Monday, 25 April 2016

காஜா முஈனுத்தீன் வம்சாவழி

وجه معين الدين  جدتى رحمه الله             அப்பாஸியக் கலீபாக்கள் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களின் வழித்தோன்றல்கள் மீது தாங்க இயலாத கொடுமைகளை செய்து வந்தனர். பக்தாத்தில் வாழ்ந்து வந்த அவர்களின் வழித்தோன்றல்களில் சிலர் இஸ்ஃபஹானில் வந்து குடியேறி வாழ்ந்து வரலாயினர்.  அந்நகரில் வாழ்ந்து வந்த அந்த குடும்பத்தைச் சார்ந்த காஜா செய்யிது அப்துல் அஜீஸ் அவர்களின் மகனார் செசெய்யிது கியாஸுத்தீன் அவர்கள் ஹழ்ரத் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிசாவழியில் தோன்றிய செய்யிது தாவூது என்ற பெரியாரின் அருமைத் திருமகள் உம்முல் வரா என்ற செய்யிதா மாஹினூரை மணமுடித்திருந்தனர். அவர்களுக்கு ஹிஜ்ரி 530 ஆம் ஆண்டு ரஜப் பிறை 14 (கி.பி.1116 ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள்) வெள்ளிக்கிழமை ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு முயீனுத்தீன் (இஸ்லாத்தை வலுப் பெறச் செய்தவர்) என்று பெயரிட்டு அருமைபெருமையாக வளர்த்து வந்தனர்.  ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்களின் வழித் தோன்றல்களில் ஒருவராவார்கள்.  “மீர்ஆதுல் அஸ்றார்” என்ற நூலில் கூறப்பட்டபடி அவர்களின் வம்சவழி பின்வருமாறு’  ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தி (ரலியல்லாஹு அன்ஹு)  ஹாஜா கியாதுத்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)  ஹாஜா நஜ்முத்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது அப்துல் அஸீஸ் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது இப்றாஹீம் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது இமாம் மூஸல் காழிம் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது இமாம் ஜஃபர் சாதிக் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது இமாம் முஹம்மது பாகர் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது இமாம் ஜெய்னு லாப்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)  செய்யிது இமாம் அலி (ரலியல்லாஹு அன்ஹு)   

