Wednesday, 14 September 2016

மதீனாவின் மதிப்பு!

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه   🌾 🌾 صباح الخير 🌾 🌾  உங்கள் மீதும் அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!  بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان امين امين يارب العالمين   🌝 ரிலாக்ஸ் மார்னிங் 🌞  ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕  மதீனாவின் மதிப்பு!   🕌 🕌 🕌 🕌 🕌 🕌 🕌 🕌  தஜ்ஜாலை விட்டும் பாதுகாக்கப்பட்ட பூமியாகும்!   மதீனாவின் தெருக்களில் மலக்குகள் நடமாடுவார்கள் . அங்கு காலராவும் தஜ்ஜாலும் நுழையமுடியாது . இறைத்தூதர் صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்” தஜ்ஜால் ( மதீனாவை நோக்கி) வருவான் ; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது ; எனவே, ( மதீனாவுக்கு வெளியே ) , மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான் ; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார் ; அவர் அவனிடம் , ‘ இறைத்தூதர் صلى الله عليه وسلم  அவர்கள் ( அடையாளம் ) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!” என்பார். அப்போது தஜ்ஜால் ( மக்களை நோக்கி) , ‘ நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் ( என் ) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?’ என்று கேட்பான். மக்கள் ‘ கொள்ள மாட்டோம்!” என்பார்கள். உடனே , அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான் . அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், ‘ அல்லாஹ்வின் மீது ஆணையாக ! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் ( இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!” என்று கூறுவார். தஜ்ஜால் ‘ நான் இவரைக் கொல்வேன்!” என்பான் . ஆனால் , அவனால் அவரைக் கொல்ல முடியாது !” என அபூ ஸயீத் رضي الله عنه  அறிவித்தார்கள்.   தஜ்ஜால் பற்றி நபி صلى الله عليه وسلم  அவர்கள் நீண்ட விளக்கம் தரும்போது இதைக் கூறினார்கள் என்றும் அறிவித்தார்.  இறைத்தூதர் صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்...   “ மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும்  ( இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும் ) அல்லாஹ் ( மதீனாவிலிருந்து ) வெளியேற்றி விடுவான் !” என அனஸ் இப்னு மாலிக் رضي الله عنه  அவர்கள் அறிவித்தார்கள்.   5. கடும் நோயை விட்டும் பாதுகாக்கப்பட்ட புனித பூமியாகும்!   ஆயிஷா رضي الله عنها  அறிவித்தார்கள்...   நபி صلى الله عليه وسلم  அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அபூ பக்ர் , பிலால் ரலி رضي الله عنهما  ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது . அபூ பக்ர் رضي الله عنه  தமக்குக் காய்ச்சல் ஏற்படும்போது , ‘ மரணம் தன்னுடைய செருப்பு வாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப் பொழுதை அடைகிறான்!” என்ற கவிதையைக் கூறுவார்கள்.  பிலால் رضي الله عنه  காய்ச்சல் நீங்கியதும் வேதனைக் குரலை உயர்த்தி , ‘ இத்கிர் , ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க , ஒரு பள்ளத்தாக்கில் ஓர் இராப் பொழுதையேனும் நான் கழிப்பேனா? ‘ மஜின்னா ’ எனும் ( சுனையின்) நீரை நான் அருந்துவேனா? ஷாமா , தஃபீல் எனும் இரண்டு மலைகள் ( அல்லது இரண்டு ஊற்றுகள் ) எனக்குத் தென்படுமா ?’ என்ற கவிதையைக் கூறுவார்கள் .   மேலும், பிலால் رضي الله عنه அவர்கள்...    இறைவா ! ஷைபா இப்னு ரபிஆ, உத்பா இப்னு ரபீஆ , உமய்யா இப்னு கலஃப் ஆகியோர் எங்கள் நாட்டிலிருந்து எங்களை ( அப்புறப்படுத்தி ) இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியது போல் , அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி ( சபித்து ) விடுவாயாக!” என்று கூறுவார்கள் .  நபி صلى الله عليه وسلم  அவர்கள் , ‘ இறைவா ! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு ! இறைவா ! எங்களுடைய ( அளவைகளான ) ஸாவு , முத்து ஆகியவற்றில் ( எங்கள் உணவில் ) எங்களுக்கு நீ பரக்கத் செய் ! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்கு ! இங்குள்ள காய்ச்சலை ‘ ஜுஹ்ஃபா ’ எனும் பகுதிக்கு இடம் பெயரச் செய் !” என்று பிரார்த்தித்தார்கள்.   நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது , அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் நொடிகள் அதிகமான ( பிரதேசமாக இருந்தது; ( ஏனெனில்) ‘ புத்ஹான் ’ எனும் ஓடையில் மோசமான ( கெட்டுப்போன) தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது !  ஷஃபாஅத் பூமி  மதீனாவில் மரணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு மரணித்துவிடுங்கள் ஏனெனில் அங்கு மரணிப்பவருக்கு நான் ஷபாஅத் செய்வேன் .   யா அல்லாஹ் . உன் ரஸூலின் பூமியில் ஷஹாதத் மரணத்தை எனக்கு தருவாயாக என உமர் رضي الله عنه அவர்கள்  துஆ செய்தார்கள் .   சிறப்பான ஊரில் மரணிப்பது முஸ்தஹப்பு என இமாம் நவ்வி رحمة الله عليه  அவர்கள் கூறுவார்கள் .  .