*குஜராத் தேர்தல்*
நம்ம ஆளு ரயிலில் ஜன்னல் ஓரமா உட்காந்திருந்தார் பக்கத்தில் ஒரு குஜராத்தி அமர்ந்திருந்தான்
இப்போ நம்ம ஆளு ஜன்னலை திறக்க முயன்றார் ம்ஹூம் முடியல டைட்டா இருந்திருக்கு
இத கவனிச்ச குஜராத்தி வேகமா வந்து இவர தள்ளிட்டு ஜன்னல திறந்திட்டான்
சும்மா இருக்காம "சப்பாத்தி தின்னு பலம் வரும்"னு சொன்னான் நம்ம ஆளுக்கு என்னவோமாதிரி ஆயிட்டு
கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு ஜன்னல திறக்க அதுவும் மக்கர் பன்னிச்சு
குஜராத்தி இப்பவும் அதேமாதிரி வந்து இவர தள்ளிட்டு ஜன்னல திறந்து
"சப்பாத்தி தின்னு பலம் வரும்"னான்
நம்ம ஆளு ரொம்ப ஜெர்க் ஆகி இவனுக்கு நல்ல பாடம் புகட்டனும்னு முடிவு பன்னிட்டு மெதுவா எழுந்திருச்சி அபாய சங்கிலிய பிடித்து இழுக்கற மாதிரி பாவ்லா பன்னினான் இதை கவனிச்ச குஜராத்தி இப்பவும் வேகமா வந்து தள்ளி விட்டுட்டு சங்கிலிய ஒரு கையாலயே வேகமா இழுத்தான் மீண்டும் சப்பாத்தி வசனத்த அழுத்தமா சொல்லிட்டு உட்காந்தான்
ரயில் நின்னுடுச்சி
குஜராத்திக்கு அபராதம் போட்டுட்டாங்க வேற வழியில்லாம அபராதத்தை கட்டிட்டு பேந்த பேந்த முழிச்சான் குஜராத்தி அப்பதான் நம்ம ஆளு வசனம் பேசினான்
"பழைய கஞ்சிய குடிடா அப்பதான் உனக்கெல்லாம் புத்தி வரும்"
இது எப்படி இருக்கு?
No comments:
Post a Comment