*அறிஞர் ஸஅதீ என்பவரின் மகன் இரவின் கடைசி நேரத்தில் இனிய குரலில் குர்ஆன் ஓதும் பழக்கமுடையவராய் இருந்தார்.*
*அவரின் தந்தை ஸஅதீ அவரருகே அமர்ந்து ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார்.*
*ஒரு நாள் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போது, நான் எவ்வளவு இனிமையாக குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கிறேன்.*
*நீங்களும் எவ்வளவு அருமையாக அருகே அமர்ந்து ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். *
*தூங்கிக் கொண்டிருக்கும் தம் குடும்பத்தார்களை நோக்கி*
*பாக்கியம் கெட்டவர்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள்” என்றார்.*
*உடனே அறிஞர் ஸஅதீ தம் மகனை நோக்கி*
*குர்ஆனை மூடிவிட்டு, போய் தூங்கு.*
*பிறரை குறை கூறுகிற நோக்கில் நீ குர்ஆனை ஓதினாய் என்றால் ஓதிய நன்மை உன்னை சுவனத்தில் சேர்க்கும்முன்,*
*நீ கண்ட குறை உன்னை அதிவேகத்தில் நரகில் தள்ளி விடும் என்று கண்டித்தார்கள்.*
No comments:
Post a Comment