Monday, 4 December 2017

விண்மீன்களின் எண்ணிக்கைளவு நன்மை

- தொடர் 318

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

🌾 🌾 صباح الخير 🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🌝 ரிலாக்ஸ் மார்னிங் 🌞

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*அன்பே...!*

*அண்ணலே...!*

=============== =========

*நபிகள் நாதரை நேசம் வைப்பது*
*குற்றமா?*

நபி மணியின் மெய்யன்பர்களான
அருமை ஸஹாபாக்கள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
அவர்கள் மீது எந்த அளவு அன்பு
வைத்தார்கள் அவ்வாறு அன்பு
வைப்பதனால் கிட்டும் பாக்கியம் என்ன?
என்பதை அறிந்து சிந்தை தெளிவது
அவசியமாகும்.
இனிமை நிறைந்த ஒர் இரவில் அருமை நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹிவசல்லம் அவர்கள் அன்னை
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மடியில் தலைசாய்த்துப்
சைனிக்கின்றார்கள். அன்னை ஆயிஷா
ரலியல்லாஹு அன்ஹா நாயகியாரின்
பார்வை விண்ணின் பால் விரவிச்
சென்ற வண்ணமிருக்கிறது. பால்போல்
பவனி வரும் முழு நிலவின் பேரழகில்
பதிந்து நின்ற பார்வை பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
அவர்களின் திரு முகத்தின் பால்
திரும்புகின்றது. மீண்டும்
விண்ணின்பால் தங்கள் பார்வையைச்
செலுத்துகிறார்கள். ஆயிஷா
நாயகியார். வெண்ணிலவின் வண்ணப்
பேரழகைப் பார்த்து விட்டு
மறுபடியும் மாநபியின் மதிவதனத்தை
பார்த்து விட்டு இதில் அழகால்
மிகைத்தது எது? விண்ணின் முழு
மதியா? அல்லது, என் மடியில்
இருக்கும் தங்க நபியா? என்ற
சிந்தனையோடு மீண்டும் விண்ணை
பார்க்கிறார்கள் எண்ண முடியாத
எண்ணிக்கையைக் கொண்ட நட்சத்திரம்
மின்னுகிறது. அதைப் பார்த்து விட்டு ஆயிஷா நாயகியாரின் சிந்தனையில்
ஒரு வினா பிறக்கிறது.
நன்மைகளை அள்ளிச் சேர்ப்பதில் உண்மை நபியின் உயிர் தோழர்களில் இந்த
நட்சத்திரங்களின் எண்ணிக்கையளவு
நற்செயல்களை செய்தவர்களும் இருக்க முடியுமா? என்று இந்த கேள்விக்கு
அவர்களே விடையும் தேடிக்
கொள்கிறார்கள். ஆம்! அவ்வாறு
இருந்தால் அது நம் தந்தை
அபூபக்கராகத்தானே இருக்க முடியும்
என்று! என்றாலும் பெருமானார் நபி
ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
அவர்களின் திருவாயால் அது
வெளிப்படுவது இன்னும்
உறுதியல்லவா? ஆயிஷா நாயகியார்
கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே!
விண்ணில் தோன்றும் இவ்விண்மீன்களின்
அளவு நன்மைகளை அள்ளிச் சேர்த்தவர்
தங்கள் திருத்தோழர்களில் எவரேனும்
உள்ளனரோ? நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள் |
ஆம் ஆயிஷா! என் தோழர் உமர் இப்னு
கத்தாபுடைய நன்மைகள்
இவ்விண்மீன்களின் எண்ணிக்கையைப்
போன்றவை என்று.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு
அன்ஹா அவர்களின் முகம் வாடியது.
அப்பதிலுரை கேட்டு எத்துணை பெரும் ஏமாற்றம். அவர்களுக்கு அந்த
விடையை அவர்கள் சற்றுமே எதிர்
பார்க்கவில்லை. அல்லாஹ்வின்
திருத்தூதரின் சந்திதானத்தில் எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றவர்கள் ஹளரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு
அவர்களேயல்லவா! ஆயிஷா நாயகி
மட்டுமல்ல அருமை ஸஹாபாக்கள்
அறிந்த உண்மை அது. ஆனால் இன்று
எண்ண முடியாத விண்மீன்களின்
எண்ணிக்கைளவு நன்மைகளைச்
சேர்ந்தவர் ஹழ்ரத் உமர் ரலியல்லாஹு
அன்ஹா என்று ரஸுலுல்லாஹ்
ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
அவர்களே கூறுகிறார்களே!
அப்படியானால் பெருமானே யா
ரஸுலுல்லாஹ்! என் தந்தை அபூக்கர்.....
என்று ஆயிஷா அவர்கள் தம்
ஏக்கத்தை வெளிப்படுத்திக் கேட்டதுவே
தாமதம் ஆயிஷா என்றழைத்த வண்ணம்
எழுந்தேயமர்ந்தது எம் பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
அவர்கள் கூறினார்கள் என் தோழர்
அபூபக்கரோடு நீ மற்ற எவரையும்
ஒப்பிட வேண்டாம்!
உலக வாழ்வு ஒரு கடல் அக்கடலில்
உங்களுடைய ஈமானே கப்பல்
இதனாலேயே அறிஞர் லுக்மான் தம் மகனை நோக்கி உலகம் ஒரு கடல் உன் நம்பிக்கை அக்கடலில் ஓடக் கூடிய கப்பல்
வணக்கம் அக்கப்பலின் மாலுமி மறுமை
அக்கடலின் மறுகரை எனக்கூறியுள்ளார்.
பத்ஹூர்ரப்பானி

