Thursday, 29 June 2017

ஜோக்:அடுத்தவன் வேலையிலே தலையிட க்கூடாது.

முகனூலில் படித்து சிரித்தது. நீங்களும் சிரிக்கலாம்.

வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.*

*அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் போடப்பட்டே... வந்தது.*

*ஒரு நாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது.*

*இடையில் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் வந்தால் அன்றைக்கும் சேர்த்து அடுத்த வேலைநாட்களில் அந்த கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது கண்டு அதிசயித்தார்.*

*கேஷியரை கூப்பிட்டு “யாருய்யா அந்த ஆள்” என்று கேட்டார்.*

*தெரியலை சார் ! தினமும் காலையில் 10 மணிக்கு டான்னு வருவார், பணத்தை போடுவார் போய்ட்டே இருப்பார். ஆள் கொஞ்சம் சிடுமூஞ்சி மாதிரி இருக்கிறதால நாங்கலாம் யாரும் பேசுறதில்லை சார் ! என்றார்.*

*மேனேஜருக்கு இப்படி ஒரு கேரக்டரை சந்திச்சே ஆக வேண்டுமென்று பெரிய ஆவலாகவிட்டது. அடுத்த நாள் காலையிலேயே வந்து காத்திருந்து அந்த நபர் வந்தவுடன் பக்கத்தில் போய் பேச்சு கொடுக்க முயன்றார். அந்த நபரோ இவரை கண்டுகொள்ளாமல் போய்விட்டார்.*

*அவர் புறக்கணித்ததும் வங்கி மேனஜருக்கு அவருடன் பழகி அவர் ஏன் தினமும் ஆயிரம் ரூபாய் வங்கியில் போடுகிறார் என்றும் கண்டுபிடிக்கவேண்டும் என்று பெரிய வெறியே ஆகிவிட்டது.*

*தினமும் பணம் செலுத்தும் இடத்தின் அருகே நிற்பது சிரிப்பதுமாய் இருந்து அந்த நபரும் லேசாக புன்னகைக்க துவங்கியிருந்தார்.*

*ஒரு நாள் மேனஜர் வரும் வழியில் அந்த ஆயிரம் ரூபாய் பார்ட்டி வண்டி பழுதாகி ரோட்டில் நின்றிருந்தார்.மேனேஜர் லிஃப்ட் கொடுத்து வங்கிக்கு அழைத்து வரவே கொஞ்சம் பேசவும் துவங்கியிருந்தார்.*

*ஒரு நாள் அவரிடம் மேனேஜர் ’சார் நாமதான் நண்பர்களாகிட்டோம்ல இப்பவாவது சொல்லுங்க,எதுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் பேங்ல போடுறீங்க. அப்படி என்ன வருமானம் வரும்படி தொழில் செய்யுறீங்க ‘ என்று கேட்டார்.*

*’சார், நான் வேலையெல்லாம் பாக்கலை தொழிலிலும் செய்யலை, நான் தினமும் பந்தயம் கட்டுவேன் அதுல எப்படியும் ஜெயிச்சுருவேன், அந்த காசுதான் சார் அது என்றார்*

*மேனேஜருக்கு நம்பமுடியவில்லை , அது எப்படி தினமும் ஒருத்தன் பந்தயத்தில ஜெயிக்க முடியும் , இந்தாளு பொய் சொல்லுறான் என்று எண்ணிக்கொண்டார். அவரின் முகமாற்றத்தை கண்ட அவன் ‘சார் இதுக்குதான் நான் யாரிடமும் இந்த பந்தய மேட்டரை சொல்வதில்லை என்றான்.*

*அப்படியும் சந்தேகமாய் பார்த்த மேனேஜரிடம் ” சரி சார், நாம ரெண்டு பேருமே இப்ப ஒரு பந்தயம் போடுவோம், நான் ஜெயிக்கலைன்னா பாருங்க என்றான்,*

*டென்சாகிய மேனேஜரும் சரிய்யா பந்தயத்துக்கு ரெடி என்னய்யா பந்தயம்னாரு.*

*’சார், சரியா நாளைக்கு காலையில 10.15க்கு உங்க பட்டெக்ஸ் (இடுப்புக்கு கீழ் அல்லது அமருமிடம்) பச்சைக்கலரா மாறிடும், ரெண்டாயிரம் ரூபாய் பந்தயம் ‘ என்றான்.*

*யோவ் என்னய்யா சொல்ற, எதாவது நடக்குற கதைய சொல்லு என்று மேனேஜர் சொல்ல..*

*பந்தயத்துக்கு வர்றீங்களா இல்லையான்னு கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க சார்னு கேட்டான்.*

