Thursday, 13 April 2017

அந்நிய சமூகத்துடன் அழகியஅணுகுமுறை

**

======================

*எதிரிகளுடன்*
*ஒப்பந்தமும்....*
*விட்டுக் கொடுப்பும்*

தனக்கும் தன்னை
இறைத்துாதராக
ஏற்றுக்
கொண்டோருக்கும்
அநீதி இழைத்து,
பொருளாதாரப்
பறிமுதல் செய்து,
நாடுகடத்தி, பெரும்
அக்கிரமம் மேற்கொண்ட
எதிரிகளுடன்
நபியவர்கள் நடந்து
கொண்ட முறைக்கு
ஹுதைபியா
உடன்படிக்கையும்,
அப்போது நடந்த
நிகழ்வுகளும் மிகச்
சிறந்த எடுத்துக்
காட்டாகத் திகழ்கின்றன.

வரலாற்றுக் காலம்
முதல் கஃபா பொது
உடமையாகவே
இருந்துவந்தது.
யாரும் உம்ரா -  ஹஜ் வணக்கம் செய்வது
தடுக்கப்படவில்லை.
அந்தவகையில், ஹிஜ்ரி 6ம் ஆண்டு 360 மைல்களுக்கு
அப்பாலுள்ள
மதீனாவிலிருந்து, நபி صلى الله عليه وسلم  அவர்கள் தமது
தோழர்களுடன் உம்ரா
எனும் வணக்கத்தை
நிறைவேற்ற மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்.
யாரையும் தடுக்காத
மக்கத்துவாசிகள்,
நபிகள் நாயகத்தை
மட்டும் ஹூதைபிய்யா
என்ற இடத்தில் வைத்துத்
தடுத்தார்கள்.
ஆள்பலமும்
அதிகாரபலமும் இருந்த நபி صلى الله عليه وسلم  அவர்கள் பலப்
பிரயோகம் செய்து,
தான் பிறந்த
மக்காவுக்குள் தன்னால் நுழைய முடியும்!
என்றாலும்...
எல்லா வகையிலும் விட்டுக் கொடுத்து,
நிதானமாக,
தொலை நோக்கோடு,
எதிரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, இரத்தம் சிந்துவதைத்
தவிர்த்து
மதீனாவிற்குத்
திரும்பி வந்தார்கள்.
பலம் பொருந்திய
பெரும்பான்மை
சூழ்நிலையிலும்
பலவீனமாக இருந்த
சிறுபான்மை
சூழ்நிலையிலும்
சமாதானத்தையே
விரும்பினார்கள்.
தமக்கு
வன்கொடுமைகள்
செய்த எதிரிகளை பழி
தீர்க்க தகுந்த சந்தர்ப்பம் கிடைத்தும்
மன்னித்துவிடுவது
இந்த மாமனிதரின் மதம் கடந்த மனித
நேயத்திற்குச் சான்றாக
அமைந்துள்ள
வரலாற்றை புகாரி
2731, 2732 ஆகிய
ஹதீஸ்களில் காணலாம்.

*பிற மதத்தினருக்கு*
*பொருளாதார உதவி!*

வசதி படைத்தோருக்கு
ஜகாத் எனும்
ஏழைக்கான தர்மம்
இஸ்லாத்தில் கட்டாயக்
கடமையாக்கப் பட்டுள்ளது.
முஸ்லிம்
செல்வந்தர்களிடம்
திரட்டப்படும் இந்த நிதி
எட்டு விதமான
பணிகளுக்குச்
செலவிடப்பட
வேண்டும். முஸ்லிம்
அல்லாதவர்களுடன்
நல்லிணக்கம்
வளர்வதற்காக
அவர்களுக்காக
வழங்குவதும்
அப்பணிகளில் ஒன்று என
அல்குர்ஆன்
கூறுகிறது.

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
(அல்குர்ஆன் : 9:60)

மாற்று மதத்தினருக்கு
பொருளாதார உதவிகள்
செய்வதை இஸ்லாத்தின்
ஐந்து கடமைகளில்
ஒன்றாக ஆக்கியுள்ளது,
இஸ்லாம்.
இஸ்லாம் தவிர்ந்த
வேறு எந்த மதத்திலும்
பிற மதத்தினருக்கு
உதவுவது மார்க்க
ரீதியாக கட்டாயக்
கடமையாக
ஆக்கப்பட்டதில்லை. எந்த மதத்திலும் இத்தகைய ஒரு
சட்டத்தைக்
காணவே முடியாது.

