*சரித்திரம் பேசும் சங்கை மிகு மாதம்!*
=============== =========
*இவர்கள் முஸ்லிம்களா?*
முஹர்ரம் முஸ்லிம்களின் புது வருடம்.
அல்லாஹ்வால் சிறப்பிக்கப்பட்ட மாதங்களில்
ஒன்று. ஹிஜ்ரத் எனும் இஸ்லாமிய சமுதாய
உருவாக்கத்தை இலட்சியமாகக் கொண்ட பயணத்தின் அடிப்படையில் இரண்டாம் கலீபா
உமர் رضي الله عنه அவர்களின் ஆட்சிக்காலத்தில்
அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாமிய ஆண்டு.
இந்தவகையில் புனித முஹர்ரம் மாதம் பல
சிறப்பியல்புகளை கொண்டமைந்தது.
இஸ்லாமிய வரலாற்றில் நடந்த பல நிகழ்வுகளைக்
கொண்ட ஒரு மாதம்
இம்மாத்த்தில் “ஆசூரா, தாசூஆ” எனும் முஹர்ரம் 9, 10, ஆம் நாட்களில் நோற்கப்படும்
நோன்பானது ரமழான் மாத நோன்புக்கு பிறகு
அல்லாஹ்விடத்தில் சிறப்புக்குறியதாகும்.
நபி மூஸா عليه السلام அவர்களையும் அவர்களது
சமுதாயத்தையிம் பிர்அவ்ன் எனும்
கொடுங்கோள் ஆட்சியாளனிடமிருந்து அல்லாஹ் பாதுகாத்த அவ்வரலாற்றை
வருடந்தோரும் நன்றியுணர்வுடன் நினைவுகூர்வது இதன்
பின்னணியாகும்.
இம்மாதத்தை முஸ்லிம்கள் சிறப்புடன்
வரவேற்கின்றனர். இஸ்லாம் கூறும் வரையறைகளுடன்
இம்மாதத்தின் புனிதத்தை பேணுகின்றனர்.
என்றாலும் சிலர் அல்குர்ஆன், சுன்னாவின்
வரையறைகளைத் தாண்டி பல அனாச்சாரங்கள்,
சடங்கு சம்பிரதாயங்களை மேற்கொள்வதைக்
காணலாம்.
இவற்றில் மிக முக்கிய வழிகேடுதான் “கர்பலா”
எனும் நிகழ்வு. இது ஷீஆ மத அனுஷ்டானம்
என்பதை அறியாத ஒரு சில பாமரத்தனமான
முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஒரு நிகழ்வாக
கொண்டாடுவதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான்,
லபனான்,ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில்
இந்நாள் தேசிய விடுமுறை நாளாகக் கூட
அறிவிக்கப்படுகிறது.
இது ஷீஆ எனும் மதத்தின் தனித்துவமான
அசிங்கம் என்பதை பறைசாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வெரு முஸ்லிம் மீதும்
கடமையாகும். அதற்கு முதல் ஷீஆக்கள் பற்றி
வரலாற்றுரீதியாக அறிந்து கொள்ள
வேண்டும்.
ஷீஆக்களும் சுன்னிகளும் முஸ்லிம்களே!
எனும் பேலி கோஷம் களையப்பட வேண்டும்.
*ஷீயா எனும் விஷம் தோற்றமும் வளர்ச்சியும்!*
அப்துல்லாஹ் பின் ஸபா எனும் யூதனால்
தோற்றுவிக்கப்பட்ட ஒரு மதமே ஷீயாயிஷமாகும்.
ஆரம்பத்தில் அரசியல் ரீதியில் சிந்தித்த இவர்கள்,
பின்னர் தமது அரசியல் சிந்தனைகளுக்கெல்லாம் மதச்சாயம் பூசச் சென்றதால் இஸ்லாத்தை
விட்டும் விலகிச் சென்றுவிட்டனர்.
நபி صلى الله عليه وسلم அவர்களது மரணத்தின் பின்னர் அலி رضي الله عنه
அவர்கள்தான் ஆட்சித் தலைமைக்குரியவர்கள் என்று
ஆரம்பத்தில் சிந்தித்தனர். அன்று வாழ்ந்த சில
நல்லவர்களிடமும் இந்த எண்ணம் இருந்தது.
ஆனால் அவர்கள் ஏனையவர்களின் ஆட்சியை
எதிர்க்கவில்லை. இந்த ஷீயாக்கள் தமது தவறான
சிந்தனைகளையெல்லாம் இங்கிருந்துதான்
ஆரம்பித்தனர்.
‘நபி صلى الله عليه وسلم அவர்களுக்குப் பின்னர், அலி رضي الله عنه அவர்கள்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என
அல்லாஹ் குர்ஆனிலும் கூறியிருக்கின்றான்.
இவர்கள் அந்த வசனங்களை நீக்கிவிட்டனர். அபூபக்கர், உமர் உஸ்மான் رضي الله عنهم ஆகிய மூவரும்
அலி رضي الله عنه அவர்களுக்குத் துரோகம்
செய்துவிட்டனர். அதற்கு ஏனைய அனைவரும்
உடந்தையாக இருந்தனர். எனவே நபித்தோழர்கள்
அனைவரும் காபிராகி விட்டனர் என்று அவர்கள்
கூறிகின்றனர்.
