Tuesday, 21 March 2017

சூனியம் என்பது பாதிப்பை ஏற்படுத்தும்

[3/22, 1:19 AM] ‪+91 84288 75502‬: சிஹ்ர் என்பது பல பொருள் கொண்ட சொல்

ஏராளமான அர்த்தங்களைக் கொண்ட சொற்கள் அரபுமொழியில் அதிகம் உள்ளது. இதற்கு உதாணரமாக அஸ்ஸலாத், சஜ்தா, அல்அய்ன், உம்மத் போன்ற சொற்களைக் கூறலாம்.

பொதுவாக صالَة ஸலாத் என்ற சொல் பிரார்த்தனை செய்தல் என்ற பொருளுக்குரியது. ஆனால் இது இடம் பொருள் ஏவலை கவனித்துதொழுதல் கருணை காட்டுதல் பிரார்த்தனை செய்தல் என்ற பொருள்களிலும் வரும்.

ساج د சுஜுத் என்ற சொல்லுக்கு வணங்குதல் என்ற பொருளும் கீழ்படிதல் என்ற பொருளும் உள்ளது. அல்லாஹ்வுக்கு சஜ்தா செய்யுங்கள் என்றால் தலையை தரையில் வைத்து அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்று பொருள். யாராவது ஒரு மனிதருக்கு சஜ்தா செய்யுங்கள் என்றால் அவருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று பொருள்.

العاي அல் அய்ன் என்ற சொல் கண் நீரூற்று இன்னும் பல அர்த்தங்களிலும் பயன்படுத்தப்படும்.

குர்ஆனில் أما உம்மத் என்ற சொல் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 11 : 8 வது வசனத்தில் உம்மத் என்ற சொல் தவணை அவகாசம் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது. 16 : 120 வது வசனத்தில் தலைவர் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது. 43 : 22 வது வசனத்தில் கொள்கை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 28 : 23 வது வசனத்தில் பலர் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது. 7 : 159 வது வசனத்தில் கூட்டத்தினர் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

சில நேரங்களில் ஒரே சொல்லுக்கு முற்றிலும் மாறுபட்ட நேர் எதிரான பொருள்களும் வரும். القاوئ அல்குர்உ என்ற சொல் பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் காலத்தை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுவது போல் மாதவிடாய் வராமல் தூய்மையாக இருக்கும் காலகட்டத்தையும் குறிக்கவும் பயன்படுத்தப்படும். الشافق ஷஃபக் என்ற சொல்லுக்கு வெண்மை என்ற பொருள் இருப்பது போல் சிவப்பு என்ற பொருளும் உள்ளது. الجا அல்ஜவ்ன் الصاوي அஸ்ஸரீம் என��
[3/22, 1:20 AM] ‪+91 84288 75502‬: அல்ஜவ்ன் الصاوي அஸ்ஸரீம் என்ற சொல்லுக்கு வெண்மை என்று பொருள் இருப்பது போல் கருப்பு என்ற பொருளும் உள்ளது.

இதனை அரபு மொழியில் اللفاظ المشاترك (பல பொருள்கொண்ட சொல்) என்று கூறுவார்கள். பேச்சின் முன் பின் போங்கினைக் கொண்டும் இடம் பொருள் ஏவலை கவனித்தும் எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதை என்பதை அரபுமொழி அறிவுள்ளவர்கள் எந்தவித குழப்பமும் இல்லாமல் சாதாரணமாக புரிந்துகொள்வார்கள். அரபு இலக்கியத்தில் இதுவும் ஒரு அம்சமாக பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு ஒரு சொல் வெவ்வேறு அர்த்தங்ளில் பயன்படுத்தப்பட்டால் ஒரு அர்தத்தை மட்டும் அதற்கு கொடுத்து அந்த வார்த்தைக்கு வேறு அர்த்தங்களே இல்லை என்று மறுக்கக்கூடாது. எந்த இடத்தில் எந்த அர்த்தம் நாடப்படுகிறதோ அந்தப் பொருளையே கொடுக்க வேண்டும்.

இது போல் பல அர்த்தங்களை உள்ளடக்கிய சொல் சிஹ்ர் என்ற சொல்லாகும். சிஹ்ர் என்றச் சொல்லை நாம் தமிழ் மொழியில் குறிப்பிடும் போது சூனியம் என்று குறிப்பிடுகிறோம். சூனியம் என்ற தமிழ் சொல்லை வைத்துக்கொண்டு சிஹ்ருக்கு விளக்கம் தரக்கூடாது. சிஹ்ர் என்பதற்கு அரபு மொழியில் கூறப்பட்ட அர்த்தங்களைக் கொண்டே விளக்கம் தர வேண்டும்.

