லைலாவை பார்க்க மஜ்னூன் ஒட்டகத்தில் ஏறினான் ..
லைலாவின் காதலில் மயங்கி கிடந்த மஜ்னூனுக்கு ஒட்டகம் லைலாவின் வீட்டை கடந்தது தெரியவில்லை .
சுய நினைவு வந்து விழித்த பின் ஒட்டகம் லைலாவின் வீட்டை கடந்து விட்டது தெரிந்தது ..
மஜ்னூன் மனதிற்குள் நினைத்துக்கொண்டான்
லைலாவை நான்தான் காதலிக்கிறேன் ஒட்டகம் அல்ல ..
மஜ்னூனின் நிலையில்தான் நம் உயிர் இருக்கிறது .(உயிரை பற்றியே அறியாத உயிர் நிலை )
நம் உடலை ஒட்டகம் என்று வைத்துக்கொள்வோம்
நம் உள்ளத்தை அதில் பிரயாணம் செய்யும் ஒட்டக வீரன் என்று வைத்துக்கொள்வோம்
ஒட்டக வீரன் என்ற நம் உள்ளம் வெற்றி பெற வேண்டுமென்றால்
ஒட்டகம் எனும் நம் உடலை கட்டுப்படுத்த வேண்டும் .. இல்லாவிட்டால் உடல் தான் திரும்பும் திசையில் நடை போட ஆரம்பித்து விடும் .
பிறகு நாம் செல்ல வேண்டிய இடத்திற்கும் ,ஒட்டகம் சென்ற இடத்திற்கும் மிக நீண்ட இடைவெளி ஏற்பட்டு விடும்
உங்கள் உடல் வளர்ச்சிக்கு நீங்கள் எது வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் நான் குறுக்கே நிற்கவில்லை .அதே வேளையில் உங்கள் உள்ளத்தையும் நீங்கள் மறந்து விடக்கூடாது ..
உடலுக்கு எது உணவாக பயன்படுகிறதோ அது நிச்சயமாக உள்ளத்திற்கு உணவாக பயன்படாது .
ஏனென்றால் ஒட்டகத்தின் உணவும் ஒட்டக வீரனின் உணவும் ஒன்றல்ல ..
உங்கள் உள்ளம் புனிதமானது .அதற்குரிய உணவு முற்றிலும் மாறுபட்டது .அந்த உணவு உள்ளத்திற்கு பலம் கொடுக்கும் .இதனால் உடலை அடக்கி ஆண்டு இறை வழியில் உடலை திருப்பும் ஆற்றல் உள்ளத்திற்கு வந்துவிடும் .
உடலுக்குரிய உணவை விட உள்ளத்திற்குரிய உணவு சிறப்பானது .
ஏனெனில் முந்தியது
உடலை மட்டுமே வளர்க்கும்
பிந்தியது உடலையும் உள்ளத்தையும் வளர்க்கும் ...
- மௌலானா ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி
No comments:
Post a Comment