Monday, 11 April 2016

வழித்தவறிய 72 கூட்டத்தின் விளக்கம் இஸ்ரேலர்கள் 72 கூட்டங்களாக பிரிந்தார்கள். எனக்குப் பின் என்னுடைய உம்மத்துக்கள் 73 கூட்டமாக பிரிவார்கள். அதில் ஒரு கூட்டத்தார் மாத்திரம் சுவர்க்கவாசிகள். மற்றைய 72 கூட்டத்தினரும் வழித்தவறியவர்களாவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியபோது, அண்மையில் இருந்த ஸஹாபாக்கள் " அல்லாஹ்வின் திருத்தூதரே! அந்த ஒரு கூட்டத்தினர் யார்? என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள்" எனக் கேட்க. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் " நானும், என்னுடைய ஸஹாபாக்களும் நடக்கின்ற வழியை பின்பற்றி நடப்பவர்கள் தான் அந்த கூட்டத்தினர்" எனக் கூறினார்கள். இந்த கூட்டத்தினரே ஸுன்னத் வல் ஜமாஅத் எனப்படுபவர்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறியபடி. 73 கூட்டத்தில் ஸுன்னத் வல் ஜமாஅத் நீங்கலாக மற்ற 72 கூட்டத்தினரும் ஆரம்பத்தில் ஆறு பிரிவுகளை கொண்டவர்களாக இருந்தார்கள். இந்த ஆறில் ஒவ்வொன்றும் பன்னிரண்டு பிரிவுகளாக பிரிந்ததினால் அவர்கள் 72 கூட்டத்தினர்களாக ஆனார்கள். அந்த கூட்டங்களின் விளக்கமும், கொள்கைகளும் பின்வருமாறு: - 1. ராபிளிய்யா, 2. காரிஜிய்யா, 3. ஜபரிய்யா, 4. கதரிய்யா, 5. ஜுஹைமிய்யா, 6. மர்ஜிய்யா என்ற ஆறு பிரிவுகளாகும். ராபிளிய்யா, காரிஜிய்யா, ஜபரிய்யா என்ற இந்த மூன்று கூட்டத்தார்களும் பொதுவாக ஷியா என்ற பெயரால் அழைக்கப்படுகின்றார்கள். * ராபிளிய்யா என்ற பிரிவில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் : 1. அலவிய்யா 2. பதாஇய்யா 3. ஷீய்யா 4. இஸ்ஹாக்கியா 5. ஸெய்திய்யா 6. அப்பாஸிய்யா 7. இமாமிய்யா 8. நாவிஸிய்யா 9. முதனாசிகிய்யா 10. லாஇனிய்யா 11. ராஜிஇய்யா 12. முதராபிஸிய்யா எனப்படும். இவர்களின் கொள்கை:  தராவீஹ் தொழுகை ஸுன்னத் இல்லை, தொழுகைக்கு இமாம் ஜமாஅத் ஸுன்னத் இல்லை, வுழு செய்யும் போது தலையில் மஸ்ஹு செய்தல் ஜாயிஸ் இல்லை, அதோடு அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுமா) இந்த மூன்று கலீபாக்களை பற்றி அவதூறு கூறுவார்கள். இவர்களுக்கிடையில் சில செயல்களில் வேறுபட்ட அபிப்பிராய பேதங்களும் உண்டு. அதாவது அலவியாக்கள் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை நபி என்று கூறுகிறார்கள். பதாஇய்யாக்கள் நபி பட்டத்தில் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் பங்கு உண்டு என்கின்றனர். * காரிஜிய்யா என்ற இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் : 1. அஸ்ரகிய்யா, 2. இபாளிய்யா, 3. ஸஃலபிய்யா, 4. ஹாஸிமிய்யா, 5. கலபிய்யா, 6. கூஸிய்யா, 7. கன்ஸிய்யா, 8. ஷிம்ராக்கிய்யா, 9. முஃதஸிய்யா, 10. மைமூனிய்யா, 11. மஹ்கமிய்யா, 12. அக்னஸிய்யா எனப்படும். இவர்களின் கொள்கை:  ஜமாஅத்து தொழுகை உண்மை இல்லை, கிப்லா உடையவர்கள் பாவத்தை கொண்டு காபிர் ஆவார்கள், அநீதி உடைய அரசனுக்கு விரோதம் செய்து விலகுவது நலம், இவர்களில் கன்ஸிய்யாக்கள் ஸகாத் ஃபர்ளு அல்ல என்றும் முஃதஸிய்யாக்கள் தீமையானது அல்லாஹ்வின் நாட்டத்தை கொண்டதல்ல என்றும் பாஸிகீன்களுக்கு பின்னால் தொழுவது ஆகுமானது அல்ல என்றும் கூறுவதோடு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஷபாஅத், அவ்லியாக்களின் கராமத் இவைகள் இல்லை என்று மறுக்கிறார்கள். * ஜபரிய்யா என்ற இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் : 1. முளுதர்றிய்யா, 2. அப்ஆலிய்யா, 3. மஇய்யா, 4. மப்ரூகிய்யா, 5. நஜ்ஜாரிய்யா, 6. மைமனிய்யா, 7. கஸ்லிய்யா, 8. ஸாபிகிய்யா, 9. ஹபீபிய்யா, 10. கவ்பிய்யா, 11. ஹஸ்பிய்யா, 12. பிக்ரிய்யா எனப்படும். இவர்களின் கொள்கைகள்: ஸதகா கொடுப்பது அவசியம் இல்லை. இவர்களில் ஸாபிகிய்யாக்கள் வணக்கத்தை கொண்டு எந்த பிரயோசனமும் இல்லை பாவத்தை கொண்டு கெடுதியும் இல்லை என்றும் ஹஸ்பிய்யாக்கள் தவ்பாவையும், அல்லாஹ்வின் லிகாவையும் மறுக்கின்றார்கள். * கதரிய்யா என்ற இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் : 1. அஹமதிய்யா, 2. ஸனவிய்யா, 3. ஷெய்த்தானிய்யா, 4. ஷரீகிய்யா, 5. வஹ்மிய்யா, 6. அபதிய்யா, 7. நாகிதிய்யா, 8. முதபர்ரிய்யா, 9. காஸிதிய்யா, 10. நிளாமிய்யா, 11. மும்தரிய்யா, 12. கைஸானிய்யா எனப்படும். இவர்களின் கொள்கைகள்: நன்மையையும் தீமையும் உண்டாகிறது அல்லாஹ்வுடைய தக்தீரை கொண்டதல்ல, ஜனாஸா தொழுகை வாஜிப் அல்ல இவர்களில் அஹமதிய்யாக்கள் பர்லை ஒப்புக் கொண்டு ஸுன்னத்தை மறுக்கின்றார்கள். ஸனவிய்யாக்கள் நன்மைகளை படைக்க ஒரு இறைவனும், தீமைகளை படைக்க ஒரு இறைவனும் உண்டு என்றும், ஷெய்த்தானிய்யாக்கள் ஷெய்த்தான்கள் இல்லை என்றும் மறுக்கின்றார்கள். * ஜுஹைமிய்யா என்ற இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் : 1. முஅத்தலிய்யா, 2. முராபிலிய்யா, 3. முதராகிபிய்யா, 4. வாரிதிய்யா, 5. ஹர்கிய்யா, 6. மக்லூக்கிய்யா, 7. கைரிய்யா, 8. பானிய்யா, 9. ஸனாதிகிய்யா, 10. லப்லிய்யா, 11.