ஆனால் பீஜே சிஹ்ருக்கு சூனியம் என்ற தமிழ் சொல்லை வைத்துக்கொண்டு சூனியம் என்றால் பூஜியம் ஒன்றுமில்லை என்று பொருள் எனக் கூறி சிஹ்ரை மறுக்கிறார். இது தவறான வழியாகும். சிஹ்ர் என்ற சொல் பல அர்த்தங்களில் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
[3/22, 1:20 AM] ‪+91 84288 75502‬: சிஹ்ர் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது என்ற உண்மையை முதல் மக்களுக்கு சொல்ல வேண்டும். இந்த உண்மையை மக்கள் அறியாத காரணத்தால் சிஹ்ர் விசயத்தில் சரியான தெளிவில்லாமல் குழம்புகின்றனர். மேலும் ஒரு அர்த்தத்தை வைத்து மற்ற அர்த்தங்களை மறுக்கிறார்கள். இது பற்றி இமாம் ஷாஃபி அவர்கள் அல் உம்மு என்ற தன்னுடைய நூல் கூறுவதைப் பாருங்கள்.

الأم ـ للشافعي (1/ 256)

قَالَ الشّاَفعيُّ : وَالسِّحْرُ اسْمٌ جَامِعٌ لَمَعَانٍ مُخْتَلِفَةٍ

சிஹ்ர் என்பது வெவ்வேறான பல அர்த்தங்களை உள்ளடக்கிய சொல்லாகும்.

நூல் : அல் உம்மு (பாகம் 1 பக்கம் 256)

சிஹ்ர் என்ற சொல் வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டாலும் அதனுடைய அசல் அர்த்தம் திருப்புதல் மாற்றுதல் என்பதாகும். அரபுச் சொற்களின் அர்த்தங்களை விவரிக்கும் பிரபல்யமான அரபு நூலான சானுல் அரப் என்ற நூல் இந்த சொல்லுக்குரிய ஏராளமான அனைத்து

அர்த்தங்களையும் பட்டியடுகிறது. சிஹ்ர் என்ற சொல்ன் மூலப் பொருள் குறித்து பின்வருமாறு விவரிக்கின்றது.

لسان العرب (4/ 348)

قال الأَزهري وأَصل السِّحْرِ صَرْفُ الشيء عن حقيقته إِلى غيره

ஒரு பொருளை அதன் எதார்த்தத்திருந்து மற்ற நிலைக்கு மாற்றுதல் என்பதே சிஹ்ர் என்ற சொல்ன் அசல் அர்த்தமாகும்.

நூல் : சானுல் அரப் (பாகம் 4 பக்கம் 348)
[3/22, 1:21 AM] ‪+91 84288 75502‬: அல்லாஹ் இந்த அசல் அர்த்தத்தில் இந்த சொல்லை பின்வரும் வசனத்தில் பயன்படுத்தியுள்ளான்.

قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلَا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ (88) سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّى تُسْحَرُونَ (89) 23

பாதுகாப்பவனும் பாதுகாக்கப்படாதவனும் அனைத்து பொருட்களின் அதிகாரத்தை தன்வசமே வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்) என்று (நபியே) கேளுங்கள். அவர்கள் அல்லாஹ்விற்கே (அதிகாரம்) உள்ளது என்று கூறுவார்கள். அப்படியானால் ஏன் திசைதிரும்புகிறார்கள்? என்று கேட்பீராக.

அல்குர்ஆன் (23 : 89)

இங்கே அல்லாஹ் சரியான பாதையை விட்டும் தவறான பாதைக்கு திரும்புவதை சிஹ்ர் என்ற வார்த்தையில் குறிப்பிடுகிறான். கவர்ச்சியாக பேசி மக்களை திசைதிருப்ப முடியும் என்பதால் பேச்சிலும் சிஹ்ர் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

5767حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ قَدِمَ رَجُلَانِ مِنْ الْمَشْرِقِ فَخَطَبَا فَعَجِبَ النَّاسُ لِبَيَانِهِمَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ الْبَيَانِ لَسِحْرًا أَوْ إِنَّ بَعْضَ الْبَيَانِ لَسِحْرٌ رواه البخاري

