Thursday, 3 August 2017

உலக தாய்ப்பால் வாரம்

உலகின் ஆதி உணவு, தாய்ப்பால்தான். எப்போதும் அதற்கு ஈடான உணவு என்று எதுவும் இல்லை.  உயிர் வாழும் கடைசி மணித்துளிகள் வரையிலான ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது, பிறந்த சில நொடிகளில் குழந்தை பருகும் தாய்ப்பால்தான். வானளவு மகத்துவம் கொண்ட தாய்ப்பாலையும், அன்னையரையும் போற்றும் வகையில், ஆகஸ்ட் முதல் வாரம் ‘உலக தாய்ப்பால் வாரம்’ ஆகக் கொண்டாடப்படுகிறது.

தாய்ப்பால் குறித்த சந்தேகங்களைத் மனதில் தேக்கி வைத்திருக்கும் அன்னையரும், எதிர்காலத்தில் தாய் என்ற நிகரற்ற பொறுப்பேற்கவுள்ள இளம் பெண்களும் அறிந்துகொள்ள, தாய்ப்பால் குறித்த சிறப்புக் குறிப்புகள் இங்கே..!

குழந்தைக்கான முதல் உணவு, தாய்ப்பால். குழந்தையின் உடலுறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சியடைய, புரதச்சத்து நிறைந்த தாய்ப்பால் மிக அவசியம். சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்த அரைமணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை மூலமாகப் பிறந்த குழந்தை என்றால் இரண்டு மணி நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும்.

குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது அவசியம். உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா சபையின் குழந்தைகள் நல கூட்டமைப்பின் ஆய்வு முடிவுகளின்படி, தாயின் பால்சுரப்பினைப் பொருத்து குழந்தைக்கு 3 வயது வரையில் தாய்ப்பால் கொடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீம்பால் தொடங்கி 3 வயது வரையில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், நோய்க்கிருமிகளிடம் இருந்து சிறப்பான பாதுகாப்பு கிடைக்கப்பெறுவார்கள்.

முதல் ஆறு மாதத்துக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவு, தண்ணீர்கூட கொடுக்கத் தேவையில்லை. அதன் பிறகு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

பிறந்த குழந்தைக்கு, பசுவின் பாலோ பவுடர் பாலோ தாய்ப்பாலுக்கு இணையான சத்தைக் கொடுக்கக்கூடியது அல்ல என்பதுடன், அளவு, இடைவெளி என கொடுக்கப்படும் முறைகளால் அது சிசுவுக்கு பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகும் இயற்கை உணவு.

குழந்தையின் புத்திக்கூர்மை, மூளைச் செயல்திறன், சுறுசுறுப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கும் கருவியாக தாய்ப்பால் செயல்படுவதாக உலக சுகாதார நிறுவனமான WHO உரக்கச் சொல்கிறது. மேலும், தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளுக்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்கிறார்கள் மருத்துவர்கள்.

குழந்தையின் அழுகை, சிரிப்பு, ஸ்பரிசம் என இவையெல்லாம்தான் தாய்க்கு பால் சுரப்பினை அதிகப்படுத்தும். இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் இயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட ஓர் அற்புத பந்தம்.

பாலூட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீர்வரை அருந்த வேண்டியது அவசியம். சத்தான, சரிவிகித உணவினை வேளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் சேய்க்கு மட்டுமல்ல, தாய்க்கு செய்யும் நன்மைகள் பல. பாலூட்டுவதன் மூலம் அந்தத் தாய்க்கு பிரசவத்துக்குப் பிறகான உடல் எடை குறைப்பு இயற்கையாக நிகழும். கருத்தரித்தல் தவிர்க்கப்படும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் கோபம் தடுக்கப்படும். மிக முக்கியமாக, பாலூட்டும் பெண்களுக்கு பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுகின்றன.

ஆகவே, அன்பான அம்மாக்களே, எதிர்கால அம்மாக்களே... அழகு போய்விடுமோ என்ற தவறான எண்ணத்தால், உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் முதல் உணவான, முக்கிய உணவான, இணையற்ற உணவான தாய்ப்பாலை கொடுக்கத் தவறிவிடாதீர்கள். தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமே, பெண்களிடம் தாய்ப்பால் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான். வளமான சந்ததியை உருவாக்கும் பொறுப்பு உங்களிடம்!
[8/3, 10:42 AM] Habibullah Siraji: பாலூட்டும் காலம்:
‘பால் குடியை நிறைவு செய்ய விரும்புகின்ற (கண)வருக்காக (தலாக் கூறப்பட்ட) தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் பூரணமாகப் பாலூட்ட வேண்டும். ‘(பாலூட்டும் தாய்மார்களாகிய) அவர்களுக்கு முறைப்படி உணவளிப்பதும், அவர்களுக்கு உடையளிப்பதும் பிள்ளையின் தந்தை மீது கடமை யாகும். எந்தவொரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் சிரமப்படுத்தப்படமாட்டாது. தாய் தன் பி;ள்ளைக்காகவோ, தந்தை தன் பிள்ளைக்காகவோ சிரமத்துக்குள்ளாக்கப் படமாட்டார்கள். (தந்தை மரணித்து விட்டால்) இது போன்ற கடமை அவரது வாரிசுக்கும் உண்டு. அவ்விருவரும் மனம் விரும்பியும் ஆலோசனை செய்தும் பால் குடியை நிறுத்திவிடக் கருதினால் அவ்விருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்குச் செவிலித்தாய் மூலம் பாலூட்ட விரும்பி (பெற்ற தாய்க்குக்) கொடுக்க வேண்டியதை உரிய முறைப்படி கொடுத்துவிட்டால் (அதிலும்) உங்கள் மீது குற்றம் இல்லை. நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்ப்பவன் என்றும் அறிந்து கொள்ளுங்கள்.’ (2:233)

இந்த வசனம் தாய்ப்பாலின் அவசியததை வலியுறுத்துகின்றது. கணவன்-மனைவி இருவரும் ஏதேனும் முரண்பாடுகள் காரணமாகப் பிரிய நேரிட்டாலும் குழந்தைகள் அதனால் பாதிக்கப்படக் கூடாது. விவாகரத்து செய்யப்பட்ட தனது குழந்தையின் தாய் தனது பிள்ளைக்கு பாலூட்ட வேண்டும் என கணவன் விரும்பினால் அந்தப் பிள்ளையின் தாய் பாலூட்ட வேண்டும் என்றும் தந்தை அதற்காக உபகாரம் செய்ய வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. இந்த அளவுக்கு குழந்தையின் தாய்ப்பால் உரிமையை இஸ்லாம் மதிக்கின்றது.

