#இஸ்லாத்தின்__ஜனாதிபதி
அமீருல் முஃமினீன் ஹழ்ரத் அலீ ரலியல்லாஹூ தலா அன்ஹூ அவர்கள் ஆட்ச்சி காலத்தில் பயணி ஒருவர் தன் ஒட்டகத்தில் கூஃபா நகரை நோக்கி பயணம் செய்து வந்தார். வரும் வழியில் அவரின் கோவேறு கழுதை யும் இன்னும் அவரது சாமான்களும் தொலைந்து விடவே உணவு ஏதுமின்றி சிரமமான நிலையில் கூஃபா நகருக்குள் நுழைந்தார்.
இங்கே இஸ்லாமிய கலீபா ஒருவர் இருக்கிறார் அவரிடம் உதவி தேடிச் செல்லுங்கள் அவர் உதவி செய்யும் பண்புடையவர் என ஒருவர் அப்பிரயாணியிடம் கூறினார்...
காலீஃபா ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்களின் இல்லத்தை அப்பிரயாணி அடைந்து அவர்களின் மகனார் ஹூஸைன் ரலியல்லாஹூ தலா அன்ஹூ அவர்களைச் சந்தித்து தனது நிலையை கூறினார் தனது தந்தை வெளியே சென்றிப்பதாகவும் அவர் வரும்வரை பள்ளிவாசலில் இருங்கள். உங்களுக்காகா உணவு கொண்டு வருகிறேன் எனக்கூறி, ஹூஸைன் ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் வீட்டினுள் சென்றார்கள்,
அப்பிரயாணி பள்ளிவாசலுக்கு சென்று அங்கே பசியோடு அமர்ந்திருந்தார் சிறிது நேரத்தில் பள்ளிவாசலின் மறுபக்கத்தில் ஒரு நபர் காய்ந்த ரொட்டியை தண்ணீரில் நனைத்து சாப்பிடுவதை அப்பிரயாணி பார்த்து அவரும் தன்னைபோல் ஒரு பிரயாணி என்றே கருதினார்,
சிறிது நேரத்தில் ஹூஸைன் ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் உணவுடன் வந்து வெளியூர் பயணியை சாப்பிடுங்கள் என்று கூற எதிர்பக்கம் பாருங்கள் ஒரு ஏழை சால்னா (குழம்பு&குருமா) கூட இல்லாமல் தண்ணீரில் நனைத்துச் சாப்பிடுகிறார் பாவம். அவரையும் இங்கே அழையுங்கள் சேர்ந்து சாப்பிடட்டும் என்றார் பயணி
எதிர் திசையை நோக்கிய ஹூஸைன் ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் சிரித்தவர்களாக அவர் வேறு யாருமல்ல. நீங்கள் தேடிவந்த கலீபாவும் எனது தந்தையுமான ஹழ்ரத் அலீ ரலியல்லாஹூ தலா அன்ஹூ அவர்கள்தான் எப்போதும் அவர்கள் வழமையாக உண்ணும் உணவைத்தான் இப்போது சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள் இதைவிடச் சிறந்த உணவை அவர்கள் உண்பதில்லை என ஹூஸைன் ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் பதில் கூறினார்கள்,
மாபெரும் இஸ்லாமிய பேரரசின் தலைவராக இருந்தும் அவர்கள் உண்பதோ காய்ந்த ரொட்டியா? என நினைத்து அந்தப் பிரயாணி ஆச்சரியமடைந்தார்
அது பொற்காலம் நீதி நெறி தவராது ஆட்ச்சி செய்த உத்தமர்களின் பொன்னான. காலமல்லவா,
பிறகு ஹழ்ரத் அலீ ரலீயல்லாஹூ தலா அன்ஹூ அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது " ஒருநாள் கடைத்தெருவிற்குச் சென்றார்கள் ' அங்கு ஒரு இஸ்லாமல்லாத ஒருவர் போரில் அணியும் உருக்குச் சட்டைகளை விற்பனை செய்துகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவற்றில் காணாமல் போன தங்களுடைய உருக்குச் சட்டையும் இருக்கக் கண்டு அதனை அடையாளம் கண்டுகொண்டார்கள் .
ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் அந்த நஸரானியிடம் இது என்னுடைய உருக்கு சட்டையாகும். எனக்கும் உமக்குமிடையே உள்ள இந்த வழக்கில் முஸ்லிம்களின் நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என்று கூறி அவரை தம்மோடு அழைத்துச் சென்றார்கள். அன்று முஸ்லிம்களின் நீதிபதியாக நபித்தோழர் ஷுரைஹ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இருந்து வந்தார்கள். ஹழ்ரத் அலீ ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் ஹழ்ரத் ஷுரைஹ் ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்களிடம் தீர்ப்பு வேண்டி நின்றார்கள்
ஷுரைஹ் ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் ஜனாதிபதியான ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்களைக் கண்டதும் " தமது தீர்ப்பளிக்கும் ஆசனத்தை விட்டெழுந்து " அவ்விடத்தில் ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்களை உட்கார வைக்க முயண்டார்கள் அதற்கு ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் " நான் இப்போது முஸ்லிங்கலின் தலைவராக உம்மிடத்தில் வரவில்லை நீதிமன்றத்திற்கு வழக்கு கொண்டு வந்திருக்கிறேன் எனக் கூறி " என்னுடைய வழக்காளியுடனே நிற்பேன் என ஆசனத்தில் அமர மறுத்துவிட்டார்கள்.
