Thursday, 22 March 2018

இறை நினைப்பிலும் ஒருவன் ஈடுபடுவது

அல்லாஹ்வை திக்ர் செய்துகொண்டே இருந்த ஒரு மனிதர் இருந்தார்
ஷைத்தான் அவனிடம் நீ எப்போதும் இறைவனை அழைத்துக்கொண்டே இருக்கிறாய் அவன் என்றாவது உனக்கு பதிலளித்தானா ? என்றான் .

அந்த மனிதருக்கும் ஷைத்தான் கூறியது சரியென்று தோன்றியது .இறைவனை ஜிக்ர் செய்வதை நிறுத்திவிட்டார் .

ஹஸ்ரத் கிள்று அலைஹி வஸல்லம் அந்த மனிதரிடம் வந்து நீங்கள் ஏன் ஜிக்ர் செய்வதை நிறுத்தி விட்டீர்கள் என கேட்டபோது என் அழைப்புக்கு இறைவன் பதில் கொடுப்பதே இல்லையே என்று அந்த மனிதர் கூறினார் .

ஹஸ்ரத் கிள்று அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் எப்போது நீ இறைவனை அழைத்துக்கொண்டே இருக்கிறாயோ ,எப்போது நீ இறைவனை நினைத்துக்கொண்டே இருக்கிறாயோ அதுவே இறைவன் உனக்கு பதிலளிக்கிறான் என்று பொருள் என கூறினார்கள் ..

இறைவன் நாடியதனால்தான் உங்களால் அல்லாஹ்வை அழைக்க முடிகிறது .
அவன் நாடாமல்  உங்களால் இறைவனை அழைக்க முடியாது ,நினைக்க முடியாது .
எத்தனையோ மக்கள் இறைவனை மறந்து வாழும்போது நீங்கள் மட்டும் அல்லாஹ் அல்லாஹ் என்று கூறுகிறீர்கள் என்றால் , உங்களை மட்டும் இறைவன் அல்லாஹ் அல்லாஹ் என்று கூற வைத்திருக்கிறான் என்றால் இறைவன் உங்களை நினைப்பதால்தானே கூற வைத்திருக்கிறான் என்றார்கள் ..

மௌலானா ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள் .துஆவில்,இறை நினைப்பிலும் ஒருவன் ஈடுபடுவது இறைவன் அவனுக்கு செய்த அருளாகும் ....

No comments:

Post a Comment