Tuesday, 22 March 2016

அரபு மன்னர்களும் ஈரானும் : தொடரும் துரோகம் மீண்டும் இன்னொரு அரபுலகின் துரோகமா ? முதலாம் உலக போருக்கு முன்னதாக உதுமானிய கிலாபத்துக்கு எதிராக அணி திரண்டு கிலாபத்தை கவிழ்த்த அரபு கிளர்ச்சிக்கும் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமாகியுள்ள ஈரானை தாக்க அரபுகள் அமெரிக்காவுக்கு கொடுத்த அழுத்தத்திற்கும் ஏராளமானஒற்றுமைகள் உள்ளன. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் அரபு கோத்திர தலைவர்கள் முஸ்லீம் மன்னரான உதுமானிய கலீபாவுக்கு துரோகமிழைத்து பிரிட்டனின் கூட்டாளிகளாய் மாறியதன் விளைவு உதுமானிய கிலாபத் கவிழ்க்கப்பட்டு சில ஆண்டுகளுக்குள்ளாகவே மத்திய கிழக்கு பிரிட்டனின் காலனியாய் மாறி போனது. 3 தசாப்தங்களுக்குள்ளாகவேஇஸ்ரேல் மத்திய கிழக்கில் மலர்ந்தது. சவூதி அரேபியா, ஈராக், குவைத், ஜோர்டான் மற்றுமுள்ள வளைகுடா நாடுகள் சுதந்திரமான நாடுகளாக அறிவிக்கப்பட்டாலும் மேற்குலகின் அடியாட்களாய் விளங்கின. லீவாட் சிரியா மற்றும் லெபனானாக பிரிக்கப்பட்டது. பலஸ்தீன் பிரிட்டனின் முழுமையான கட்டுபாட்டில் வந்தது. உதுமானிய கிலாபத்துக்கு எதிரான அரபுலக கிளர்ச்சியை இயக்கியதில் முக்கிய பங்கு பிரிட்டிஷ் உளவாளிடி.இ.லாரன்ஸுக்கும் வெளியுறவு துறை ஆலோசகர் கெர்டுரூட் பெல்லுக்கும் இருந்தாலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களை வகித்தவர்கள் சவூதி அரேபியாவின் தந்தை என அழைக்கப்படும் இப்னு சவூத் எனும் அப்துல் அஜீஸ் பின் அப்துர் ரஹ்மான் அல் சவூதும் மக்காவின் அன்றைய ஆளுநராக இருந்த ஹூசேன் பின் அலியும்ஆவார்கள். பிரித்தானியா அரசாங்கம் இருவரையும் மன்னராக்குவதாக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் இருவரும் கிலாபத்தின் வீழ்ச்சிக்கு பங்காற்றினர். ஒரு உறையில் இரண்டு வாட்கள் இருக்க முடியாது எனும் மரபுக்கேற்ப ஹூசைனை தோற்கடித்து தன்னை சவூதியின் மன்னராக இப்னு சவூத் அறிவித்து கொண்டார். பிரிட்டனிடம் தஞ்சமடைந்த ஹூசைனின் இரு மகன்களையும் ஜோர்டான் மற்றும் ஈராக்கின் மன்னர்களாக பிரிட்டன் முடி சூட்டியது. இந்த நன்றி கடனுக்காக மேற்குலகின் அடிவருடிகளாய் அரபு மன்னர்கள் மாறிய நிலை இன்றும் தொடர்கிறது. உதுமானிய கிலாபத்தை கவிழ்த்த நூறு ஆண்டுகளுக்கு பின் இன்னொரு இஸ்லாமிய சக்தியான ஈரானுக்கு எதிரான அரபுலக சதி வீக்கிலீக்ஸ் உபயத்தால் அம்பலமாகியுள்ளது. இதில் ஆச்சரியமளிக்க கூடிய விஷயம் என்னவென்றால் ஈரானின் அழிவை தான் இஸ்ரேலும் ஆவலுடன் நோக்குகிறது. ஈராக்கை போல் ஈரானும் அமெரிக்காவால் தரைமட்டமாக்கப்படுவதை தான் அரபுலகும் விரும்புகின்றது என்றால் அரபுலகும் இஸ்ரேலும் கள்ள கூட்டாளிகளா என்பது தான் அரபுலகம் மற்றும் ஒட்டு மொத்த முஸ்லீம் உலகின் மக்கள் கேட்கும் கேள்வியாக உள்ளது. ஈரானை ஒழிக்க வேண்டும் என்பது மாத்திரமல்ல, 2006ம் ஆண்டு லெபனானில் இஸ்ரேலிய படைகளை புறமுதுகிட்டு ஓட செய்த போராளி இயக்கமான ஹிஸ்புல்லாவையும் ஒழிக்க இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆதரவுடன் அரபு நாடுகளின் படைகள் ஹிஸ்புல்லாவை தோற்கடிக்க வேண்டும் என்ற சவூதி அரேபியாவின் சிறுமைத்தனமான எண்ணம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இச்செய்திகள் கேள்விப்பட்ட அரபுலக மக்கள் கொதித்து போயுள்ளனர். அரபுலகம் சவூதியின் தலைமையில் அணி திரண்டு பலஸ்தீனை இஸ்ரேலிடமிருந்து விடுவிக்க போர் தொடுத்தியிருந்தால் ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகமும் சவூதியை மனமார வாழ்த்தியிருக்கும். ஆனால் இவர்களோ இஸ்ரேலின் எதிரியான ஹிஸ்புல்லாவை அழிக்க நாடியுள்ளனர். இதனால் தானோ என்னவோ ஒரு முறை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு சவூதி எங்களுக்கு நட்பு நாடு என்று கூறினார் போலும். ஆனால் அம்பலப்படுத்தப்பட்டுள்ள விக்கிலீக்ஸின் கேபிளில் ஒன்று கூட சவூதி அரேபியா இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுக்க முனைந்ததாகவோ குறைந்த பட்சம் பலஸ்தீன் நாடு உருவாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா மூலம் அழுத்தம் கொடுக்க முனைந்ததாகவே சொல்லவில்லை. இஸ்லாமின் ஆரம்ப காலங்களில் இருந்த கிலாபத்தை போல் முஸ்லீம் நாடுகளின் பிரச்னைகளை கையில் எடுத்து போராடுவதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லீம் உலகுக்கும் தலைமைத்துவம் வழங்கும் தகுதி சவூதி அரேபியாவுக்கு உண்டு. தன் நிதி மற்றும் புனித தலங்களின் காப்பாளர் எனும் அடிப்படையில் வெகு எளிதாக முஸ்லீம் நாடுகளை