ஜும்ஆ- வாழ்வை நெறிப்படுத்தும் வாராந்திர மாநாடு

Monday, 28 November 2016

அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம். =================== அப்பா கட்டிய வீடாயிருந்தாலும் அது நமக்கு அம்மா வீடுதான் ! =================== அடுப்படியே அம்மாவின் அலுவலகம் ! அன்பு மட்டுமே எதிர்பார்க்கும் சம்பளம் ! =================== காய்ச்சல் வந்தால் மருந்து தேவையில்லை ! அடிக்கடி வந்து தொட்டுப்பார்க்கும் அம்மாவின் கையே போதுமானது ! =================== இவ்வளவு வயதாகியும் புதுச்சட்டைக்கு மஞ்சள்வைத்து வருபவனைக் கேலி செய்யும் நண்பர்களே .......... அது, அவன் வைத்த மஞ்சள் அல்ல ! அவன், அம்மா வைத்த மஞ்சள் ! =================== டைப்பாய்டு வந்து படுத்த அம்மாவுக்கு 'சமைக்க முடியவில்லையே' என்கிற கவலை ! =================== 'அம்மா தாயே' என்று முதன் முதலில் பிச்சை கேட்டவன் உளவியல் மேதைகளுக்கெல்லாம் ஆசான் ! =================== எந்தப் பொய் சொல்லியும் அம்மாக்களை ஏமாற்றிவிடமுடியும் 'சாப்பிட்டு விட்டேன் ' என்கிற அந்த ஒரு பொய்யைத்தவிர ! =================== அத்தி பூத்தாற்போல அப்பனும் மகனும் பேசிச்சிரித்தால் விழாத தூசிக்கு கண்களை தேய்த்துக்கொண்டே நகர்ந்து விடு்கிறார்கள் அம்மாக்கள் ! =================== வெளியூர் செல்லும் பிள்ளைகளின் பயணப்பைக்குள் பிரியங்களைத் திணித்து வைப்பவர்கள் இந்த அம்மாக்கள் ! =================== பீஸ் கட்ட பணமென்றால் பிள்ளைகள் அம்மாவைத்தான் நாடுகின்றன ........ காரணம், எப்படியும் வாங்கிக் கொடுத்துவிடுவாள் ! அல்லது எடுத்துக் கொடுத்துவிட்டு திட்டு வாங்கிக்கொள்வாள் ! =================== வீட்டுக்குள் அப்பாவும் இருந்தாலும் அம்மா என்றுதான் கதவு தட்டுகிறோம் ! =================== அம்மாக்களைப் பற்றி எழுதப்பட்ட எல்லா கவிதைகளிலும் குறைந்தபட்சம் இரண்டு சொட்டுக்கண்ணீர் ஈரம் உலராமல் ! =================== அகில உலக அம்மாக்களின் தேசிய முழக்கம் இதுதான் .......... " எம்புள்ள பசி தாங்காது! " #பிடித்திருந்தால்_பகிர்ந்து_கொள்ளுங்கள்..