நபி صلى الله عليه وسلم  அவர்கள் தனது
இஸ்லாமிய ஆட்சியில்
சிறுபான்மையாக
வாழும்
முஸ்லிமல்லாதவர்களுக்கு  முஸ்லிம்
அரசின்
கருவூலத்திருந்து
வழங்கினார்கள்.

ஒரு மனிதர், நபி صلى الله عليه وسلم 
அவர்களிடம் வந்து
இஸ்லாத்தின் பெயரால்
உதவி கேட்டார். இரு
மலைகளுக்கிடையே
அடங்கும் அளவுக்கு
அவருக்கு ஆடுகளை
வழங்கினார்கள். அவர்
தனது சமுதாயத்திடம்
சென்று 'என்
சமுதாயமே! நீங்கள்
இஸ்லாத்தை ஏற்றுக்
கொள்ளுங்கள்!
ஏனெனில், நிதி
நெருக்கடியைப் பற்றி
அஞ்சாமல் முஹம்மத்
வாரி வழங்குகிறார்'
எனக் கூறினார்.
நூல் :
முஸ்லிம் 4627

முஸ்லிம்கள்
பெரும்பான்மையாக,
முஸ்லிமல்லாத
மக்களின் தயவு
தேவையற்ற நிலையில் இருந்த
வேளையில்,
முஹம்மத் நபி صلى الله عليه وسلم அவர்கள்
முஸ்லிம்களிடம்
வசூலிக்கப்படும் ஜகாத்
நிதியிலிருந்து
முஸ்லிமல்லாத
மக்களுக்கு வாரி
வழங்கினார்கள் என்றால் அந்த
மாமனிதரின் மதம்
கடந்த
மனிதாபிமானத்தை
தெளிவாக
அறியமுடிகிறது!

*அந்நிய அண்டை*
*வீட்டாருடன்* *நல்லுறவு!*

இஸ்லாத்தை ஏற்காத
பிற மதத்தவர்கள் நமது அண்டை வீட்டில்
வாழ்ந்தால் அவர்களுடன்
மிக அன்பாக நடக்க
வேண்டும் என்று
நபியவர்கள் போதனை
செய்தமை அவர்களின்
மதம் கடந்த மனித
நேயத்திற்குச் சான்றாக
அமைந்துள்ளது.

அப்துல்லாஹ் பின்
அம்ரு رضي الله عنه என்ற
நபித்தோழரின் வீட்டில்
ஒரு ஆடு
அறுக்கப்பட்டது. அவர்
வீட்டுக்கு வந்தவுடன்
'நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக்
கொடுத்தீர்களா? நமது
அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக்
கொடுத்தீர்களா?' என்று கேட்டார்கள். 'அண்டை
வீட்டாரை எனது
வாரிசாக அறிவித்து
விடுவாரோ என்று
நான் எண்ணும்
அளவுக்கு ஜிப்ரீல் عليه السلام அவர்கள்
எனக்கு வலியுறுத்திக்
கொண்டே இருந்தார்'
என்று முஹம்மத் நபி صلى الله عليه وسلم   அவர்கள்
கூறியதாகவும்
அப்போது
தெரிவித்தார்.
நூல் : திர்மிதி 1866

முஹம்மத் நபி صلى الله عليه وسلم அவர்களின்
நெருங்கிய
தோழர்களில் ஒருவர்
அப்துல்லாஹ் பின்
அம்ரு رضي الله عنه
. அவர் அவரது
அண்டை வீட்டு
யூதருக்கும் தனது
வீட்டில் அறுக்கப்பட்ட
ஆட்டிறைச்சியை வழங்க வேண்டும்
என்று
வலியுறுத்துகிறார்.
இதற்கு நபி صلى الله عليه وسلم அவர்களின்
போதனையே காரணம்
எனவும் கூறுகிறார்.

அந்நிய மதத்து அண்டை
வீட்டாருடனும்
நல்லுறவைப்
பேணுமாறு
வலியுறுத்திய
முஹம்மத் நபி صلى الله عليه وسلم அவர்கள் மத
அடிப்படையில்
யாருக்கும் பாரபட்சம்
காட்டக் கூடாது என்ற
பாடத்தை தனது
தோழர்களக்கும் கற்றுக் கொடுத்தார்கள்.
அதை அவர்களும்
கடைப்பிடித்துள்ளார்கள்.
இவ்வாறான
நடைமுறைகள்
இலங்கையில்
முஸ்லிம்களால் ஓரளவு
பேணப்படுகிறது. அந்த
நடைமுறை சில
பகுதிகளில் மாற்று
மதத்தினரை ஈர்த்தும்
உள்ளது.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு....

S. S. ஷேக் ஆதம் தாவூதி

கடலங் குடி.

No comments:

Post a Comment