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

இரண்டு மனிதர்கள் (மதீனாவுக்குக்) கிழக்கி-ருந்து வந்து உரையாற்றினார்கள். அவ்விருவரின் சொற்பொழிவைக் கேட்டு மக்கள் வியந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சில சொற்பொழிவில் சிஹ்ர் (கவர்ச்சி) உள்ளது' அல்லது "சில சொற்பொழிவுகள் சிஹ்ராகும் (கவர்ச்சியாகும்)' '' என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (5767)
[3/22, 1:24 AM] ‪+91 84288 75502‬: வித்தை செய்தல் ஏமாற்றுதல் என்ற பொருளும் இச்சொல்லுக்கு உள்ளது. மோசமாக சமைக்கப்பட்டு மாற்றமடைந்த உணவுக்கு மஸ்ஹுரான உணவு என்று சொல்வார்கள். அதிகமாக மழை பெய்து சேரும் சகதியாக மாறிய நிலத்திற்கும் மஸ்ஹுரான நிலம் என்று கூறுவார்கள். சூனியத்துடைய பாதிப்பின் மூலம் ஆரோக்கியமாக இருந்தவன் உடல் பாதிப்புற்று மாற்றம் அடைந்தால் அதற்கும் சிஹ்ர் என்ற சொல் பயன்படுத்தப்படும்.

لسان العرب (4/ 348)

( * قوله « ابن عائشة » كذا بالأَصل وفي شرح القاموس ابن أبي عائشة ) قال العرب إِنما سمت السِّحْرَ سِحْراً لأَنه يزيل الصحة إِلى المرض

சிஹ்ர் ஒரு மனிதனை ஆரோக்கியத்திருந்து நோயின் நிலைக்கு மாற்றுவதால் இச்செயலையும் சிஹ்ர் என்று அரபுகள் குறிப்பிடுகின்றனர்.

சானுல் அரப் (பாகம் 4 பக்கம் 348)

இன்னும் ஏராளமான அர்த்தங்களும் உண்டு. எனவே மாறுதல் மாற்றுதல் என்ற பொருளை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு அர்த்தங்களிலும் வடிவங்களிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. தலைப்புக்கு அப்பாற்பட்டவை என்பதால் அந்த அர்த்தங்கள் முழுவதையும் நாம் இங்கே குறிப்பிடவில்லை.

இந்தத் தலைப்பில் தொடர்புடைய சிஹ்ரின் இரண்டு அர்த்தங்களைப் பற்றி மட்டும் இனி விரிவாக அறிந்துகொள்வோம்.

மக்கள் ஆரம்ப காலம் முதல் இன்று வரை சிஹ்ர் என்றச் சொல்லை இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தினார்கள். இந்த இரண்டு அர்த்தங்களும் வெவ்வேறானவை.

1. வித்தை செய்து கண்களை ஏமாற்றுதல். இதையும் சிஹ்ர் என்ற வார்த்தையால் குறிப்பிட்டார்கள்.

2. ஒரு மனிதன் சம்பந்தப்பட்ட சில பொருட்களைக் கொண்டு மறைமுகமாக பாதிப்பு ஏற்படுத்துதல். இதனையும் சிஹ்ர் என்ற சொல்லால் குறிப்பிட்டார்கள்.

அவர்கள் இந்த இரண்டிற்கும் சிஹ்ர் என்ற ஒரு சொல்லை பயன்படுத்தினாலும் இரண்டும் வெவ்வேறான விசயங்கள் என்பதை அறிந்தே வைத்திருந்தனர். இந்த இரண்டு அர்த்தங்களையும் சிந்தித்
[3/22, 1:33 AM] ‪+91 84288 75502‬: சிந்தித்துப்பார்த்தாலே பளிச்சென்று இரண்டும் தனித்தனியே வேறுபட்டிருப்பதை யாரும் உணரலாம். இந்த இரு அர்த்தங்களில் ஒன்றை வைத்து இன்னொன்றை மறுக்கக்கூடாது.

