Saturday, 25 January 2020

சீனன் இந்தியன் ஜோக்

ஒரு இந்தியன்.. விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான்.. அவன் அருகே.. சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான்.! அவன் இந்தியனை எப்படியும்.. ஏமாற்றி பணம் பறித்து விட.. வேண்டும் என..எண்ணினான்..! இந்தியனிடம் மெதுவாக பேச்சை.. ஆரம்பித்தான்..! சீனன்;- " அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது.. நமக்குள் போட்டி வைத்து.. நேரத்தை கடத்துவோமா..?" இந்தியன்;- "வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை..! எனக்கு தூக்கம் வருகிறது..!" சீனன்;- "அன்பரே.. கொஞ்சம் கேளுங்கள்.. போட்டியில் நான் தோற்று..நீங்கள் வெற்றி பெற்றால்.. நான் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன்..! மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால் 500 ரூபாய்..நீங்கள் எனக்கு தரவேண்டும்..! போட்டிக்கு இப்போது சம்மதமா..? இந்தியன்;- "நான் தான் போட்டிக்கு வரவில்லை என்று சொன்னே'னே.. ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்..? நான் தூங்கப் போகிறேன்..! சீனன்;- (விடுவதாக இல்லை) "சரி.. இப்படி வைத்து கொள்வோம்.. போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று.. நான் தோற்றால்.. 500 ரூபாய் உங்களுக்கு நான் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால்.. 50 ரூபாய் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும்.. இப்போது சம்மதமா..?? இந்தியன்;- "சரி..சம்மதம்..!" சீனன்;- " போட்டியை முதலில் நான் தொடங்குகிறேன்..! நன்றாக கவனியுங்கள்.. நிலவுக்கும்.. பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு..?? இந்தியன்;- " தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்..!" சீனன்;- "மகிழ்ச்சி நண்பரே..!" இந்தியன்;- "நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா..?" சீனன்;- "கேளுங்கள்..!" இந்தியன்;- "ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள்.. இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும்.. அது என்ன விலங்கு..?? சீனன்;-( அதிர்ச்சியானான்.. நீண்ட நேரம் யோசித்து விட்டு ) "தெரியவில்லை..500 ரூபாயை பிடியுங்கள்..!" இந்தியன் ரூபாயை வாங்கி பாக்கெட்டில் வைத்து விட்டு.. தூங்க ஆரம்பித்தான்..! சீனன்;- "ஏய்.. ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு.. கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும் விலங்கு எது..? இந்தியன்;- தெரியவில்லை..50 ரூபாயை பிடியுங்கள்..!! கொய்யால யார்கிட்ட....

பாடசாலை நகைச்சுவை


  1. Teacher: நீ பெரியவனாகி என்ன பண்ண போற?

    Boy: கல்யாணம்…

    Teacher: அது இல்ல நீ என்நாவ ஆகா விரும்புற ?

    Boy: Husband…

    Teacher: No I Mean உனக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கணும்நு எதிர் பாக்குற ?

    Boy: Wife…

    Teacher: Oh No உங்க Parents’கு என்ன பண்ண போற ?

    Boy: மருமகள் தேடுவன் …

    Teacher: Stupid, உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்க்கிறார் ?

    Boy: பேரகுழந்தை …

    Teacher: அய்யோ கடவுளே !! டை , உன் வாழ்க்கை லட்சியம் என்ன ?

    Boy: நாம் இருவர் !!! நமக்கு இருவர் !!!
Loading

Monday, 20 January 2020

ஷரீஅத்திற்கும் , தரீக்கத்திற்கும் மத்தியில் இருக்கும் வேறுபாடு

*بسم الله الرحمن الرحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله صلى الله عليه وسلم خذ بيدي قلت حيلتي ادركني يا سيدي يا شفيع المذنبين صلى الله عليه وسلم*