மரண தண்டனைக்குரிய ஒரு தாயின் தண்டனையை நபி(ச) அவர்கள் இதற்காக பிற்போட்டுள்ளார்கள். குழந்தை பால் குடி மறக்கும் வரை நபி(ச) அவர்கள் தண்டனை வழங்காமல் இருந்துள்ளார்கள்.

எனவே, தாய்ப்பால் குழந்தையின் உரிமை என்பதை இந்த வசனம் உறுதியாகக் கூறுகின்றது. முழுமையாகப் பாலூட்டுவதாயின் இரண்டு வருடங்கள் பாலூட்ட வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகின்றது. இன்றுள்ள பல தாய்மார்கள் தமது மார்பழகு கெட்டுவிடும் என்ற கெட்ட எண்ணத்தில் குழந்தைக்கு தாய்ப் பால் ஊட்டுவதை தவிர்த்து வருகின்றார்கள். இது குழந்தைக்குச் செய்யும் அநீதியாகும். குழந்தைக்குத் தேவையான சகல சக்திகளும் நிறைந்த அற்புத பானமாகவே தாய் பால் உள்ளது. அத்துடன், தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களுக்கு ஏற்படும் மார்புப் புற்றுநோய் போன்ற ஆபத்துக்களிலிருந்து அவர்களை காக்கவல்லது என்பதையும் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

எனவே, ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க எதிர்கால சந்ததியை உருவாக்குவதில் தாய்ப்பாலுக்கு மிகுந்த பங்குள்ளது என்பதையும், தாய்-பிள்ளை பாசத்திலும் பரிவிலும் கூட இது மிகப் பெரும் தாக்கம் செலுத்துகின்றது என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.
[8/3, 10:43 AM] Habibullah Siraji: பால் எவ்வாறு உற்பத்தியாகிறது?

இவ்வசனத்தில் (16:66) பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது பற்றி கூறப்படுகிறது.

பிராணிகளின் இரத்தம் தான் பாலாக உருவாகிறது என்று ஆரம்ப காலத்தில் மக்கள் நம்பினார்கள். சென்ற நூற்றாண்டு வரை இதுதான் மக்களின் நம்பிக்கையாக இருந்தது.

சாணத்துக்கும், இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தான் பால் உருவாகிறது என்று இவ்வசனத்தில் (16:66) கூறப்படுகிறது. அதாவது இரத்தம் பாலாக ஆவதில்லை என்று இவ்வசனம் கூறுகிறது.

பாலூட்டிகளுக்கு இரண்டு குடல்கள் உள்ளன. உண்ணும் உணவுகள் அரைக்கப்பட்டு, சிறு குடலில் கூழாக்கப்பட்டு அதில் உள்ள உறிஞ்சுகள் மூலம் பல்வேறு சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடல் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறது.

தேவையான சத்துக்களைப் பிரித்து எடுத்த பின் சக்கையைப் பெருங்குடலுக்கு அனுப்புகிறது. அதில் தான் மலக்குடலும் உள்ளது.

சாணம் என்பது பெருங்குடலில் உள்ள சக்கைகளைக் குறிக்கும். இரத்தத்துக்கும் சாணத்துக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளது என்பது சிறுகுடலில் அரைக்கப்பட்ட நிலையில் இருக்கும் உணவுக் கூழைக் குறிக்கும்.

சாணமாக மாறுவதற்கும், இரத்தமாக மாறுவதற்கும் இடையில் உள்ள நிலை என்பது இது தான். இதைத் தான் இவ்வசனம் சொல்கிறது.

இரத்தம் தான் பாலாக ஆகிறது என்றால் பால் என்பது இரத்தத்துக்கு அடுத்த நிலை என்று ஆகிறது. ஆனால் இரத்தமாக ஆவதற்கு முந்திய நிலைதான் பால் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

இது பற்றி நவீன விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகின்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக ஆகும். குடலில் உள்ள உறிஞ்சிகள் அதிலிருந்து சத்துக்களை உறிஞ்சுகின்றன.

இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உருமாறுகிறது.

அதாவது சாணத்துக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்துதான் பால் உற்பத்தியாகிறது என்ற 21ஆம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை "அதன் வயிறுகளில் உள்ள சாணத்துக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம்' என்று திருக்குர்ஆன் கூறியிருப்பது, இது மனிதனின் வார்த்தை அல்ல என்பதற்கும், கடவுளின் வார்த்தையே என்பதற்கும் மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது
[8/3, 10:44 AM] Habibullah Siraji: தாய்பால் கொடுப்பதனால் நன்மைகள் என்ன?

தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பந்தம் வளரும், இதற்கு தாய்பால் அவசியமானது.ஆய்வுகளின் படி தாய்பால் குடிக்கும் பிள்ளை மிகவும் சுகதேகியாகவும், கெட்டிதனமாகவும், விழிப்பானதாகவும் கானப்படும்.தாய்பால் குடிக்கும் குழந்தை அலர்ச்சிகளுக்கு உள்ளாக மாட்டா.தாய்பால் கொடுப்பது இலகுவானது பால் போத்தல்களில் கழுவியோ அல்லது பால் மா வாங்குவதிலோ சிரமம் பார்க்க தேவை இல்லை இவை மிகவும் செலவீனதாக பிள்ளை தாய்பால் தேவைப்படும்போதெல்லாம் கொடுக்கலாம்.குழந்தை தாய்பாலினால் நோய் எதிர்ப்பு சக்தியினை பெறுவதினால் குழந்தை பல்வேறு நோய்களினாலும், வயிற்றுபோக்கினாலும் அவதியுற மாட்டாதுதாய்பால் ஒழுங்காக கொடுக்கப்பட்டால் நிறை கூடுவதும் ஒழுங்காக நடைப்பெரும்.பால் மார்பகப் புற்று நோயிலிருந்தும், சூலக புற்று நோயிலிருந்தும் காப்பாற்றப் படுவார்.இது ஒரு இயற்கையான கருத்தடைமுறையாகும். இருந்தாலும் கருத்தடை முறையை பிள்ளைப் பெற்று 42 நாட்களின் தொடங்கலாம்.

நான் எப்போது தாய்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்?

குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகும் மட்டும் தனித் தாய்பாலினை கொடுப்பது கட்டாயமாகும். இவ்வேளையில் தண்ணீர் கொடுக்கத் தேவையில்லை பின்பு மெதுவாக மேலதிக உணவுகளை தொடங்கலாம். தாய்பால் ஊட்டுவதனை குழந்தைக்கு 2 வயது வரை செய்யலாம்.

சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு விருப்பமில்லாதவர்கள். இவர்களின் முதன்மையான கருத்து தங்களுடை மார்பக அழகு கெட்டுவிடும் என்பதாகும். அமெரிக்கா சமுதாயத்தின் பிளாஸ்திரிக் சத்திர சிகிட்சை நிபுணர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தாய்பால் ஊட்டுவதனால் மார்பகங்கள் தொய்வடைய மாட்டாது.