மஸ்ஜிதுன் நபவி (நபியுடைய மஸ்ஜித்) என்று அழைக்கப்படக்கூடிய மஸ்ஜிதின் சிறப்புகள்  'எனது வீட்டுக்கும் , மிம்பருக்கும் மத்தியில் சுவர்கத்தின் பூங்காக்களில்நின்றும் ஒரு பூங்கா இருக்கிறது ' என நபிகளார் صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள். { அப்துல்லாஹ் இப்னு ஸைதுல் மாஸினி صلى الله عليه وسلم  ஆதாரம் : புஹாரி. }  'மஸ்ஜிதுல் ஹராம் , மஸ்ஜிதுன் நபவி , மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்றுபள்ளிகளைத் தவிர ( அதிக நன்மையை எதிர்பார்த்து ) ப் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று இறைத்தூதர் صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள். மதிப்பு!   🕌 🕌 🕌 🕌 🕌 🕌 🕌 🕌   மதீனா என்பதற்கு பட்டணம், நகரம் என்பது பொருளாகும். இது ஸவூதி அரேபியாவின் மேற்கு மாநிலத்தில் ( பழை ஹிஜாஸ் மாநிலத்தில் யான்பு துறைமுகத்திலிருந்து கிழக்கே 215கிலோ மீட்டர் தொலைவிலும் , மக்காவிற்கு வடக்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும் , ஜித்தாவிற்கு வடக்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது .  துவக்கத்தில் ‘ யஸ்ரிப்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் நபி صلى الله عليه وسلم  அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு குடியேறிய பின்னர் நபியின் பட்டணம் என்ற பொருளில் ‘ மதீனத்துந் நபி’ ( நபியின் நகரம) என்றும் ஒளிபொருந்திய நகரம் என்ற பொருளில் ‘மதீனா முனவ்வரா ’ என்றும் அழைக்கப்பட்டு பின்னர் சுருக்கமாக மக்களால் ‘மதீனா’ என்று அழைக்கப்படுகிறது.  இதற்கு பல்வேறு பெயர்கள் இருப்பதாகவும் , தவ்ராத்தில் மட்டும் நாற்பது பெயர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.  குடியேற்றங்கள் இது குறித்து ஆய்வாளர்களின் பல் வேறுவிதக் கருத்துகளைக் காணமுடிகிறது: -  1. நபி நூஹ் صلى الله عليه وسلم  அவர்களின் ஒரு மகனுடைய பெயர் ‘ யஸ்ரிப்’ இவர் இன்றைய மதீனாவில் அன்று ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்திற்குப் பிறகு குடியேறினார். அவரிலிருந்து கி . மு 3900 ஆணடுகளில் ஆரம்பமான அந்த ஊரில் பலரும் குடியேறத் துவங்கினர். ( ஆதாரம் : இப்னு கஸீர்)  2. நம்ரூதின் கொடுமையிலிருந்து தப்பி ஹிஜாஸில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வந்த ‘ அமாலிக் ’ கூட்டத்தினர் இதனை கி . மு 2200க்கும் , கி . மு 1600 க்கும் இடையில் நிறுவியி ருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்களுடைய தலைவனின் பெயரால் ‘யஸ்ரிப்’ என்று அழைக்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது. நபி صلى الله عليه وسلم  அவர்கள் பிறப்பதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யஸ்ரிப் நகரம் தோன்றிவிட்டதாக வரலாறு கூறுகிறது .  3. ஹஜ்ஜு செய்துவிட்டு நபி மூஸா عليه السلام   அவர்கள் தம் கூட்டத்தாருடன் திரும்பும் போது இங்கே சிலநாட்கள் தங்கினர் என்றும் , அவர்களில் சிலர் தவ்ராத்தில் முன்னறிவிப்பு செய்யப்பட்ட இறுதி நபியின் இருப்பிடம் இதுவாக இருக்குமெனக் கருதி இங்கேயே தங்கிவிட்டனர் என்றும் இதிலிருந்து இங்கே யூதர்களின் ஆதிக்கம் ஏற்படலாயிற்று என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.  4. இதன் பின் கிறிஸ்துவ சகாப்தம் 4-ஆம்  நூற்றாண்டில் யமன் நாட்டின் நீர் தேக்கம் ( அணைக்கட்டு) உடைந்து பெருவெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக அங்கு வாழ்ந்து வந்த அவ்ஸ் , கஸ்ரஜ் ஆகிய இரு அரபிக் கிளையினர் இங்கு வந்து குடியேறி வாழலாயினர் .  நபி صلى الله عليه وسلم அவர்கள்  நேசித்த பூமி :  நபி صلى الله عليه وسلم  அவர்கள் எந்த பயணத்திலிருந்து திரும்பும்போது மதீனாவின் சுவர்களை கண்டுவிட்டால் விரைந்து வாகனத்தை ஓட்டுவார்கள் . ஏனெனில் மதீனாவின் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பே காரணம் .  யா அல்லாஹ் . மக்காவை நாங்கள் நேசிப்பது போல மதினாவை எங்களுக்கு நேசமாக்குவாயாக என நபி صلى الله عليه وسلم   அவர்கள் துஆச்செய்தார்கள்.   2. குழப்பமான காலத்திலும் கியாமத் நெருக்கத்திலும் அடைக்கமாகுவதற்கு மதீனாவே சிறந்தது இறைத்தூதர் صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்”  “ யமன் வெற்றி கொள்ளப்படும் . உடனே , ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு ( யமன் நாட்டிற்குச்) செல்வார்கள் ! ஆயினும் , மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா ? பின்னர் ‘ ஷாம்’ வெற்றி கொள்ளப்படும் . உடனே , ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு , ‘ தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்; ஆயினும் , மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா ? பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும் ; உடனே , ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு, தம் குடும்பத்தினரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்! ஆயினும் , மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா ?’ என சுப்யான் رضي الله عنه அவர்கள்   அறிவித்தார்கள்!

No comments:

Post a Comment