*சரின்னு ஒத்துகிட்டார்.*

*காலையில வருவேன் உங்க பட்டெக்ஸ் பச்சை பசேல்ன்னு மாறியிருக்கும் ரெண்டாயிரம் ரூவாயை எடுத்து வையுங்க என்றபடி சென்றுவிட்டான்.*

*மேனஜர்க்கு எப்படி இவ்வளவு தைரியமா பந்தயம் கட்டுறான் என்று ஆச்சர்யம். அவன் போனவுடன் முதல் வேலையாக பாத்ரூம் சென்று தனது பேண்ட்டை அவிழ்த்து கண்ணாடியில் பின்புறத்தை பார்த்தார், அது வழக்கம் போல் கண்ணங்கரேல் என்று என்றுதான் இருந்தது.*

*இருந்தாலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை , அரைமணிக்கொரு முறை பேண்ட்டை அவிழ்த்து பார்க்கவும் போடுவதுமாய் இருந்தார்.*

*விடிந்தது... முதல் வேலையாக அதை போய் பார்த்தார், இப்பவும் அப்படியே கருப்பாகவே இருந்தது. நம்ம பட்டெக்ஸாவது பச்சை கலராகிறதாவது என்று அவரே சமாதானம் சொல்லிக்கொண்டே குளித்து அலுவலகம் கிளம்பினார். எங்கே பஸ்ஸில் உட்கார்தால் எதும் செட்டப் செய்து நிறம் மாற செய்து விடுவார்களோ என்று எண்ணி நடந்தே போனார்.*

*பத்து மணி அலுவலகத்துக்கு 9 க்கே வந்துவிட்டாலும் 10 நிமிடத்துக்கு ஒரு முறை போய் போய் பார்த்து உறுதி செய்தபடியே இருந்தார். இன்னைக்கு அவனை ஜெயிச்சு ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிறனும் என்று ஆவலோடு காந்திருந்தார்.*

*சொல்லி வைத்தாற்போல் சரியாக 10.15 அவன் அந்த அறைக்குள் நுழையவே வேகமாய் சீட்டிலிருந்து எழுந்து தனது பேண்ட்டை கழட்டி திரும்பி நின்று “ இந்தா பார்த்துக்கோ “ அப்படியே கருப்பாதான் இருக்கு என்று பின்பக்கத்தை காட்டினார்.*

*அவன் உடனே அருகிலிருந்தவனிடம்*
*” என்னமோ பேங்க் ஆபிசர், பெரிய மனுசன், அப்படியெல்லாம் செய்யமாட்டருன்னு இந்தாளை நம்பி பந்தயம் கட்டினே,*
*இப்ப என்ன சொல்லுறே, எடு மூவாயிரத்தை “ என்றான் அவன்.*

*அப்போதுதான் கவனித்தார் பந்தயக்காரனுடன் வேறு ஒருவனும் வந்திருந்தான்.அவனும் மேனேஜரை முறைத்தபடி மூன்று "ஆயிரம் ரூபாய்" தாள்களை எடுத்து நீட்டினான்.*

*அதை வாங்கிய பந்தயக்காரன் இரண்டாயிரம் ரூபாய்களை மேனேஜரிடம் நீட்டி*

*“ உங்கிட்ட கட்டின பந்தயத்தில நான் தோத்துட்டேன், ஆனா இவன் கிட்ட கட்டின பந்தயத்தில ஜெயிச்சுட்டேன், ஆயிரம் ரூபாய் லாபம் என்று வழக்கமாய் பணம் கட்டும் கவுண்ட்டருக்கு போய்விட்டான்.*

*அவனுடன் பந்தயம் கட்டி மூவாயிரம் ரூபாய் தோற்றவனிடத்தில் நீ எதற்கு அவனிடம் பந்தயம் கட்டினாய் என்று மேனஜேர் கேட்க*

*வந்தவன் கடுப்பாகி அவரிடம்*
*“போய்யா நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ?*

*என்னைய பார்த்தவுடனே பேண்டை கழட்டி பின்னாடி காமிப்பாருன்னு உன்னைய சொன்னான், ச்சேசே அப்படியெல்லாம் இருக்காதுன்னு உன்னிய நம்பி பந்தயம் கட்டினா இங்க நீ ரெண்டாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு கேவலமான வேலை செய்யுற த்தூ என்று துப்பிவிட்டு போனான்.*