நீதிபதி ஷுரைஹ் ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் " ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்களிடம் " தாங்கள் கொண்டுவாந்துள்ள. வழக்கு என்ன? என்று விசாரித்தார்கள். அதற்கு ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் " இது என்னுடைய. உருக்குச் சட்டை"சிலநாட்களுக்கு முன் என்னிடமிருந்து காணாமல் போய்விட்டது இப்போது அதை இந்த மனிதரிடம் கண்டேன் ஆகவே என் உருக்குச் சட்டையை என்னிடம் ஒப்படைக்க வேண்டுகிறேன் என்று வழக்கை கூறினார்கள்.
நஸரானியே நீர் என்ன சொல்கீர்கள்? என்று நீதிபதி கேட்டார் அதற்கு அந்த மனிதர் ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் பொய் சொல்கிறார் இந்தா உருக்கு சட்டை என்னுடையதுதான் என்று கூறினார்,
அப்போது நீதிபதி ஷுரைஹ் ரலியல்லாஹு தலா அன்ஹு அவகள் ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்களை நோக்கி உங்ளுடைய உருக்குச் சட்டைதான் இது என்பதற்குச் சாட்சி இருக்கிறதா? என்று கேட்டார் அதற்கு ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் என் மகன் இமாம் ஹஸன் ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்களும் என்னுடைய அடிமையும் அதற்கு சாட்சி என்று பதிலுரைத்தார்கள்,
அதற்கு நீதிபதி அவர்கள். மகனின் சாட்சி தந்தைக்கு செல்லுபடியாகாது என்று பதிலுரைத்துவிட்டு முஸ்லிம்களின் தலைவரே! இந்த மனிதரிடமிருந்து இந்த உருக்குச் சட்டையை தாங்கள் பெற எவ்வித வழியையும் நான் காணவில்லை என்று கூறினார்.
அதைக் கேட்ட ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் ஷுரைஹ் ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் உண்மை கூறிவிட்டார் என்றார்கள் . இதனைக்கேட்ட அந்த மனிதர் நிச்சயமாக இது நபிமார்களுடைய தீர்ப்பைபோல் உள்ளது.
முஸ்ஸிங்களின் தலைவரான ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் உங்களிடம் வழக்கு கொண்டு வந்திருக்கிறார். போதிய சாட்சிகள் இல்லாததால் ஜனாதிபதி க்கு எதிராக நீதிபதி தீர்ப்பு கூறுகிறார் இதுவே உண்மையான சாட்சி எனவே நான் உண்மையைக் கூறிவிடுகிறேன் இது என்னுடைய உருக்குச் சட்டை இல்லை அது ஜனாதிபதி ஹழ்ரத் அலி ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்களுடையது தான் ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்களுடையதுதான் ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் தங்கள் பழுப்பு நிற ஒட்டகையில் செல்லும்பொது நான் பின் தொடர்ந்து சென்றேன் அப்போது அவர்களிடமிருந்து இந்த உருக்குச் சட்டை கீழே விழுந்துவிட்டது அதை அவர்கள் கவனிக்கவில்லை ஆகவே நான் இதனை எடுத்து வைத்துக்கொண்டேன்.
இப்போது இதனை ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்களிடமே ஒப்படைத்து விடுகிறேன்,
மேலும் முஸ்லிம் ஜனாதிபதி என்றும் பாராமல் நீதியோடு நடந்து கொண்டீர்கள்,
ஆகவே நான் இஸ்லாத்தில் இனைந்து விடுகிறேன் என்று கூறி இஸ்லாத்தில் சேர்ந்தார்
இதைக்கண்ட அலீ ரலியல்லாஹு தலா அன்ஹு அவர்கள் நீர் இஸ்லாத்தை தழுவியதால் உமக்கே இந்த உருக்குச்சட்டையை அன்பளிப்பாகத் தந்துவிடுகிறேன் என்று கூறினார்கள்
நம்முடைய முன்னோர்களான நபித்தோழர்கள் நடந்துகொண்ட விதம் பெரும் படிப்பினைக்குரியது.
இன்று நாம் வாழும் காலம் ஐயாமுல் ஜாகிலுடைய. காலமாய் உள்ளது ...
ஆகினும் நல்லோர்களுக்கு
வல்ல ரஹ்மான் என்றென்றும் துனைபுறிவானாகா எல்லாம் வல்ல இறைவனே போதுமானவனாக இருக்கின்றான்...
No comments:
Post a Comment