வரலாற்றில் ஒரு நிகழ்வு.
கலீஃபா உமர் பின் அல்கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியின் போது...
சைஃபுல்லாஹ் காலித் பின் அல்வலீத் (ரழி).
இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது...
உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களின் பெயர்களில் இதுவும் ஒன்று...
இறைவனின் வாள் (சைஃபுல்லாஹ்) என்ற பெயர் பெற்ற காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் வீர வாளையும்,
சாகசங்களையும் எதிர்க்க முடியாமல் சக்திமிக்க ரோம சாம்ராஜ்யமும், பாரசீக ஏகாதிபத்தியமும்,
தலைகுப்புற கவிழ்ந்தது...
காலித் பின் அல்வலீத் (ரழி) அவர்கள் தலைமை ஏற்று சென்ற எல்லா போர்களிலும் வெற்றி வாகை சூடினார்கள். அப்படிப்பட்ட மாவீரர் காலித் பின் அல்வலீத் (ரழி) அவர்களை,
ஒரு போர்க்களத்தில் ஒரே ஒரு உத்தரவு மூலம் தளபதி பதவியிலிருந்து அமீருல் முஃமினீன் உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்கள் நீக்கிவிட்டார்கள்...
சிரியா நாட்டில் ரோமானிய பெரும் படைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த இஸ்லாமியப் படைகளின் தளபதியாகிய காலித் பின் அல்வலீத் (ரழி) அவர்களுக்கு போர்க்கள முகாமில் உமர் (ரழி) அவர்களின் கடிதம் கிடைத்தது...
அந்த கடிதத்தில்...
"தளபதி காலித் பின் அல்வலீத் அவர்களுக்கு உமர் பின் அல்கத்தாப் எழுதிக் கொள்வது. இந்த உத்தரவு மூலம் காலித் அவர்கள் தளபதி பதவியிலிருந்து விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக அபூஉதைபா அவர்கள் நியமிக்கபடுகிறார்.
உடனடியாக காலித் பின் அல்வலீத் அவர்கள் பொறுப்புகள் அனைத்தையும், அபூஉதைபா அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மதீனாவுக்குத் திருப்ப வேண்டும்."
படைவீரர்களிடம் இந்த கடிதம் பகிரங்கமாகப் படிக்கப்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இஸ்லாத்திற்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர்கள்...
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸலலம் அவர்கள் காலத்தில் இருந்து தளபதிப் பதவி வகித்து வருபவர்.
போர்க்களத்திலே இணையற்ற செல்வாக்கும்,
நன்மதிப்பும் பெற்றவர்கள் காலித் பின் அல்வலீத் ரழியல்லாஹு அவர்கள்....
அப்படிப்பட்ட மாவீரர் காரணமின்றி விலக்கப்படுவதை ஏற்றுக் கொள்வார்களா ?
கலிஃபா உமர் (ரழி) உத்தரவை அவர் ஏற்க மறுத்து புரட்சிக்கொடி உயர்த்தினால் என்னவாகும் ? இஸ்லாமிய குடியரசே கலகலத்துவிடுமே !
முஸ்லிம் படை வீரர்களிடம் கவலை பற்றிக்கொண்டது....
ஆனால் இதில் எதுவுமே நடக்கவில்லை. ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை காலித் பின் அல்வலீத் (ரழி) அவர்கள்...
உடனடியாக பொறுப்புகள் அனைத்தையும் அபூஉதைபா அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மதீனாவுக்கு புறப்பட்டார்கள்...
மதீனா வந்தடைத்த தளபதி காலித் பின் அல்வலீத் (ரழி) அவர்கள், அவர்களின் நீண்டநாள் நண்பரும், கலிஃபாவான உமர் (ரழி) அவர்களை காணச் சென்றார்கள்...
இரு நண்பர்களும் கட்டித்தழுவி கொண்டு, குடும்ப நலன்களைப் பரிமாறிக் கொண்டனர். கடைசியாக காலித் பின் அல்வலீத் (ரழி) அவர்கள்...
நண்பரே !
தளபதி பதவியிலிருந்து நான் ஏன் விலக்கப்பட்டேன் என்பதை அறியலாமா ?
என்று கேட்டார்கள்...
அதற்கு கலீஃபா உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்கள்:
உங்களது வீரமும், வெற்றியும் பொதுமக்களின் கண்ணை மறைப்பதைக் கண்டேன். இறைவனது புகழ்பாட வேண்டிய மக்களின் நாவுகள் உங்கள் புகழ்பாடுவதைக் கேட்டேன்...
என்னைப் போன்ற சாதாரண மனிதனால் பதவி நீக்கிவிடக் கூடிய சாதாரண மனிதர் தான் காலித் பின் வலீத் என்பதை பொதுமக்களுக்கு உடனடியாக உணர்த்தாவிடடால் நிலைமை மிஞ்சி விடுமென அஞ்சினேன்...
ஆகவே விளக்கினேன். இதன் முலம் பொதுமக்களையும், உங்களையும், என்னையும் கூடத்தான் புகழ் என்ற போதையிலிருந்து காப்பாற்றி விட்டதாக நம்புகிறேன்...
நீங்களும் நானும் இறந்துவிடக் கூடிய சாதாரண மனிதர்கள். இஸ்லாத்தின் பெருமையோ என்றும் நிலைத்து நிற்க வேண்டியது என்பது நமது இலட்சியம்...
அந்தப் பெருமை காலித் பின் அல்வலீத் இல்லாவிட்டாலும், உமர் பின் கத்தாப் இல்லாவிட்டாலும் நின்று நிலைக்கும் என்பதை நாம் நிருப்பித்தாக வேண்டும்...
உங்களை விளக்கியதன் மூலம் அதை ஓரளவு நிரூபித்து விட்டதாக நம்புகிறேன் என்று கூறினார்கள்...
உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்களின் பதிலை கேட்டு மாவீரர் காலித் பின் அல்வலீத் (ரழி) அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தவழ்ந்தது...
நான் வேறு எதுவும் குற்றச்சாட்டோ என்று குழம்பி விட்டேன். இதை நானும் உணர்ந்தே இருந்தேன். தங்களின் இந்த முடிவை நான் மிகவும் வரவேற்கிறேன் என்று காலித் பின் அல்வலீத் (ரழி) அவர்கள் கூறினார்கள்...
(ஸஹாபாக்களின்
சரித்திரம்)
ஸுப்ஹானல்லாஹ்.....
ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்...
ஸித்றத்துல் முன்தஹா
No comments:
Post a Comment