கப்ரிய்யா, 12. வாக்கிபிய்யா எனப்படும். இவர்களின் கொள்கைகள்: ஈமான் கல்பி கொண்டதாக இருக்கும் நாவை கொண்டதல்ல, இஸ்ராயீல ், முன்கர், நகீர் ஆகிய மலக்குமார்களையும், ஹவ்ஸுல் கவ்ஸர், ஸிராத்தல் முஸ்தகீம் பாலத்தையும் கேலி செய்வதாகும், இவர்களில் முஅத்தலிய்யாக்கள் அல்லாஹ்வின் அஸ்மா படைக்கப்பட்டது என்றும், கைரிய்யாக்கள் நமது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒரு புத்திசாலியாக இருந்தார்களே தவிர ஒரு ரசூலாக இருக்கவில்லை என்று கூறுகின்றார்கள். * மர்ஜிய்யா என்ற இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த 12 கூட்டங்கள் : 1. தாரிகிய்யா, 2. ஷாஇய்யா, 3. ராஜிய்யா, 4. ஷாகிய்யா, 5. பைஹஷிய்யா, 6.அமலிய்யா, 7. மன்கூசிய்யா, 8. முஷ்தஸ்னிய்யா, 9. அப்தரிய்யா, 10. பிதய்யா, 11.முஷப்பிஹிய்யா, 12. ஹஷவிய்யா எனப்படும். இவர்களின் கொள்கைகள்: ஈமானை தவிர வேறு ஒரு இபாதத்தும் பர்ளாக இல்லை இவர்களில் ஷாகிய்யாக்கள் ஈமானில் சந்தேகம் இருக்கின்றது என்றும், பைஹஷிய்யாக்கள் ஏவல் விலகல் அறியாதவன் காபிர் எனச் சொல்லுகின்றார்கள். இதே போன்றே இந்த கூட்டத்தார்களின் கொள்கைகளில் சில மாறுதல்களோடு சில கூட்டம் உருவானார்கள். அவர்கள் தங்களை ஸுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொண்டு ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமான வழி கெட்ட கொள்கையில் இருந்து கொண்டு இஸ்லாத்தை காட்டி தாங்கள் சீர்திருத்தவாதிகள் என்று கூறி அப்பாவி பொது மக்களை ஏமாற்றி வழி கெடுக்கும் வேலைகளில் ஈடுப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுள் வஹாபிகள், காதியானிகள், அஹ்லே ஹதீஸ் என்ற மிக முக்கியமான வழி கெட்ட கூட்டத்தார்கள் இவர்கள். இதில் காதியானி, அஹ்லே ஹதீஸ் போன்றவைகளை மக்கள் மிக இலகுவாக அடையாளம் கண்டு கொண்டார்கள். காரணம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தான் இறுதி நபி என்ற கூற்றுக்கு மாற்றமான கருத்தை இவர்கள் கொண்டு இருந்தபடியால் இவர்கள் மக்கள் முன் தோற்று போனார்கள். ஆனால் இவர்களை விட மோசமானவர்களான வஹாபிகளை இன்று மக்கள் அடையாளம் கண்டு கொள்ள சிரமப்படுகின்றார்கள். காரணம் இவர்களில் சிலர் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையின்படி மத்ஹபுகளையும் பின்பற்றுவார்கள், சில கூட்டத்தார் நமது இமாம்களின் சில கூற்றுக்களை ஏற்று கொள்ளுவார்கள். எனவே பொது மக்கள் இவர்களின் சூழ்ச்சியையும், ஏமாற்றுகளையும் அறியாமல் இவர்களும் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் தான் என்று நம்புகின்றார்கள். இந்த வஹாபி என்ற வழி கெட்ட கொள்கையில் உருவான கூட்டங்கள் தான் தௌஹீத் ஜமாஅத் , தப்லீக் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாமி ஆகியனவாகும். காரணம் இவர்கள் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முற்றிலும் மாற்றமான கருத்தை உடையவர்களாக இருக்கின்றார்கள். இவை அனைத்தும் இந்த ஜமாஅத்துகளை உருவாக்கிய தலைவர்களின் கூற்றுகள். அதற்கு ஆதாரமாக இந்த கூட்டங்களின் தலைவர்கள் சொன்ன கருத்தக்களை பாருங்கள்: * அல்லாஹ்வுக்கு கைகள் உண்டு. அவன் அர்ஷின் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறான். * அல்லாஹ்வுக்கு காலம் இடம் திசை இவைகள் உண்டு. * நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மௌத்தாகி மண்ணோடு மண்ணாகி விட்டார்கள். * அல்லாஹ்வுக்கு (இல்முல் கைப்) மறைவான சங்கதியை அறியும் ஞானம் இல்லை. ஆனால், எப்பொழுது விரும்புகின்றானோ அப்பொழுது அறிய முடியும். * தொழுகையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஞாபகம், உருவம் மனதில் வருவது, மிருங்கங்களுடைய ஞாபகம் உருவம் வருவதை பார்க்கிலும் மிக மோசமானதாகும். * 'ரஹ்மத்துலில் ஆலமீன்' என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு மாத்திரம் சொந்தமான ஸிபத்து அல்ல. அதை மற்றவர்களுக்கும் சொல்லலாம். * நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 'இல்முல் கைப்' என்ற மறைவான ஞானம் ஒரு போதும் இல்லை. * நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு தபால்காரரைப் போன்றவர்கள்தான். அவர்கள் இஸ்லாத்தை போதித்தது உண்மையே ஆனால், இப்போது அவர்கள் இறந்து விட்டதால் அவர்களைப் பெரிதுபடுத்த வேண்டிய தில்லை. * எவன் ரஸுலுல்லாஹ் என்று சொல்வானோ அவன் காபிர், அது ஷிர்க்.