உமர் இப்னு காத்தாபுடைய நன்மைகள்
அனைத்தையும் ஒன்று சேர்த்தால்
அவை அபூபக்கர் ஆற்றிய ஒரேயொரு
நற்செயலுக்கே ஈடாகும் என்று
சொன்னார்கள்.
இந்த அளவு உயர் அந்தஸ்தை அடைவதற்கு
ஒரே காரணம் பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
அவர்கள் மீது வைத்த ஹுப்பே
ஸஹாபி பெண்மணிகள் நபி
ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் மீது கொண்ட ஹுப்பு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹிவசல்லம் அவர்கள் போருக்காக
வேண்டி தயார் நிலையில்
இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு
ஸஹாபிப் பெண்மனி ரலியல்லாஹு
அனஹா சிறு குழந்தையுடன் வந்து
யாரஸுலுல்லாஹ்! நீங்கள்
யுத்தத்திற்காக செல்லுங்கள்.
எதிரிகளிடமிருந்து வரக்கூடிய அம்பை என்னுடைய இக் குழந்தையை
வைத்து தடுங்கள்! இக் குழந்தையை
தலைக் கவசமாக பயன்படுத்துங்கள்
என்னுடைய குழந்தை ஷஹீதாகட்டும்!
உங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக்
கூடாது! இக்குழந்தையை விட எனக்கு
நீங்கள் தான் முக்கியம்! எனது குழந்தை உங்களுக்கு அர்ப்பணம்
யாரஸுலுல்லாஹ்! என்று
சொன்னார்கள்.
பெருமானார் மீது கொண்ட ஹுப்பின்
காரணத்தால் 10 மாதம் சுமந்து பெற்ற
குழந்தையைக் கூட
பெருமானாருக்கு வேண்டி அர்ப்பணம்
செய்பவர்களாக இருந்தார்கள். ஆனால்,
இக்காலத்தில் உள்ளவர்கள் அந்த நாயகம்
ஸல்லல்லாஹு அன்ஹு அவர்களுக்காக
வேண்டி 10 ரூபா செலவு
செய்பவர்களாகவும் இல்லை.
செய்கிறவர்களை செய்ய
விடுபவர்களாகவும் இல்லை. அந்தோ
பரிதாபம்?
இந்த அளவுக்குத்தான் நபியின் மீது
அன்பு (ஹுப்பு) இருக்கிறது.
இப்பேற்பட்டவர்களைப்பற்றி சொன்னார்கள்.
தங்களுடைய பிள்ளைகளை விடவும் தாய், தந்தையர்களை விடவும் இன்னும்
ஏனைய மனிதர்களை விடவும் அவர்
என்மீது ஹுப்பு கொள்கின்ற வரைக்கும்
உங்களில் ஒருத்தரும் ஈமான்
கொண்டவர்களாக ஆக மாட்டார்கள். என்று
சொன்னார்கள் இந்த ஹதீதை அனஸ்
ரலியல்லாஹு அன்ஹு
அறிவிக்கிறார்கள். (புஹாரி)

இந்த ஹதீதின் அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹிவசல்லம் அவர்கள் மீது ஹுப்பு வைப்பது கட்டாயமாகிறது.