Wednesday, 23 November 2016

நூறு ஸஹாபாக்கள் ஒரு சிறு குறிப்பு :-- நாம் அறிந்து வைக்க வேண்டிய முக்கியமானது . நல் வழி செழுத்தக் கூடியது . 1 أبو بكر الصديق رضي الله عنه خليفة رسول الله ومن العشرة المبشرين بالجنة அபூபக்ர் அல் ஸிதீக் ரளியல்லாஹு அன்ஹு. அல்லாஹ்வின் தூதரின் கலீஃபா,சொர்க்கவாதி என்று நன்மாராயம் கூறப்பட்டவர்களில் ஒருவர். 2 عمر بن الخطاب رضي الله عنه الخليفة الثاني ومن العشرة المبشرين بالجنة உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு,இரண்டாம் கலீஃபா,சொர்கத்தை நன்மாராயமாக கூறப்பட்ட 10நபர்களில் ஒருவர். 3 عثمان بن عفان رضي الله عنه الخليفة الثالث ومن العشرة المبشرين بالجنة உஃத்மான் பின் அஃப்ஃபான் ரளியல்லாஹு அன்ஹு.மூன்றாம் ஃகலீஃபா.சொர்க்கவாதி என்று நன்மாறாயம் கூறப்பட்டவர்களில் ஒருவர். 4 علي بن أبي طالب رضي الله عنه الخليفة الرابع ومن العشرة المبشرين بالجنة அலீ பின் அபீ தாலிப் ரளியல்லாஹு அன்ஹு.நான்காவது ஃகலீஃபா.சொர்க்கத்தை நன்மாராயம் கூறப்பட்ட 10 நபர்களில் ஒருவர். 5 الزبير بن العوام رضي الله عنه من العشرة المبشرين بالجنة ஜூபைர் பின் அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு.சொர்க்கத்தை நன்மாராயம் கூறப்பட்டவர்களில் ஒருவர். 6 أبوعبيدة بن الجراح رضي الله عنه من العشرة المبشرين بالجنة அபூ உபைதஹ் பின் அல் ஜர்ராஹ் ரளியல்லாஹு அன்ஹு.சொர்க்கத்தை நன்மாராயம் கூறப்பட்டவர்களில் ஒருவர். 7 سعد بن ابي وقاص رضي الله عنه من العشرة المبشرين بالجنة ஸ'عது பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு.சொர்க்கத்தை நன்மாராயம் கூறப்பட்டவர்களில்10நபர்களில் ஒருவர் 8 سعيد بن زيد رضي الله عنه من العشرة المبشرين بالجنة ஸ'عது பின் ஜைது ரளியல்லாஹு அன்ஹு .சொர்க்கத்தை நன்மாராயம் கூறப்பட்ட 10 நபர்களில் ஒருவர். 9 طلحة بن عبيد الله رضي الله عنه من العشرة المبشرين بالجنة தல்ஹாஹ் பின் உபைதுல்லாஹ் ரளியல்லாஹு .சொர்க்கத்தை நன்மாராயமாக கூறப்பட்ட 10 நபர்களில் ஒருவர். 10 عبد الرحمن بن عوف رضي الله عنه من العشرة المبشرين بالجنة அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு. சொர்க்கம் நன்மாராயமாக கூறப்பட்ட 10நபர்களில் ஒருவர். 11 أبو الدرداء عويمر بن زيد رضى الله عنه حكيم هذه الأمة அபூ அல் தர்தாஃ عஉவைமிர் பின் ஜைத் ரளியல்லாஹு அன்ஹு.இச்சமுதாயத்தின் மா மேதை . 12 أبو أيوب الأنصاري رضى الله عنه الصحابي الذى دفن تحت أسوار القسطنطينية அபூ அய்யூபுல் அன்ஸாரி ரலியல்லாஹு . 13 أبو دجانة سماك بن خرشة رضى الله عنه الصحابي الذى أخذ سيف رسول الله صلي الله عليه وسلم بحقه அபூ துஜானா ஸம்மாக் பின் ஃகர்ஷஹ் ரளியல்லாஹு அன்ஹு .அல்லாஹ்வின் தூதரின் வாளை கையில் ஏந்தியவர் 14 أبو ذر الغفارى رضى الله عنه الصحابي الذى يمشي وحده و يموت وحده و يبعث وحده அபூதர் அல் ஙிஃபாரி ரளியல்லாஹு அன்ஹு .தனிமை மேற்கொண்டவர்,தனித்தே மரணித்தார்,தனித்தே எழுப்பப் படுவர் . 