அல்லாஹ்விடம் நாம் எதைக் கேட்க வேண்டும்

S S AHAMED BAQAVI ▼ Friday, 25 March 2016  அல்லாஹ்விடம் நாம் எதைக் கேட்க வேண்டும் ?                                    أن معاذ بن رفاعة أخبره عن أبيه قال : قام أبو بكر الصديق على المنبر ثم بكى فقال قام رسول الله صلى الله عليه و سلم عام الأول على المنبر ثم بكى فقال اسألوا الله العفو و العافية فإن أحد لم يعط بعد اليقين خيرا من العافية  ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு அழுதார்கள்.பின்பு மக்களை நோக்கி அல்லாஹ்விடம் மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் கேளுங்கள். ஏனென்றால்  ஈமானுக்குப்பிறகு ஆரோக்கியத்தை விட சிறந்த ஒரு நிஃமத்தை எவரும் வழங்கப் படவில்லை என்றார்கள். (சுனனுத் திர்மிதி)  அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை அதிகமாக நபியவர்கள் கேட்கச் சொல்லியிருக்கிறார்கள்.  العفو  என்றால் மன்னிப்பு.العافية   என்றால் ஆரோக்கியம்.  மற்றொரு ஹதீஸில் ; நபி (ஸல்) அவர்கள் المعافاة ஐ கேட்கச்  சொன்னார்கள்.  المعافاة என்றால் மக்களுடைய தொந்தரவுகளை விட்டும் நம்மையும், நமது தொந்தரவுகளை விட்டும் மக்களையும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் என்று பொருள்.  1. العفو மன்னிப்பு, 2. العافية ஆரோக்கியம், 3. المعافاة தொந்தரவுகளை விட்டும் பாதுகாப்பு. இந்த மூன்றையும் கேட்கும்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லி யிருக்கிறார்கள். عن العباس بن عبد المطلب قال قلت : يا رسول الله علمني شيئا أسأله الله عز و جل قال سل الله العافية فمكثت أياما ثم جئت فقلت يا رسول الله علمني شيئا أسأله الله فقال لي يا عباس يا عم رسول الله سلوا الله العافية في الدنيا والآخرة   நபி (ஸல்) அவர்களின் சச்சா அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து யாரசூலல்லாஹ்! நான் வழமையாக செய்து வரும்படியான ஒரு துஆவைக் கற்றுத் தாருங்கள் எனக் கேட்ட பொழுது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள் என்றார்கள், மறுநாளும் வந்து அதே கேள்வியைக் கேட்டார்கள், அப்போதும் இதே பதிலை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மூன்றாவது நாளும் இதே கேள்வியைக் கேட்ட பொழுது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ;  எனது சிறிய தந்தை அவர்களே நான் உங்களை நேசிக்கின்றேன். நீங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள். (சுனனுத் திர்மிதி)  ஆஃபியத் - ஆரோக்கியம் என்பது மனிதனுக்கு மிக முக்கியமானது என்பதினால் நபியவர்கள் அதையே வேண்டும் படி ஏவினார்கள். ஆஃபியத் என்றால் ஆரோக்கியம்.ஆரோக்கியம் என்பது பாதுகாப்பு என்று அர்த்தம்.பாதுகாப்பு என்றால் உடலுக்கு நோய் வராமல் பாதுகாப்பது என்பது மட்டும் அதன் பொருளல்ல.மனிதனுக்கு தீங்கான,அவனுக்கு கெடுதியையும் ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடிய எல்லாக் காரியங்களை விட்டும் பாதுகாப்பது என்பது அர்த்தம்.  يا أيها الناس لا تتمنوا لقاء العدو ، وسلوا الله العافية ، நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ; எதிரிகளை சந்திக்க வேண்டும், யுத்தம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் ஆஃபியத்தைக் கேளுங்கள். (புகாரி)  மேற்கூறிய ஹதீஸின் மூலம் யுத்தம் வராமல் பாதுகாப்பு பெறுவதற்கும் ஆஃபியத் என்று சொல்லப்படும் எனத் தெரிகிறது. அது போல நோயை விட்டும் உலகிலும், வேதனையை விட்டும் மறுமையிலும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பதற்கும் ஆஃபியத் என்று சொல்லப்படும்.எனவே இந்த துஆ மனிதனுக்கு எல்லா வகையான வெற்றியையும் பெற்றுத் தந்து விடும்.  ஞானிகள், மற்றும் மேன்மக்கள், தீனுடைய விஷயத்தில் எவ்வித தடைகள் கஷ்டங்கள் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.  அப்பாஸ் பின் முர்ஸி (ரஹ்) அவர்கள் அபுல் ஹஸன் ஷாதுலி (ரஹ்) அவர்களுடைய பிரதானமான சீடராக இருந்தார்கள். அப்பாஸ் பின் முர்சி (ரஹ்) அவர்கள் ஒருநாள் வேதனையோடு இருந்த போது அவரைப் பார்க்க வந்தவர் அவரிடம் நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் ஆஃபியத்தைக் கேட்கிறேன் என்றார். அப்பாஸ் (ரஹ்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். இதையே மூன்று முறை கூறிய போது அப்பாஸ் (ரஹ்) அவர்கள், எனது நிலையைப் பார்த்து நீங்கள் ஆஃபியத் அற்ற நிலையில் நான் இருப்பதாக விளங்கி விட்டீர்கள். நான் எந்த நிலையில் இருக்கிறேனோ அது தான் எனக்கு ஆஃபியத். ஏனென்றால் நீங்கள் எதை ஆஃபியத் என்பதாக நினைக்கின்றீர்களோ அதை நான் கேட்கவில்லை. எந்த ஆஃபியத் எனக்கு கிடைப்பது நலவாக இருக்குமோ அந்த ஆபியத்தை அல்லாஹ்விடம் நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.  ஒருநாள் அவர்கள் மதினாவில் ஹஸ்ரத் ஹம்ஸா (ரலி) அவர்களின் கப்ருக்கு ஜியாரத் செய்வதற்கு சென்றிருந்த போது அங்கு ரிஜாலுல் கைப் (மறைந்தும் வாழும்) வலிமார்கள் நிற்பதை தனது அருள்பார்வையினால் பார்த்து இது துஆ ஒப்புக் கொள்ளப்படும் நேரம் என்பதை விளங்கிக் கொண்டார்கள். தன்னோடு வந்தவரிடம் இது துஆ ஒப்புக் கொள்ளப்படும் நேரம். எனவே உனக்கு எது தேவையோ அதைக் கேள் என்றார்கள்.அவரோ யாஅல்லாஹ் எனக்கு ஒரு தீனாரைத் தா என்றார். அப்பாஸ் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத் தையும், மன்னிப்பையும் எல்லா விதமான முஸீபத்துகளை விட்டும் பாதுகாப்பையும் கேட்டார்கள்.  