பால்மா வகைகள் தாய்பாலிற்கு சமமானதா?

கடைகளில் குழந்தைகளுக்கு பல்வேறான பால் வகைகள் கானப்பட்டாலும் அவை தாய்பாலின் அளவிற்கு மிக அண்மையில் காணப்பட்டாலும் நீங்கள் தாய்பால் ஊட்டுவது போன்றான முழு அவிலான நன்மைகளை குழந்தைக்கு கொடுக்க மாட்டாது.
[8/3, 10:46 AM] Habibullah Siraji: தாய்ப்பாலை மாப்பாலுடன் (புட்டிப் பாலுடன்) ஒப்பிட்டு நோக்கும்போது தாய்ப்பாலின் மகத்துவத்தை இலகுவாக விளங்கிக்கொள்ளமுடியும்.

இது குழந்தையின் போசாக்கை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள பால் .மனித உடல் வளர்ச்சிக்கும் மூளை விருத்திக்கும் அவசியமானது.இதில் புரதத்தின் அளவு குறைவாகவே (15%) காணப்படுவதனால் இலகுவில் சமிபாடடையக் கூடியது.அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் சகலதும் காணப்படுகின்றன.இதில் காணப்படும் புரதம் உடலினால் இலகுவாக உறிஞ்சப்படும்.கொழுப்பின் அளவு சீராக இருப்பதனால் மூளை வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்குத் தாய்ப்பாலின் மூலம் கிடைக்கின்றது. கிருமித்தொற்று இல்லாதது.மேலதிக செலவு அற்றது.எவ்வேளையிலும் கிடைக்கக் கூடியதாக இருப்பதுடன் ஏற்ற வெப்பநிலையும் காணப்படுகிறது.தாய், சேய் பாசப்பிணைப்பை மேம்படுத்துகிறது.போசாக்கின்மையில் இருந்து மீட்சியளிக்கும்.புற்றுநோய் ஏற்படுவதற்குரியதாக்கம் குறைவு.குழந்தைப் பருவத்தில் தாய்ப்பால் குடிப்பதால் பிற்காலத்தில் ஏற்படும் நீரிழிவு, உயர் குருதி அமுக்கம் போன்ற நோய் நிலைமைகள் ஏற்படாது.தாயின் கர்ப்பப்பை, மற்றும் மார்பகப் புற்றுநோய் அபாயங்களைக் குறைக்கும். பிரசவத்தின் பின் பாலூட்டுவதால் கர்ப்பப்பை விரைவாகச் சுருங்கிவிடும். இதனால் குருதிப்போக்கும் குறைக்கப்படும்.கணிப்பொருள்கள் உரிய அளவில் உண்டுநீரின் அளவு குழந்தைக்குப் போதுமானது. குறைமாதப் பிரசவக் குழந்தைகளுக்கும் ஏற்றவிதமான உணவாக அமையும்.குழந்தை பிறந்து முதல் சில நாள்களில் சுரக்கும் பாலில் காணப்படும் கொலஸ்ரம் குழந்தைக்கு அத்தியாவசியமானது.

புட்டிப்பால்

இது பசுக்கன்றின் போசாக்கிற்கு என உருவாக்கப்பட்டுள்ள பால்.கால்நடையின் ஆகரமாக இருப்பதனால் மிருகத்திற்கு விருத்திக்குத் தேவையான விதமாகவே அமைந்துள்ளது.இதில் புரதம் 35% காணப்படுகின்றது.இதில் காணப்படும் புரதத்தை மனித உடல் ஏற்காததனால் அவற்றை உடலில் இருந்து வெளியேற்ற நடைபெறும் செயற்பாட்டினால் பாதிப்பு உண்டாகும்.இதில் உள்ள புரதம் உறிஞ்சப்படும் வீதம் குறைவு.கொழுப்பின் அளவு கூடுதலாகக் காணப்படுவதனால் பசுவின் விருத்திக்குச்சிறந்தது.எதிர்ப்புச் சக்தித் தன்மை இல்லாதிருப்பதுடன் கிருமித்தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.மேலதிக செலவுண்டு.தேவையான வேளையில் தேவையான உஷ்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.தாய் – சேய் பாசப்பிணைப்பு குறைவடையும்.போசாக்கின்மைக்கு ஆளாக்கும்.நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் செல்லும் நிலைமை ஏற்படும்.நீரிழிவு, உயர் குருதி அமுக்கம் பிற்காலத்தில் ஏற்படச் சந்தர்ப்பம் அதிகம்.கணிப்பொருள்கள் அதிகம்.நீர் சேர்க்கும் அளவைப் பொறுத்துப் பாலின் தரம் அமையும்.குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஆபத்தானது.கொலஸ்ரம் காணப்படாது.

மேற்குறிக்கப்பட்ட ஒப்பீட்டில் இருந்து தாய்ப்பாலின் மகத்துவத்தை நன்கு விளங்கிக் கொள்ளலாம். எனவே, இறைவனின் அரும்பெரும் கொடையான தாய்ப் பாலினைக் குழந்தைக்கு ஊட்டுவதற்கு தாய்மார் பின்னிற்றல் கூடாது.

கோ.நந்தகுமார், 
விரிவுரையாளர்,
தாதியர் பயிற்சிக் கல்லூரி,
யாழ்ப்பாணம்.

தாய்ப்பாலின் மகத்துவம்:-
1. தாய்ப்பால் சுத்தமானது, எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும்.
2. தாய்ப்பால் சுவாசமண்டல நோய்கள் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது.
3. தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் தாய் சேய் பாசப்பிணைப்புக்கும், குழந்தையின் மனவளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
4. மூளை வளர்ச்சி மற்றும் சிறந்த கண்பார்வைக்கும் உதவுகிறது.
5. தாயின் அரவணைப்பிலே இருப்பதால் உடல் குளிர்ந்து போதலை தடுக்கிறது.
6. விலங்கின் பாலில் புரதச்சத்து அதிகம். அதனால் உருவாகும் கழிவுகளை முதிர்ச்சி அடையாத சிறுநீரகங்கள் வெளியேற்றுவது கடினம். எனவே விலங்கின் பாலை பிறந்த குழந்தைக்கு அளிப்பதை தவிர்க்கவும்.
7. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.
8. நோய் தொற்று மற்றும் ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்கிறது.
9. முதல் வாரத்தில் அடிக்கடி பாலூட்டுவதன் மூலம் பச்சிளங் குழந்தைகளில் ஏற்படும் மஞ்சள் காமாலையின் தீவிரத்தை குறைக்கிறது.
10. தாய்ப்பால் குழந்தையின் குடல்கள் முதிர்ச்சி அடைவதற்கு உதவுகிறது.
11. குறைமாத குழந்தையின் தாயாரிடமிருந்து சுரக்கும் பால், குறை மாத குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தைக் கொண்டுள்ளது.
[8/3, 10:48 AM] Habibullah Siraji: அதிசய பானம்: தாய்ப்பால்

