Thursday, 1 March 2018

சிரியா முஸ்லிம்களுக்காக துஆச் செய்வோம

இவ்வார ஜும்ஆ உரைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்👇

தலைப்பு:-
சிரிய முஸ்லிம்களின் மீது நமக்கான அவசரக் கடமைகள் என்ன?

1. நமக்கும் அவர்களுக்கும் இடையே இஸ்லாம் கூறும் சகோதர பந்தம் இருக்கின்றது.

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ

“திண்ணமாக! இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவார்கள். எனவே, உங்களின் சகோதரர்களின் காரியத்தில் சீர்திருத்தத்தையே நீங்கள் நாடுங்கள்!”                                           ( அல்குர்ஆன்: 49: 10 )

وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ

“இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் மற்ற இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் நேசர்கள் ஆவார்கள்”. ( அல்குர்ஆன்: 9: 71 )

தான் நேசம் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஏற்படும் இக்கட்டான, சோதனையான நேரத்தில் நேசம் கொண்ட காரணத்தால் எவ்வாரெல்லாம் அந்த நேசத்தை வெளிப்படுத்துவாரோ அவ்வாறே சிரிய முஸ்லிம்கள் விஷயத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.

2. பிற முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட துன்பம் தங்களுக்கு ஏற்பட்டது போன்று உணர வேண்டும்.

கப்பாப் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்திற்காக அவரின் எஜமானியும், குறைஷித் தலைவர்களும் கடும் வேதனை செய்தார்கள்.

கற்களை நெருப்பில் இட்டு சுட்டு, தீ கொழுந்து விட்டு எரிந்து அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரைக் காத்திருந்து, பின்னர் அவரை அந்த நெருப்புக் கங்குகளின்மேல் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பர்கள்.

அவரது முதுகுச் சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழ, பிறகு அந்தத் தீ அணைந்தது. அது அவரது காயத்திலிருந்து வழிந்து விழுந்த நீரினால்.

பலமுறை மாநபி {ஸல்} அவர்களிடம் முறையிட்ட போதும், மாநபி {ஸல்} அவர்கள் பொறுமையை மேற்கொள்ளுமாறு உபதேசித்தார்கள்.

இந்நிலையில், நடக்கும் கொடுமையெல்லாம் பத்தாது என்று எஜமானி உம்மு அன்மாரும் தன் பங்குக்குப் கொடுமை செய்தாள்.

ومر رسول الله به ذات يوم وهو يعذب، فرفع كفيه إلي السماء وقال
اللهم انصر خبابا
واستجاب الله لدعاء رسوله، فقد أصيبت أم أنمار بسعار غريب فجعلها تعوي مثل الكلاب!
ونصحها البعض بأن علاجها هو أن تكوي رأسها بالنار!
وهكذا ذاقت من نفس الكأس التي أذاقته لخباب بن الأرت.

ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அந்தக் கடை வழியாக நடந்து சென்றவர்கள் கப்பாபைப் பார்த்துவிட்டு, நின்று, கப்பாப் அவர்களின் தலையை அனுசரனையாய் தடவி விட்டு, ஏதோ பேசிவிட்டு நகர்ந்தார்கள்.

பொறுக்க முடியவில்லை உம்மு அன்மாருக்கு. பட்டறைக்கல்லில் இருந்து பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியொன்றை எடுத்து வந்து கப்பாபின் தலையில் சூடு போட்டாள். பிறகு அதைப் பல் துலக்குவதுபோல் ஒரு தினசரி வழக்கமாகவே ஆக்கிக் கொண்டாள்.

சதை பொரிக்க ஆரம்பிக்கும். அதற்கு மேல் சுயநினைவு தங்க மறுத்து மயக்கமுறும் நிலையில் கப்பாப் கீழே வீழ்ந்தார்.

இதைக் கண்ணுற்ற மாநபி {ஸல்} அவர்கள் அல்லாஹ்விடம் இரு கரமேந்தி யாஅல்லாஹ்! கப்பாபுக்கு நீ உதவி செய்வாயாக!". என்று துஆச் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களது துஆவுக்கு இறைவன் பதிலளிக்க ஆரம்பித்தான்.

ஆம்! உம்மு அன்மாருக்கு திடீரென்று தலைவலியொன்று உண்டானது. அது அதிகமாயிற்று. பிறகு தீவிரமாயிற்று. மிகத் தீவிரமாயிற்று. யாரும் அப்படியொன்று கேள்விப்பட்டிராத தலைவலி.

வலியின் கொடுமையால் அவள் கத்துவது நாய் ஊளையிடும் சப்தம் போலிருந்தது. மிரண்டு அவளுடைய மகன் அரபுலகத்தின் அனைத்து வைத்தியர்களிடமும் தூக்கிக் கொண்டு ஓடினார்.