ஒன்றிணைத்து பலஸ்தீனை மீட்டெடுக்க சவூதியால் முடியும். ஆனால் அதன் பொருளாதரம் கூட முஸ்லீம் நாடுகளுக்கு பயன்படுவதை விட சரிந்து கிடக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி பிடிக்க தான் உதவுகிறது என்பது தான் யதார்த்தம். சவூதியின் பொருளாதாரம் அமெரிக்காவுக்கு எந்த அளவுக்கு உதவுகிறது என்பதற்கு உதாரணமாய் சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து 60 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாக சவூதி ஆயுதங்கள் வாங்கியதை குறிப்பிடலாம். தற்போதைய சூழலுக்கு அவர்கள் அதை பயனபடுத்த போவதில்லை என்ற போதிலும் அவர்கள் வாங்குவதில் ஆர்வமாய் உள்ளனர். சவூதி அரசாங்கம் தன் நிதியை பயன்படுத்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்கு செலவழித்து மருத்துவம், பெளதிகம், இரசாயனம் என எல்லா துறைகளிலும் தலை சிறந்த சவூதி / அரபு / முஸ்லீம் விஞ்ஞானிகளை உருவாக்கலாம். இதற்கான ஆற்றல் படைத்தவர்கள் இல்லை என்பதல்ல, மாறாக சவூதிக்கு இப்படி உருவாக்க விருப்பமில்லை என்றே அர்த்தம் கொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு மாறாக பலஸ்தீனை ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலின் பாதுகாவலன் அமெரிக்காவுக்கு தன் வளங்களை வாரி இறைத்து பொருட்கள் வாங்கவே விரும்புகிறது. ஈரானின் அணு ஆயுத திட்டத்தை சவூதி எதிர்ப்பதற்கு மிக முக்கிய காரணம் ஆணு ஆயுத பலம் கொண்ட ஈரானால் தனக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை தூண்டி விட முடியும் என்பது தான். ஏற்கனவே மக்கள் அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது சவூதி அறியாத ஒன்றல்ல. அதிருப்தி குரல்களும், எதிர்ப்பாளர்களும் துப்பாக்கி முனையில் கடத்தப்படுவதும், அமுக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றே. அதனால் தான் விக்கிலீக்கின் இன்னொரு கேபிளில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அல்-காயிதா, லஷ்கர் இ தொய்பா, தாலிபான் போன்றவற்றிக்கு சவூதி அரசு அல்ல சவூதி மக்களே நிதியுதவி செய்கின்றனர் என குற்றம் சாட்டியிருந்தார். அரசின் அடிவருடிகளாக உள்ள சில அறிஞர்களோ ஷியா ஈரான் சுன்னி இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறி யூத இஸ்ரேலுடன் கை கோர்த்தாவது ஈரானை அழிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் பாவம் அமெரிக்காவுக்கு எதிரான இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு தலைமேயேற்க சவூதி வலுக்கட்டாயமாக மறுப்பதால் தான் அவ்வெற்றிடத்தை ஈரான் நிரப்புகிறது என்பதை மறந்து விட்டனர். அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும். ஈரானின் மீது தாக்குதல் நடத்த சவூதி அரேபியா கொடுத்த அழுத்தத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளதை தொடர்ந்து அஜீஸ் இஜ்ஜத்தீன் எழுதிய கட்டுரையை ஒரு சகோதரர் அவரின் கருத்துடன் அனுப்பியிருந்தார்.  அவரின் கருத்தையும் இத்துடன் மொழியாக்கம் செய்திருக்கின்றோம் சகோதரரின் கருத்து சர்வதேச முஸ்லீம் மற்றும் இஸ்லாமிய விஷயங்களில் ஆர்வமுள்ள அனைவராலும் ஈரானின் மேல் போர் தொடுக்க சவூதி கொடுத்த அழுத்தத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது கவனிக்கப்பட கூடிய விஷயமாய் உள்ளது. இஸ்லாமிய விழுமியங்களையும் சுய கெளரவத்தையும் அற்ப உலகியல் இலாபங்களுக்காக பிரிட்டிஷாரிடம் விற்று தான் மன்னராக வேண்டுமென்பதற்காக முஸ்லீம் உலகுக்கு இப்னு சவூது ஏற்படுத்திய பாதிப்புகளை அஜீஸ் இஜ்ஜத்தீனின் கட்டுரை படம் பிடித்து காட்டுகிறது. முஸ்லீம்களின் வீழ்ச்சியின் வரலாறு உதுமானிய கிலாபத்தின் மறைவிலிருந்து தொடங்குகிறது. இன்று முஸ்லீம் நாடுகளை வழி நடத்தும் தலைமை பொறுப்புக்கு ஈரான் முனைகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் சவூதி அரேபியா ஒட்டு மொத்த முஸ்லீம் உலகுக்கும் குறிப்பாக அரபுலகத்திற்கும் செயத தவறுகளே என உறுதிபட கூற முடியும். இயற்கையாகவே முஸ்லீம் உலகுக்கு தலைமை தாங்கும் தகுதி உள்ள சவூதி அரேபியாவின் மன்னர்கள் தான் இஸ்ரேலுடன் கள்ள உறவு கொண்டு முஸ்லீம் உலகின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளனர் என்பதை மறுக்க முடியாது. பாலஸ்தீன விவகாரத்தைஒரு வேளை இதை படிக்கும் யாரும் என்னை ஷியா என்று நினைத்தால் தவறு. செத்து பிழைக்கும் சவுதி மன்னர்களை காட்டிலும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஈரானின் துணிவு எனக்கு பிடித்திருக்கின்றது

ஆயுள் காப்பீடு பற்றிய தீர்வு என்ன?

