Thursday, 20 July 2017

மருமகள் வீட்டின் எதிர் கட்சி தலைவர்

*திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்:*

"இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது  ஒரு அமைச்சரவை மாதிரி. இந்த வீட்டுக்கு முதல் மந்திரி உங்க மாமனார்தான். அவர்தான் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத்துறை எல்லாம் கவனிச்சுக்குவார்.

"இங்க நான்தான் துணை முதல்வர். உள்துறை,  நிதித்துறை, ஜவுளித்துறை எல்லாம் என் கட்டுப்பாட்டுல வரும்.

"என் மகன் அதாவது உன் வீட்டுக்காரன்தான் தொழில் துறை, போக்குவரத்துத் துறை, வீட்டு வசதித்துறை எல்லாம் பாத்துக்குவான்.

"என் மக, அதாவது உன்னோட நாத்தனார் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறையையும்,  விளையாட்டுத் துறையையும் பாத்துக்குவா.

"நீ எதைப் பாத்துக்கறே சொல்லு? உனக்கு உணவுத்துறை, சுகாதாரத்துறை, குடும்ப நலத்துறை எல்லாம் ஒதுக்கலாமுன்னு இருக்கேன்; சரிதானா?"

சிரித்துக்கொண்டே மருமகள் சொன்னாள்: "ஐயோ அத்தை;  பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு?  நீங்களே எல்லா நிர்வாகமும் பண்ணுங்க.  நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன் அப்பதான் அடிக்கடி வெளிநடப்பு செய்ய முடியும் 😜😜😜😜😜
*கொய்யால யாருகிட்ட😃😃*

No comments:

Post a Comment