*இதனால் அறியப்படுவதும் நீதி என்னவெனில்....*

அவன் அவன்       வேலையை             அவன் அவன் பார்க்கனும், அடுத்தவன்           வேலையிலே                 தலையிட க்கூடாது...
😆😆😆😆😆😆😆

Thursday, 22 June 2017

ஈகைத்திருநாள்

Naseer Misbahi:
ஃபித்ரா என்னும் சட்டங்களும்&ரமலான் என்னும் மதரஸாவில் நாம் பயின்ற பாடங்களும்

👇👇👇

ன்ஷா அல்லாஹ் வெகு விரைவில்நோன்புப் பெருநாளைக் கொண்டாட இருக்கிறோம். இப் பெருநாளை அரபியில் ஈதுல் பித்ர் (EID UL FITR) என்று  அழைக்கிறார்கள். தமிழில் இதை ஈகைத்திருநாள் என்று சொல்லலாம். உலக சரித்திரத்திலேயே ஈகைக்காக ஒரு ஒரு நாளை திருநாளாகக் கொண்டாடுவது இஸ்லாத்தின் சிறப்பியல்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. ஈத்துவக்கும் இன்பத்தை கடமையாக்கிய ஈடு இணையற்ற மார்க்கமே இஸ்லாம். உலகில் தோன்றிய எந்த மதத்துக்கும் இந்த சிறப்பு இல்லை. தர்மமும் மனிதாபிமானமும் சமத்துவமும் சகோதரத்துவமும் இஸ்லாத்தின் நாடி நரம்புகளில் ஓடிக் கொண்டு இருக்கும் கொள்கைகள். பிற மதங்களில் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதற்குப் பரிகாரம் கோயில் உண்டியலில் காசு போடவேண்டும்; நூற்றுக் கணக்கில் தேங்காய் உடைக்க வேண்டும்; நெருப்பில் நடக்க வேண்டும்; தலையில் மொட்டை அடிக்க வேண்டும்; மண்சோறு சாப்பிட வேண்டும்; ஆணிச்செருப்பு போட வேண்டும் ; அரை நிர்வாணமாய் ஓடவேண்டும்; அலகு குத்த வேண்டும்; பச்சைக்  குழந்தைகளை மண்ணில் போட்டு புதைத்து பின் மீட்டு எடுக்க வேண்டும்; மொட்டை  மண்டையில் மொட்டைத்தேங்காயை உடைக்க வேண்டும்- இப்படி. ஆனால் முஸ்லிம் ஒருவன் பாவமான செயலை செய்துவிட்டால் – அந்தப் பாவத்துக்குப் பரிகாரம் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; இல்லாதோர்க்கு தானியங்களை தாரைவார்க்க வேண்டும் என்பதே. அந்த வகையில் தர்மத்தை தனது மூச்சாக வைத்து இருப்பது இஸ்லாம். 

ஈகைத் திருநாள் தர்மமாகிய ஃபித்ராவைப் பற்றி...

عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى الْعَبْدِ وَالْحُرِّ وَالذَّكَرِ وَالْأُنْثَى وَالصَّغِيرِ وَالْكَبِيرِ مِنْ الْمُسْلِمِينَ وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَاةِ .(بخاري)

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவுகோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்., நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.நபி ஸல் அவர்களின் காலத்தில் வழமையில் இருந்த ஸாஃ என்பதை நம்முடைய நாட்டின் கிலோ, கிராம் கணக்கோடு ஒப்பிடும்போது தான் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அதனால் தான் ஹனஃபீ, ஷாஃபீ வித்தியாசம் வருகிறது. ஹனஃபீ மத்ஹபில் பணமாகவும் கொடுக்கலாம். ஏனெனில் அதைப் பெற்றுக் கொள்ளும் ஏழைகள் தமக்குப் பிரியமான உணவை வாங்கிக்  கொள்ளலாம்.

ஃபித்ராவின் நோக்கம்- இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاَةِ فَهِىَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاَةِ فَهِىَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ.(ابوداود)

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபி (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள். நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

ஃபித்ராகொடுக்கும்நேரம்

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.), நூல்: புகாரி 1503, 1509இந்த ஹதீஸ் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது

ஃபித்ராவை பெருநாள் வருவதற்கு முன்பும் கொடுக்கலாம். ரமழான் ஆரம்பிக்கும்போதே ஃபித்ராவுடைய காலம் ஆரம்பித்து விடுகிறது -

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَبِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنْ الطَّعَامِ....................ذَاكَ شَيْطَانٌ (بخاري

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால்

இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகிறேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ‘ரமளான் ஜகாத்’என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும். மேலும் ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.