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்.அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள். இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக¢என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது." (குர்ஆன் 31:14) அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட ஈடு இணையற்ற தாய்பாலானது குழந்தைகளுக்கு அவசியமான சக்தியை பூர்தி செய்யக்கூயதாகவும் குழந்தைகளை நோயிலிருந்து காப்பாற்றக்கூடியதாகவும் காணப்படுகிறது. 
தாய் பாலில் காணப்படும் சத்துகள் சரியான அளவில் காணப்படுவதால் குழந்தையின் வளர்ச்சியடையாத உடலுக்கு ஏற்றதாக காணப்படுகிறது. அதேநேரம் தாய்பாலில் சத்துகள் நிறைந்து காணப்படுவதால் அவை மூளை செல்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தி நரம்பு தொகுதியையும் வளர்ச்சியடைய செய்கிறது. 
ஒரு மனிதனால் தற்கால தொழிநுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளால் இந்த அதிசய உணவை ஈடுசெய்ய முடியவில்லை. 
தாய்பாலால் குழந்தை பெற்று கொள்ளும் நன்மைகளின் பட்டியல் அன்றாடம் நீண்டு கொண்டே போகிறது. தாய் பால் ஊட்டப்பட்ட குழந்தைகள் சமிபாடு மற்றும் சுவாச தொகுதிகளில் ஏற்படும் தொற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதற்கு காரணம்