ஹுப்பு
இருந்தால்தான் ஈமான் கொண்டவராக
முடியும். ஈமான் கொண்டால்தான்
தொழுகை, நோன்பு, ஹஜ், ஸக்காத்
போன்ற எல்லா இபாதத்துக்களும்
கடமையாகிறது. ஆகவே, நபி
நாயகத்தின் மீது ஹுப்பு
வைத்தால்தான் இவை அனைத்தும்
ஏகனிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.
ஹுப்புப்பாட்டியென்று கேலி
செய்கிறார்களே! அவர்கள் சிந்திக்கட்டும்.
ஹுப்பு இல்லாமல் செய்கிற அமல்
அஸ்திவாரம் (Foundation) இல்லாமல்
அடுக்கு மாடிகட்டுவதைப் போன்றே!
அண்ணல் நபியின் அருமை ஸஹாபாக்கள்
உண்மையான ஹுப்பை உம்மி நபி
ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் மீது வைத்தார்கள். அதன் காரணத்தினால் உயர் தரஜாவை அடைந்தார்கள். தாஹா நபி
ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
அவர்கள் மீது ஸஹாபாக்களும்,
தாபியீன்களும், தப்உத்தாபியீன்களும் கொண்ட அத்தூய ஹுப்புக்கு
அணைகட்ட முடியாது. ஆழம்கான இயலா. வரைவிலக்கணம் கூற முடியாது. இத்தகைய முஹப்பத்துடன்
வாழ்ந்த முஹிப்பீன்கள் நாளை நியாயத்
தீர்ப்பு நாளில் ‘ஜன்னத்திலே’ ஜோதி நபியுடன் ஒன்றாகவே ஜீவிப்பர் என்பது
உம்மி நபியின் உதிர் மொழிகள்
உரைக்கும் உத்தரவாதம்!

இப்பேற்பட்டவர்களெல்லாம் வைத்த
ஹுப்பை விடவா? நாங்கள் அண்ணல் மீது ஹுப்பு வைத்து விட்டோம்? அவர்கள்
அண்ணலார் மீது காட்டிய ஹுப்பையும்,
நாங்கள் வைத்திருக்கும் ஹுப்பையும்
ஒப்பிட்டுப் பார்ப்போமேயானால், எங்களின் அன்பு (ஹுப்பு) அவர்களின்
ஹுப்பை விட கடுகு பிரமாணமே!
அந்த அளவுக்கு இறுதி மூச்சுவரை
அளவு கடந்த அன்பை அன்னலார் மீது அருமை ஸஹாபாக்கள் வைத்தார்கள்.
இந்த வஹாபிகள் கேலி செய்கின்றார்கள்
அல்லவா?

ஹுப்புப்பாட்டியென்று இவர் அறிந்து
கொள்ளட்டும். இவர்கள் ஸஹாபாக்களை
கேலி செய்கிறார்கள், தாபியீன்களை
கேலி செய்கிறார்கள், வள்ளல் நபியை
ஹுப்பு வைப்பதை ஹுப்பு என்ற ஒரு
வார்த்தையைக் கொண்டே
இல்லாமலாக்கப்பாக்கின்றார்கள். இந்த
வழிகேடர்கள் எங்களை எந்த முறையில்
கேலி செய்தாலும் சரி, எந்த
வார்த்தையைக் கொண்டு இழிவு
படுத்தினாலும் சரி, அது எங்களின்
காதுகளுக்கு கேட்கமாட்டாது. எங்கள்
உள்ளத்தை தாக்கவும் மாட்டாது.
ஏனென்றால், உண்மையான அன்பை நாங்கள் அஹ்மது நாயகத்தின் மீது
வைத்திருக்கின்றோம் அதைப் பற்றி
நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹிவசல்லம் அவர்கள்......
ஒன்றின் மீது நீ வைக்கும் தூய்மையான
அன்பானது மற்றதை பார்க்க முடியா வண்ணம் உன் கண்ணை குருடாக்கி விடும் மற்றவைகளை கேட்க
இயலாவண்ணம் உன் காதை
செவிடாக்கிவிடும்.
(ஆதாரம் அபூதாவூத், அஹ்மத் பா-6 பக்
450 மிஷ்காத் பக்-418)

இந்த ஹதீதின் அடிப்படையில் எங்களை ஹுப்புப் பாட்டியென்று
சொல்லிப்பழிப்போரை நாங்கள்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அவர்களின்
பேச்சுக்களை செவிமடுத்தும்
கேட்பதில்லை. யார் எம்மை
இழித்துறைத்தாலும்,
பழித்துரைத்தாலும்; நாயகமே!
யாரஸுலல்லாஹ்! தாங்கள் மீது பக்திப்
பரவசத்தால் மேலிட்ட பரிசுத்தக்
காதலை ஒரு போதும்
விடப்போவதில்லை. பழிக்கின்ற
பேதைகள் தாங்களின் பேரன்பையும்
மகத்துவத்தையும் விளங்கி
விடுவார்களானால் அவர்கள்
அனைவரும் அடங்கி ஒடுங்கி விடுவர்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு....

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

No comments:

Post a Comment