Monday, 1 May 2017

சூஃபியாக்கள் வரலாற்றில்

سبحان الله 🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
பக்காதிலிருந்து 40 மைல் தொலைவில் ஸல்மான் ஃபார்ஸி | ரலி) அவர்களின் அடக்கஸ்தலம் உள்ளது இதன் காரணமாக அந்த ஊருக்கே "ஸல்மான் பாக்" என்றழைக்கப்படுகிறது இதன் பழைய பெயர் மதாயின்

அங்கிருந்து இரண்டு பர்லாங்கு தொலைவில் "ஹஜ்ரத் ஹூதைபதுல் யமான் (ரலி) , " "ஹஜரத் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) " ஆகிய இரு நபித்தோழர்களின் கபறு தஜ்லா நதி யின் கரையில அடக்கப்பட்டுள்ளது் பக்கத்தில் தஜ்லாந்தி ஓடுவதால் வெள்ளம் வரும் போது தண்ணீர் இரு கறுகளிலும் ஊடுருவி வெளியாகிறது.

இந்நிலையில் முதலாம் பைசல் மன்னர் மற்றும் இராக் தலைமை முஃப்தீ (நீதிபதி) ஆகியோர் தனித்தனியாக கண்ட கனவில் மேற்படி இருநபித் தோழர்கள் தோன்றி "எங்களின் கப்றுகளை இடம் மாற்றங்கள் " என்று கூறினார்கள்

தேதி குறிக்கப்பட்டு எல்லா நாட்டு மதத்தினர் கள் வெளிநாட்டு தூதுவர்கள் என சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் கூடினார்கள்

ஹிஜ்ரி 1350 துல்ஹஜ் கடைசியில் 1932 வருஷம் ஏப்ரல் மாதம் ஒரு திங்கட் கிழமை பகல் 12 மணிக்கு மேற்கண்ட எல்லோர் முன்னிலையிலும் புனித உடல்கள் கிரேன் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது

மன்னர் பைசல், தலைமை முஃப்தி, துருக்கி அமைச்சர் முக்தார் பட்டத்து இளவரசர் பாரூக் ஆகியோர் புனித உடல்களை மிக மரியாதையுடன் சுமந்து வந்து கண்ணாடி பேழைகளில்  வைத்தார்கள்

கஃபன் துணி மட்டுமல்ல அவர்களின் தாடி முடி உட்பட நல்ல நிலையில் இருந்தது
பொதுவாக இறந்ததும் 6 மணி நேரத்திற்குள் கண் பார்க்கும் சக்தியை முழுமையாக இழக்கும் ஆனால் இருவரின் கண்களும் ஒளி வீசிக்கொண்டிருந்ததைக் கண்ட ஜெர்மன் கண் டாக்டர் அந்த உடனே தலைமை முஃப்தியின் கரம் பற்றி இஸ்லாத்திற்கு ஏற்கிறார் இவரைத் தொடர்ந்து நிறைய பேர்கள் நபித்தோழர்களின் உடலின் முன்பு இஸ்லாத்தில் கூட்டம் கூட்டமாக நுழைகிறார்கள்

மக்களின் பார்வைக்காக உடல்களின் கபனை விலக்கி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது பெண்களும் ஜியாரத்திற்கு அனுமதி அளித்தனர்

உலக நாட்டு தூதுவர்கள் மன்னர்கள் உலமாக்கள் தங்களின் தோளின் மீது சுமந்து செல்ல ... -விமானங்கள் மூலம் பூக்களை வழி நெடுக வாரி இறைத்தன

சுமார் 4 மணி நேரம் நடந்தே புனித உடலை சுமந்து கொண்டு செல்ல லட்சபோ லட்சம் மக்கள் பார்வையிட "சல்மான் பாக்" இடத்தை அடைந்தது "அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் தக்பீர" முழக்கம் விண்ணை பிளந்தது

உயிருள்ள இரு தியாகிகளின் புனித உடல்கள் ஹஜரத் சல்மான் பார்ஸி (ரலி) அவர்களின் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

பக்தாத் திரையரங்ககுகளில் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து காட்டப்பட்டு ....வெளியில் வரும் யாத்திரிகர்கள் பார்த்து  செல்ல அனுமதிக்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த அநேகர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டே இருந்தனர்

தகவல் : மஆரிஃப் மாத இதழ் ஜனவரி 1979 ஆஜம்கட்   உ.பி

ஆதாரம : ஏக் - ஆலம் - தாரீக் (ஓர் உலக வரலாறு)

ரஹ்மத் ராஜகுமாரன்

தொடர் பயணமும்

No comments:

Post a Comment