தாய்பாலிலுள்ள எதிர்ப்பு சக்திகள் தொற்று நோய்களுக்கு எதிராக நேரடியான பாதுகாப்பை வழங்குகிறது. 
தாய்பாலிலுள்ள மற்ற நோய் எதிர்ப்பு காரணிகள் கேடு விளைவிக்க கூடிய பக்டீரியா வைரஸ்களுக்கு எதிராக தடுப்பு அமைப்பதுடன் நல்ல பக்டீரியாக்களான நோமல் புளோரா அனுமதிப்பதற்கான சிறந்த சூழலை ஏற்படுத்துகிறது. மேலும் தாய் பாலில் காணப்படும் சில காரணிகள் தொற்று நோய் எதிராக நோய எதிர்ப்பு காரணியாக தயார்படுத்துவதுடன் அதை முறையாக தொழிற்பட உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. 2
தாய் பால் விசேடமாக தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை மிக இலகுவாக சமிபாடடையகூடிய உணவாக காணப்படுகிறது. அவை சத்து நிறைந்து காணப்படுது மட்டுமல்ல அவை குழந்தையின் மிக மென்மையான சமிபாட்டு தொகுதியில் இலகுவாக சமிபாடு அடைகிறது. குழந்தைகள் சமிபாட்டிற்காக குறைந்தளவு சக்தியே செலவிடுவதால் அந்த சக்தியை கொண்டு உடலின் மற்ற செயல்களுக்கும் மற்ற பாகங்கள் வளர்ச்சியடையவும் பாவிக்கப்படுகிறது.
குறைமாத குழந்தைகளை ஈன்ற தாய்மார்களின் பாலானது குழந்தையின் தேவைகளை ஈடுசெய்யும் முகமாக கொழுப்பு - புரதம் - சோடியம் - குளோரைட் மற்றும் இரும்பு சத்துகளை அதிகளவாக கொண்டு காணப்படும். உண்மையில் தாய்பால் ஊட்டப்பட்ட குறைமாத குழந்தையின் கண் வளர்ச்சியானது சிறப்பாக இருப்பதோடு அவைகள் சிறந்த சிந்தனை ஆற்றில் சிறப்பாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மேலும் பல ஆற்றல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைக்கு தாய்பால் அத்தியவசியமானதாக இருப்பதற்கு காரணம் அதில் ஒமேகா-3 ஒயில் அல்பா லினோலிக் அசிட்கள் இருப்பதாலேயாகும்.அவை மனித மூளை மற்றும் கண்விழித்திரைக்கு தேவையான பொருளாக இருப்பதோடு புதிதாக பிறந்த குழந்தையின் பார்வையில் அவை மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒமேகா-3 கருவுற்ற காலகட்டத்திலும் குழந்தையின் ஆரம்ப காலகட்டங்களிலும் மூளையும் நரம்பும் சாதாரணமாக வளர தேவைப்படுகிறது. விஞ்ஞானிகள் ஒமேகா-3 இயற்கையாகவும் சிறந்த சேமிப்பு கிடங்காகவும் தாய்பால் இருப்பதால் அதை மிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 
மேலும் பிரிஸ்டல் பல்கலைகழ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தாய்பாலின் நீண்ட கால நன்மையின் காரணமாக அவை இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துவதுடன் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை குறைக்கிறது. ஆய்வு குழுவின் அறிக்கை தாய்பாலின் பாதுகாக்கும் தன்மை அது கொண்டுள்ள சத்திலிருந்து வருவதாக கூறுகிறது. தாய் பால் கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவது குறைவு என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது. தாய் பாலில்லோன்ங் செயின் பொலிஅன்செடுரேடட்பெட்டி அசிட்கள் காணப்படுவதால்-இவை நரம்புகள் இறுக்கமடையாமல் காப்பாற்றுகிறது- அதை போன்று தாய் பால் ஊட்டப்பட்ட குழந்தைகள் சோடியத்தை குறைவாக பெற்றுகொள்வதால் -இவை இரத்தம் அழுத்தம் ஏற்பட காரணமாக குறைக்கப்படுகிறது. அதன் காரணமாக அவை நிறை அதிகரிக்கப்பதால் தாய்வால் இதயத்திற்கு பயனளிக்கிறது.
4மருத்துவர் லிசா மார்டின் தலைமையின் கீழ் அமேரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தை மருத்துவமனையின் மருத்துவர் குழு மேற்கொண்ட ஆய்வில் தாய் பாலில் அடிபொனக்டின் என்று அறியப்பட்ட புரத ஹோமோன்கள் அதிகமாக காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 5 அடிபொனக்டின் அளவு இரத்தத்தில் அதிகமாக காணப்பட்டால் இதயத்தில் ஏற்படும் ஆபத்துகள் குறைகிறது.. உடல் பருமனானவர்களிலும் மாரடைப்பு ஆபத்துள்ளவர்களிடமும் அடிபொனக்டினின் அளவு குறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் பருனாக குழந்தைகளில் ஹோமோன் குறைவதற்கும் தொடர்பு இருப்தாக நிரூபிக்கப்ட்டுள்ளன. மேலும் அவர்களின் ஆய்வின் போது தாய்பாலில் காணப்படும் லெப்டின் என்ற மற்றொரு ஹோமோனுக்கும பெட் மெடபோலிசம் தொடபர்பு இருப்பது தெரியவந்துள்ளது.. உடலில் கொழுப்பு இருப்பதை தெரிவிக்கும் சாதணமாக லெப்டின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் மார்nனின் கூறுவதாவது தாய்பாலின் மூலம் பெறப்பட்ட இத்தகைய ஹோமோன்கள் அளவுக்கு அதிமாக பருமனாவது -இரண்டாம் நிலை சக்கரை வியாதி- இன்சுலினை எதிர்பது போன்ற நோய்களால் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.  
'பசுமையான உணவை' பற்றிய உண்மைகள்தாய்பாலின் நன்மைகள் இத்துடன் முடிவடைந்து விடுவதில்லை. குழந்தையின் ஆரோக்கியத்தில் அதன் பங்கானது அந்த குழந்தை கடக்கும் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப அதக் உணவு முறைகள் மாற்றமடைவதுடன் அந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஏற்ப பாலின் உள்ளடக்கமும் மாற்றமடைகிறது. எல்லா நேரத்திலும் தகுந்த வெப்பநிலையில் தயாராக காணப்படும் தாய்பாலானது மூளை வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. ஏனெனில் அது கொண்டுள்ள சீனி மற்றும் கொழுப்புமாகும். மேலும் கல்சியம் போன்றவைகள் குழந்தையின் எழும்பு வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.
இதை பால் என்று அழைக்கப்பட்ட போதிலும் இந்த அதிசயமான பானத்தின் பெரும்பகுதி தண்ணீராகும். இது முக்கிய பண்பாக காணப்படுகிறது ஏனெனில் உணவை தவிர்நது குழந்தைகளுக்கு தண்ணீர் என்ற வகையில் திரவம் தேவைப்படுகிறது. தாய்பாலை தவிர்ந்து வேறு எந்த உணவிலோ அல்லது தண்ணீரிலோ முழு சத்துகளையும் காணமுடியாது. இருப்பினும் தாய்பாலில் -90 வீதம் தண்ணீர் காணப்பட்டபோதிலும் அது குழந்தையின் தண்ணீர் தேவையை சுகாதார முறையில் பூர்த்தி செய்கிறது.தாய்பாலும் அறிவும்மற்ற குழந்தைகளை விட தாய் பாலுட்டப்பட்ட குழந்தைகளுக்கு வளர்ச்சி அதிகமாக இருப்பதை விஞ்ஞான ஆய்வுகள் காட்டுகின்றன. தாய்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளுயும் பால்மா ஊட்டப்பட்ட குழந்தைகளையும் ஆய்வுக்கு உட்படுத்திய கெண்டகி பல்கலைகழகத்தை சேர்ந்த ஜேம்ஸ் அன்டர்சன் என்பவர் மற்ற குழந்தைகளை விட தாய்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளின் அறிவு திறன் 5 புள்ளிகள் அதிகமாக இருப்பதை நிரூபித்தார். 6 மாதம் வரை தாய்பாலுட்டப்பட்ட குழந்தையின் அறிவு மேன்படுத்தப்பட்டிருப்பதாகவும் 8 வாரங்களுக்கு குறைவாக பாலூட்டப்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித அறிவில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது இந்த ஆய்வின் முடிவாக இருக்கிறது. 7தாய்பால் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறதா?பல ஆய்வுகள் நடத்தப்பட்டு பல கட்டுரைகள் வெளியடப்பட்டவைகள் அனைத்தும் தாய்பாலானது குழந்தைகளை புற்றுநோயிலிருந்து காப்பாற்றக்கூடியதாக இருப்பதை நிரூபித்துள்ளன. இந்த செயல்முறை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. சோதனை கூடங்களில் உருவாக்கப்பட்ட கட்டி செல்களை தாய்பாலில் காணப்படும் புரதங்கள் மற்ற ஆரோக்கியமான செல்களைவிட்டு விட்டு அழிப்பதை விஞ்ஞானிகள் பெரும் சக்தி இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். சுவீடனிலுள்ள லுன்ட் பல்கலைகழத்தின் தொற்றுநோய் சம்பந்மான பேராசிரியர் கதரீனா சவன்போ என்பவின் தலைமையின் கீழுள்ள ஆராய்ச்சி குழு தாய்பாலிலுள்ள அதிசமான இரகசியங்களை கண்டுபிடித்தது.8. இந்த லுன்ட் பல்கலைகழகத்தின் குழு தாய்பாலானது பலவகையான புற்று நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதை அதிசயமான கண்டுபிடிப்பு என கூறுகிறது.
முதலில் ஆராய்சியாளர்கள் புதிதாக பிறந்த குழந்தையிலிருந்து எடுத்த குடல் முகாஸ் செல்களை தாய்பாலோடு சேர்த்து பரிசோதித்தனர். நிமோனியா என்ற னுமகோகஸ் பக்டீரியாவினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளை தாய்பாலானது மிக சிறந்த முறையில் தடுத்து நிறுத்தியதை கண்டறிந்தார்கள். மேலும் தாய்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளுக்கு புட்டிப்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளை விட குறைந்தளவு கேட்டல் சம்பந்தமான குறைபாடுகளும் சுவாச தோற்று நோய்களும் ஏற்படுகிறது. 
பல ஆய்வுகளுக்கு பிறகு தாய்பாலானது குழந்தைகளுக்கு புற்று நோய் ஏற்படவதை தடுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தாய்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளை விட புட்டிப்பால் ஊட்டப்பட்ட குழந்தைகளுக்கு குழந்தை பருவத்தில் புற்று நோய் வருவது 9 வீதம் அதிக வாய்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பெறுபேறுகள் மற்ற புற்றுநோய் வகைகளுக்கும் பொருந்தும். தூய்பாலானது புற்றுநோய் செல்களை சரியாக இணங்கண்டு அவற்றை அழிப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தாய்பாலில் அதிகமாக காணப்படும் அல்பாலக் (அல்பாலக்டல்புமின்) என்ற பொருள் புற்றுநோய் செல்களை இணங்கண்டு அவற்றை அழிக்கிறது. பாலில் காணப்டும் சுகர் லக்டோஸ் உருவாக்க பயன்படும் புரதத்தாலேயே அல்பா-லக் உருவாக்கப்படுகிறது.இந்த இணையற்ற அருள் அல்லாஹ்வின் பரிசாகும்இந்த தாய்பாலின் இன்னொரு அற்புதம் அது இரண்டு ஆண்டுகள் ஊட்டப்டுவதாகும்10 இந்த முக்கியமான தகவல் விஞ்ஞானத்தால் மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த உண்மையை குர்ஆன் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னே கூறிவிட்டது.'தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்'(குர்ஆன் 2:233)அதை போன்று தாயானவள் பாலை உற்பத்தி செய்யவேண்டும் என்று நினைப்பதில்லை. ஆதரவற்ற குழந்தைக்கு தேவையான சத்துகளை பட்டியலிடுவதுமில்லை. அது தேவைகளை நன்கு அறிந்து எல்லாவற்றுக்கும் அருள் செலுத்துகின்ற ஆற்றல்மிக்க அல்லாஹ் தான் தாயின் உடலில் குழந்தைக்கு தேவையான பாலை உருவாக்குகிறான்.
[8/3, 1:20 PM] Habibullah Siraji: திருக்குர்ஆனின் அற்புதம்

