Thursday, 27 April 2017

ஜுபைதா அம்மையாரின் சுவன வீடு

சூஃபியாக்கள் 5

ஹஜரத் புஹ்லூல் தானா (ரஹ்) அவர்கள் ஒரு  நிறைவான (மஜ் தூப்) தீவிர இறை நேசராக இருந்தார்கள் கலீஃபா ஹாரூன் ரஷீத் காலத்தில் பாக்தாத்தில் இருந்து வந்தார்கள்

ஒரு நாள் மாலை அந்தி சாயும் நேரத்தில் கலீஃபா ஹாரூன் ரஷீத் தன் மனைவி ஜுபைதா காத்தானுடன் டைகரீ்ஸ் நதி (தஜ்லா நதி) நதிக்கரையோரம் உலாவச் சென்றார் அங்கு புஹ்லூல் தானா (ரஹ்) அவர்கள் ஈரமான ஆற்று மண்ணில் மணல் வீடுகள் கட்டிக் கொண்டு இருந்தார்கள்

அதைப் பார்த்த ஜூபைதா "பாபா , தாங்கள் என்ன செய்து கொண்டிடுக்கிறீர்கள் ? "

"நான் சுவனத்தில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன்."

" இந்த வீடுகளைத் தாங்கள் விற்பனை செய்வீர்களா ? "

. "ஆமாம் ' ஒரு வீட்டின் விலை உமது கழுத்தில் கிடக்கும் முத்துமாலை "

உடனே ஜூபைதா முத்துமாலையை கழற்றிக் பாபாவிடம் கொடுத்து விட்டார்.

புஹ்லூல் மாலையை வாங்கிக் கொண்டு  "செல்லுங்கள் இதுதான் உம்முடைய சுவனமாளிகை' " என்றார்கள்

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கணவர் ஹாரூன் ரஷீத் தன் மனைவியிடம் "ஒரு மஜ்தூபிடம் விலை மதிப்பற்ற உன்னுடைய முத்து மாயையை கொடுத்து விட்டாயே நீ ஒரு சரியான முட்டாளாக இருக்கிறாய் " என்று சற்று கோபப்பட்டார்

அன்று இரவு உறக்கத்தில் கலீஃபா ஹாருன் ஒரு கனவு கண்டார் சொர்க்கத்தில் அவர் உலாவிக் கொண்டிருக்கும் போது மிக உயரமான அழகான முத்துக்களால் ஆன ஒரு மாளிகையைக் கண்டார் அதன் அழகில் அவர் அப்படியே சொக்கி நின்று விட்டார் அதன் வாயிலில்  "ஜூபைதா காத்தூன் " என்று பொறிக்கப்பட்டிருந்தது

ஹாரூன் , அட நம்ம மனைவியின் மாளிகைதானே என்று உள்ளே நுழைய முயற்சிக்கும் போது ஒரு வானவர் அவரைத் தடுத்து " இது ஜூபைதா காத்தூனுடைய மாளிகை  நேற்றுதான் தம்முடைய முத்துமாலையை விலையாகக் கொடுத்து வாங்கிக்கிறார் அவர் இதனுள் நுழையாதவரை வேறு யாருக்கும் நுழைய அனுமதி இல்லை" என்றார்

ஹாரூன் ரஷீத் திடுக்கிட்டு எழுந்து டைக்ரீஸ் நதிக் கரைக்கு  விரைந்தார் அங்கு புஹ்லூல் தானா அவர்கள் நிறைய வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்தார் ஹாரூன் அவரிடம் "பாபா எனக்கும் ஒரு வீடு தாருங்கள் அதற்குரிய தொகையைக் கொண்டு வந்திருக்கிறேன் என்றார்.

புஹ்லூல் புன்னகைத்தபடி "சுவனத்தில் எவர்கள் முத்து மாளிகையைக் காணவில்லையோ அவர்களுக்கே நாம் இந்த வீடுகளை விற்பனை செய்வோம் எவர்கள் சுவனத்து முத்து மாளிகையைக் கனவில் கண்டார்களோ அவர்களுக்கு நாம் ஒருபோதும் இந்த வீடுகளை விற்பதில்லை எனக் கூறி விட்டு சென்று விட்டார்.

"விண்ணிலும் மண்ணிலும் வலிமார்களுக்கு எந்த தடையும் கிடையாது .அவர்கள் விரும்பினால் (மரணத்திற்குப் பின்னரும்) தம் சொந்த உடலுடன் இப்பூமிக்கு வர முடியும்

- கெளதுல் அஃலம் அப்துல் காதிர் ஜிலானி.

ரஹ்மத் ராஜகுமாரன்

1 comment:

  1. இது முழுக்க முமுக்க கட்டுக்கதை குர்ஆனில் சூரா யாஸீன் எடுத்து படிக்கவும் அதில் இறைவன் கூறுவதை கேளுங்கள் இறந்தவர் மறுபடியும் பூமிக்கு போக அணுமதி கேட்டு இறைவன் மறுக்கும் சம்வம் இந்த கதை கட்டுக்கதை....

    ReplyDelete