Wednesday, 5 July 2017

உண்மையான புலி வேஷமிட்ட சிங்கம் நகைச்சுவை

ஒரு குட்டி நகைச்சுவை கதை!!!!

இந்தியஅளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது!

அனைத்து மாநில பூனைகளையும் வீழ்த்தி குஜராத்  பூனை முன்னனியில் இருந்தது!

கேரளா பூனை
டெல்லி பூனை கர்நாடக பூனை ஆந்திரா  பூனை

இப்படி அத்தனை அனைத்து பூனைகளும் குஜராத் பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன!

குஜராத் பூனையல்லவா
பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு,கொழுவென இருந்தது!

கடைசி இறுதி சுற்று....
இந்தச் சுற்றில் குஜராத் பூனையிடம் தமிழ் நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்!

பார்வையாளர்களுக்கு வியப்பு!
தமிழ் நாட்டு பூனை
நோஞ்சானாக மெலிந்து
நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி
முக்கி முணங்கி மேடையேறியது!

இதுவா குஜராத் பூனையிடம் மோதப்போகிறது!

பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்!

போட்டித்துவங்கியது!
குஜராத் பூனை அலட்சியமாக
தமிழ் நாட்டு பூனையின் அருகில் நெருங்கியது!

தமிழ்நாடு பூனை முன்னங்காலை
சிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி!
குஜராத் பூனைக்கு மண்டைக்குள்
ஒரு பல்பு பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது!

கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது.
பார்வையாளர்கள் அதிர்ச்சியில்
வாயடைத்து நின்றார்கள்!

சற்று நேரம் சென்றபின்,
மெதுவாக கண்விழித்து பார்த்த குஜராத் பூனைக்கு
ஒன்றுமே புரியவில்லை!

தமிழ்நாடு  பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது.!

போட்டியில்
வென்றதற்காக தமிழ்நாடு பூனையை
எல்லோரும் கைகுலுக்கி பாராட்டிக் கொண்டிருந்தார்கள்!

மெதுவாக எழுந்து தமிழ்நாடு  பூனையின்அருகில் சென்று
இத்தனை மாநில பூனைகளை வீழ்த்திய பலசாலியான என்னை நோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியது
எப்படி?
என்று கேட்டது குஜராத் பூனை!
!!!..............!!!!....................!!!!.....................
குஜராத் பூனையின் காதில் மெதுவாக தமிழ்நாடு பூனை சொன்னது!
.நான் பூனையே இல்லை.!

புலி...டா...!

என் மாநில பஞ்சத்தில் இப்படியாகி விட்டேன்!

பாலும்,கறியும் உண்டாலும் பூனை பூனைதான்!
பட்டினி கிடந்தாலும் புலி புலிதான்! படித்ததில் பிடித்தது.👏 🙏

https://sharechat.com/post/4pgadG/
:-D ஓர் இளைஞன் B.E பட்டதாரி. எங்கெங்கோ வேலை தேடினான். .

🚶🏻
அவன் ஏறி இறங்காத நிறுவனங்களே இல்லை.
எங்கும் வேலை கிடைக்க வில்லை.
ஒரு நாள்அந்த ஊருக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்தது.
அதிலாவது ஏதேனும் வேலை கிடைக்குமா? என்று அந்த சர்க்கஸ் கம்பெனி முதலாளியைப் பார்த்துக் கேட்டான்.

அவனும் வேலை காலி இல்லை என்றான்.
பிறகு இவன் எப்படியாவது ஒரு வேலை கொடுங்கள்
என்று கெஞ்சினான்.
அந்த முதலாளி சொன்னான்.
தம்பி கம்பெனியில் இருந்த குரங்கு ஒன்று நேற்று இறந்துவிட்டது.

அந்த வேலையை நீ செய்வதாக இருந்தால்
உன்னை சேர்த்துக் கொள்கிறேன் என்றார்.
சரி என்று அவனும் ஒப்புக்கொடு வேலைக்குச்
சேர்ந்தான். குரங்கு செய்யும் வித்தைகளை எல்லாம்
கற்றுக்கொண்டு குரங்கு வேசம் போட்டு இவனும் செய்தான்.

ஒரு நாள் சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது.
பெருந்திரளாக கூட்டம் கூடியிருந்தது. அரங்கில் உயரத்தில் தொங்கிய ஊஞ்சலில்
இருந்து குரங்கு வித்தைகளை செய்யும்போது கைநழுவி கீழே விழுந்து விட்டான்.
அடி அவ்வளவாக படவில்லை. ஆனால்
இவன் கீழே விழுவதற்கும் அங்கே கூண்டிலிருந்த
சிங்கத்தைத் திறந்து விடுவதற்கும் சரியாக
இருந்தது.
நம்மாள் நடு
நடுங்கிப் போனான். வயிற்றுப் பசியை போக்கவே வேலை தேடி இங்கு வந்தோம். இன்று சிங்கத்தின் வயிற்றுக்கு இரையாகப் போகிறோம் என்று அஞ்சி நடுங்கினான்.

பேச நா கூட வரவில்லை. இவன் அஞ்சி நடுங்குவதை சிங்கம் பார்த்து. அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தது.
சரி நம் கதை முடிந்தது.. என்று நினைத்தான். குரங்கு வேடத்தில் இருந்த B.E பட்டதாரி.
🐅சிங்கம் மெல்ல வாயைத்
திறந்து பேசியது. “ஏ! B.E! பயப்படாதே நான் M.E, ”
என்றது..

👹துன்பங்கள் துரத்தினாலும் வாழ்க்கையை சிரிப்பொலியுடன் கடந்து போவோம்..

No comments:

Post a Comment