Sunday, 11 June 2017

இரு வேறு பார்வைகள்

இரு வேறு பார்வைகள்...................

வீட்டிலே காபி கொடுத்தாள் மனைவி.  உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. அதைக் கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான். விளைவு? சண்டை.......

சந்தோசமான வீடு மூன்று நாள் துக்க வீடாக மாறிவிட்டது.......

இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான்.........

அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். “உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான்.

உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார். இது போல் ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே.”மனைவி சிரித்தாள். தன் தவற்றை உணர்ந்தாள்.

அதன்பிறகு அவர்கள் வீட்டுக் காபியில் எறும்பு சாகவில்லை.அவர்கள் வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை.......

வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்வதும் சங்கடத்தில் முடிப்பதும் நாம் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்கிறோம் என்பதில் மட்டுமே தீர்மானிக்கிறது.👇👌❤🙏🙏

💐💐💐💐💐💐💐💐💐

அஷ் ஷெய்க் தன்தாவீ (றஹ்) அவர்களது வியத்தகு வரிகள்...

💐அறிமுகமற்றவர்களின் பார்வையில் நாமெல்லோரும் சாதாரண மனிதர்கள்.😌

💐பொறாமைக்காரரின் பார்வையில் நாமனைவரும் அகந்தையாளர்கள்.😩

💐புரிந்து கொண்டோரின் பார்வையில்
நாம் அற்புதமானவர்கள்.😎

💐நேசிப்போரின் பார்வையில்
நாம் தனிச்சிறப்பானவர்கள்.😎

💐காழ்ப்புணர்வுக் கொண்டவர்களின் பார்வையில் நாம் கெட்டவர்கள்.😤

ஒவ்வொருவருக்கும் என தனியான பார்வை உண்டு.

ஆதலால் -
பிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட சிரமப்படாதீர்கள்.

அல்லாஹ்வின் திருப்தியே உங்களுக்குப் போதுமானது.

மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு.
அல்லாஹ்வை திருப்திப்படுத்துதல் என்பது தள்ள முடியாத இலக்கு.

எட்ட முடியாததை விட்டு விடுங்கள்!
அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்!
💐💐💐💐💐💐💐💐💐

No comments:

Post a Comment