Friday, 15 September 2017

கலப்படத்தால் வந்த வினை

*கலப்படம்*

சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் இருந்து ஜெர்மனிக்கு கயிறு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது கயிற்றின் எடையை ஏற்றுவதற்காக கேரளா கயிறு வியாபாரிகள் கயிற்றைத் தண்ணீரில் நனைத்து பின்னர் நனைத்த கயிற்றை கடல் மண்ணிலே போட்டுப் புரட்டினார்கள் ஈரக் கயிற்றில் கடல் மணல் அப்படியே ஒட்டிக் கொண்டு எடையை அதிப்படுத்தியது

மண் கலந்த கயிறு ஏற்றுமதியானது அதிகமான பணம் கிடைத்தது வியாபாரிகளுக்கு சந்தோஷம்

சில மாதங்களுக்குப் பிறகு ஜெர்மன் இறக்குமதியாளர் களிடமிருந்து ஓர் அதியசமான வேண்டுகோள்
"தயவுசெய்து மண்ணை அந்தக் கயிற்றேடு அனுப்ப வேண்டாம் வெறும் மண்ணாகவே அனுப்பி விடுங்கள் "

ஜெர்மன் வியாபாரிகளுக்கு கயிற்றை விட அந்த மண் விலையுயர்ந்ததாகத் தெரிந்தது காரணம் கேரளக் கடற்கரையில் உள்ள மண் "மோனசைட்" என்ற அணுவியல் மண் அணுசக்தி தயாரிக்க பயன்படும் மண் எனவே ஜெர்மன் வியாபாரிகள் கயிறு வேண்டாம் மண் போதும் என்று வேண்டினார்கள் நாளடைவில் மண் வியாபாரத்தில் மற்றவர்கள் நுழைந்து கயிறு வியாபாரிகளை பின்னுக்கு தள்ளினர் கயிறு ஏற்றுமதி வெகுவாக பாதித்தது இது கலப்படத்தால் வந்த வினை

"நீங்கள் உண்மையை அறிந்து கொண்டே அதனை மறைத்துப் பொய்யை உண்மையென புரட்டிவிட வேண்டாம் "

குர்ஆன்  2  : 42

ரஹ்மத் ராஜகுமாரன்

😝நாட்ல கலப்படம் இல்லாத ஒரே பொருள் மின்சாரம்தான்.😝

😝சந்தேகம் இருந்தால் நக்கிப் பாருங்க!😝😝

No comments:

Post a Comment