15 أبو سفيان بن الحارث رضى الله عنه صحابي جليل அபூ ஸுஃப்யான் பின் ஹாரிஃத் ரளியல்லாஹு அன்ஹு.மகத்தான ஸஹாபி 16 أبو طلحة الأنصاري رضى الله عنه الصحابي الذى صوته فى الجيش خير من ألف رجل அபூ தல்ஹஹ் ரளியல்லாஹு அன்ஹு .படையில் இவரின் சப்தம் ஆயிரம் நபர்களுக்கு நிகரானதாக இருக்குமாம். 17 أبو عبيدة بن الجراح رضى الله عنه أمين هذه الأمة அபூ உபைதஹ் பின் ஜர்ராஹ் ரலியல்லாஹு அன்ஹு .இச்சமுதாயத்தின் நம்பிக்கை நடசத்திரம் . 18 أبو محذورة رضى الله عنه مؤذن الرسول صلي الله عليه وسلم بمكة அபூ மஹ்தூரஹ் ரலியல்லாஹு அன்ஹு.மக்காவில் முஅஃத்ஃதினுர் ரஸுலாக இருந்தவர். 19 أبو موسى الأشعرى رضى الله عنه فقيه بلاد اليمن من الصحب الكرام அபூ மூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு.யமனில் ஸஹாபாக்களுக்கிடையே சிறந்த மார்க்க சட்ட வல்லுனராக திகழ்ந்தவர். 20 أبو هريرة رضى الله عنه رواى السنة و محدث الصحابة الكرام அபூ ஹுரைரஹ் ரலியல்லாஹு அன்ஹு.அல்லாஹ் ,ரஸுலின் நடைமுறைகளை அறியத் தருபவர்-ஸஹாபாக்களில் முஹத்திஸாக திகழ்ந்தவர்கள். 21 أبي بن كعب رضى الله عنه سيد القراء உபய்யு பின் கஃபு ரலியல்லாஹு அன்ஹு.குர்ஆனை அழகுற ஓதுவதில் தலையாயவர் 22 أسامة بن زيد رضى الله عنه الحب بن الحب உஸாமஹ் பின் ஜைத் ரளியல்லாஹு அன்ஹு . 23 أسعد بن زرارة الأنصاري صحابي جليل அஸ்அது பின் ஜராரஹ் அல் அனஸாரி ரளியல்லாஹு அன்ஹு .மகத்தான மாபெரியவரகளில் ஒருவர். 24 أسيد بن حضيررضى الله عنه الصحابي الذى نزلت ملائكة الرحمن لتسمع منه القرآن உஸைத் பின் ஹுளைர் ரளியல்லாஹு அன்ஹு .இவர்கள் குர்ஆன் ஓதினால் மலக்குமார்கள் இரங்கி வருவார்கள். 25 أنس بن مالك رضى الله عنه خادم الرسول صلي الله عليه وسلم அனஸ் ரளியல்லாஹு அன்ஹு .நபியவர்களுக்கு 20ஆண்டுகள் சேவகம் செய்தார்கள். 26 أهبان بن الأكوع رضى الله عنه الصحابي الذى كلمه الذئب அஹ்பான் பின் அக்வعஃ ரளியல்லாஹு அன்ஹு .இவர்களோடு ஓனாய் பேசியது . 27 البراء بن مالك رضى الله عنه الصحابي الذى لو أقسم على الله لأبر الله قسمه அல் பர்ராஉ பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு.இர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறினால் அதை அல்லாஹ் நிறைவேற்றித்தருவான். 28 بلال بن رباح رضي الله عنه مؤذن الرسول صلى الله عليه وسلم பிலால் பின் ரபாஹ் ரலியல்லாஹு அன்ஹு.முஅத்தினுர் ரஸுல் என்று பெயர் பெற்றவர். 29 تميم الدارى رضى الله عنه الصحابي الذى رأى المسيح الدجال தமீம் அத் தாரி ரலியல்லாஹு அன்ஹு.தஜ்ஜாலை நேரில் கண்டவர்கள். 30 ثابت بن قيس رضي الله عنه خطيب النبي صلي الله عليه وسلم ஃதாபித் பின் கைஸ் ரளியல்லாஹு அன்ஹு .அல்லாஹ்வின் தூதரின் பேச்சாளர் ஃகதீப் என்று பெயர் பெற்றவர். 31 جابر بن سمرة رضى الله عنه الصحابي الذى صلي مع النبي صلي الله عليه وسلم أكثر من ألفى مرة ஜாபிர் பின் ஸம்ரஹ் ரளியல்லாஹு அன்ஹு .ஆயிரம் முறைக்கு மேல் நபிகளோடு தொழுதுள்ளார்கள். 