ஜியாரத் முடிந்து மதீனா நகரின் எல்லையில் ஒருவர் இவருக்கு ஒரு தீனார் யாசகம் கொடுத்தார். ஊருக்குள் சென்ற போது அங்கு அபுல் ஹஸன் ஷாதுலி (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். ஜியாரத்தின் போது நடந்த விஷயத்தை தனது கஷ்பின் மூலம் தெரிந்து கொண்டு அந்த மனிதரிடம் என்ன மனிதரே! நீங்கள் அல்லாஹ்விடம் இவ்வளவு சாதாரண விஷயத்தை மட்டும் கேட்டு விட்டீர்களே! அப்பாஸ் முர்ஸியைப் போல ஆஃபியத்தைக் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று கூறினார்கள்.  அப்பாஸ் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்விடம் ஆஃபியத்தைக் கேட்டார்கள். இப்போது அவருக்கு கொஞ்சம் சுகவீனமாக இருப்பதைக் கண்டு அவர் நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் ஆஃபியத்தைக் கேட்கிறேன் என்ற போது அப்பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் எதை ஆஃபியத்தாக நினைக்கின்றீர்களோ அதை நான் அல்லாஹ்விடம் கேட்கவில்லை. நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன். எனது விஷயத்தில் எதை அல்லாஹ் ஆபியத்தாக நினைக்கிறானோ அதையே நான் அவனிடம் கேட்கிறேன்.ஆஃபியத் என்பது, உடலில் நோய் மற்றும் எவ்வித தங்கடமும் வராமல் இருப்பது மட்டும் அதனுடைய அர்த்தமல்ல என்றார்கள்.  நபி (ஸல்) அவர்கள் அனைவர்களையும் ஆஃபியத்தை கேட்கும்படி சொன்னார்கள் மட்டுமல்ல, தானும் ஆஃபியத்தைக் கேட்டார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது விஷம் கலந்த ஆட்டின் இறைச்சி பரிமாறப்பட்டு அதை சாப்பிட்டதின் விளைவாக நபியவர்களின் மரண நேரத்தின் போது அன்று சாப்பிட்ட விஷம் இப்போது வேலை செய்கிறது, எனது நரம்புகள் துண்டிக்கப்பட்டு வேதனையளித்துக் கொண்டிருக்கிறது என்றார்கள்.  ஆரோக்கியத்தைக் கேட்ட நபியவர்களுக்கும் இந்த நிலை வந்தது, மட்டுமல்ல அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் இந்த துஆ கேட்டார்கள். அவருக்கு குகையில் தீண்டிய பாம்பினுடைய விஷத்தின் காரணமாக வஃபாத்தானார்கள், உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் அல்லாஹ்விடம் ஆஃபியத்தைக் கேட்டார்கள். அவர்களும் தொழுகையில் குத்தப்பட்டு ஷஹீதானார்கள். உஸ்மான் (ரலி) அவர்களும் ஆஃபியத்தைக் கேட்டார்கள் அவர்கள் கழுத்து அறுக்கப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்கள். அலி (ரலி) அவர்களும் ஆஃபியத்தைக் கேட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்கள்.  எனவே ஆஃபியத் என்பது உடல் ரீதியான வேதனை மற்றும் அசௌகரீகம் வரக்கூடாது என்பது மட்டுமல்ல. தீனுடைய, இபாதத்துடைய விஷயத்தில் எவ்வித ஆபத்தும் வராமல் இருப்பது தான் முதன்மையான ஆஃபியத் என்பதாக மேன்மக்கள் கருதினார்கள். அது சரியான முறையிடுதலாகும்.ஆக நாம் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தையும் கேட்க வேண்டும்.  நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் ஒருமுறை இப்படி பேசினார்கள். யாஅல்லாஹ்! நான் அல்லாஹ்வாக இருந்து நீ மூஸாவாக இருந்தால் நீ எதை என்னிடம் கேட்பாய்? எனக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் நான் ஆஃபியத்தைக் கேட்பேன் என்றான்.  மேற்கூறிய நிகழ்வின் மூலம் ஆரோக்கியம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது தெரிகிறது.  கியாமத் நாளின் போது அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய நிஃமத்களைப் பற்றி கேள்வி கணக்கு கேட்பான். அதில் முதலாவது கேள்வி, உனக்கு நான் ஆரோக்கியத்தை தரவில்லையா....? என கேட்பான்.  ஆரோக்கியம் என்பது அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் முதன்மையான முக்கியமான நிஃமத்தாகும். அந்த நிஃமத்தை அல்லாஹ் நமக்கு வழங்கியதற்காக வேண்டி நாம் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.  ஆரோக்கியம் இருக்கும் போது அதன் அருமை நமக்குத் தெரிவதில்லை. பணம், பொருள் அனைத்தையும் எதிர் பார்க்கின்றோம். கிடைத்தால் சந்தோஷப்படுகிறோம், கிடைக்கவில்லையென்றால் கவலைப் படுகிறோம். ஆனால் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பது என்பது நமக்கு ஆரோக்கியமாக தெரிவதில்லை.  அல்லாஹ்விடம் அதிகமாக ஆரோக்கியத்தைக் கேட்க வேண்டும். அது கிடைக்கப் பெற்றதற்காக அவனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்த வேண்டும். மட்டுமல்ல கிடைத்த ஆரோக்கியத்தைப் உடல் நலத்தைப் பேண வேண்டும்.  #ஆக நிறைவாக, ஆரோக்கியம் என்பது பணம் காசு இருப்பது மட்டுமல்ல,உடல் நலத்தை,மனநலத்தை,தீனுடைய நலத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.முக்கியமாக உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உடல் நலத்திற்காக அதிகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.பணம் சம்பாதிப்பதற்காக வேண்டி உடல் நலத்தைக் கெடுத்து விடக்கூடாது.மார்க்கத்தின் நன்மைகளையும் கெடுத்து விடக்கூடாது.  இப்போது மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றால்,இளமையில் பணம் பணம் என்று ஆரோக்கியத்தைக் கெடுத்து விடுகிறார்கள். இறுதியில் முதுமையில் இழந்த ஆரோக்கியத்தைப் பெறுவதற்காக சம்பாதித்த பணத்தையெல்லாம் செலவு செய்கிறார்கள். ஆக பணத்திற்காக ஆரோக்கியத்தை இழந்து அந்த ஆரோக்கியத்தைப் பெறுவதற்காக பணத்தை செலவு செய்கிற அந்த நிலை வராமல் வரும் முன் காப்போம்.எல்லா நலனையும் ஆரம்பத்திலேயே நாம் பாதுகாத்து அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேட்டு அந்த ஆரோக்கியத்தைப் பெறுவோம்.அல்லாஹ் நல்லருள் புரிவானாக.  قيل لحكيم ما العافية قال ان يمر بك اليوم بلا ذنب  ஆஃபியத் என்றால் என்று ஒரு ஞானியிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர்கள்,பாவமில்லாமல் உன்னை ஒரு நாள் கடந்து செல்வதாகும் என பதிலளித்தார்கள்.  பதிவேற்றம் செய்பவர்;  மவ்லவி,ஹாபிழ். முஹம்மத் ஷாபி வாஹிதி.