🌾"இஸ்லாத்தின் பார்வையில் (லைப் இன்சூரன்ஸ்) ஆயுள் காப்பீடு பற்றிய தீர்வு என்ன?"🌾  ♣ இஸ்லாத்தின் பார்வையில் லைப் இன்சூரன்ஸ் (உயிர் காப்பீடு, வாகன காப்பீடு, சொத்து காப்பீடு, பொருள் காப்பீடு, மருத்துவ காப்பீடு) இவையல்லாம் கூடுமா? என்று பார்ப்பதற்கு முன்பு காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன? என்பதை பார்க்கலாம்.   ஆயுள் காப்பீடு, பொருள் காப்பீடு, வாகனக் காப்பீடு, சொத்துக் காப்பீடு அல்லது மற்ற எந்தவகையான காப்பீடு முறையாக இருந்தாலும் அவை அனைத்தும் ஓர் ஒப்பந்தமாகும். காப்பீடு நிறுவனத்திற்கும் காப்பீடு செய்து கொள்ளும் நபருக்கும் மத்தியில் ஏற்படும் ஒப்பந்தம்தான் 'இன்சூரன்ஸ்' என்று அழைக்கப்படும்.   ♣ காப்பீடு முறை:-  காப்பீட்டு முறையானது காப்பீடு செய்யப்படும் பொருளுக்கு சேதமோ அல்லது அழிவோ ஏற்படும்போது அல்லது காப்பீடு செய்துள்ள நபருக்கு விபத்து போன்றவற்றின் காரணமாக மரணம் ஏற்படும்போது ஒருகுறிப்பிட்ட தொகையை அல்லது ஒரு குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகையை அல்லது பொருளின் சந்தை விலையை தனக்கோ அல்லது தான் குறிப்பிடும் நபருக்கோ அல்லது தனது வாரிசுகளுக்கோ காப்பீடு நிறுவனம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காப்பீடு செய்யும் நபர் முன்வைக்கிறார்; அதற்காக காப்பீடு செய்யும் நபர் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறது, ஆகவே ஒரு கோரிக்கையை காப்பீடு செய்பவர் முன்வைக்கிறார், அதை ஒரு நிபந்தனையின் அடிப்படையில் காப்பீடு நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது.   ♣ இஸ்லாத்தில் காப்பீடுத் திட்டம் கூடுமா?   இஸ்லாத்தில் காப்பீட்டுத் திட்டம் கூடுமா? கூடாதா? என்று நேரடியாக பதில் கூறப்படவில்லை. ஆனாலும் சில வழிமுறைகளைக்கொண்டு கூடுமா? கூடாதா? என்பதை அறிஞர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள்.  காப்பீடு திட்டம் (இன்சூரன்ஸ்) என்பது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் இல்லை. ஆனால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் எந்த ஒரு வியாபாரமாக இருந்தாலும், கொடுக்கல் வாங்கலாக இருந்தாலும் அதில் எது கூடும்? எது கூடாது?  என்பதை மிகத் தெளிவாக விளக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். இன்றைக்கு நடைமுறையில் உள்ள காப்பீட்டுத் திட்டங்களில் மார்கத்திற்கு மாற்றமான வட்டி கலந்த காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன. வட்டியில்லாத காப்பீட்டுத் திட்டங்களும் உள்ளன. நம்முடைய பணத்திற்கு வட்டி கணக்கிட்டு தரக்கூடிய காப்பீட்டுத் திட்டங்களில் நாம் ஒரு போதும் சேர்ந்து விடக்கூடாது. இது மார்க்கத்திற்கு மாற்றமானதும் மறுமையில் நிரந்தர நரகத்தில் கொண்டு போய் சேர்க்கின்ற பாவமாகும்.  ♦ ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.  (அல்குர்ஆன் : 3:130)  ♦ அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.  ”அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்“ என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “இறைத்தூதர் அவர்களே! அவை எவை?“ என்று கேட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள். (ஷஹீஹ் புகாரி).  குறிப்பு :-  ஒருவர் வட்டியுடன் சேர்த்து திரும்பக் கிடைக்கும் இன்சூரன்ஸில் சேர்ந்து எனக்கு வட்டி வேண்டாம் என்னுடைய அசல் தொகை மட்டும் போதும் என்று கூறினால் அது மார்க்கத்தில் ஹலால் ஆகும். ஆனால் இன்னும் சில காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. அவற்றில் வட்டியின் எந்த ஒரு அம்சமும் கிடையாது. இவற்றில் நாம் போடும் பணம் நமக்கு திரும்பக் கிடைக்காது. ஆனால் நமக்கு பாதிப்பு ஏற்படும் போது இன்சூரன்ஸ் நிறுவனம் நம்முடைய பாதிப்பிற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும்.  