*"தூக்கு தூக்கி"...*
~~~~~~...~~~~~~

 *ஆக்கம் : 'ஆலிம் கவிஞர்' மவ்லானா, செய்யது அஹமது அலி பாகவி ஹள்ரத் அவர்கள்.*
இமாம் : மதீனா மஸ்ஜித், சித்தாலபாக்கம், சென்னை.

❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈

*ஒரு நாள் ஆன்மீகப் பேரரசர் மாமன்னர் அவுரங்கசீப் பாதுசா அன்னவர்களின் மாளிகையின் மேல் மாடியில் அரச சபை கூடியிருந்தது.*

*அங்கே ஆன்மீக விவாதம் ஒன்று சபையை அலங்கரித்துக் கொண்டிருந்தது.*

*ஆன்மீக சொற்றொடர்களில் ஒன்றான "ஷரீஅத் ,  தரிக்கத் , மஃரிபத்" என்றால் என்ன..? அதன் வித்தியாசங்கள் என்ன என்கிற  விளக்கத்தை தெரிந்து கொள்கிற விவாதம் அது.*
*எல்லாம் இறைவனை அடைகிற, இறை நெருக்கத்தை பெறுகிற வழி என்று சொல்லப்பட்டாலும் மன திருப்தியை பெறுகிற விளக்கம் அந்த விவாதத்தில் எட்டப்படவில்லை.*

*அப்போது அவுரங்கசீப் பாதுஷா  அன்னவர்கள் டில்லியில் வந்து தங்கி இருக்கிற ஞான மகான் சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் இது பற்றி கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று அவர்களை அழைத்துவர அரண்மனை ஆட்களை அனுப்புகிறார்கள்.. ஆனால் அவர்களை கண்ணியமான முறையில் அழைத்து வரவேண்டும் என்பதற்காகவும், அவர்கள் அரச சபைக்கு விரைந்து வரவேண்டும் என்பதற்காகவும் "பல்லக்கிலே தூக்கி வாருங்கள், மாளிகையில் படிக்கட்டு வழியாக வராமல் "தூக்குத்தூக்கி" (இன்றைய லிஃப்ட் போல் அன்று கூடை போன்ற ஒன்றை வைத்து மேலே தூக்கும் முறை) வழியாக அவர்களை மேலேற்றி அழைத்து வாருங்கள்"... என்று கட்டளையிட்டார்கள்.*

*அதுபோன்று சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் அழைத்துவரப் படுகிறார்கள். அவர்களிடத்திலே அவுரங்கசீப் பாதுஷா அன்னவர்கள் "ஷரீஅத்திற்கும் , தரீக்கத்திற்கும் மத்தியில் இருக்கும் வேறுபாடு என்ன"..? என்று கேட்டபோது சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் அழகாக பதில் கூறினார்கள்.*
*இந்த சபைக்கு  நான் நடந்து வந்து படிக்கட்டின் வழியாக மேலேறி வருவதற்கும் , நான் உங்களிடம் விரைவில் வந்து சேரவேண்டும் என்பதற்காக நீங்கள் உங்களின் பணியாளர்கள் மூலம் பல்லக்கில் தூக்கி வந்து "தூக்குத்தூக்கி" மூலம் மேல் மாடிக்கு என்னை அழைத்து வந்ததற்கும் மத்தியில் என்ன வித்தியாசமோ அதுதான் ஷரீ அத் திற்கும் , தரீகத் திற்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் என்றார்கள்.*

*அதாவது... இரண்டும் இறைவனை அடைகிற, நெருங்குகிற வழி என்றாலும் "ஷரீ அத் என்பது படிக்கட்டில் ஏறி இறைவனை அடைவது போன்றது . தரீகத் என்பது  தூக்குத்தூக்கி மூலம் இறைவனை விரைவில் நெருங்குவது" போன்றதாகும்.. முன்னது இலக்கை அடைகிற தூரம் நீளமானது .. பின்னதில் இலக்கை அடைகிற தூரம் சுருக்கமானதும் இலகுவானதும் ஆகும்.,  என்று நடந்த நிகழ்வை கொண்டே ஆன்மீக விளக்கத்தை அழகாய் புரிய வைத்தார்கள் அந்த சபைக்கு...*
❈•••┈┈┈┈•••❀•••┈┈┈┈•••❈
*🌏 ஆன்லைன் மஸ்லஹி 🌏*