Sunday, 10 April 2016

உழைப்பே உயர்வு ஷகீகுல் பல்கி

ஒரு முறை சூபி ஞானி இமாம் ஷகீக் அல் - பல்கி அவர்கள் வியாபார நோக்கமாக ஒரு பயணத்தை மேற்கொண்டார். பயணிப்பதற்கு முன்னர் தனது நண்பர் இமாம் இப்ராஹிம் இப்னு அத்ஹமை கண்டு பிரியாவிடை பெற்றுக் கொண்டார். இவரது இந்த பயணம் நீண்ட நாள் பயணமாக அமைய இருந்தது. ஆனால், ஓரிரு நாட்களுக்குள் அவர் ஊர் திரும்பினார். அவரை பள்ளியில் சந்தித்த இப்ராஹிம் இப்னு அத்ஹம் ஆச்சரியப்பட்டு, "என்ன நடந்தது? ஏன் அவசரமாக ஊர் திரும்பினீர்கள்?" என்று வினவினார். அதற்கு ஷகீக் அல் - பல்கி, "நான் எனது பயணத்தின் பொழுது இடையில் ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தேன். அது பாழடைந்த ஒரு இடமாக இருந்தது. அங்கே நான் குருடான, முடமான ஒரு பறவையை கண்டேன். கண் பார்வையற்ற, பறக்கவோ அசையவோ முடியாத அந்த பறவை இந்த ஒதுக்குப்புறமான இடத்தில் எப்படி உயிர் வாழ்கிறது, என்று நினைத்து ஆச்சரியம் அடைந்தேன். சற்று நேரத்தின் பின் அங்கு மற்றொரு பறவை வந்தது. அது இந்த பறவைக்கு உணவை கொண்டு வந்திருக்கிறது. இவ்வாறு ஒரு நாளைக்கு பல தடவைகள் அது இந்த பறவைக்கு போதுமான உணவை கொண்டு வந்து கொடுப்பதை நான் அவதானித்தேன். இதன் மூலம் இந்த இடத்தில் இந்த பறவைக்கு உணவளிக்க முடியுமாக இருப்பவன் எனக்கும் உணவளிக்கும் சக்தியை பெற்றிருக்கிறான் என்பதை நான் உணர்ந்தேன். எனவே உழைப்பை நோக்காக கொண்ட எனது பயணத்தை இடைநிறுத்தி உடனே வீடு திரும்பி விட்டேன் "என்றார்.   இதனை கேட்ட இப்ராஹிம் இப்னு அத்ஹம்," ஷகீகே, உமது இந்த நிலைப்பாடு எனக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. பிறரின் தயவில் வாழ்கின்ற அந்த குருடான, முடமான பறவையாக நீர் இருக்க விரும்புகிறீரா? ஏன் தனக்காகவும் குருடர்களாகவும் முடவர்களாகவும் இருக்கும் பிறருக்காகவும் உழைக்கும் அடுத்த பறவையாக நீர் இருக்கக் கூடாது? (கொடுக்கும்) உயர்ந்த கரம் (வாங்கும்) தாழ்ந்த கரத்தை விட சிறந்தது என்பதை நீர் அறிய மாட்டீரா? "என்று வினவினார். இதனை கேட்ட ஷகீக், இப்ராஹிம் இப்னு அத்ஹமின் கரங்களில் முத்தமிட்டு," அபூஇஸ்ஹாக்கே நீர் எமது ஆசானல்லவா? "என்று கூறி விட்டு மீண்டும் தனது தொழிலை மேற்கொள்வதற்காக கிளம்பினார்சுவனத்தின் தலைவியான அன்னை..,, ஃபாத்திமா (ரலியல்லாஹூஅன்ஹா) அறிவிக்கின்றார்கள்: அதிகாலை நேரத்-தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் ) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்: "அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்." (பைஹகீ)  ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள்.  அல்லாஹ்வை இறைவன் என்று ஏற்றுக்கொண்டிருக்கும் நாம் எவ்வளவு தூரம் அல்லாஹ்வின் ரிஸ்கை அலட்சியம் செய்கின்றோம்..பாருங்கள்!  அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சியை நபி (ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் ) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:   "படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான். வானவர்களிடம் கேட்கின்றான்:"வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்..! படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..?என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனதுதண்டனையைப் பயந்தா…?" பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்:"உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்." (அஹ்மத்உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். புகாரி: 1470, 1471.  நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே ‘நீங்கள் குளிக்கக் கூடாதா?’ என்றுஅவர்களிடம் கூறப்பட்டது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி: 2071.  ”ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும்உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்துஉண்பவர்களாகவே இருந்தனர். ”என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம்(ரலி) அறிவித்தார். புகாரி: 2072, 2073.  உழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது  ” (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்… ‘யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான் யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான் மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமானஅருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’. புகாரி: 1474, 1475.   