 

ஜகாத், ஃபித்ரா வேறுபாடு

ஜகாத் கடமையாகுவதற்கு அதற்குரிய நிஸாபை அடைந்திருக்க வேண்டும். ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும். குடும்ப நபர்கள் அனைவரையும் கணக்கிடத் தேவையில்லை. ஆனால் ஃபித்ரா அப்படியல்ல. அன்றைய அவசியமான செலவுகள் போக கையிருப்பு வைத்திருப்பவர் தனக்காகவும், தன் குடும்ப நபர்களுக்காகவும் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். அன்று அதிகாலையில் பிறந்த குழந்தையையும் கணக்கிட்டு கொடுக்க வேண்டும்.

ரமழான் எனும் மதரஸாவில் நாம் பயின்ற பாடம்

நோன்பின் நோக்கம் இறையச்சம் ஏற்பட வேண்டும். அது தொடர வேண்டும் என்பது தான்...

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183)البقرة

அமல்களில் சிறந்தது தொடர்படியாக செய்யப்படும் அமல்கள் தான்

عَنْ أُمِّ سَلَمَةَ رضي الله عنها قَالَتْوَالَّذِي ذَهَبَ بِنَفْسِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مَاتَ حَتَّى كَانَ أَكْثَرُ صَلَاتِهِ وَهُوَ جَالِسٌ وَكَانَ أَحَبُّ الْأَعْمَالِ إِلَيْهِ الْعَمَلَ الصَّالِحَ الَّذِييَدُومُ عَلَيْهِ الْعَبْدُ وَإِنْ كَانَ يَسِيرًا (ابن ماجة)

இந்த சீசன் தொழுகையாளிகள் சீசனில் மட்டுமே தொழுகிறார்கள். வியாபாரிகளுக்குக் கூட சீசன் இருக்கிறது. அவர்களுக்கு மற்ற நேரங்களில் சாதாரணமாக வியாபாரம் நடைபெறும். சீசன் நேரங்களில் அதிகமாக வியாபாரம் நடைபெறும்

ஆனால் இங்கே ஒரு கேள்வி ?   ஒரு வியாபாரி சீசன் நேரத்தில் மட்டுமே கடையை திறக்கிறார். மற்ற நேரங்களில் அவர் கடையை மூடியே வைத்திருக்கிறார். கடையை திறப்பதில்லை. இவருக்கு சீசன் வியாபாரம் கை கொடுக்குமா ? நிச்சயமாக கை கொடுக்காது

மற்ற நேரங்களில் வியாபாரம் செய்து பழகியவர் சீசனிலும் வியாபாரம் செய்தால் அதிக பலனைப் பெறலாம்

அதேபோல ரமழான் அல்லாத நேரங்களிலும் வணங்கியவர், ரமழானிலும் வணங்கினால் அதிக நன்மைகளைப் பெறலாமே தவிர, ரமழானில் மட்டும் அதிகம் வணங்கி, ரமழான் முடிந்தவுடன் பள்ளியின் பக்கம் எட்டிப் பார்க்காதவர் நன்மைகளைப் பெற முடியாது

عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ...وَأَنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ (بخاري) باب الْقَصْدِ وَالْمُدَاوَمَةِ عَلَى الْعَمَلِ- كتاب الرقاق

ஒரு முதலாளியாக நாம் இருந்து கற்பனை செய்து பார்க்கிறோம் - நம்மிடம் ஒரு தொழிலாளி வேலை செய்கிறான் மாதத்தில் எல்லா வேலை நாட்களிலும் தொடர்ச்சியாக வர வேண்டும் என்று நாம் கட்டளையிட்டிருக்கும் நிலையில்,  ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் அவன் வரா விட்டால் பொறுத்துக் கொள்வோம். ஆனால் அவன் வருவதே மாதத்தில் மூன்று நாட்கள் தான். அல்லது வாரத்தில் ஒரு நாள் தான் என்றால் நாம் அவனை என்ன செய்வோம். அவனை மிரட்டுவோம்  வாரத்தில் ஒரு நாள் வந்து கையெழுத்துப் போட்டு விட்டுச் செல்வதற்கு நீ என்ன பெரிய அதிகாரியா ?  ஒழுங்காக வேலைக்கு வரா விட்டால் நீ நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சொல்வோம் அல்லவா?  சம்பளம் மட்டுமே கொடுக்கும் நமக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கும்போது நம்மைப் படைத்துப் பரிபாலிப்பவனுடைய கட்டளை தினமும் ஐந்து வேளை என்றிருக்க, POINT  to POINT மாதிரி ஜும்ஆ to ஜும்ஆ என்ற நிலையை அல்லாஹ் பொறுத்துக் கொள்வானா ?