32 جابر بن عبد الله رضى الله عنه صاحب الطعام المبارك ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு .ஸாஹிபுத் தஆம் என்று பெயர் பெற்றவர். 33 جبير بن مطعم رضى الله عنه الصحابي الذى أسلم عند سماع سورة الطور ஜுபைர் பின் முத்இம் ரளியல்லாஹு அன்ஹு .குர்ஆனில் உள்ள ஸுரதுத்தூர் ஓதக் கேட்டு இஸ்லாமனவர். 34 جرير بن عبد الله البجلى رضى الله عنه خير ذى يمن من الصحابة ஜரீர் பின் அப்துல்லாஹ் அல் பிஜ்லி ரளியல்லாஹு அன்ஹு.யமனில் வாழ்ந்த ஸஹாபாக்களில் மிகச் சிறந்தவர். 35 جعفر بن أبي طالب رضى الله عنه الشهيد الطيار والملقب بأبي المساكين ஜ'ஃபர் பின்அபீ தாலிப் ரளியல்லாஹு அன்ஹு அஷ் ஷஹீத் அத்طதய்யார் அவர்களின் பட்டப்(அடையாள்ப்) பெயர் :அபுல் மஸாகீன் 36 حارثة بن النعمان رضى الله عنه الصحابي القارئ فى الجنة ஹாரிஃதஹ் பின் அல் நுஃமான் ரளியல்லாஹு அன்ஹு .இர்கள் சொர்க்கத்திலும் குர்ஆனை அழகுற ஓதக்கூடியர்கள். 37 حجر بن عدى رضى الله عنه الصحابي الذى مشي بفرسه على الماء ஹுஜ்ரு பின் அدதிய்யி ரளியல்லாஹு .நீரில் பாய் விரித்து நடந்தவர்கள். 38 حذيفة بن اليمان رضى الله عنه صاحب سر النبي صلي الله عليه وسلم ஹுஃதைஃபஹ் பின் யமான் ரளியல்லாஹு அன்ஹு .நபிகளின் ரகசியம் காத்தவர்கள். 39 حسان بن ثابت رضى الله عنه شاعر النبي صلي الله عليه وسلم ஹஸ்ஸான் பின் ஃதாபித் ரளியல்லாஹு அன்ஹு .நபிகளின் அரசவை கவிஞர். 40 الحسن بن علي بن أبي طالب سبط رسول الله صلى الله عليه وسلم وريحانته அல் ஹஸன் பின் அலீ பின் அபீ தாலிப் ரலியல்லாஹு த ஆலா அன்ஹுமா .நபிகளின் பேரன்.மலர் . 41 الحسين بن علي بن أبي طالب سبط رسول الله صلى الله عليه وسلم وريحانته அல் ஹுஸைன் பின் அலீ பின் தாலிப் ரளியல்லாஹு த ஆலா அன்ஹுமா.நபிகளாரின் பேரன் ,மலர் 42 حكيم بن حزم رضى الله عنه الصحابي الذى ولد بفناء الكعبة ஹகீம் பின் ஹஜ்ம் ரளியல்லாஹு அன்ஹு .கஃபா வின் உள்ளே பிறந்தவர். 43 حمزة بن عبد المطلب رضى الله عنه أسد الله وسيد الشهداء ஹம்ஜா பின் அப்துல் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹு .அல்லாஹ்வின் சிங்கம் .ஷுஹதாக்களில் தலையாயவர் . 44 الحويرث بن عبد الله رضى الله عنه صحابي جليل அல் ஹுவைரிஃத்(ثஸ்)பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு .மகத்தான ஸஹாபி 45 خالد بن الوليد رضى الله عنه سيف الله المسلول ஃகாலித் பின் வலீத் ரளியல்லாஹு அன்ஹு .அல்லாஹ்வின் போர் வாள் . 46 خبيب بن عدى رضى الله عنه صقر الصحابة ஃகுبபைப்ب பின் அதிய்யி ரளியல்லாஹு அன்ஹு .ஸஹாபாக்களின் ராஜாளி 47 خزيمة بن ثابت رضى الله عنه الصحابي الذى أجيزت شهادته بشهادة رجلين ஃخகுஜைமஹ் பின் ஃதாபித் ரளியல்லாஹு அன்ஹு .இவரின் ஒருவரின் சாட்சியே இரு சாட்சிக்கு சமமாக கருதும் படி நபியவர்கள் கூறினார்கள். 48 دحية الكلبي رضى الله عنه الصحابي الذى نزل جبريل على صورته திஹ்யதுல் கல்பி ரளியல்லாஹு அன்ஹு .இவர்களின் தோற்றத்தில் ஜிப்ர ஈல் நபியவர்களிடத்தில் வருவார்கள். 49 زيد بن أرقم رضى الله عنه الصحابي الذى صدقه الله عز وجل ஜைத் பின் அர்கம் ரளியல்லாஹு அன்ஹு .