ஆனால், யாருக்கும் தலைவலிக் காரணம் புரியவில்லை. இறுதியாக, அக்காலத்தில் சூட்டுக்கோல் வைத்திய முறை என்று ஒன்று இருந்தது. அதாவது, அவளுக்குத் தலையில் சூட்டுக்கோலால் சூடு இட்டார்கள்.

கடைசியாக, அதன் காரணமாகவே உம்மு அன்மார் இறந்தும் போனார்.

3. முஸ்லிமின் துன்பம் நீங்கும் வரை அவர்களுக்காக துஆச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

عن أَبِى هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِى صَلاَةِ الفجر شَهْرًا، يَقُولُ فِى قُنُوتِهِ: "اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِى رَبِيعَةَ... اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ"، ثم يستمر في دعائه فيقول: "اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى قريش، اللَّهُمَّ اجْعَلْهَا عَلَيْهِمْ سِنِينَ كَسِنِىِّ يُوسُفَ".

قَالَ أَبُو هُرَيْرَةَ: وَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ فَلَمْ يَدْعُ لَهُمْ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ
"وَمَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا".
صحيح البخاري ومسلم والسنن

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “நபி {ஸல்} அவர்கள் தொழுகையில் ஒரு மாத காலம் ருகூஉவிற்குப் பிறகு குனூத் (எனும் சோதனைக் காலப்பிராத்தனை) ஓதினார்கள். அவர்கள் "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" என்று கூறியதும்  பின்வருமாறு குனூத் ஓதுவார்கள்:

“இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப் பட்டவர்களை நீ காப்பாற்றுவாயாக!

இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!

தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “இதன் பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டதை நான் பார்த்தேன்.

உடனே நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஒடுக்கப்பட்ட) மக்களுக்காகப் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதாகக் கருதுகிறேன்" என்றேன். அப்போது, "(மக்காவில் சிக்கிக்கொண்டிருந்த) அவர்கள் (மதீனாவுக்குத் தப்பி) வந்துவிட்டதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்கப்பட்டது.

மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

நமக்கான பாடங்களும், படிப்பினைகளும் என்ன?

1. நிறைவான ஈமானும், குறைவில்லா நன்றியுணர்வும் இருந்தால் அல்லாஹ் தண்டிப்பதில்லை...

مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِنْ شَكَرْتُمْ وَآمَنْتُمْ وَكَانَ اللَّهُ شَاكِرًا عَلِيمًا

“நீங்கள் நன்றி செலுத்துபவர்களாய் இருந்து, இறைநம்பிக்கையின் (ஈமானின்) வழியில் நடப்பீர்களாயின் உங்களை ஏன் அல்லாஹ் தண்டிக்கப்போகின்றான்? மேலும், அல்லாஹ் நன்றியை மதிப்பவனாகவும், அவர்களை நன்கறிபவனாகவும் இருக்கின்றான்”.                                             ( அல்குர்ஆன்: 4: 147 )

تَنْزِعُ النَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ مُنْقَعِرٍ () فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ

“அந்தக் காற்று மக்களை வேகமாக தூக்கி எறிந்து கொண்டிருந்தது. அப்போது, அவர்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்ச மரத்தின் தடிகளைப் போன்று ஆனார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்! எப்படி இருந்தது நான் அளித்த வேதனை! எப்படி இருந்தது என்னுடைய எச்சரிக்கைகள்!”                    ( அல்குர்ஆன்: 54: 20, 21 )

2. சோதனைகளின் போது இறை உதவியின் மீது நிராசை அடைந்து விடக் கூடாது.....

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

“உங்களுக்கு முன் சென்றுவிட்ட ( இறைநம்பிக்கையுடைய ) வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா?

இன்னல்களும், இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன. அன்றைய இறைத் தூதரும், அவருடன் இருந்த நம்பிக்கையாளர்களும் “அல்லாஹ்வுடைய உதவி எப்போது வரும்? என்று புலம்பிக் கேட்கும் வரை அவர்கள் அலைக்கழிக்கப் பட்டார்கள்.

அப்பொழுது, அவர்களுக்கு இவ்வாறு ஆறுதல் கூறப்பட்டது! “இதோ அல்லாஹ் உடைய உதவி மிக அண்மையில் இருக்கின்றது” என்று.       ( அல்குர்ஆன்: 2: 214 )

3. உலக ஆசையும், உயிர் வாழ்வதின் மீதான ஆசையையும் விட்டொழிக்க வேண்டும். இல்லையெனில்?.......

حدثنا عبد الرحمن بن إبراهيم الدمشقي حدثنا بشر بن بكر حدثنا ابن جابر حدثني أبو عبد السلام عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت

ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள்,  உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கால சூழல் வரும்”  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“அன்றைய தினம் நாங்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்நாளில் நீங்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள்.

எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி விடுவீர்கள். உங்கள் விரோதியின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழன்று விடும்! உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் “வஹ்னை‘ ஏற்படுத்தி விடுவான்” என்று பதிலளித்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?” என்று நாங்கள் கேட்டோம்.
“உலகத்தை நேசிப்பது;மரணத்தை வெறுப்பது” என்று பதிலளித்தார்கள். (நூல்: அஹ்மத்)

முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்று குவிக்கும் கொடிய விரோதிகளை அல்லாஹ் என்ன செய்வான்?

1. அழித்து விடுவான்….

1. அநியாயக்காரர்களை அல்லாஹ் கண்டு கொள்ளாமல் இருப்பதில்லை....

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

“இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கின்றான் என்று நீங்கள் கருத வேண்டாம். அவர்களை அவன் விட்டு வைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும் தான்!        ( அல்குர்ஆன்: 14: 42 )

2. அநியாயக்காரர்களின் முடிவு தாமதமாக்கப் படுவதில்லை....

وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ

“மேலும், கொடுமை புரிகின்றவர்கள் அவர்கள் எந்த கதியை அடையப் போகின்றார்கள் என்பதை அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள்”.  (அல்குர்ஆன்:26:227)

3. வல்லரசுகள் என்ன? எந்த கொம்பனாக இருந்தாலும் அத்து மீறினால் அழிவு நிச்சயம்....

فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ () فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا

“ஆத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: அவர்கள் பூமியில் எவ்வித நியாயமும் இன்றி பெருமையடித்துக் கொண்டு திரிந்தார்கள். “எங்களை விட வலிமை மிக்கவர் யார் இருக்கின்றார்கள்” என்று.

அவர்களைப் படைத்த இறைவன் அவர்களை விட வலிமை மிக்கவன் என்பது அவர்களுக்கு புலப்படவில்லையா? அவர்கள் நம் சான்றுகளை மறுத்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில், அபசகுணம் உடைய சில நாட்களில் கடும் புயற்காற்றை நாம் அனுப்பினோம். உலக வாழ்விலேயே இழிவான வேதனையை அவர்களை சுவைக்கச் செய்திட வேண்டும் என்பதற்காக!    ( அல்குர்ஆன்: 41: 15, 16 )

2. நேர்வழியைக் கொடுத்து இந்த தீனுக்காக வேலை வாங்கி உயர் நிலையை வழங்குவான்.

இறைநிராகரிப்பில் இருக்கும் போது இஸ்லாத்தை வீழ்த்த வேண்டும், முஸ்லிம்களை கொன்றொழிக்க வேண்டும், மாநபி {ஸல்} அவர்களை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று வீறு நடை போட்டு, பல யுத்தங்களுக்கு தளபதிகளாய், வழிகாட்டிகளாய், மதியூகிகளாய் விளங்கிய அபூ சுஃப்யான், காலித் இப்னு வலீத், ஸுஹைல் இப்னு அம்ர், இக்ரிமா இப்னு அபூஜஹ்ல், ஸஃப்வான் இப்னு உமைய்யா, உமர் போன்றோர்களுக்கு ஈமானை வழங்கி சான்றோர்களாய் மாற்றினான் அல்லாஹ்.

فقال عكرمة
رضيت يا رسول الله ، لا أدع نفقة كنت أنفقها في صدٍ عن سبيل الله إلا أنفقتُ ضعفها في سبيل الله ، ولا قتالا كنت أقاتل في صد عن سبيل الله إلا أبليت ضعفه في سبيل الله .. ثم اجتهد في القتال حتى قتِل شهيدا (أي في يوم اليرموك) .. وبعد أن أسلم رد رسول الله - صلى الله عليه وسلم - امرأته له بذلك النكاح الأول .." .

இதோ, பெருமானார் {ஸல்} அவர்கள் முன் நின்று கலிமாவை மொழிந்து, மனம் உருகிப் பேசிய இக்ரிமா {ரலி} அவர்கள்:   “ அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த மார்க்கத்தை தடுப்பதற்காக எவ்வளவு பொருளாதாரத்தை செலவு செய்தேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக நான் செலவு செய்வேன்.

இந்த மார்க்கத்திற்கெதிராக எவ்வளவு போர்களில் நான் கலந்து கொண்டேனோ, அதைவிட பன்மடங்கு இந்த மார்க்கத்தின் உயர்விற்காக இறைவனின் பாதையில் நான் போர் செய்வேன்.” என முக மலர்ச்சியோடு கூறினார்கள். 

சிரியா முஸ்லிம்களுக்காக துஆச் செய்வோம்! அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை….

No comments:

Post a Comment