Thursday, 7 April 2016

What a Message, Worth Reading இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு.. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது.... மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது.... தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..... உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்..... உண்மையாக நாம் என்ன செய்வோம்...? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்.. ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்.... உண்மை தான் என்றோம். இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது... ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது.... இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்... " Fault makers are majority, even they protected in most situations ". இன்றை நிலை.... "நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கபடுகிறான்... தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்" படித்ததில் பிடித்தது....

நான் அதிர்ஷடசாலி

Motivation news   நீங்கள் எந்த அளவு அதிர்ஷடசாலி..?? இதை படிங்க..??  இதைப் படிப்பதால்.. உங்கள் வாழ்க்கை முறை.. கவலைகள் பழக்க வழக்கங்களில் கூட மாற்றம் ஏற்படலாம்..!!  * உண்ண உணவும்.. உடுத்த உடையும்.. வசிக்க இடமும் உனக்கு இருந்தால்.. உலகில் உள்ள 75% மக்களை விட.. நீ வசதி பெற்றிருக்கிறாய்..!!  * வங்கியில் பணமிருந்தால்.. அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள்.. நீயும் ஒருவன்..!! உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை..!!  * உன்னிடம் கணிப்பொறி இருந்தால்.. நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற.. 1% மனிதர்களுள் ஒருவன்..!! நினைத்த நேரத்தில்.. நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும்.. 175 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!  *நோயின்றி காலையில்.. புத்துணர்வுடன் நீ எழுந்தால்.. அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே.. உயிர் துறந்த பலரை விட.. நீ பாக்கியசாலி..!!  * பார்வையும்,, செவித் திறன்,, வாய் பேசாமை.. உள்ளிட்ட எந்த குறைபாடுகளும்.. இல்லாது நீ இருந்தால்.. அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்..!!  * போர்,, பட்டினி,, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால்.. உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்..!!  *கொடுமைகளுக்கு உள்ளாகாமல்.. நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால்.. உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்..!!  * உன் பெற்றோரை பிரியாமல்  அவர்களுடன் இருந்தால்.. நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்..!!  * தாகம் எடுத்தால் குடிப்பதற்கு.. உங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறதா..? அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்..!! ஏனெனில் உலகம் முழுதும்.. சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு.. பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை..!!  * கல்வி அறிவு பெற்று.. இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால்.. அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்..!! உலக அளவில் எழுத படிக்க தெரியாத.. மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்..!!  * இணையத்தில் இந்த செய்தியை.. உன்னால் படிக்க முடிந்தால்.. அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!  * உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால்.. அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும்.. நம்பிக்கையும் இல்லாதவர்களை விட.. நீ கொடுத்து வைத்தவன்..!!  * நீங்கள் அனுபவித்து வரும்.. வசதிகளையும்.. தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல்.. ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல்.. கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க.. ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு.. கொடுத்திருக்கும் போது.. நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன..??  * நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!! வீண் கவலைகளை விட்டு.. அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள்.. போதை பொருட்கள்.. என்பவற்றை விட்டு.. விட்டு  என்ற தைரியத்தோடு.. இயன்றவரை மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த வரை உதவுங்கள்..!! உங்கள் வாழ்க்கை மேலும் அழகாகும்..!!  Alhamdulillah....