இவர்களை அல்லாஹ்வே உண்மை படுத்தினான். 50 زيد بن ثابت رضى الله عنه أعلم الأمة بالفرائض ஜைத் பின் ஃதாபித் ரலியல்லாஹு அன்ஹு.இவர்கள் இந்த சமுதாயத்தில் அனந்தரச் சொத்து பாகப் பிரிவினை சம்மந்தமான அறிஞராக இருந்தார்கள். 51 زيد بن حارثة رضى الله عنه الصحابي الوحيد الذى ذكر اسمه فى القرآن الكريم قال تعالى بسورة الأحزاب : " فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا ஜைத் பின் ஹாரிஃதஹ் ரளியல்லாஹு அன்ஹு .ஸஹாபாக்களில் இவர்களின் பெயர் மட்டுமே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. 52 سالم بن عمير رضى الله عنه قاتل عصماء بنت مروان التى كانت تعيب الإسلام و تؤذى النبي صلي الله عليه وسلم ஸாலிம் பின் உமைர் ரளியல்லாஹு .இவர்கள்தான் இஸ்லாமுக்கு இடைஞ்சலும் நபிகளாருக்கு நோவினையும் தந்த உஸமாவு பின்த் மர்வானை கொன்றவர்கள். 53 سالم بن معقل مولى أبى حذيفة رضى الله عنه الصحابي الذى حمد النبي صلي الله عليه وسلم ربه أن جعله فى أمته ஸாலிம் பின் மஃகல் ,அபூ ஹுஃதைஃபஹ் அவர்களின் அடிமை .இவர்கள் இஸ்லாமியரில் ஒருவராக அல்லாஹ் ஆக்கியதற்கு அல்லாஹ்வை நபியவர்கள் புகழ்ந்துள்ளார்கள் . 54 سعد بن الربيع رضى الله عنه أحد الصحابي الذى شم رائحة الجنة يوم ஸஃத் பின் ரபீவு ரளியல்லாஹு அன்ஹு.ஒரு நாள் சொர்க்க வாடையை நுகர்ந்த ஸஹாபாக்களில் ஒருவர். 55 سعد بن بنى عبيد رضى الله عنه إمام مسجد قباء فى زمن النبي صلي الله عليه وسلم ஸஃத் பனீ உபைத் ரளியல்லாஹு .நாயகம் காலத்தில் குபா மஸ்ஜிதின் இமாமாக பணியிலிருந்தார்கள். 56 سعد بن عبادة رضى الله عنه سيد الخزرج ஸஃத் பின் உப்பாதஹ் ரளியல்லாஹு அன்ஹு .ஃகஜ்ரஜ் குலத்தவரின் தலைவர் . 57 سعد بن معاذ رضى الله عنه سيد الأوس الصحابي الذى اهتز عرش الرحمن لموته ஸஃத் பின் முஆத் ரளியல்லாஹு அன்ஹு .அவ்ஸ் கூட்டத்தாரின் தலைவர் ,இவரின் மரணத்தின் போது அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியதாம். 58 سلمان الفارسي رضى الله عنه صحابي جليل ஸல்மான் அல் ஃபாரிஸிய்யி ரளியல்லாஹு அன்ஹு .பல வேதங்களில் நம்பிக்கை கொண்டு பின் கடைசியாக நபிகளின் வருகையை எதிர் பார்த்திருந்து இஸ்லாம் ஆனவர்கள்.போர் தந்திரங்களை நபிகளார் இவர்களோடு ஆலோசனை செய்துகொள்வார்கள். 59 سلمة بن الأكوع رضى الله عنه أسرع رجل فى الصحب الكرام ஸலமஹ் பின் அக்வعஃ ரளியல்லாஹு அன்ஹு .ஸஹாபாக்களில் மிக விரைவானவர்கள். 60 شداد بن أوس رضى الله عنه صحابي جليل ஷத்தாத் பின் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு .முக்கியமான ஸஹாபி 61 صهيب بن سنان الرومى رضى الله عنه صحابي جليل ஸுஹைப் பின் ஸினான் அல் ரூமிய்யி ரளியல்லாஹு அன்ஹு.முக்கிய ஸஹாபி. 62 الضحاك بن سفيان رضى الله عنه الصحابي الذى يعد بمائة فارس அல் ளஹ்ஹாக் பின் ஸுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு.நூறு குதிரை வீரர்களுக்கு சமமானவர். 63 عاصم بن ثابت رضى الله عنه صحابي جليل ஆஸிம் பின் ஸஃதாபித் ரளியல்லாஹு அன்ஹு.