Monday, 17 July 2017

شقيق البلخى وابراهيم ابن ادهم

இன்றைய சிந்தனை அபூ அமீன்:
🌹☀🌹☀🌹☀🌹☀🌹

அஸ்ஸலாமு அலைக்கும்
   14/7/2017🔹 வெள்ளி
فكرة اليوم 🔸இன்றைய சிந்தனை

...........................................................

            ➡2⃣7⃣0⃣⬅

【இவர்கள் இப்படி நாம் எப்படி?】

لمّا حجّ شقيق والتقى بإبراهيم بن أدهم وسأله وقال:  كيف حالك في معاشك؟  قال إبراهيم:  إن وجدنا شكرنا الله تعالى وإلاّ صبرنا. قال شقيق:  هذا طريقة كلابنا في بلخ. قال إبراهيم:  وانتم كيف تعملون؟  قال إن وجدنا بذلنا  وإلاّ شكرنا . قام إليه إبراهيم وقبّل بين عينيه وقال:  أنت الأستاذ والله
الكتاب:  تذكرة الأولياء للشيخ فريد الدين العطار النيسابوري صفحة - ٢٥٥

ஹளரத் ஷகீகுல் பல்கீ (ரஹிமஹுல்லாஹ் ) ஹஜ் செய்த போது ஹளரத் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களை சந்தித்தார்கள். அப்போது அன்னார் "உமது வாழ்வில்  உமது நிலை எவ்வாறு உள்ளது? என்று கேட்டார்கள்.

அதற்கு ஹளரத் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் “நாங்கள் எவற்றையேனும் (ரிஜ்கை) பெற்றுக் கொண்டால்  அல்லாஹுக்கு நன்றி செலுத்துவோம். எதுவும் பெற்றுக் கொள்ளாவிட்டால் பொறுமை செய்வோம்” என்று கூறினார்கள்.

அதற்கு ஹளரத் ஷகீகுல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்  “இது பல்கு நாட்டிலுள்ள நாய்களின் பழக்கமாகும்” என்றார்கள்.

அதற்கு ஹளரத் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் “நீங்கள் எப்படி செயல்படுவீர்கள்? என்று வினவினார்கள்.

அதற்கு அன்னார் “நாங்கள் எவற்றையேனும் (ரிஜ்கை) பெற்றுக் கொண்டால் அவற்றை (அல்லாஹ்வின் பாதையில்) செலவழிப்போம். அப்படி பெற்றுக் கொள்ளாவிட்டால் நன்றி  செலுத்துவோம்” என்று கூறினார்கள்.

அப்போது ஹளரத் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அன்னாரை நோக்கி எழுந்து சென்று இரு கண்களுக்கிடையே முத்தமிட்டு அல்லாஹ் மீது ஆணையாக நீங்கள் தான் (எனது) ஆசிரியர் என்றார்கள்.
...................................................
இன்றைய சிந்தனை முதல் பாகம் வெளியாகிவிட்டது விலை 20₹
தொடர்புக்கு - 9487733497
....................................................
தங்கள் துஆவை நாடி...
மௌலவி
*அபூஅமீன் ஃபாஜில் பாகவி. நீடூர்.
🌹☀🌹☀🌹☀🌹☀🌹

No comments:

Post a Comment