ரமழானில் மட்டும் ஐவேளை தொழுது, ரமழான் முடிந்தவுடன் தொழுகையை விட்டு விடுபவர்களுக்கு உதாரணங்கள்

 

உதாரணம் 1- ஒருவர் ஒரு கட்டிடத்தை மிகவும் நேர்த்தியாக கட்டினார். அதனுடைய ஒவ்வொரு வேலைப்பாடுகளையும் மிக நன்றாக கவனித்து, கதவு இங்கே அமைய வேண்டும், ஜன்னல் இங்கே அமைய வேண்டும் என்றெல்லாம் வேலையாட்களை ஏவி,  இரவும், பகலும் விழித்திருந்து,  ரசித்து, ரசித்து அதனை கட்டினார். ஒரு வகையாக எல்லா வேலைகளும் முடிந்து திறப்பு விழா நேரத்தில் ஒரு புல்டோசரை வைத்து அனைத்தையும் இடித்து தரை மட்டமாக்கி விட்டார். இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்

உதாரணம் 2-ஒரு பெண் காலை முதல் மாலை வரை தன் கூந்தலை அலங்கரித்தாள். அழகாக தலையை வாரி, பின்னல் போட்டு, ஜடை போட்டு, அதில் கிளிப்பைச் சொருகி, தலைக்குப் பூச்சூடி, ஒரு புது மணப்பெண்ணைப் போல மாலையில் தயாரான பின்பு, அவள் திடீரென்று அனைத்தையும் அவிழ்த்துப் போட்டு விட்டு தலைவிரி கோலமாக ஆகி விடுகிறாள். இவளைப் பற்றி என்ன நினைப்போம்

 

உதாரணம்- 3-ஒருவர் மாடியிலிருந்து கீழே விழுந்து,  காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்காக புத்தூர் கட்டுப் போடுகிறார். சில நாட்கள் கழித்து மருத்துவர் இவரிடம் நீங்கள் நடைபயிற்சி பழக வேண்டும். தினமும் உங்களுடைய வீட்டு மாடிப்படியில் முடிந்த வரை எத்தனை படிகள் ஏற முடியுமோ ஏற முயற்சி செய்யுங்கள் என்கிறார். இவரும் தினந்தோறும் முயற்சி செய்கிறார். சில படிகள் ஏற முடிகிறது. பிறகு முடியவில்லை. எனினும் நாளுக்கு நாள் முன்னேற்றம். கடைசியாக ஏதோ ஒரு நாளில் அனைத்து மாடிப்படிகளையும் கடந்து மாடிக்குச் சென்று விட்டார். அவ்வாறு மாடிக்குச் சென்றவர் பால்கனியிலிருந்து மறுபடியும் கீழே விழுந்து தன் கை, கால்களை உடைத்துக் கொண்டார். எலும்புகள் நொறுங்கி விட்டது. இவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்

 

உதாரணம்- 4-ஒருவர் நடந்து செல்லும் போது சேற்றில், சகதியில் விழுந்து விட்டார். அவருடைய ஆடை, மற்றும் உடம்பெல்லாம் சகதி அதைப் பார்த்த ஒரு நல்ல மனிதர் சகதியில் விழுந்தவரை எப்படியோ காப்பாற்றி, அவரைக் குளிப்பாட்டி, உடம்பையெல்லாம் கழுவி விட்டு புத்தாடை அணிவித்து, மாப்பிள்ளை மாதிரி ஆக்கி, “தம்பி... பார்த்துப் போ ! மறுபடியும் சேற்றில் விழுந்து விடாதே !  என்று எச்சரித்து அனுப்ப, அவனோ மறுபடியும் நேராகப் போய் சேற்றிலேயே விழுந்து விட்டான். இவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்

ஆக மேலே சொல்லப்பட்ட உதாரணங்கள் அனைத்தும் ரமழானில் தொழுகையாளிகளாக இருந்து பின்பு ரமழான் முடிந்த பின்பு மஸ்ஜிதை மறந்து விடுபவர்களுடைய நிலையைப் போன்று தான்.

நபி ஸல் அவர்களின் காலத்தில் தொழ நேரமில்லை என்று கூறியவர்கள் முனாஃபிக்கீன்கள் மட்டும் தான்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَثْقَلَ صَلَاةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ (مسلم)

தொழுகையை விட தொழிலை பெரிதாக கருதினால்...

قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (24)سورة التوب

👇👇👇

Tamilnadu Jamaathul Ulama Sabai
http://www.ulama.in/