முக்கிய ஸஹாபி. 64 عامر بن فهيرة رضى الله عنه الصحابي الذى رفعته الملائكه عند موته ஆமிர் பின் ஃபுஹைரஹ் ரளியல்லாஹு அன்ஹு.அவர்களின் மரண நேரத்தில் வானவர்களாகிய மலக்குமார்கள் வானத்தின் பால் உயர்த்திக் கொண்டார்கள். عبد الله الزبير رضى الله عنه صحابي جليل அப்துல்லாஹ் அல் ஜுபைர் ரளியல்லாஹுஅன்ஹு.முக்கிய ஸஹாபி. 65 عبد الله بن أم مكتوم رضى الله عنه الصحابي الذى عاتب الله عز و جل نبيه صلي الله عليه وسلم فيه அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம் ரளியல்லாஹுஅன்ஹு.இவருக்காக நபியவர்களை அல்லாஹ் கண்டித்துள்ளான். 66 عبد الله بن أنيس رضى الله عنه الصحابي الذى أعطاه النبي صلي الله عليه وسلم عصا آية ما بينهما يوم القيامة அப்துல்லாஹ் பின் அனீஸ் ரளியல்லாஹ் அன்ஹு .இவர்களுக்கு ஒரு தடியை நபியவர்கள் தந்துள்ளார்கள்.கியாமத் நாளில் இருவருக்குமிடையில் அடையாளமாக. 67 عبد الله بن جحش رضى الله عنه المجدع فى سبيل الله عز و جل அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹு. 68 عبد الله بن رواحة رضى الله عنه سيد الشعراء قائد في معركة مؤتة அப்துல்லாஹ் பின் ரவாஹஹ் ரளியல்லாஹு அன்ஹு .கவிஞர்களில் தலைவர்.முஅத்தஹ் போரில் தலைமை தாங்கியவர். 69 عبد الله بن زيد رضى الله عنه الصحابي الذى رأى رؤيا الأذان அப்துல்லாஹ் பின் ஜைத் ரளியல்லாஹு அன்ஹு .பாங்கை கணவில் கண்டவர் . 70 عبد الله بن عباس رضى الله عنه حبر هذه الأمة அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு .இந்த சமுதாயத்தின் அறிஞர். 71 عبد الله بن عمرو بن حرام رضى الله عنه الصحابي الذى أظلته الملائكة بأجنحتها அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் ரளியல்லாஹு அன்ஹு மலக்கு மார்கள் தங்களது இறக்கைகளால் நிழல் தந்தார்கள். 72 عبد الله بن مسعود رضى الله عنه الصحابي الذى ساقه فى ميزان أثقل من جبل أحد அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு .இவருடைய அமல்கள் உஹது மலையை விட கணமானதாக இருக்கும். 73 عبد الله ذو البجادين رضى الله عنه صحابي جليل அப்துல்லாஹ் ஃதுல் பஜாதீன் ரலியல்லாஹு அன்ஹு .முக்கியமான ஸஹாபி . 74 عثمان بن مظعون رضى الله عنه الصحابي الذى قبل النبي صلي الله عليه وسلم خده عند مرض موته உஃத்(ஸ்)மான் பின் மழ்ஊன் ரளியல்லாஹு அன்ஹு .மரண தருவாயில் அவரின் கண்ணத்தில் நபியவர்கள் முத்தமிட்டார்கள். 75 عكاشة بن محصن رضى الله عنه الصحابي الذى يدخل الجنة بغير حساب உக்காஷஹ் பின் மிஹ்ஸன் ரளியல்லாஹு அன்ஹு .கேள்வி கணக்கின்றி சொர்க்கத்தில் நுழையக்கூடிய தகுதி பெற்றவர்கள். 76 عكرمة بن أبي جهل رضى الله عنه الصحابي الذى بايع على الموت فى معركة اليرموك இக்ரிமஹ் பின் அபூ ஜஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு .யர்மூக் யுத்தத்தின் போது மரணத்தின் மீது ஒப்பந்தம் செய்தவர். 77 عمار بن ياسر رضى الله عنه الطيب بن المطيب அம்மார் பின் யாசிர் ரளியல்லாஹு அன்ஹு .