நமக்கு பாதிப்பு ஏற்படவில்லையில்லையென்றால் நம்முடைய பணம் நமக்கு திரும்பக் கிடைக்காது.  ♦ உதாரணமாக மருத்துவக் காப்பீடு (medical insurance), வாகனக் காப்பீடு (vechicle insurance) போன்றவற்றைக் கூறலாம். நம்முடைய மார்க்க அடிப்படையில் நாம் அனைவரும் பணம் போட்டு பைதுல் மால் ஒன்றை ஆரம்பிக்கின்றோம். நமக்கு நோய் ஏற்படும் போது அந்த பைதுல் மாலின் மூலம் நமக்கு உதவி செய்வார்கள். நாம் பைதுல் மாலிற்கு செலுத்திய பணம் குறைவாக இருந்தாலும் அனைவரின் பணமும் சேர்ந்து நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது. நமக்கு பாதிப்பு ஏற்படவில்லையென்றால் அந்தப் பணம் வேறு யாருக்காவது பயன்படும். இது போன்ற ஒரு ஒப்பந்தத்தில்தான் மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு செய்யப்படுகிறது. நாங்கள் இந்த மருத்துவக் காப்பீட்டில் பணம் செலுத்துகின்றோம். நமக்கு பாதிப்பு வரும்போது அந்த நிறுவனம் நம்முடைய பாதிப்பிற்கு உதவி செய்கிறது. நமக்கு பாதிப்பே வரவில்லையென்றால் நம்முடைய பணம் பாதிப்பு ஏற்பட்ட மற்றொரு சகோதரருக்கு உதவியாகச் செல்லும். இந்த அடிப்படையில்தான் அனைவரும் பணம் செலுத்துகின்றனர். இதில் பணத்திற்கு எந்த விதமான வட்டியும் கணக்கிடப்படுவதில்லை.ஆகவே இது போன்றுதான் வாகன இன்சூரன்சும். நாம் நம்முடைய வாகனத்திற்காக குறிப்பிட்ட கால அளவில் குறிப்பிட்ட தொகையை காப்பீடாகச் செலுத்துகின்றோம். இந்த குறிப்பிட்ட கால அளவில் நமக்கு பாதிப்புகள் ஏற்படும் போது அந்த நிறுவனம் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறது. இதில் மூன்று விதமான பாதிப்புகள் ஏற்படும்.  1) ஒன்று நாம் ஓட்டும் போது எதிரில் வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.  2) இரண்டாவது நாம் ஓட்டுகின்ற வண்டிக்கு பாதிப்பு ஏற்படும்.  3) மூன்றாவது வண்டியின் ஓட்டுனருக்கு ஏற்படும்.  நாம் வாகனத்தை ஓட்டிச் சென்று ஒருவன் மீது மோதி அவன் இறந்து விட்டால் இஸ்லாத்தின் அடிப்படையிலேயே அவனுக்கு அவனுடைய குடும்ப நிலையை பார்த்து அவனுக்கு நஷ்டயீடு கொடுக்க வேண்டும் என்பது கட்டாய மார்க்க விதி.  நாம் யாராவது ஒருவர் மீது மோதி அவர் மரணத்திதாலோ அல்லது வண்டிக்கு ஏதாவது ஆனாலோ அல்லது நமக்கு ஏதாவது ஆனாலோ எவ்வளவு செலவானாலும் அந்த நிறுவனம் பார்த்துக்கொள்ளும். அப்படி எதுவும் ஆகவில்லையென்றால் பணம் திரும்ப வராது. இவ்வாறாக கூறித்தான் அனைவரிடமும் பணம் வாங்கப்படுகிறது.  இதில் வட்டி இல்லை. அதற்கான சாயலும் இல்லை. இது ஒரு கூட்டு உதவித் திட்டம் தான். இதற்கு மார்கத்தில் எந்தத் தடையும் இல்லை.  ஆகையால் இது நமக்கு அனுமதியாகும். நீங்கள் குறிப்பிட்டுள்ள காப்பீட்டுத் திட்டம் வட்டியில்லாத வகையைச் சேர்ந்ததாகும். எனவே அதில் இணைவது தவறுகிடையாது.  குறிப்பு : உயிருக்கு பயந்து, தக்கவித்துக்கொள்ள செய்யப்படும் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் திட்டத்தை இஸ்லாம் மார்க்கம் அனுமதிக்கவில்லை ஏனெனில் மரணம் என்பது எப்போதும் வரலாம் அந்த மரணித்தில் இருந்து தப்பிக்கொள்ள முன்கூட்டியே சேர்கப்படும் காப்பீட்டுத் திட்டம் கூடாது அது இறைநம்பிக்கையை குறைக்கின்றது அதுமட்டுமல்லாமல் கலாகத்ர் நம்பிக்கையை இழக்கச்செய்கிறது.  ♦ எனவே மேலே கூறப்பட்ட முறையில் இன்சூரன்ஸ்முறை ஷரியாவின் கண்ணோட்டத்தில் கூடுமானதான விஷயமாக இருக்கிறது, இதனடிப்படையில். சொத்துக் காப்பீடு வாகனக் காப்பீடு ,பொருள் காப்பீடு ஆகிய காப்பீடுகளும் இதரவகை காப்பீடுகளும் ஷரியாவிற்க்கு முறனில்லாததாக மேலும் வட்டியில்லாததாக இருந்தால் கூடும் வட்டி கலந்த திட்டங்கலாக இருந்தால் கூடாது.  💐💐ஹலாவதுல் ஈமான்💐💐 ✳ BY Moulavi  S.L Abdhur Rahman Ghawsi