வித்தை என்ற பொருளில் சிஹ்ர்

நபிமார்கள் மக்களிடம் அற்புதங்களை செய்து காட்டிய போது அதை மறுத்தவர்கள் நபிமார்களை சாஹிர் என்றும் அவர்கள் செய்த அற்புதத்தை சிஹ்ர் என்றும் கூறினார்கள். நமது கண்களுக்குத் தெரியாத சில தந்திரங்களை செய்து கண்களை ஏமாற்றுகிறார். இது சாதாரண கண்கண்டி வித்தை தானேத் தவிர அற்புதம் கிடையாது என்ற அர்தத்தில் இவ்வாறு கூறினார்கள். இதற்கு பின்வரும் வசனங்கள் சான்றாக உள்ளது.

إِذْ قَالَ اللَّهُ يَاعِيسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِي عَلَيْكَ وَعَلى وَالِدَتِكَ إِذْ أَيَّدتُّكَ بِرُوحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَإِذْ عَلَّمْتُكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنجِيلَ وَإِذْ تَخْلُقُ مِنْ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ بِإِذْنِي فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًا بِإِذْنِي وَتُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ بِإِذْنِي وَإِذْ تُخْرِجُ الْمَوْتَى بِإِذْنِي وَإِذْ كَفَفْتُ بَنِي إِسْرَائِيلَ عَنْكَ إِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنَاتِ فَقَالَ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ(110)5

மர்யமின் மகன் ஈசாவே உனக்கும் உனது தாயாருக்கும் நான் செய்த அருளையும் ரூஹுல் குத்ஸ் மூலம் நான் உன்னை பலப்படுத்தியதையும் நினைத்துப்பார்ப்பீராக. தொட்டிலும் இளமைப் பருவத்திலும் நீர் மக்களிடம் பேசினீர். உனக்கு வேதத்தையும் ஞானத்தையும் தவ்ராத் இன்ஜீலையும் கற்றுக்கொடுத்தேன். என்னுடைய விருப்பப்படி நீர் களிமண்ணில் பறவையின் வடிவத்தைப் போன்று செய்து அதில் ஊதினாய். என்னுடைய விருப்பப்படி அது பறவையாக மாறியது. என்னுடைய விருப்பப்படி நீ குருடரையும் வெண்குஷ்டமுடையவரையும் குணப்படுத்தினீர். என்னுடைய விருப்பப்படி மரணித்தவர்களை உயிர்பித்தீர். நீர் இஸ்ரவேலர்களிடம் தெளிவ��
[3/22, 1:36 AM] ‪+91 84288 75502‬: தெளிவான சான்றுகளுடன் வந்தபோது அவர்களில் நிராகரிப்பாளர்கள் இது தெளிவான (சிஹ்ர்) சூனியமே அன்றி வேறில்லை எனக் கூறிய போது அவர்களிடமிருந்து உன்னை நான் காப்பாற்றினேன் என அல்லாஹ் கூறியதை (நபியே) நினைவூட்டுவிராக.

அல்குர்ஆன் (5 : 110)

وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِنَ السَّمَاءِ فَظَلُّوا فِيهِ يَعْرُجُونَ (14) لَقَالُوا إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَسْحُورُونَ (15) 15

இவர்களுக்காக நாம் வானத்தில் ஒரு வாசலை திறந்துவிட்டு அதில் இவர்கள் ஏறிச்சென்றாலும் எங்கள் பார்வைகள் மயக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் சூனியம் செய்யப்பட்ட (மஸ்ஹுர்) கூட்டமாக இருக்கிறோம் என்று கூறுவார்கள்.

அல்குர்ஆன் (15 : 15)
[3/22, 1:39 AM] ‪+91 84288 75502‬: மூசா (அலை) அவர்கள் செய்த அற்புதங்கள் கண்கட்டி வித்தை தான். அல்லாஹ்வின் உதவியுடன் செய்யப்படும் அற்புதமில்லை என்று மக்களை நம்பவைப்பதற்காகவே ஃபிர்அவ்ன் போட்டிக்கு அழைத்தான். ஆனால் அந்த போட்டியின் இறுதியில் மூசா (அலை) அவர்கள் வித்தை செய்யவில்லை. அற்புதம் தான் செய்தார்கள் என்பது மக்களுக்கு தெளிவானது. ஃபிர்அவ்ன் தோற்றான். மூசா (அலை) அவர்கள் வெற்றிபெற்றார்கள்.

