழிகளில் அறிவிக்பபட்டிருக்குமானால் அது ஹஸன் என்றழைக்கப்படும்.

லயீப்

அறிவிப்பாளர்களின் தகுதியில் குறைப்பாடுகள் இருந்து மற்ற விதிமுறைகளில் தேறாத ஹதீஸ்கள் லயீப் எனப்படும்.

மவ்லூஉ

உண்மை அல்லாத பொய்யாக இட்டுக்கட்டி சொல்லப்பட்ட ஹதீஸ்கள் மவ்லூஉ எனப்படும்.


on Fri 11 Nov 2011 - 19:56
by *சம்ஸ்



No comments:

Post a Comment