தாய்ப்பால் ஊட்டுவது கட்டாயக் கடமை

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்488 என்பதை அறிந்து கொள்ளுங்கள்! - 2:333

 தாய்ப்பால் ஊட்டுவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும், தாய்க்கும் ஏராளமான நன்மைகளைத் தருவதால் குழ்ந்தைக்கு இரு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

இதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இது குறித்து ஆய்வு செய்து, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றும், ரத்த ஓட்டம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் இறப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு என்றும் கூறியுள்ளார்.

தங்களது குழந்தைகளுக்குப் பெண்கள் பாலூட்ட வேண்டும் என்பதை மதக் கட்டளையாக இஸ்லாத்தில் மட்டும் தான் சொல்லப்பட்டுள்ளது. வேறு எந்த மதத்திலும் இது குறித்து கட்டளை எதுவும் போடப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆனால் நவீன காலத்தில் புட்டிப்பால் கொடுத்தே குழந்தைகள் வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது. தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு குறைந்துவிடும் என்று பெண்கள் அஞ்சுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.

ஆனால் தாய்ப்பால் கொடுக்காமல் புட்டிப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். தாய்மார்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்ற உண்மையும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் புற்றுநோயிலிருந்தும், மாரடைப்பிலிருந்தும் காக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு :

*இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 (மூன்று லட்சத்து எண்பதாயிரம்) பெண்களைப் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல் இவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும் மரணமும், 17 சதவிகிதம் குறைகின்றது.*

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது

ஒரு குழந்தை பிறந்ததும் அதன் குடலினை அடையும் முதல் உணவு தாய்ப்பால் ஆகும். இதனை இறைவன் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடை என்றால் அது மிகையாகாது. மேலும் புட்டிப் பாலைவிட தாய்ப்பாலில் கிடைக்கும் அபரிமிதமான பயன்களைக் கருத்தில் கொண்டுதான் அன்றைய வைத்தியர்களிலிருந்து இன்றைய மருத்துவர்கள்வரை அனைவரும் குழந்தைக்கு பரிந்துரைக்கும் உணவு தாய்ப்பால் ஆகும்.

இன்றைய இயந்திர உலகில் அரசு பணியிலும் இன்ன பிற பணியிலும் இருக்கும் பெண்கள் குறுகிய விடுப்பில் தாய்ப்பால் கொடுப்பதை புறக்கணிக்கின்றனர். இன்னும் சில பெண்கள் அழகு கெட்டுவிடும் என்ற அறிவீனத்தில் தாய்ப்பாலை புறக்கணிக்கின்றனர். இவர்கள் அனைவரும் தாய்ப்பாலினால் தாய்க்கும்-சேய்க்கும் கிடைக்கும் நன்மைகளை முழுமையாய் அறியாததுதான் அத்தகைய போக்கிற்கு காரணம். எனவே, தாய்ப்பாலைப் பற்றிய சில பயனுள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வோம்.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு நல்ல சத்துணவாக விளங்குவதுடன் சிறந்த நோய் தடுப்பு சக்தியையும் அளிக்கின்றது அதிலும் குழந்தை பிறந்தவுடன் முதலில் சுரக்கும் பாலுக்கு (Colostrums) கொலஸ்ட்ரம் என்று பெயர் நம் ஊரில் இதனை 'சீம்பால்' என்றும் கூறுவர் இது வெண்மைக்கும், மஞ்சளுக்கும் இடைப்பட்ட நிறத்தில் இருப்பதால் இதனை கெட்டுப்போன பால் என்றும் இது குழந்தைக்கு பேதியை ஏற்படுத்தும் என்றும் நம்பி கிராமப்புறங்களிலும், நகர்ப்பறங்களிலும் இதனை குழந்தைக்கு கொடுப்பதில்லை. இந்த 'கொலஸ்ட்ரம்' என்ற சீம்பாலில் ஏராளமான தாது மற்றும் சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. இந்த சீம்பாலில் சுகர், லாக்டோஸ் மற்றும் புரதச் சத்து ஏராளமாக காணப்படுகிறது. மேலும் இது தாயின் நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்கு சென்றடைவதுடன் குழந்தைகளை ஆரம்ப பருவத்தில் தாக்கும் கிருமிகளின் தாக்குதலிலிருந்து பெரும்பாதுகாப்பு அளிக்கிறது.

புட்டிப்பாலைவிட தாய்ப்பால் எனும் இயற்கை உணவு மிகச்சிறந்த பலன்களை குழந்தைகளுக்கு அளிக்கின்றது மேலும் தாய்ப்பால் அருந்திய குழந்தைகள் புட்டிப்பால் குழந்தைகளைவிட ஆரோக்கியமாக விளங்குவதை சமீபத்திய பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த Dr. Alan Peter அமெரிக்காவில் பிறவியிலேயே ஆஸ்துமா நோயால் பீடித்த பல குழந்தைகளிடம் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டதில் இரண்டு ஆண்டுகள் நிறைவாக தாய்ப்பால் அருந்திய குழந்தைகள் புட்டிப்பால் குழந்தைகளைவிட 60% நோய்நிவாரணம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது 23%-லிருந்து 16.3%ஆக நோய் குறைந்துள்ளது மேலும் மற்றொரு அமெரிக்க ஆய்வாளரான Dr. Lukas தமது குழுவினருடன் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தாய்ப்பாலில் மேலும் பல வியத்தகு பலன்கள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளார் அவர் தமது அறிக்கையில் தாய்ப்பாலில் உள்ள ARCHIDONIC ACID (AA) & DOCOSAHEXANC ACID (DHA) போன்ற அமிலங்கள் காணப்படுகின்றன, இது குழந்தைகளின் கண் மற்றும் மூளை வளர்ச்சிக்கு பேருதவி செய்கின்றது இந்த அமிலங்கள் செயற்கை பால் பவுடர்களிலோ பசும்பாலிலோ கிடையாது. இறைவன் மனிதகுலத்திற்கு செய்த மிகப்பெரும் கருணை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் UNICEF போன்றவை வளர்ந்துவரும் நாடுகளில் குழந்தைகளுக்கு சக்திகுறைவால் மரணம் அதிகரிக்கிறது, எனவே குறைந்தபட்சம் தாய்ப்பாலை தவறாது ஊட்டுங்கள் என்று வருடாவருடம் அறிவுரை வழங்கிக்கொண்டே இருக்கின்றன. கடந்த வருடத்தின் ஆகஸ்ட் முதல் வாரம் அதாவது 1-7 ஆகஸ்ட் 2005ஐ உலக தாய்ப்பால் வாரமாக அறிவித்தது இந்திய அரசின் சுகாதார & குடும்ப நல அமைச்சகம். தாய்ப்பாலின் அவசியத்தையும் அதனால் ஏற்படும் பெரும் பலன்களையும் மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு வெளியிட்டுள்ள விளம்பர அறிக்கையில் தாய்ப்பால் பாதுகாப்பானது ஆரோக்கியமானது என்று கூறி பல்வேறு பலன்களை சுட்டிக்காட்டி இருக்கிறது அவ்வறிக்கையின் சாராம்சத்தை இங்கே தருகின்றோம்.