மணமிக்கவரின் மகன் மணமிக்கவர். 78 عمران بن حصين رضى الله عنه الصحابي الذى كانت تسلم عليه الملائكة இம்ரான் பின் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு .மலக்கு மார்கள் அவருக்கு ஸலாம் சொல்வார்கள். 79 عمرو بن أقيش رضى الله عنه ، المعروف ب " الأصيرم " الصحابي الذى دخل الجنة و ما صلى لله صلاة واحدة அம்ர் பின் அக்யஸ் ரளியல்லாஹு அன்ஹு .அல் உஸைரிம் என்றே மக்களால் அறியப் பட்டவர் .ஒரு தொழுகை கூட தொழாமல் சொர்க்கம் நுழைந்த ஸஹாபி . 80 عمرو بن العاص رضى الله عنه صحابي جليل அம்ரு பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு .முக்கியமான ஸஹாபி . 81 عمير بن عبد عمرو بن نضلة رضى الله عنه ذو الشمالين உமைர் பின் அப்து அம்ரு பின் நள்லஹ் ரளியல்லாஹு அன்ஹு .து ஷ் ஷிமாலைன். 82 عمير بن عدى رضى الله عنه صحابي جليل உமைர் பின் அدதிய்யி ரளியல்லாஹு அன்ஹு .முக்கியமானவர். 83 عويم بن ساعدة رضى الله عنه المطهر الذى يحبه الله عز وجل உவைம் பின் ஸாஇதஹ் ரளியல்லாஹு அன்ஹு ரளியல்லாஹு.அல்லாஹ் விரும்பும் அளவு பரிசுத்தமானவர் . 84 قتادة بن النعمان رضى الله عنه الصحابي الذى أصيبت عينه يوم أحد فردها النبي صلي الله عليه وسلم கதாதஹ் பின் நுஃமான் ரளியல்லாஹு அன்ஹு.உஹதில் அவரின் கண் பாதிக்கப்பட்டது உடனே அவரை தனியாக ஆக்கி கவனம் செழுத்தினார்கள். 85 كعب بن مالك رضي الله عنه من الثلاثة الذين خلفوا فى غزوة تبوك و تاب الله عليهم கஃபு பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு .தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் இருந்த மூன்று நபர்களில் ஒருவர் .பின்பு தவ்பா செய்து மீண்டு விட்டார். 86 محمد بن مسلمة رضى الله عنه الصحابي الذى لا تضره الفتنة முஹம்மது பின் முஸ்லிமஹ் ரளியல்லாஹு அன்ஹு .ஃபித்னஹ் அவரை இடைஞ்சல் செய்யாது . 87 مرارة بن الربيع رضي الله عنه من الثلاثة الذين خلفوا فى غزوة تبوك و تاب الله عليهم மிராரஹ் பின் அல் ரபீவு ரளியல்லாஹு அன்ஹு .தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாமலிருந்தவர்களில் மூன்று நபர்களில் ஒருவர் ,பின்பு தவ்பஹ செய்து மீண்டார். 88 مصعب بن عمير رضى الله عنه حامل لواء المسلمين يوم بدر முஸ்அப் பின் உமைர் ரளியல்லாஹு அன்ஹு.பத்ருப் போரில் முஸ்லிம்களின் கொடியை சுமந்தவர். 89 معاذ بن جبل رضى الله عنه أعلم الأمة بالحلال و الحرام முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு .இந்த சமுதாயத்தில் ஹலால் ஹராமை நன்கறிந்தவர். 90 معاوية بن أبي سفيان رضى الله عنه كاتب الوحي முஆவியஹ் பின் அபீ ஸுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு.வஹீ எழுதுபவர். 91 المنذر بن عمرو الساعدى رضى الله عنه صحابي جليل அல் முன்ஃதிர் பின் அம்ர் அஸ் ஸாஇதீ ரளியல்லாஹு அன்ஹு .முக்கிய ஸஹாபி . 92 هلال بن أمية رضى الله عنه من الثلاثة الذين خلفوا فى غزوة تبوك و تاب الله عليهم ஹிலால் பின் உமய்யஹ் ரளியல்லாஹு அன்ஹு .