Monday, 4 April 2016

தாமஸ் ஆல்வா தன்னம்பிக்கை

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.  அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்"   உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன்  எங்கள் பள்ளி மிகவும் சிறியது. அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை.   அதனால் தயவுசெய்து  நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று...   பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார்,   எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்..... இப்படி இருக்கையில்,   ஒருநாள்    தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்...... அதில் இப்படி எழுதியிருந்தது  "மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்" என்று...... இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்   " மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்"   என்று.  தன்பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும் நம்மாளும் எடிசன்களை உருவாக்கமுடியும்.....  குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..

Friday, 1 April 2016

அபூபக்கர் சித்திக்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் எளிமையான ஆட்சி: ஆட்சிப்பொறுப்பை ஏற்ற, அபூபக்கர் சித்தீக்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ஒரு முறை முதுகில் சில துணி மூட்டைகளைச் சுமந்தவர்களாக, மதீனாவின் கடை வீதியில் சென்று கொண்டிருந்தார். அதைக் கண்ணுற்ற அவரின் தோழர், உமர் கத்தாப்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ‘தாங்கள் எங்கு செல்கிறீர்கள்? உங்கள் முதுகில் என்ன மூட்டை?’ என்று வினவினார்கள். ‘உமரே! கடை வீதிகளில் இந்த உடைகளை விற்று வரச் செல்கிறேன்’ என்றார்கள். ‘ஏன்? ஆட்சிப் பொறுப்பில் ஆயிரம் வேலைகள் இருக்கும்போது இப்படி வியாபாரம் செய்து தங்களுடைய நேரத்தை வீணடிப்பது எனக்கு நியாயமாகப் படவில்லை’ என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,ஆவேசமாக சொன்னார்கள். அதற்கு அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ‘உமரே! பொறுமை கொள்ளுங்கள். நான் ஆட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தினால், என்னை நம்பியிருக்கிற குடும்பத்திற்கு யார் பொறுப்பேற்பது? எங்களின் அன்றாடத் தேவைகளை யார் நிறைவேற்றுவது? அதற்காகத்தான் பழைய வியாபாரத்தில் ஈடுபடுகிறேன்’ என்றார்கள். பின்னர், ‘இது தீவிரமாகச் சிந்திக்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல் தீர்க்கப்படவேண்டிய விஷயமாகவும் எனக்குப்படுகிறது. அரசாங்க வேலை செய்வதற்கெனவே ‘பைத்துல்மால்’ என்ற அரசுப் பணம் உள்ளபோது அதை எப்படித் தாங்கள் மறுக்க முடியும்? ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லிம் அன்னவர்களின் காலத்திலேயே, சட்ட நுணுக்கங்களில் கைதேர்ந்தவராக இருந்த அபூஉபைதா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அணுகி இதற்கு ஓர் முடிவு செய்வோம்’ என்றார் உமர். பிறகு இருவருமே அபூஉபைதா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அணுகினார்கள். விவரங்களைக் கேட்டறிந்த, அபூஉபைதா(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ‘இறைத் தூதுவர் குடும்பத்தினருக்கு ‘பைத்துல்மால்’ என்ற அரசுப் பணம் ஆகும் என்றாக்கப்படவில்லை. குறிப்பாக அது நபித்தோழர்களுக்காக, அதுவும் சிரமப்படும் நபித் தோழர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டது. எனவே , அபூபக்கர் சித்தீக்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மாதாமாதம் தன் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு சம்பளமாக எடுத்துக் கொள்ளலாம். வியாபாரம் செய்வதை விட்டுவிட்டு தன் சிந்தனை முழுவதையும் அரசுப் பணியில் செலவிடலாம். அதற்குத் தடையில்லை’ என்று தீர்ப்பு சொன்னார்கள். சில காலம் சென்றது. ஒரு முறை அபூபக்கர்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அன்னாரின் துணைவியார் உணவு உண்டபின்,சிறிது இனிப்பை, அபூபக்கர் சித்தீக்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் முன் வைத்தார்கள். ‘என்ன இது இனிப்பு? யார் கொண்டு தந்தார்கள்’ என்று வினவினார், அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள். ‘யாரும் தரவில்லை. நானேதான் தயார் செய்தேன். தாங்கள் வழங்கும் அரசு சம்பளப் பணத்திலிருந்து சிறிது சிறிதாய் மிச்சம் பிடித்து இந்த இனிப்பைச் செய்தேன்’ என்றார் துணைவியார். ‘நான் பெறும் சம்பளம் நம் செலவு போக மிஞ்சும் அளவில் அதிகமாய் இருக்கிறதா? எவ்வளவு என்று சொல்’ என்று கடிந்து கொண்டார்கள், அபூபக்கர் சித்திக்(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள். அது மட்டுமல்ல… அன்றிலிருந்து அந்தத் தொகையை தனது சம்பளத்திலிருந்து குறைத்துக் கொண்டார்கள். அளவிற்கு அதிகமாய்ப் பெற்ற தொகையில் செய்த இனிப்பையும் உண்ண மறுத்துவிட்டார்கள். அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாற்றிலிருந்து ஒரு சிறு துளி.