இவ்வாறு இஸ்லாத்தில் இல்லாத
இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய பல
கருத்துக்களைக் கொண்டவர்கள்தான் ஷீயாக்களாவர்.
*குர்ஆன் மாற்றப்பட்டு விட்டதாக நம்புகின்றனர்!*
நபித்தோழர்கள் குர்ஆனை மாற்றிவிட்டனர் என்பது
ஷீயாக்களின் நம்பிக்கையாகும். நம்மிடம்
ஸஹீஹுல் புஹாரி பெற்றிருக்கும் அந்தஸ்தை
அவர்களிடம் ‘அல்காபீ’ எனும் நூல் பெற்றுள்ளது. இந்த நூலில் நபி صلى الله عليه وسلم
அவர்களுக்கு அருளப்பட்ட வசனங்களின் எண்ணிக்கை
பதினேழாயிரமாகும். எனக் கூறுகின்றனர்.
உண்மையான முழுக்குர்ஆனும் தமது இமாம்களிடம்
இருப்பதாகவும் நம்புகின்றனர். தம்மிடம் முஸ்ஹபு
பாத்திமா உள்ளது. அல்லாஹ்வின் மீது
சத்தியமாக உங்களின் குர்ஆனில் இருக்கக்கூடிய ஒரு
எழுத்துக்கூட அதில் இல்லை என அவர்களின் முக்கிய
இமாம் ஜஃபர் ஸாதிக் رضي الله عنه கூறியதாகப்
பதியப்பட்டுள்ளது.
குர்ஆனில் மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை
விளக்கி ‘பஸ்லுல் கிதாப் பி இஸ்பாதி தஹ்ரீபி ரப்பில் அர்பாப்’ என்ற பெயரில் நூரி அத்தப்ரிஸீ
என்பவர் தனி நூலையே எழுதியுள்ளார். ஷீயாக்களின்
இஸ்னா அஷரிய்யா பிரிவினரிடம் குர்ஆன்
மாற்றப்பட்டு விட்டது என்ற கொள்கை பரவலாக உள்ளது. இவ்வாறு எல்லா வகையான வழிகேடுகளும் இந்த ஷீயாக்களிடம்
குடிகொண்டுள்ளன.
*கர்பலா வரலாற்று பின்னனி!*
தனி மனித வழிபாட்டின் மொத்த
வடிவமாக ஷீயாயிஷம் உள்ளது. அலி رضي الله عنه அவர்கள் மீதான வழிபாட்டின் மீதுதான் இந்த
மதமே நிறுவப்பட்டுள்ளது. அலி رضي الله عنه அவர்களையும்
தமது இமாம்களையும் எல்லை மீறிப் புகழ்வதுதான்
இவர்களின் மதத்தின் சாரமாக உள்ளது.
இவர்களில் சிலர் அலி رضي الله عنه அவர்களை
அல்லாஹ்வின் இடத்திற்கே உயர்த்தினர்.
இவர்களது ஒரு பாடலில், ‘லாஇலாஹ
இல்லஸ் ஸஹாரா’ பாத்திமா தவிர வேறு இறைவன் இல்லை என்றும் இடம்பெற்றுள்ளது.
தமது பன்னிரெண்டு இமாம்களும்
மறைவானவற்றை அறிந்தவர்கள் என்றும், பாவங்களை
விட்டும் பாதுகாக்கப்பட்ட மஃசூம்கள் என்றும்
நம்புகின்றனர். தமது இமாம்களுக்கு முர்ஸலான
தூதர்களோ, சங்கையான மலக்கு
களோ அடைய முடியாத உயர்ந்த அந்தஸ்து உள்ளதாக நம்புகின்றனர்.
ஹுஸைன் رضي الله عنه அவர்களது கப்ரை ஸியாரத்
செய்பவர் அல்லாஹ்வை அர்ஷில் சந்தித்தவர்
போலாவார் என்று இன்றுவரையும் பிரசாரம்
செய்கின்றனர். கப்றுக்குச் செல்லும்போது
தவழ்ந்தும் இழுகியும் செல்லும் காட்சிகளை
இன்றும் இணையத்தளங்களில் காணலாம்.
கர்பலா பூமி, மக்கா, மதீனா, பலஸ்தீனத்தை விட
இவர்களிடம் புனிதம் பெற்றதாகும். கர்பலா யுத்தம்
நடந்த தினத்தை துக்க தினமாக இன்றும்
அனுஷ்டிக்கின்றனர். தமது உடல்களில் காயத்தை
ஏற்படுத்திக் கொள்கின்றனர். ‘யா
ஹுஸைன்! யா ஹுஸைன்!’ என்று ஒப்பாரி
வைக்கின்றனர்.
இஸ்லாமிய வரலாற்றில் கர்பலா எனும் தினம்
எங்கும் இல்லை. அது புதிதாக ஷீஆ மதத்தினரால்
உருவாக்கப்பட்டது. கர்பலா எனும்
இடத்தைத்தான் காண முடிகிறது. மூன்றாம் கலீபா
உஸ்மான் رضي الله عنه அவர்களிள்
ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில்
இருந்து கர்பலாவின் பின்னணி துவங்குகிறது.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...
தொகுப்பு....
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங் குடி.
No comments:
Post a Comment