தபூக்கில் கலந்து கொள்ளாமல் பின்பு தவ்பஹ் செய்த மூவரில் ஒருவர். 93 وحشي بن حرب رضى الله عنه الصحابي الذى قتل خير الناس خير الناس : حمزة بن عبد المطلب رضى الله عنه " يوم أحد ، شر الناس : مسيلمة الكذاب لعنة الله " يوم اليمامة " வஹ்ஷீ பின் ஹர்ப் ரளியல்லாஹு அன்ஹு 94 أبو الدحداح الأنصاري رضى الله عنه قال صلى الله عليه وسلم عنه " كم من عذق رداح لابي الدحداح في الجنه " அபு அல் தஹ்தாஹ் அல் அன்ஸாரிய்யி ரலியல்லாஹு அன்ஹு 95 المغيرة بن شعبة رضى الله عنه من دهاة العرب وشجعانها அல் முஙீரஹ் பின் ஷுஃபஹ் ரளியல்லாஹு அன்ஹு .அரபுகளில் மிக வீரமானவர். 96 رافع بن خديج رضى الله عنه صحابي جليل ராஃபிஉ பின் ஃகதீஜ் ரளியல்லாஹு அன்ஹு .முக்கியமான ஸஹாபி 97 الطفيل بن عمر الدوسي رضى الله عنه صحابي جليل அல் துஃபைல் பின் உமர் அல் தூஸிய்யி ரலியல்லாஹு அன்ஹு .முக்கியமான ஸஹாபி . 98 عبد الله بن عمر بن الخطاب رضى الله عنه صحابي جليل அப்துல்லாஹ் பின் உமர் பின் அல் ஃகத்தாப் ரளியல்லாஹு அன்ஹுமா முக்கியமான ஸஹாபி 99 عبد الله بن عمرو بن العاص رضى الله عنه صحابي جليل அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு .முக்கியமான ஸஹாபி . 100 عمر بن معد يكرب رضى الله عنه صحابي جليل அம்ரு பின் மஃதீகரிப் ரளியல்லாஹு அன்ஹு .முக்கியமான ஸஹாபி வி .எஸ்.முஹம்மது காசிம்

Tuesday, 22 November 2016

ஒரு சமயம் கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார். “தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட *மையை* தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? சிலர் *தற்பெரு“மை“*யில் தொட்டு எழுதுகிறார்கள். சிலரோ *பொறா“மை“*யில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலரோ *பழ“மை“*யில் தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை. இவற்றையெல்லாம் *அரு“மை“*யான எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். “ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில *“மை“கள்* உள்ளன. இவை என்ன தெரியுமா? *கய“மை“*, *பொய்“மை“*, *மட“மை“*, *வேற்று“மை“* ஆகியவைதாம். கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது. “எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய *“மைகள்“* என்னென்ன தெரியுமா? *நன்“மை“* தரக்கூடிய *நேர்“மை“*, *புது“மை“*, *செம்“மை“*, *உண்“மை“*. இவற்றின் மூலம் இவர்கள் நீக்க வேண்டியது எவைத் தெரியுமா? *வறு“மை“*, *ஏழ்“மை“*, *கல்லா“மை“*, *அறியா“மை“* ஆகியவையே. இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள் *கட“மை“* யாகவும், *உரி“மை“ யாகவும்* கொண்டு சமூகத்திற்குப் *பெரு“மை“* சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார். கூட்டத்தில் கைதட்டலும் உற்சாக ஒலியும் விண்ணைப் பிளந்தன. படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்தேன். இந்த அரு *மை* யான நல்ல *மை* விசயத்தை உங்கள் நட்பு வட்டாரத்திற்கு பரப்பலாமே !!! 😉😉😉✨✨