எனது பெயர்    குர்ஆன்

📖💠📖💠📖💠📖💠📖💠📖  💠, நூர், தன்ஸீல்,  புர்கான்   💠எனது மொழி    :- ♋அரபு     💠முதலில் இருந்த இடம் :-        லவ்ஹூல் மஹ்பூல்  💠பின்னர் இறக்கப்பட்ட        இடம் :-      பைதுல் இஸ்ஸா      (முதலாம் வானம்)   💠இந்த பூமிக்கு வருகை :-     நபி (ஸல்லல்லாஹு  அலைஹி  வ ஸல்லம் ) அவர்களின் 40ம்    வயதில் ஹிரா குகையில்      இருக்கும்போது      💠இறங்கிய காலம் :-                  23 வருடங்கள்   💠பாதுகாக்கப்பட்ட முறைகள் :-     ▪ மனனம் (ஹாபிழ்)   ▪எழுதுதல் (குத்தாபுல் வஹி)   ▪செயற்படுத்துதல் (அமல் செய்தல்)   💠என்னைநூல் 📚உருப்படுத்தியவர்:  ▪அபூபக்கர் ஸித்தீக்(ரழியல்லாஹூ  அன்ஹூ )   ▪ஸைத் இப்னு தாபித்(ரழியல்லாஹூ  அன்ஹூ )   தலைமையிலான குழு   💠நூலுருப்படுத்த 📚தூண்டியவர்:-                  உமர்இப்னு கத்தாப் (ரழியல்லாஹூ  அன்ஹூ )   💠அதற்கான காரணம் :-   யமாமா யுத்தத்தில் 70க்கும்    மேற்பட்ட ஹாபிழ்கள்  கொலை  செய்யப்பட்டமை.   💠ஒரே அமைப்பில் வெளியிட்டவர்கள்:-      உதுமான் (ரழியல்லாஹூ  அன்ஹூ )    📚ஜாமிஉல் குர்ஆன்📚   💠அதற்கான காரணம் :-       ▪ஆர்மோனியா போரில் என்னைத் தவறாக ஓதியதை, ஹூதைபதுல் யமானி (ரழியல்லாஹூ  அன்ஹூ  )அவதானித்தார்.  ▪அறபி அல்லாதவர்களும் இஸ்லாத்தில் வந்தமை.   💠என்னுடைய அமைப்பு :-      ▪வசனங்கள் - 6666   ▪  ஸூறாக்கள் - 114    ▪ஜுஸ்உ - 30  ▪மன்ஸில் - 07 ▪ மக்கி ஸூறாக்கள் - 86  ▪மதனி ஸூறாக்கள் - 28  ▪ஸஜதாக்கள் - 14~15   💠பெரிய ஸூரா :-         ஸூரதுல் பகரா  💠சிறிய ஸூரா :-         ஸூரதுல் கவ்ஸர்  💠கல்புல் குர்ஆன்:-                 ஸூரா யாஸீன்  💠உம்முல் குர்ஆன் :-        ஸூரதுல் ஃபாத்திஹா  💠முதலில் இறங்கிய         ஸூரா :-             ஸூரதுல் அலக்         (1முதல்5 வசனங்கள் )                                      💠பிஸ்மி இல்லாத ஸூரா: ஸூரது தௌபா  💠இரண்டு பிஸ்மி உள்ள ஸூரா :- ஸூரதுந் நம்ல்  💠என்னுடைய சிறப்புக்கள் :-    ▪ இறுதி வேதம்.  ▪  நிரந்தரமான அற்புதம்  ▪முந்திய வேதங்கள் என்னால் மாற்றப்பட்டன  ▪என்னைப் போன்று ஒன்றை உருவாக்க முடியாது.   💠என்னை ஓதுபவருக்கான நன்மைகள்:-          💜உள்ளம் நிம்மதி அடையும்💚  💙ஓர் எழுத்துக்கு பத்து நன்மை❤  ▪மறுமையில் என் சிபாரிசு கிடைக்கும்.   ▪ (இன்னும் பல.......)   💠எனக்கு செய்ய வேண்டிய கடமைகள்:-    ▪ஓதுதல், 💜மனனம் செய்தல், ▪பின்பற்றுதல்,💚 எத்தி வைத்தல்.   💠இன்று என்னுடைய நிலை:-    ▪சென்ற காலங்களில் இரவில் என்னை ஓதுவார்கள்.  ▪இன்று   நாடகத்தைப் பார்க்கின்றார்கள்.  ▪வீடுகளில் புழுதி பிடித்து வைக்கப்பட்டுள்ளேன்.  ▪மரணித்தால் மாத்திரம் ஓதப்படுகின்றேன்.  ▪பள்ளிவாசல்களில்      அழகிற்காக  அடுக்கப்பட்டு       உள்ளேன்.   💠உங்களிடம் சில கேள்விகள்:-   ▪மாதத்தில் ஒரு தரம் முழுமையாக ஓதினீர்களா?  ▪அல்லது உங்கள் வாழ்க்கையில்தான் ஒரு தரம் முழுமையாஓதி முடித்தீர்களா?  ▪ஓவ்வொரு நாளும் என்னுடைய குறிப்பிட்ட பக்கங்களாவது ஓதுகின்றீர்களா?   💠எனது வேண்டுகோள் :-      ▪பிள்ளைகளுக்கு கற்றுக்         கொடுங்கள்.  ▪ வீடுகளில் தினமும் ஓதுங்கள், மனனம் செய்யுங்கள்.  ▪

Saturday, 19 March 2016

அரபு கவிஞரும் அரசரும்

ذكاء شاعر وفطنة ملك