قَالَ إِنْ كُنْتَ جِئْتَ بِآيَةٍ فَأْتِ بِهَا إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ (106) فَأَلْقَى عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُبِينٌ (107) وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ (108) قَالَ الْمَلَأُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ إِنَّ هَذَا لَسَاحِرٌ عَلِيمٌ (109) يُرِيدُ أَنْ يُخْرِجَكُمْ مِنْ أَرْضِكُمْ فَمَاذَا تَأْمُرُونَ (110) قَالُوا أَرْجِهْ وَأَخَاهُ وَأَرْسِلْ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ (111) يَأْتُوكَ بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ (112) وَجَاءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوا إِنَّ لَنَا لَأَجْرًا إِنْ كُنَّا نَحْنُ الْغَالِبِينَ (113) قَالَ نَعَمْ وَإِنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِينَ (114) قَالُوا يَا مُوسَى إِمَّا أَنْ تُلْقِيَ وَإِمَّا أَنْ نَكُونَ نَحْنُ الْمُلْقِينَ (115) قَالَ أَلْقُوا فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ (116) وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ (117) فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ (118) فَغُلِبُوا هُنَالِكَ وَانْقَلَبُوا صَاغِرِينَ (119) وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ (120) قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ (121) رَبِّ مُوسَى وَهَارُونَ (122)7

நீ உண்மையாளராக இருந்தால் நீ கொண்டுவந்துள்ள அற்புதத்தை செய்துகாட்டு என்று ஃபிர்அவ்ன் கூறினான். அப்போது மூசா தன் கைத்தடியை போட்டார். அது தெளிவான பாம்பாக மாறியது. தன் கையை வெளியில் எடுத்தார். அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாகத் தெரிந்தது. ஃபிர்அவ்னுடைய கூட்டத்திருந்த பிரமுகர்கள் இவர் விபரமான சூனியக்காரர். உங்கள் பகுதியிருந்து உங்களை வெளியேற்ற நினைக்கின்றார். நீங்கள் என்ன கட்டளையிடப் போகிறீர்கள்? என்று க�
[3/22, 1:41 AM] ‪+91 84288 75502‬: என்று கேட்டனர். சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்து நாங்கள் வெற்றிபெற்றால் எங்களுக்கு கூஉண்டா? என்று கேட்டனர். ஆம் நீங்கள் நெருக்கமானவர்கள் என்று ஃபிர்அவ்ன் கூறினான். மூசாவே நீர் (முதல்) போடுகிறாயா? அல்லது நாங்களே போடட்டுமா? என்று கேட்டனர். நீங்களே (முதல்) போடுங்கள் என்று கூறினார். அவர்கள் போட்டபோது பிரம்மாண்டமான சூனியத்தை செய்து மக்களின் கண்களை வயப்படுத்தி அச்சத்தை ஏற்படுத்தினார்கள். நாம் மூசாவிடம் உன்னுடைய கைத்தடியை நீர் போடுவீராக. அது அவர்கள் பொய்யாக உருவாக்கியவற்றை விழுங்கிவிடும் என்று கூறினோம். அப்போது உண்மை வெளிப்பட்டது. அவர்கள் செய்தவை அழிந்துபோனது. அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டு சிறுமையடைந்தனர். சூனியக்காரர்கள் மூசா ஹாரூனின் இறைவனான அகிலத்தின் இறைவனை நாங்கள் நம்பிக்கைகொண்டுவிட்டோம் என்று கூறி சஜ்தாவில் விழுந்தனர்.

அல்குர்ஆன் (7 : 122)

கண் கட்டி வித்தையை குறிப்பதற்கு சிஹ்ர் என்ற சொல் பயன்படுத்தப்படும் என்பதற்கு மேற்கண்ட வசனங்கள் ஆதாரமாக உள்ளது.

இந்த சொல்லுக்கு இந்தப் பொருள் இருப்பதை பீஜே மறுக்கவில்லை. இதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த வகையான சிஹ்ரில் இஸ்லாமிய அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கிறது. ஒரு சாரார் நாம் கூறியது போல் இதனை வெறும் கண்கட்டி வித்தை என்று கூறுகின்றனர். இவர்கள் சிஹ்ரில் இரண்டு வகை உள்ளது. ஒன்று வித்தையாகும். இன்னொன்று பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாகும். மேலுள்ள வசனங்கள் முதல் வகை சிஹ்ரைப் பற்றிப் பேசுகிறது என்கிறார்கள்.
[3/22, 1:42 AM] ‪+91 84288 75502‬: இன்னொரு சாரார் சிஹ்ரை இரண்டாகப் பிரிக்க வேண்டியதில்லை. மேற்கண்ட வசனங்களில் சொல்லப்படுவது வித்தையல்ல. இதுவும் தாக்கம் உள்ள சிஹ்ராகும். இதன் மூலம் கண்களை மயக்கி பொய்யான காட்சியை காட்ட முடியும் என்கின்றனர்.