 

தாய்ப்பாலூட்டுவதற்கான சரியான வழிமுறைகள்

 

-> குழந்தை பிறந்த உடனே, அதாவது 30 நிமிடத்திற்குள் தாய்ப்பாலூட்டத் தொடங்குவது விரும்பத்தக்கது

-> முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது, அதாவது தாய்ப்பாலைத் தவிர வேறு எந்தப் பாலும், உணவும், திரவமும், நீரும் தேவையில்லை.

-> போதுமான சரியான துணை உணவுகளை ஊட்டுதல் 6 மாதத்திற்குப் பிறகு தாய்ப்பால் ஊட்டுவதுடன் மற்ற துணை உணவுகளையும் வழங்கத் தொடங்கவும்.

-> 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் தாய்ப்பாலூட்டுவது தொடரட்டும்.

 

தாய்ப்பாலூட்டுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்

-> தாய்ப்பால் குழந்தைகளுக்கான இயற்கை தந்த பரிசு.

-> தாய்ப்பால் 5 புலன்களையும் - பார்த்தல், நுகர்தல், கேட்டல், சுவைத்தல், தொடுதல் என உணர்வுகளைத் தூண்டுகிறது.

-> தாய்ப்பால் உணர்வுபூர்வ பாதுகாப்பையும், வாழ்நாள் முழுவதும் மனோ நிலை, சமூக நிலை மேம்பாட்டில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

-> தாய்ப்பால் குடித்த குழந்தை அறிவு மிகுந்ததாகவும் தாய்ப்பால் குடிக்காத குழந்தையைவிட 1Q8 புள்ளிகள் வரை அதிகமாகவும் பெறும்.

-> மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது. கற்கும் ஆற்றலைக் கூட்டுகிறது.

-> தாய்பாலூட்டுவது குழந்தை பிறந்த பிறகான சீழ்த்தொற்று, வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்றவை தாக்காது காக்கும்

-> தாய்ப்பால் 5 வயதுக்குட்ட குழந்தைகள் இறக்கும் எண்ணிக்கையை 13% வரை குறைக்கிறது.

 

தாய்ப்பாலூட்டுவதால் தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள்

-> தாய்ப்பாலூட்டுதல், தாய்மார்களுக்கு குழந்தைப் பிறப்புக்குப்பின் இரத்தஒழுங்கு, இரத்த சோகை ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது

-> தாய்ப்பாலூட்டுதல், தாய்மார்களுக்கு நோய்த் தடுப்புத்திறனை அதிகரிக்கிறது அடுத்து தாய்மையடைவதைத் தாமதிக்கிறது. நீரிழிவு தாய்மார்களுக்கு இன்சுலின் தேவையைக் குறைக்கிறது.

-> தாய்ப்பாலூட்டுவது தாய்மார்களுக்கு மார்பகப்புற்று, சினைப்பை புற்றுநோய் வலுவற்ற எலும்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தடுக்கிறது.

-> தாய்மார்கள் கர்ப்பத் காலத்தில் பெற்ற அதிக எடையைக் குறைக்க வாய்ப்பளிக்கிறது.

நினைவிருக்கட்டும்

முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டாமல் போனால் தாய்ப்பாலினால் கிடைக்கும் நன்மைகள் குறைந்து போகும். (நன்றி: சுகாதாரம் & குடும்பநல அமைச்சகம் - இந்திய அரசு)

 

இத்தனை பலன்கள் இருந்தும்கூட நவீன இளம் தாய்மார்கள் தாய்ப்பாலை புறக்கணிப்பது நிச்சயம் அறியாமைதான் தாய்ப்பாலை புறக்கணித்த தாய்மார்களுக்கு கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய் அபாயம் உண்டு என்பதை மும்பையைச் சேர்ந்த முதன்மை புற்றுநோய் ஆராய்ச்சி மைய முதல்வர் டாக்டர் இந்திர நீலமித்ரா இப்படிக் கூறுகின்றார்.

அறியாமையின் காரணமாகவும் அழகு குறையும் என்ற காரணத்தாலும் பல தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க மறுக்கின்றனர் குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து 50% குறைவு என்று கூறுகின்றனர்.

எனவே தாய்ப்பால் குழந்தைக்கு மட்டுமல்ல தாய்மார்களுக்கும் ஏற்ற மிகச் சிறந்த உணவு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இஸ்லாம் தாய்ப்பாலூட்டுதலை தாய்மார்களுக்கு வற்புறுத்துகின்றது. இறைவன் தனது திருமறையில்

(தங்களுடைய குழந்தைகளுக்கு தம் மனைவியைக்கொண்டே) பால்ஊட்டுவதைப் பூர்த்தியாக்க விரும்புகிறவருக்காக, தாய்மார்கள், தங்களுடைய குழந்தைகளுக்கு (அவை பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டுகள் வரை பூரணமாகப் பாலூட்டுவார்கள் இன்னும் (பாலூட்டும் இக்காலங்களில்) அவர்களுக்கு உணவும், உடையும் முறைப்படி (வழங்குவது) தகப்பன்மீது கடமையாகும்.

(அல்-குர்ஆன் 2: 233)

மேற்கூறிய வசனத்தில் தலாக் விடப்பட்ட பெண்கள் விஷயத்தில், பாலூட்டும் பெண்களுக்கு உணவு, உடை வழங்குவது ஆண்கள் மீது கடமை என்பதை அறிய முடிகின்றது.