  يوم ذهب رجل إلى الملك وأنشده شعرا فأعجب الملك بما أنشد فقال لك الملك : اطلب ما تشاء ..  قال هل تعطيني ؟  قال : أجل .  قال : أريد أن تعطيني دنانير بمثل الرقم الذي أذكره في الآيات القرآنية !  قال : حبا وكرامة ..  قال الشاعر : قال الله تعالى : "إلهكم إله واحد" فأعطاه دينارا  قال:"ثاني أثنين إذ هما في الغار" فأعطاه دينارين  قال : "لا تقولوا ثلاثة انتهوا" فأعطاه ثلاثة  قال :"ولا ثلاثة إلا هو رابعهم" فأعطاه أربعة  قال :"ولا خمسة إلا هو سادسهم" فأعطاه خمسة دنانير وستة  قال :"الله الذي خلق سبع سموات" فأعطاه سبعة  قال :"ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية" فأعطاه ثمانية  قال :"وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض" فأعطاه تسعة  قال :"تلك عشرة كاملة" فأعطاه عشرة دنانير  قال :"إني رأيت أحد عشر كوكبا" فأعطاه أحد عشر  قال :"إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله" فأعطاه اثنا عشر  ثم قال الملك: أعطوه ضعف ما ذكر واطردوه  قال الشاعر : لماذا يا مولاي؟!  قال : خفت أن تقول :"وأرسلناه إلى مائة ألف أو يزيدون" !!

Wednesday, 16 March 2016

வஹ்ஹாபிகள் யார்?

🌾"இஸ்லாத்தின் பார்வையில் வஹ்ஹாபிகள்  என்பவர்கள் யார்?, நஜ்த் என்றால் என்ன?, அவர்களின் தோற்றம்,வளர்ச்சி,அகால மரணம்"🌾  ♣ புதுமை விரும்பிகளாகிய வஹ்ஹாபிகள் முதன் முதலாக தோன்றிய இடம்  அரேபியாவில் நஜ்து மாகாணம், (இன்று அதன் பெயர் ரியாத்) அங்கு வசிப்பவர்களுக்கு நஜ்தியர் என்று பெயர். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை தழுவிய அந்த நஜ்து வாசிகளுக்கு அவர்களின் உள்ளத்தில் குடிக்கொண்டிருந்த பொறாமை குணம் சற்றும் மாறாமல் அது நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே இருந்தது. நபியுல்லாஹ்வின் சமூகம் வந்து உபதேசங்களை கேட்கும் இவர்கள் வெளியில் சென்றதும் அதற்கு நேர் மாற்றமான நச்சு வார்த்தைகளை பேசுவார்கள். குதர்க்க வாதம் புரிவார்கள். இரவெல்லாம் இஸ்லாத்துக்கு எதிராக சதியாலோசனை செய்துகொண்டு இருப்பார்கள்.   ♦இதற்கு காரணம் அந்த தீயவர்களின் உள்ளத்தில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மீது இருந்த பொறாமை. இவர்களின் நிலையை தெரிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இவர்களுக்கு உபதேச தோரணையிலும், கண்டித்தும் பல முறை சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்கள். ஆனால் அது இந்த தீயவர்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது.  1) இவர்களை பற்றி தான் அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா தனது திருமறையில் நயவஞ்சகர்கள் (முனாபிகீன்கள்) என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு எச்சரிக்கை செய்து இருப்பதை திருமறையில் பல இடங்களில் காணலாம்.   2)இவர்களின் போக்கு பற்றி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு வேதனை ஏற்படுவதுண்டு. ஷைத்தான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வரும் போது இந்த நஜ்தியர்களின் உருவத்தில் தான் வருவான். அவனைக் கண்டதும் ஷெய்குன் நஜ்தி (நஜ்தி பெரியார்) வருகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறுவார்கள். இதை அண்மையில் இருக்கும் ஸஹாபாக்கள் இவன் ஷைத்தான் என்று புரிந்து கொள்வார்கள்.   ♣ அரேபியாவில் நஜ்து மாகாணம், (இன்று அதன் பெயர் ரியாத்)பற்றி  ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்கள் முபாரக்கான கரங்களை ஏந்தி " யா அல்லாஹ்! எங்கள் ஷாம் தேசத்துக்கும் (சிரியா) பரக்கத்து செய்வாயாக! யா அல்லாஹ்! எங்கள் யெமன் தேசத்திற்கு பரக்கத்து செய்வாயாக!" என்று துஆ கேட்டார்கள். அப்பொழுது பக்கத்திலிருந்த சஹாபாக்கள், " யா ரசூலல்லாஹ்! எங்களுடைய நஜ்து தேசத்துக்கும்" என்றார்கள். மறுமுறையும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் முன் கூறிய படியே ஷாம், யெமன் இரு