Sunday, 6 August 2017

அரபி மதரஸாக்களின் பாட திட்டங்கள் அட்டவணை

அரபி மதரஸாக்களா ?
அறிவியல் கல்லூரிகளா ?

நம் அரபி மதரஸாக்களில் போதிக்கப்படும் பாட திட்டங்களின் சுருக்கமான ஓர் அட்டவணையை உங்களுக்கு சொல்றேன் .

1 ) தஃப்ஸீர் - குர் ஆன் விளக்கவுரை - (Commentary .)

2) ஹதீஸ் - நபிமொழி - (Tradition)

3) பிக்ஹ் ஃபராயிள் - சட்டத்துறை _(Mon Law and Jurisprudence ) பாகப்பிரிவினை .

4 )  உஸூலுல் ஹதீஸ் _ நபி மொழி ஆதாரங்கள் - ( principles of Hadith ) -

5) உஸுலுல் ஃ பிக்ஹ் - சட்டத்துறை ஆதாரங்கள் கோர்ப்பு (principles of mon Law and Jurisprudence.)

6) தஸவ்வுஃப் - ஆத்ம ஞானக்கலை (Biography )

7) தாரீக் - சாத்திரம் (Rhetoric )

8) சீரத் - இதிகாசம் -(History)

9) மஆனீ  - அணியிலக்கணம் .(mythology )

10 ) மன்தீக் - ( Logic )  பேச்சுக்கலை (oratory)

II ) முனாளரா - தர்க்க சாஸ்திரம் - (logic)

12) அகாயித் - மத நம்பிக்கைகள் (Diseussion)
       கொள்கை (Dogma)

13) ஹிக்மத் - தத்துவக் கலை (Geometry Astronomy )

14) அதப் - இலக்கியம் (prosody )

15) ஹன்தஸா - வரைபடக் கணிதம்

16) ஹை அத் - வான சாஸ்திரம் (syntax )

17) அருழ் . சர்ப் , நஹ்வு - யாப்பிலக்கணம் , சொல்லிணக்கணம் (Etymology ). சொற்புணரிலக்கணம்

20) ஹிஸாப் -கணிதம் (mathematics )

21) இன்ஷஃ _ அரபி மொழி தேர்ச்சி (composition and Essay writing )

22) கிராஅத் - திருமறை திருத்தமாக ஓதுதல்
( Recitation)

23) தொண்ம இயல் (mythology )

இது போன்ற இன்னும் பல கலைகளும் அரபி மதரஸாக்களில் கற்பிக்கப்பட்டு பல்கலைக்கழகமாகவே விளங்குகிறது .
இது போக குர்ஆன் வசனத்திற்கு உட்பொருளை அறிந்திட இன்னும்  ஒரு 15 கலைகள் இருக்கிறது அதை  அடுத்தப் பதிவில் சொல்றேன் .

இப்பேற்பட்ட மதரஸாக்களில் விரல் விட்டு எண்ணும்படியான மாணவர்களின் சேர்க்கை குறைவு தமிழகம் முதல் எல்லா மாநிலங்களிலும் இந்த தேக்கம் காணப்படு கிறது . இது எதிர்கால சமுதாய பயத்தை எனக்குள் ஏற்படுத்துகிறது .

சமுதாயமே , சற்று சிந்திப்பீர்களா ?

ரஹ்மத் ராஜகுமாரன் .

No comments:

Post a Comment