மற்றொரு இடத்தில் இறைவன் கூறுகையில்,

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் அன்பு கொண்டு அரவணைத்துக் கொள்வது) பற்றி நல்லுபதேசமும் செய்தோம் அவனுடைய தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனம் அடைந்தவளாக அவனைச் சுமந்தான் இன்னும் (அவனுக்குப் பால்குடி மறக்கடித்து) அவன் பிரிவது இரண்டு வருடங்களிலாகும் (ஆகவே மனிதனே!) நீ எனக்கும், உன்னுடைய பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக (முடிவில்) என்னிடமே (உன்) மீளுதல் இருக்கிறது(அல்-குர்ஆன் 31:14)

மேலும் 46:15ல் கூறும்போது இரண்டரை வருடம் அதாவது 30 மாதங்கள் பாலூட்ட வேண்டும் என்பதை உலக சுகாதார நலம் கருதி மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றது அருள்மறை.

எனவே கண்ணியமிக்க தாய்மார்களே! பாலூட்டுதல் என்பது வேலைக்குச் செல்லும் தாய்மார்களாகட்டும், தாய்பால் சுரக்கும் தன்மை குறைந்த பெண்களாகட்டும், கண்டிப்பாக நாம் பாலூட்ட ஆர்வம் காட்ட வேண்டும். இது என் மகவு, என் உயிரிலிருந்து பிரிந்து வந்த உயிர், என்னுடைய சொத்து,இக்குழந்தையை போஷித்து பாதுகாத்து வளர்ப்பது என்னுடைய இறைவன் எமக்கிட்ட கட்டளை இதற்காக நான் இறைவன் புறத்திலிருந்து கூலி கொடுக்கப்படுவேன் என்பதை ஒவ்வொரு தாய்மார்களும் உணர்ந்து போலியோ, ஊட்டச்சத்து குறைவு போன்ற நோய்களிலிருந்து விடுபட்டு இனிவரும் நாட்களில் திடகாத்திரமான நோய்களற்ற ஓர் சுகாதாரச் சமுதாயம் உருவாகிட அன்னையரே! அமுதூட்டுங்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருள் செய்யப்படுவீர்கள்.
[8/3, 1:23 PM] Habibullah Siraji: தாய்ப்பால் மகத்துவம்

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது." 

31:14  திருக்குர்ஆன்
------------------------------------------------------------------

தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! 

இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்!

மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. 

சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது. 
இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். 

ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. 
ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது 

குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது.
பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும். 

ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. 

குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. 

குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது.

தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி.

தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. 

வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை.

வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது. 
தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன.

. தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம்.

தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. 

வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது.

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம். ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும்.

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. 

போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது.

SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு.
பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது.

குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது.

ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. 

திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு.
பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன.

தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது.

முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது. 

மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்
[8/3, 1:24 PM] Habibullah Siraji: பிரசவம் பேரீட்சபழம் -என்ன சம்பந்தம் ?

மரியம் (அலை ) அவர்களை வானவர் ஜிப்ரீல், பேரீட்ச பழத்தை சாப்பிட்டு, கண்குளிர இருப்பீராக என்று கூறினார் என்று குர்ஆன் கூறுகிறது. இந்த இடத்தில் குரான் ,பிரசவதிக்கும் பேரீட்சபழதிர்க்கும் ஒரு நேர்முறையான சம்பந்தம் உள்ளது என்பதை தெரிவிக்கிறது.

.அது பற்றி பார்ப்போம்.

இன்றைய நவீன மகப்பேறு மருத்துவர்கள், எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் கர்ப்ப காலத்தின் போதும், பிரசவத்திற்கு பின் மூன்று மாதத்திற்கு, இரும்பு சத்து மாத்திரை தருகிறார்கள். காரணம் பொதுவாகவே, பெண்களுக்கு மாதமாதம், ஏற்படும் மாதவிடாய் காரணமாக

இரத்த அளவு குறைவாகவே இருக்கும்..மேலும் கர்பபமும் ,பிரசவமும், அவர்களின் இரும்பு சத்து தேவைபாட்டை இன்னும் பல மடங்கு அதிகரிக்க செய்கிறது. கர்ப்பம் இரும்புசத்து தேவைபட்டை எவ்வளவு கூட்டுகிறது? என்று அறிவியல் பூர்வமாக பார்ப்போம்.

Increased iron demand during pregnancy 

Fetus and placenta (சிசு, நஞ்சு அதிக தேவை ) 300mg

Maternal Hb mass expansion , 500mg

Loss in urine/sweat/gut (சிறுநீர்,வியர்வை,குடல் மூலம் இழப்பு) 200mg

Loss during DELIVERY (பிரசவ இரத்த போக்கு மூலம் இழப்பு) 150-200mg

Lactation (தாய்பால் கொடுப்பதால், அதிக தேவை ) 150-200mg

இவ்வளவு அதிக அளவு , கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு இரும்பு சத்து அதிகம் தேவைபடுவதால், இதை, உடல் தன்னால் ஓரளவுக்கு மேல், உற்பத்தி பண்ண முடியாது. அதனால், இரும்பு சத்து மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது.. ஏற்கனவே கற்பத்தால், குமட்டல், வாந்தி இருக்கும்போது, இரும்பு சத்து மாத்திரை, இன்னும் குமட்டளை அதிகரிக்கலாம். எனவே உணவு மூலம், எந்த குமட்டலும் இல்லாமல், இயற்கையாக இனிப்பு சுவையுடன் இரும்பு சத்தை அதிகரிக்கும் உணவு பேரீட்சபழம் மட்டுமே, என்று அறிவியல் கூறுகிறது. 100 கிராம் பேரீட்ச பழத்தில், சராசரியாக 1.15 mg இரும்பு சத்து உள்ளது.

இது போக பேரீட்ச பழத்தில், பொட்டசியம், கால்சியம், மக்னீசியம், நார்சத்து, வைட்டமின் B காம்ப்ளெக்ஸ், காப்பர் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இப்படி பிரசவத்திற்கு முன்னும், பின்னும் சுவையான IRON சத்தின் அவசியத்தையும் சர்வசாதாரணமாக ,எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் இல்லாத காலத்தில் அழகாக கூறி, இது காட்டாயம் இறை வேதமே என்று நிரூபிக்கிறது.

ஆக்கம் : டாக்டர். டி. முஹம்மது கிஸார்.

குழந்தை நல மருத்துவர்

சென்னை
*ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல்வாரம் தாய்பால் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 120 நாடுகள் சர்வதேச தாய்ப்பால் வாரத்தை கடைபிடிக்கின்றன*

No comments:

Post a Comment