தேசங்களுக்காகவும் துஆ செய்தார்கள். மீண்டும் நஜ்தியர்கள் தங்கள் தேசத்துக்காக துஆ கேட்கும் படி கூறவே, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மூன்றாம் முறையாக " அங்கு தான் அதிர்ச்சிகளும், கொந்தளிப்புகளும், பித்னாக்களும் உண்டாகும். ஷைத்தானின் கொம்பு வெளியாகும். அங்குதான் ஷைத்தானுடைய கூட்டங்கள் வெளிக்கிளம்பும்" என்று கூறினார்கள். (ஸஹிஹ் புகாரி)   ♦நஜ்தியர்களின் முனாபிக் (நயவஞ்சக) செயல்கள் காரணமாக அடிக்கடி பித்னாக்கள் வேகத்துடன் ஏற்படுவதும், அது பலம் இழப்பதுமாக இருந்தது. நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு பின் 225 வருடங்கள் வரை இஸ்லாமிய உலகம் நிம்மதியோடு இருந்தது. இதற்கிடையில் நஜ்தியர்களால் ஏற்படும் சிறு சிறு குழப்பங்களை எல்லாம் அப்பொழுது வாழ்ந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களாலும் ஆட்சியாளர்களாலும் அப்போதைக்கப்போது அடக்கி ஒடுக்கப்பட்டன.   ♣ இப்னு தைமியா என்பவன் யார்?  அப்பொழுது தான் நஜ்தில் இப்னு தைமியா என்பவன் வெளியாகி தீனில் தலையிட்டு நூதன கொள்கைகளை உண்டு பண்ணி, நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஷரிஅத்திற்கு விரோதமான மஸாயீல்களை திரட்டி, 'ஸிராத்தல் முஸ்தகீம்' என்ற நூலை வெளியிட்டு புதிய கிளர்ச்சியை உருவாக்கினான். இந்த நூலில் அதிகமாக நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), அஹ்லுல் பைத்துகள், சஹாபாக்கள், இமாம்கள், அவ்லியாக்கள் முதலியோர்களை இழிவுச் சொற்களால் நிந்தித்து எழுதி இருக்கிறான். இதை அவனுடைய சகோதரர்களும், உறவினர்களும் கண்டித்து, மறுத்தும் இருக்கிறார்கள்.   ♣இப்னு தைமியா பற்றிய சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் பத்வா   அது மற்றும் அன்றி அப்போது வாழ்ந்த தலை சிறந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களான ஷெய்குல் இமாம் ஷைக் முஹம்மது ஃபர்ஸ் , குதுவதுல் முஹத்திதீன் ஷைக் இப்னு ஹஜர் மக்கி, செய்யத் அஹ்மத் கபீர் பாரியி இன்னும் மக்காவின் முப்தியா இருந்த அல்லாமா செய்யத் அஹ்மத் தஹ்லான் மக்கி ஆகிய மார்க்க மேதைகள் இந்த இப்னு தைமியாவை லஃனத்துச் செய்து காஃபிர் என்று மார்க்க தீர்ப்பு (ஃபத்வா) வெளியிட்டு இருக்கிறார்கள்.   ♦ஆனாலும் இவனுடைய சூழ்ச்சியை அறியாமல் சில அறிவீனர்கள் இவனை பின்பற்றினார்கள். இவனுடைய அட்டூழியம் பொறுக்க முடியாமல் எகிப்து அரசாங்கம் பல முறை இவனை சிறை காவலில் வைத்தது. அப்போதும் இவன் அடங்கவில்லை. இறுதியாக சிரியா அரசாங்கம் இவனை கைது செய்து திமிஷ்க் நகர் சிறை கூடத்தில் சாகும் வரை சிறையில் வைத்தது. அங்கேயே இவன் இறந்தான். இப்னு தைமியாவின் பிரதிநிதிகளில் பலர் காலப்போக்கில் ஃபித்னாக்கள் கிளர்ச்சிகள் செய்வதும் எதிர்ப்பின் காரணமாக கேவலப்பட்டு அது மறைவதுமாக இருந்தது.   ♣முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவன் யார்?   ஏறத்தாள 600 வருடங்களுக்கு பின் நஜ்தை சார்ந்த தர்இய்யா என்ற ஊரில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பிறந்தான். இவன் தலையெடுத்து இப்னு தைமியாவுடைய கொள்கைகளைப் பின்பற்றி அதற்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து புதியதோர் மத்ஹபை உண்டாக்க முற்பட்டு இப்னு தைமியா எழுதிய ஸிராத்தல் முஸ்தகீம் என்ற நூலை விரிவு படுத்தி அதற்கு மிருது கொடுத்து ' கிதாபுத் தவ்ஹீத்' என்ற பெயரால் வெளியிட்டான். இந்த சந்தர்ப்பத்தில், துருக்கி அரசர் சுல்தான் அப்துல் ஹமீத் கான் காலமானார். பதவியின் காரணமாக அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டது. துருக்கியின் உதவியை பெற்று கொண்டிருந்த பக்கத்து அரசர்களும் பலம் இழந்தார்கள். அது ஹிஜாஸையும் தாக்கியது. இதை தக்க தருணமாக கொண்டு இப்னு வஹ்ஹாப் நஜ்தி ஒரு படையை திரட்டிகொண்டான். இந்த படையின் தலைவனாக ஸுஊத் என்பவனை நியமித்தான். இவன் ஹஜ்ஜுக்கு போவதாக பாசாங்கு செய்து பெரும் படையுடன் புனித மக்காவுக்குள் நுழைந்து பொருள்களை சூறையாடி ஆண், பெண், வயோதிபர்கள், வாலிபர்கள், குழந்தைகள் என்று பாராமல் கொலை செய்தான்.   ♦அந்த மக்காவாசிகள் உயிர் தப்ப கார்மானம் தேடி ஹரம் ஷரீபுக்குள் நுழைந்தார்கள். அப்பொழுதும் அந்த கயவர்கள் அந்த மக்களை உயிரோடு விடவில்லை. ஞாபகார்த்தமான மஸ்ஜிதுகளும், கப்ருகளும் தாக்கப்பட்டன. மக்காவில் புரிந்த அட்டூழியம் போலவே மதீனா முனவ்வராவிலும் அந்த கயவர்கள் கொஞ்சமும் இரக்கமின்றி முஸ்லிம்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினார்கள். அப்போது அங்கு இருந்த செய்யதுனா அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதுனா இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதுனா உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதா ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) ஆகியவர்களுடைய மக்பராக்களும் வீழ்த்தப்பட்டது. ஸலவாத்து நூல்கள் ஃபிக்ஹு கிதாபுகள் முதலியவை எரிக்கப்பட்டன. ஜித்தா, தாயிப், மக்கா, மதினா, கர்பலா ஆகியவை இந்த கொடுமைகளுக்கு உட்பட்டது. இந்த அநியாயக்காரர்களின் அட்டூழியம் பெருகி கடைசியாக அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் கப்ரு ஷரீஃபை தரைமட்டமாக்க முற்பட்டபோது, அந்த சில ஷைத்தான்கள் அதிசயமாக செத்து மடிந்தார்கள்.  ♦ இவர்கள் இந்தளவுக்கு காட்டுமிராண்டித்தனமாக அப்பாவி மக்களை கொல்லுவதற்க்கு காரணம் அங்கு வாழ்ந்த மக்கள் சுன்னத் வல் ஜமாஅத்தாக இருந்ததே. முஹம்மது இப்னு வஹ்ஹாப் நஜ்தியுடைய மத்ஹப்பின் பிரகாரம் சுன்னத் வல் ஜமாஅத் மக்கள் முஷ்ரிக்குகள், பித்அத்துக்காரர்கள் என்று அவன் நினைத்ததே. அந்த சமயம் உள்நாடு, வெளிநாடுகளிலுள்ள உலமாக்கள், முஃப்திகள் இப்னு வஹ்ஹாப் நஜ்தியின் கொள்கை முற்றும் முழுதாக தவறு என்றும் அதை கடுமையாக ஆட்சேபித்து தக்க ஆதார சான்றுகளுடன் அவரை லஃனத்து செய்து குப்ஃபார் (இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவர்) எனக் தீர்ப்புக்கூறி பல ஃபத்வா கிதாபுகள் வெளியிட்டனர்.  ♣முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் இறுதி நிலை  இறுதியாக இந்த இப்னு வஹ்ஹாப் நஜ்தி, யெமன் நாட்டில் ஒரு தக்வாவுடைய சுன்னத் வல் ஐமாஅத் பெரியாரோடு தன் மத்ஹபை பற்றி தர்க்க வாதம் புரிந்து இறுதியில் படுதோல்வியடைந்து அங்கேயே அகால மரணம் ஆனான். (இவனது அதிர்ச்சிக்குரிய அகால மரணம் பற்றிய விபரம் ஃபுதூஹாதுல் மகிய்யா என்ற நூலிலும் மஙானி கிதாபிலும் காணலாம்) ஆனாலும் இவன் தனது படைக்கு தலைவனாக நியமித்த ஸுஊது என்பவன் அரேபியாவின் ஆட்சியை பிடித்தான். வெறும் அரேபியா என்ற நாட்டை தன் பெயரை முன்னாள் சொருகி ஸஊதி அரேபியா என்று மாற்றினான். அவனுடைய பரம்பரையே இன்று வரை அரேபியாவை ஆட்சி செய்கிறது. நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் முன் அறிவிப்பின்பட, நஜ்தில் ஷைத்தானின் கொம்பாக தோன்றி ஃபித்னாக்களையும், குழப்பங்களையும் உருவாக்கியவன்தான் இந்த முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி. இவனை பின்பற்றி , இவனது மத்ஹபை ஏற்று, இவனது சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தலைசாய்த்து நடப்பவர்களையே "வஹாபிகள்" என்று சொல்லப்படும்.  நன்றி : Mailof Islam   http://www.mailofislam.com/wahabigal_endral_yaar.html#sthash.ubLIsAVb.xiqq  💐💐ஹலாவதுல் ஈமான்💐💐 ✳ BY :- Moulavi  S.L Abdhur Rahman Ghawsi