இரண்டு வகையான சூனியம் உள்ளது என்ற விளக்கத்தை நாம் சுயமாக கூறவில்லை. ஏராளமான இஸ்லாமிய அறிஞர்கள் இந்தக் கருத்தை கூறியுள்ளனர். இதனை இமாம் இப்னு தைமியா அவர்கள் தன்னுடைய நூல் குறிப்பிடுகிறார்கள்.

الفرقان بين أولياء الرحمن وأولياء الشيطان (ص: 16)

وَذَهَبَ جُمْهُورُ أَهْل السُّنَّةِ إِلَى أَنَّ السِّحْرَ قِسْمَانِ :

10 - قِسْمٌ هُوَ حِيَلٌ وَمُخْرَقَةٌ وَتَهْوِيلٌ وَشَعْوَذَةٌ ، وَإِيهَامٌ لَيْسَ لَهُ حَقَائِقُ ، أَوْ لَهُ حَقَائِقُ لَكِنْ لَطُفَ مَأْخَذُهَا ، وَلَوْ كُشِفَ أَمْرُهَا لَعُلِمَ أَنَّهَا أَفْعَالٌ مُعْتَادَةٌ يُمْكِنُ لِمَنْ عَرَفَ وَجْهَهَا أَنْ يَفْعَل مِثْلَهَا ،……

الْقِسْمُ الثَّانِي : مَا لَهُ حَقِيقَةٌ وَوُجُودٌ وَتَأْثِيرٌ فِي الأَْبْدَانِ . فَقَدْ ذَهَبُوا إِلَى إِثْبَاتِ هَذَا الْقِسْمِ مِنْ حَيْثُ الْجُمْلَةُ . وَهُوَ مَذْهَبُ الْحَنَفِيَّةِ عَلَى مَا نَقَلَهُ ابْنُ الْهُمَامِ ، وَالشَّافِعِيَّةُ وَالْحَنَابِلَةُ(2)
[3/22, 1:44 AM] ‪+91 84288 75502‬: அஹ்லுஸ்ஸான்னாவில் அதிகமானோர் சூனியத்தில் இரு வகையுள்ளது என்ற கருத்தைக்கொண்டுள்ளனர்.

1. ஒரு வகை என்னவென்றால் தந்திரம் செய்து பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதாகும். ஒன்றுமில்லாத விசயத்தை உண்மை போல் சித்தரிப்தாகும். அதில் உள்ள இரகசியம் நுட்பமானதாக இருக்கும். அந்த விசயம் தெளிவானால் இது நடைமுறையில் உள்ள சாதாரண விசயம் என்பதை அறிந்துகொள்ளலாம். இந்த நுட்பத்தை அறிந்தவர் யார் வேண்டுமானாலும் அது போன்று செய்ய முடியும்.

2. இன்னொரு வகை என்னவென்றால் அது உடம்பில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இப்படிப்பட்ட சூனியம் இருக்கின்றது. அதற்கு எதார்த்தமும் உள்ளது. இந்த வகையான சூனியம் உண்டு என்ற கருத்தை ஒட்டுமொத்த அஹ்லுஸ் சுன்னாவினர் கூறுகின்றனர். இதுவே ஹனஃபீ ஷாஃபீ ஹம்பளீ மத்ஹபினரின் கொள்கையுமாகும்.

அல்ஃபுர்கானு பைன அவ்யாயிர் ரஹ்மான் வஅவ்யாயி ஷைத்தான்

(பாகம் 1 பக்கம் 16)
[3/22, 1:46 AM] ‪+91 84288 75502‬: வித்தை என்று விளக்கம் கூறும் அறிஞர்களின் கருத்து நமக்கு சரியாகத் தெரிந்ததால் அதனை ஏற்றுள்ளோம். இந்த வசனங்களில் சொல்லப்படும் சிஹ்ர் குறித்து இரண்டு கருத்து இருந்தாலும் சிஹ்ரில் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு வகையும் இருக்கிறது என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. மாறாக இதை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
[3/22, 1:51 AM] ‪+91 84288 75502‬: எனவே சூனியம் என்பது பாதிப்பை ஏற்படுத்தும்

No comments:

Post a Comment